மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday 3 December 2011

இயக்குன‌ரின் சம்பளம் நாலு இட்லி.


விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயா‌ரிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜயக்கு அடுத்து அதிக சம்பளம் முருகதாஸுக்குதான்.
பணம் சம்பாதிக்கிறது நோக்கமே இல்லை. எவ்வளவு சம்பாதிச்சாலும் காலையில் டிபனுக்கு நாலு இட்லிக்கு மேல சாப்பிட முடியாது என்று சிக்கன பிலாஸபி நடத்தியவர் முருகதாஸ். பேச்சைப் போலவே சம்பளமாக சில லட்சம் போதும் என்று ஒதுங்கிக் கொள்வார் போலிருக்கிறது என்று நினைத்தால் போச்சு. மனித‌ரின் சம்பளம் பத்து கோடியை எப்போதோ தாண்டிவிட்டது.

விஜய்யை வைத்து இயக்கும் படத்துக்கு பன்னிரெண்டு கோடி கேட்டு, கொஞ்சம் அதிகமாச்சே என்று யோசித்ததுக்கே கோபித்துக் கொண்டு போனவர்தான் நமது முருகதாஸ்.

சாப்பிடுறது நாலு இட்லினாலும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட பணம் நிறைய செலவாகுமே.

விஜய்யின் துப்பாக்கி டைட்டிலை முருகதாஸ் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.


மாலை நேரத்து மழைத்துளி என்று விஜய், முருகதாஸ் இணையும் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டதாக முதலில் தெ‌ரிவித்தனர். ஆனால் அதனை முருகதாஸ் மறுத்தார்.

ஆனால் படத்தின் பெயர் துப்பாக்கி என இப்போது புதிய தகவல் கசிந்துள்ளது. இதில் திருச்செந்தூரிலிருந்து
 மும்பை சென்று தாதாவாகும் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக‌க் கூறப்படுகிறது. திருச்செந்தூரில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.

வேலாயுதம் படத்தின் வெற்றிக்குப் பிறகு முருகன் தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறாராம் விஜய். முருகனுக்கு உகந்த திருச்செந்தூ‌ரில் படப்பிடிப்பை தொடங்குவதற்கான காரணம் இதுதான் என்கிறார்கள்.

துப்பாக்கி டைட்டிலை முருகதாஸ் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை என்பது முக்கியமானது.

ஒரே நேரத்தில் ரஜினி,அஜீத்,ஆர்யாவுடன் நடிக்கும் அனுஷ்கா.


3 டி அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்துடன் மோசன் கேப்சரின்
தொழில்நுட்பத்தில் நடிக்கப் போவது யார் என்பதில் மீடியா தொடர்ந்து பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வந்தது. தற்போது  அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதை விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்க இருகிறார்களாம்.
இதற்கிடையில் தெய்வத்திருமகள் படத்தை தொடர்ந்து, அனுஷ்கா விக்ரமுடன் தாண்டவம் படத்திலும் ஜோடி சேர்ந்து விட்டார். இதையும் அதிகார பூர்வமாக யூடிவி அறிவிக்க இருகிறது. அதேபோல  செல்வராகவன் இயக்கத்தில் இந்தம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இரண்டாம் உலகம் படத்திலும்
ஆர்யா ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. இதைவிட ஹாட்டான செய்தி, அஜித் சக்ரி டோலட்டி இயக்கத்தில் தற்போது நடித்து வரும்பில்லா இரண்டாம் பாகத்திலும் அனுஷ்காவே அஜித்துக்கு ஜோடியாகியுள்ளார். அனுஷ்கா காட்டில் இப்போது கோலிவுட் வாய்ப்பு மழை கொட்டுகிறது!

சினிமா ஆசையால் லட்சக்கணக்கில் பெண்களிடம் பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பல் கைது.


நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கி பணம் பறித்த சினிமா கதாசிரியர் மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கு பட கதை, வசனகர்த்தா மர்துரி ராஜா. இவரது மகன் சாய் கிஷோர். 2-ம் ஆண்டு பி.டெக். படிக்கிறார். மற்றொரு மாணவர் சசிகாந்த். பி.எஸ்சி. பட்டதாரி இவர்களும் சிரஞ்சீவி, பிலிப், பிலிப்பின் மனைவி கவிதா ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து மோசடியில் ஈடுபட்டனர். பல்வேறு செல்போன் எண்களுக்கு மிஸ்டு கால் கொடுப்பார்கள்.
ஆண்கள் பேசினால், ‘ராங் நம்பர்’ என்று கூறி கட் செய்துவிடுவார்கள். பெண்கள் பேசினால், தங்களை சினிமா உத
வி இயக்குனர்கள் என்று அறிமுகப்படுத்தி கொள்வார்கள். ‘புதிய படத்துக்கு ஹீரோயின் தேவைப்படுகிறது. நீங்கள் சம்மதித்தால் நடிக்கலாம்’ என்று ஆசை வார்த்தை கூறுவார்கள்.
சினிமா ஆசையில் வரும் இளம்பெண்களிடம் ‘ஸ்கிரீன் டெஸ்ட் நடத்த வேண்டும். போட்டோ செஷன் நடத்த வேண்டும்’ என்று சொல்லி லட்சக்கணக்கில் பணம் பறித்துவிட்டு தலைமறைவாகி விடுவார்கள்.

கர்னூல் மாவட்டம் கவுதலம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் இந்த கும்பலின் ஆசை வார்த்தையில் மயங்கி ரூ.6 லட்சம் கொடுத்து ஏமாந்தார். அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பெண்களும் பணத்தை பறிகொடுத்தனர். புகார்களின் பேரில் கர்னூல் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பொறி வைத்து மோசடி கும்பலை பிடித்தனர்.
சாய் கிஷோர், சசிகாந்த் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். பணத்தை இழக்க இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார். அவரது பணம், நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன.
சினிமா தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பிரபல சினிமா கதாசிரியரின் மகன், மோசடி வழக்கில் சிக்கியிருப்பது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Friday 2 December 2011

விஜய்,அஜீத்தை இணைத்து படம் இயக்குவேன். செல்வராகவன்


விஜய், அஜீத்தை இணைத்து படம் இயக்க கதை தயாராக உள்ளது என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார். இதுபற்றி செல்வராகவன் கூறியதாவது: ‘மயக்கம் என்ன’ படம் பார்த்து பலர் பாராட்டினார்கள். என்னைப் பொருத்தவரை வழக்கமான மசாலா படங்கள் எடுப்பதைவிட வித்தியாசமான கதை களங்களுடன் படம் இயக்கவே விரும்புகிறேன்.

யுவன் சங்கர் ராஜாவுடன் எனக்கு எந்த சண்டையும் இல்லை. விரைவில் அவருடன் இணைந்து படம் தருவேன். விஜய், அஜீத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள் என்கிறார்கள். இருவரையும் இணைத்து ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன். அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எப்போது அ
து நிறைவேறும் என்று தெரியவில்லை.
எனது அடுத்த படம் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’. இதுதவிர திகில் படத்துக்காக 2 ஸ்கிரிப்ட் உள்ளது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளேன். இவ்வாறு செல்வராகவன் கூறினார்.

சில்க் திமிர் பிடித்தவரா? சில்க் ஸ்மிதாவிற்கு 15 வருடங்கள் பின்னணி குரல் கொடுத்த ஹேமாமாலினி.


தமிழ் திரையுலகில் சுமார் 15 ஆண்டுகள் கொடி கட்டி பறந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ரசிகர்களை சுண்டியிழுக்கும் கவர்ச்சி கண்களைக் கொண்டவர். கேட்பவரை கிறங்கடிக்கிற கவர்ச்சி குரலும் ஸ்பெஷல். ஆனால், அது சில்க்கின் சொந்த குரல் அல்ல என்பது பலருக்கு தெரியாது. அந்தளவுக்கு சில்க்கின் உதட்டு அசைவுடனும் அவரது கவர்ச்சி கெட்டப்புடனும் அற்புதமாக பொருந்தக்கூடிய குரல், டப்பிங் கலைஞர் வி.ஹேமமாலினிக்கு சொந்தமானது.
அவர் அளித்த பேட்டி: சில்க் ஸ்மிதாவின் உதட்டசைவுக்கு ஏற்ப குரல் கொடுப்பதற்கு பொருத்தமானவரை தேடிக்கொண்டிருந்தார்கள். அதற்கு 100 சதவீதம் எனது குரல் பொருத்தமாக அமைந்தது. தொடர்ந்து 15 வருடங்கள் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தேன். கே.பாக்யராஜ் இயக்கிய ‘அவசர போலீஸ் 100’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் அவரது குரல் ரசிக்கப்பட்டது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் தயாராகிறது என்று அறிந்து சந்தோஷம் அடைந்தேன். ஆனால் அந்த படத்தை எதிர்பார்த்ததுபோல் எடுத்ததாக தெரியவில்லை. சில்க் ஸ்மிதா
வை அடாவடித்தனம், திமிர் பிடித்தவர்போல் அப்படத்தில் காட்டி இருப்பதாக படத்துக்கு டப்பிங் பேச சென்ற எனது தோழிகள் தெரிவித்தனர். சில்க்காக நடித்த வித்யாபாலனுக்கு குரல் கொடுக்க என்னை அழைத்திருந்தாலும் சென்றிருக்க மாட்டேன்.
காரணம் சில்க்குக்கு வாய்ஸ் கொடுத்த நான் அவரது பாத்திரத்தை பிரதிபலித்து நடித்த வேறு நடிகைக்கு (வித்யாபாலன்) கொடுக்க விரும்பவில்லை. இது நான் ஸ்மிதாவுக்கு தரும் மரியாதை. சில்க் ஸ்மிதாவை பொருத்தவரை ரொம்பவும் நல்லவர். அமைதியானவர். தன்னிடம் யாராவது தவறாக பேசினால் மட்டுமே அவர்களிடம் கோபத்தை காட்டுவார். இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.

படிப்பிற்காக நடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தேன். ஷெரின்





நடிப்புக்கு முழுக்கு போடவில்லை. படிப்பதற்காக சென்றுவிட்டேன் என்றார் ஷெரீன். ‘துள்ளுவதோ இளமை’, ‘விசில்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஷெரீன். அவர் கூறியதாவது: துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானேன். சமீபகாலமாக படங்களில் நடிக்கவில்லை. நடிப்புக்கு நான் முழுக்கு போட்டுவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைத்திருக்கிறேனே தவிர, ஒரேயடியாக நிறுத்திவிடவில்லை. பெங்களூரில் பட்டப்படிப்பு முடிக்க சென்றுவிட்டேன். மேலும் நல்ல ஸ்கிரிப்ட் எதுவும் வரவில்லை.


இந்நிலையில்தான் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் ‘அபாயம்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. தெலுங்கு, தமிழ் இரு மொழியில் இப்படம் எடுக்கப்பட்டது. இளைஞர்கள் 5 பேர் இரவு பார்ட்டியில் கலந்துகொள்கின்றனர். அவர்களை போலீஸ் சுற்றி வளைக்கும்போது அருகில் உள்ள காட்டுக்குள் பதுங்குகின்றனர். அப்போது ஒரு கும்பல் குழந்தை ஒன்றை நரபலி தர முயற்சிக்கிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். இதில் நடித்தது த்ரில் அனுபவம். நரேஷ், ஸ்வாதி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஜோஷ்வா ஸ்ரீதர் இசை.

‘குழந்தை நரபலி கதையில் நடித்தது ஏன்?’ என்கிறார்கள். இப்படிப்பட்ட கதையில்தான் நடிப்பேன் என்று எந்த முடிவும் செய்யவில்லை. நல்ல வேடங்கள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். படிப்பு முடிந்ததும் சினிமாவில் முழு கவனம் செலுத்துவேன். இவ்வாறு ஷெரீன் கூறினார்.

த்ரிஷாவுக்கு பிடித்த டிஷ் வில்லி செய்யும் வித்தை


கடந்த சில மாதங்களுக்கு முன் த்ரிஷா கொடுத்த பேட்டியை படித்தவர்கள்Interiorநுங்கம்பாக்கம் பகுதியை சல்லடை போட்டு சலித்திருப்பார்கள். உங்களுக்கு பிடித்த ரெஸ்ட்ராரெண்ட் எது? இந்த கேள்விக்கு சென்னை நுங்கம்பாக்கத்திலிருக்கும் க்ரிப்டாஸ் ஓட்டல் என்று பதிலளித்திருந்தார் அவர். இந்த உணவகத்தை தேடிதான் அலைந்து திரிந்திருப்பார்கள் இந்த பேட்டியை படித்தவர்கள்.
உண்மையில் இந்த உணவகம் கிரேக்க நாட்டு சுவையை அடிப்படையாக கொண்டது. காதர் நவாஸ்கான் சாலையில் அமைந்திருக்கும் இதன் சிறப்பு என்ன தெரியுமா? நம்ம ஊரு சுவையோடும் கிரேக்க நாட்டு ஸ்டைலோடும் அமைந்திருப்பதுதான்.
வள்ளென்று கடிக்கும் டாபர்மேனுக்கும், சில்லென்று நக்கும் பாமரேனியனுக்கும் ஒரு குட்டி பிறந்தால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு சுவை Trishaஇருக்கிறது இந்த பதார்த்தங்களில். நம்ம ஊரில் சுடுகிற வடையை இவர்கள் ப்ளா ப்ளா என்கிறார்கள் கிரேக்கத்தில். ஆனால் இந்த வடையில் வடிவம்தான் இப்படியே தவிர வாய் அறிவது வேறு மாதிரி.
உலகத்திலேயே இந்த உணவுகளை வடிவமைத்து புதுசுபுதுசாக உருவாக்கும் ஒருவரது பெயரிலேயே ஓட்டல் திறந்திருப்பதும் இங்கேதான். இந்த உணவகத்தின் பெயரே கிரிப்டாஸ் பை வில்லி. இந்த வில்லிதான் எல்லா உணவுகளையும் ஒரு ஃபார்முலாவோடு உருவாக்குகிற செஃப்.
எந்த உணவை செய்தாலும் அதை முதலில் அந்த தெருமுனையில் இருக்கும் ஆட்டோக்காரர்களை அழைத்து சாப்பிட வைப்பாராம் வில்லி. ஏனென்றால் இவர்கள்தான் இவரது நெருங்கிய நண்பர்கள். ஓய்வு நேரத்தில் நம்ம ஊர் ஆட்டோவில் பயணம் செய்யும்போதுதான் இவருக்கு புதுப்புது டிஷ்களை செய்யும் எண்ணமே மனதில் உருவாகுமாம். (மூட்?)
நம்ம ஊர் த்ரிஷாவுக்கும் இந்த வில்லி ரொம்பவே செல்ல்லல்லம் என்பதுதான் இன்னொரு சிறப்பு.

பிரகாஷ்ராஜ்...? இரு வீடு, ஒரு உலகம்


சட்டத்தின்படி பிரிந்தவர்கள் தர்மத்தின்படி ஒன்று சேர்ந்த விஷயம்தான் இது. கடந்தPrakash Rajசில மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு விவாகரத்து தீர்ப்பு கோடம்பாக்கத்தை மட்டுமல்ல, குடும்ப பெண்மணிகள் பலருக்கும் மன வேதனையை அளித்திருக்கும். அது?
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தன் மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்டு போனிவர்மா என்ற நடன இயக்குனரை மணந்து கொண்டார். ஆசை அறுபது நாள்தானே? அப்புறம்தான் தனது பழையை மனைவி, குழந்தைகள் என்று மீண்டும் அவர்களை நினைக்க ஆரம்பித்தார் பிரகாஷ்.
தனது இரண்டாவது மனைவி சம்மதத்துடன் சென்னைக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தவர், மீண்டும் லலிதகுமாரியுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கிறாராம். அதற்காக இரண்டாவது மனைவியை விட்டு விட முடியாதல்லவா? அவருக்காகவும் சென்னையில் ஒரு வீடு எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
ஆச்சர்யம் என்னவென்றால் இந்த இரண்டு வீடுகளுமே அடுத்தடுத்த தெருவில்தான் இருக்கிறது. தேவைப்படும் போதெல்லாம் இங்கேயும் அங்கேயுமாக பறந்து கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

திடீர் வயிற்று வலி திணற வைத்த சிம்பு


அஷ்டவதானி டி.ராஜேந்தருக்கு அஸ்ட்ராலஜியும் தெரியும். ஜோதிடத்தை கரைத்துSimbuகுடித்த அவரே போடா போடி படத்தின் துவக்க விழாவுக்கு நல்ல நேரம் குறிக்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது. இந்த படத்தில் நடிக்க துவங்கிய பின்பு சிம்பு நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ஆனால் போடா போடி மட்டும் பொடி டப்பாவுக்குள் உறங்கிய தும்மல் மாதிரி அடங்கியே கிடக்கிறது.
எப்போது படப்பிடிப்பை துவங்கினாலும், எப்படா நிறுத்துவோம் என்ற மன நிலையோடுதான் புளோருக்குள் காலையே வைக்கிறார் சிம்பு. பல மாதங்களுக்கு பிறகு கடந்த திங்கட் கிழமை இப்படத்தின் ஷுட்டிங் துவங்கியது. லைட்டிங் பண்ணிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த சிம்பு, அடுத்த சில நிமிடங்களில் வயிற்றை பிடித்துக் கொண்டு ஐயோ வலிக்குதே என்றாராம்.
இப்படி திடீர் வயிற்று வலி எப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் ஏற்படுகிறதோ, அதற்கு காரணம் வயிரல்ல, வேறொன்று என்பது சினிமாக்காரர்களுக்கு தெரியாததல்ல. இருந்தாலும், ஐயோ... சார். முதல்ல உடம்பை பாருங்க என்று வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களாம். (அப்புறம் மூலையில் உட்கார்ந்து மூக்கு சிந்தியிருப்பார்கள்)
வீட்டுக்கு போன சிம்பு, ரெண்டு நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். வயிற்று வலி எப்படி குணமானது என்பதை இனிமேல்தான் விசாரிக்க வேண்டும். 

அதிமுக வில் வடிவேலா? பரபரக்க வைத்த கட்டுரை


வன்முறை மட்டுமல்ல, அரசியலும் இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி என்பதைVadiveluஇப்போதாவது புரிந்து கொண்டிருப்பார் வடிவேலு. ஏனென்றால் ‘போகாதே’ என்று அந்தக் கட்சியும், ‘வர்றீயா’ என்று இந்த கட்சியும் இழுக்கிறது. நடுவில் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறது வைகைப்புயல்.
இன்று வெளிவந்திருக்கும் முன்னணி புலனாய்வு இதழான குமுதம் ரிப்போர்ட்டரில் கவர் ஸ்டோரியே வடிவேலுதான். அதிமுக வில் வடிவேலு என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் அந்த கட்டுரை சொல்லும் சேதி என்ன தெரியுமா? விரைவில் வடிவேலு அதிமுகவில் ஐக்கியமாக போகிறார் என்பதுதான்.
இந்த கட்டுரையில் இருக்கும் நிஜத்தின் அளவு சற்று முன்னே பின்னே இருக்கலாம். ஆனால் அவரை அதிமுகவில் இழுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்து கொண்டேதான் இருக்கிறதாம். ஆனால் அம்மாவை சந்தித்து மன்னிப்பு கேட்பதோடு ஒதுங்கிக் கொள்ளலாம் என்பதுதான் வடிவேலுவின் திட்டமாக இருக்கிறது.
இதற்காக அவர் அதிமுக வின் இரண்டாவது மட்ட தலைவர்களையும் அடிக்கடி சந்தித்து வருவதாக கேள்வி. இவ்வளவுக்கு இடையிலும், வடிவேலுவை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று முக்கியமான அமைப்பு ஒன்று ரகசிய உத்தரவு போட்டிருக்கிறதாம். அது மாற்றப்பட வேண்டும் என்றால் வடிவேலு மிக முக்கியமான முடிவை எடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் என்பதுதான் கசப்பான உண்மை.

Thursday 1 December 2011

ஸ்ரீராம ராஜ்ஜியம் பிளாப் - சோகத்தில் நயன்தாரா


பல மாதங்களாக காத்துக்கிடந்து காத்துக்கிடந்து கடைசியில் ஏமாந்து போய்விட்டார்Nayantharaநயன்தாரா. இது இல்லற சோகமல்ல, சினிமா சோகம். தனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டு நயன்தாரா நடித்த ஸ்ரீ ராமராஜ்யம் திரைப்படம் ஆந்திராவில் வெளியானது. ஓடுகிறதா என்றால், உதட்டைதான் பிதுக்க வேண்டும். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் பிளாப் ரிசல்ட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் தேம்பிக் கொண்டிருக்கிறாராம் நயன்தாரா.
இப்படத்தில் சீதையாக நடித்திருக்கிறார் நயன். இந்த ஒரு காரணத்திற்காகவே அசைவம் தவிர்த்து, குஷன் பெட் தவிர்த்து, தரையில் படுத்துறங்கி ஏகப்பட்ட சுய அவஸ்தைகளை சந்தித்தார் அவர். இவ்வளவு முயற்சிக்கும் இதுதான் பலன் என்றால் எப்படியிருக்கும்?
இவ்வளவுக்கு பிறகும் நயன்தாராவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல், இசைஞானி இளையராஜாவின் பாராட்டு மட்டும்தான். உன்னை நிஜ சீதையை பார்க்கிற மாதிரியே இருந்திச்சு என்றாராம் அவர்.
ஏன் இந்த படத்தை நிராகரித்தார்கள் ரசிகர்கள்? சீதை கடத்தப்பட்டு அவளை ராமன் தேடிப் போகிற கதையல்லவாம் இது. சீதையை மீட்டு மீண்டும் அரியணை ஏறும் ராமனின் காலத்தை காட்டுகிற படமாம். அதனால்தான் இத்தனை பெரிய கொட்டாவியாம் ரசிகர்களிடத்தில்!

அண்ணாச்சி கடைகள்... -டைரக்டர் விக்ரமன் அழைப்பு


சில்லறை வணிகத்தில் 51 % அந்நிய முதலீட்டை அங்கீகரிப்பதென மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. "உலகVikramanபொருளாதர மயமாக்கல்"என்னும் கொள்கையால் இந்திய உற்பத்தி பெரிதும் பாதிக்கபட்டு இருக்கும் சூழ்நிலையில் சில்லறை வணிகத்தை அடியோடு முடக்கும் செயல் இது என்று நான் கருதுகிறேன்."வால்மார்ட்" போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும் போது மிகவும் குளிரூட்டப்பட்ட கடைகளை ஆரம்பிக்கும். வாடிக்கையாளர்களை கவர ஆரம்பத்தில் பல சலுகைகளை அறிவிக்கும். ஏற்கனவே வெளிநாட்டு மோகம் கொண்ட நமது நாட்டு நாகரீக இளைஞர்கள் இவைகளை மட்டுமே தேடிச் செல்ல தொடங்குவார்கள். இதனால் நமது சில்லறை வணிகர்களின் வியாபாரம் மெல்ல மெல்ல நலிவடைந்து ஆறுமாதத்துக்குள்ளோ அல்லது ஒரு வருடதுக்குள்ளோ கடையை மூடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அதன்பின் தான் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தன் சுயரூபத்தை காட்டும்.சில்லறை வணிகத்தில் ஏகபோக உரிமை இவர்களின் கைக்கு வந்த பிறகு இவர்கள் வைப்பது தான் விலை.வேறு வழியின்றி வாங்கித்தான் தொலைக்க வேண்டும்.இது போன்ற பெரிய கடைகள் தரமானவை என்ற ஒரு தவறான எண்ணத்தை நமக்குள் நாமே வளர்த்துகொண்டு இருக்கிறோம். எப்படி கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஊடுருவியதோ அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் இதுவும்.நமது நாட்டில் சில்லறை வணிகர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் வெறும் வணிகர்கள் மட்டுமல்ல நமது உறவினர்கள்.நமது மண்ணில் பிறந்தவர்கள். நமது கஷ்டம் தெரிந்தவர்கள்.
தமிழ்நாட்டில் அநேகமான எல்லா கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒரு " அண்ணாச்சி" கடை வைத்திருப்பார். இந்த கடைகளில் பெரும்பாலும் ஏழை, நடுத்தர மக்கள்தான் பொருட்கள் வாங்குவார்கள். பல நேரங்களில் நாம் இவர்கள் கடையில் கடன் சொல்லி தான் வாங்குகிறோம். சிலரால் ஆறு மாதங்களாகியும் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவும்.தயங்கி தயங்கி அண்ணாச்சி கடையில் மீண்டும் 2 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் நல்லெண்னை என்று கடன் கேட்ப்போம். நமது குடும்ப நிலைமை தெரிந்து கொண்ட அந்த அண்ணாச்சியும் "ஏற்கனவே ஆறு மாதமா பாக்கி இருக்கு என்று மெதுவாக சொல்லிக்கொண்டே , சரி என்ன செய்ய? உங்க வீட்டுக்காரர் ஆறு மாசமா படுத்த படுக்கையா இருக்காரு, நீங்க என்ன பண்ணுவீங்க, பணம் வந்ததும் மொதல்ல என் கடனை செட்டில் பண்ணிடுங்க" என்று சொல்லி மீண்டும் நாம் கேட்ட பொருளை கொடுக்கத்தான் செய்வார்.
பணத்தை திருப்பி கொடுத்ததும் 500 ரூபாய்க்கோ,1000 ரூபாய்க்கோ பொருள் வாங்கினால் நாம் "கொசுறு" என்று எதாவது கேட்ப்போம். அதையும் சிரித்த முகத்துடன் தருவார். இது போன்ற பாசமிக்க உறவை, நாம் கஷ்டப்படும்போது கடன் தந்து உதவும் பண்பை, இந்த பன்னாட்டு நிருவனங்களிடம் நாம் எதிர்ப்பார்க்க முடியுமா? சில்லறை வணிகத்தில் ஈடுப்பட்டுள்ள எவருமே பெரிய கோடிஸ்வரர் ஆகி விடுவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஓரளவிற்கு நியாயமான விலையில் விற்பதால் பெரிய லாபத்தை ஈட்டுவது இல்லை. அதை நீங்கள் உள்ள தெருவில் 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் கடை வைத்திருக்கும் கடைக்காரரை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.ஆனால் இப்பொழுது சில்லறை வணிகத்தில் கால் பதிக்க இருக்கும் "வால்மார்ட்" நிறுவன முதலாளி சில ஆண்டுகளுக்கு முன்பு "பில்கேட்ஸை" மிஞ்சிய கோடிஸ்வரர்.
ஆகவே சகோதரர்களே, சகோதரிகளே, நம்மில் ஒருவராக நம்மை நம்பியே வாழும் நமது தெரு பூர்விக சில்லறை வணிகர்களை தொடர்ந்து ஆதரிப்போம். மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்ப்போம். மீறி அந்த நிறுவனங்கள் இங்கு கால்பதிக்குமேயானால், நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அதை முழுமையாக நிராகரிப்போம். நிச்சயம் இதில் ஒன்றுப்பட்டு தமிழ் இனம் ஜெயிக்கும். தமிழர்களின் ஒற்றுமை உலகத்திற்கு தெரியும்.
நாம்ஜெயித்துக்காட்டினாலே மற்ற மாநிலங்களும் நம்மை பின் பற்றி இந்த பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்கும்.இது நமது சகோதரர்களுக்காக நாம் கொடுக்கும் குரல். ஒன்று படுவோம் அந்நிய சக்தியை விரட்டியடிப்போம்."

சேரனுடன் பானு திரும்பி வந்த அதிர்ஷ்டம்?


தாமிரபரணி தண்ணீருக்கு அபார ருசி, அதே நேரத்தில் அந்த தண்ணீரை பருகியவர்களுக்கு மூக்கு முட்ட கோபமும் வருமாம். அப்படியொரு பெயர் ராசியுடன் Banuதமிழ்சினிமாவில் அறிமுகமாகிய பானுவுக்கு மட்டும் அதிர்ஷ்டம் ஆறாகவும் ஓடவில்லை, அடி தொண்டையையும் நனைக்கவில்லை.
இத்தனைக்கும் விஷாலுடன் அவர் நடித்த இந்த தாமிரபரணி ஹிட்! அதன்பின் எடைக்கு எடை சம்பளம் கேட்டு இன்டஸ்ட்ரியையே அதிர வைத்த பானுவை சினிமாவும் மறந்தது. ரசிகர்களும் மறந்தார்கள். அவர் மீண்டும் திரும்பி வந்தபோது யாரும்மா நீ என்று கேட்காத குறையாக வரவேற்றது தமிழ்சினிமா.
அடுத்தடுத்து அவர் நடித்த இரு படங்களும் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிக் கொள்ள, பானுவின் எதிர்காலம் பரவசமாக இல்லை. இந்த நேரத்தில்தான் வசந்த் நடிக்கும் மூன்று பேர், மூன்று காதல் படத்தில் நடிக்க அழைத்தார்களாம். முன்னொரு காலத்தில் சம்பளத்தை கறாராக பேசிய பானு, இந்த முறை கப்சிப்பென்று ஒப்புக் கொண்டார்.
இந்த புதிய படத்தில் வசந்தின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆனாலும் பானு அவருக்கு ஜோடியில்லை. படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் சேரனுக்குதான் ஜோடி.
ஜாடியும் மூடியும் சரியாதான் இருக்கு!

Wednesday 30 November 2011

ராஜா வீட்டு துக்கம் ரஜினி விசாரிக்காதது ஏன்?


சிங்கம் இரையை விரட்டினால் மட்டுமல்ல, ரெஸ்ட் எடுத்தால் கூட அதையும்Ilayaraja - Rajinikanthரசிப்பதற்கு ஆயிரம் பேர் கூடுவார்கள். நிலைமை அப்படியிருக்க, சிங்கம் வாக்கிங் போகிற காலம் இது. ஆமாம்... உடல்நிலை சரியான பின்பு திடீர் திடீரென்று முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து அந்த ஏரியாவையே இன்பத்தில் அதிர வைக்கிறார் ரஜினி. எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் யாரும் எதிர்பாராமல் கலந்து கொண்டார் ரஜினி. அதன்பின் எடிட்டர் மோகனின் 70 வது பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையெல்லாம் கவனித்து வரும் திரையுலகம், இன்னும் அவர் இளையராஜா வீட்டுக்கு போகவில்லையே, ஏன் என்று கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மரணமுற்றாரல்லவா? அந்த துக்கத்தில் பங்கேற்க திரையுலகமே திரண்டு வந்தது. இசைஞானியின் பரம வைரியாக கருதப்பட்ட வைரமுத்து கூட நேரில் வந்திருந்து ஆறுதல் சொன்னார். ஆனால் ரஜினி?
துக்கம் நடைபெற்று இத்தனை நாளாகியும் அவர் வரவில்லையாம். (மனைவி, மகள்கள், மருமகன் ஆகியோர் சென்றார்கள். அது தனி) இதற்கு பின்னணியாக ஒரு பழைய பிளாஷ்பேக்கை அவிழ்த்துவிடுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஒருமுறை மனைவி லதாவையும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றாராம் ரஜினி. இவரை அழைத்துச் சென்றவர் இசைஞானிதானாம். மறுநாள் காலை ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த திட்டம். திடீரென்று அன்றிரவு ரஜினியை அழைத்த இளையராஜா, நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்புங்க என்று கூறிவிட்டாராம் கண்டிப்பு நிறைந்த குரலில். இதை எதிர்பாரத ரஜினி மனவருத்தத்தோடு திரும்பியதாக பிளாஷ்பேக்கினார் நம்மிடம் ஒரு திரையுலக புள்ளி.
அன்றிலிருந்துதான் ரஜினி, ராஜாவை விட்டு விலகியதாகவும் கூறப்படுகிறது.

விழாவுக்கு வர மறுத்த நடிகை கருத்தில் உடன்பாடு இல்லையாம்


ஒரு படம் வெளிவருதற்கு முன்பே ரசிகர்களின் மனசில் துள்ளாட்டம் போட வைப்பது Rohiniஅத்தனை சுலபமல்ல. அதை சரியாக செய்து வருகிறது ஒரு நடிகையின் வாக்குமூலம். இந்த படத்தில் நடிகைகளின் இன்னொரு பக்கத்தை அப்பட்டமாக சொல்வார்களோ என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த படம் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார் நடிகை ரோஹிணி.
தமிழ்சினிமாவில் வெறும் நடிகை என்ற எல்லையை தாண்டி, அறிவாளியாகவும் வாசிப்பாளராகவும் அறியப்படுகிறவர் ரோஹிணி. இவரைதான் இந்த படத்தின் பாடல்களை வெளியிட அழைக்க வேண்டும் என்று ஆர்வப்பட்டார்களாம் படக்குழுவினர்.
ஆனால் இவர்களின் ஆசையை நிராசையாக்கிவிட்டார் ரோஹிணி. பொதுவாக ஒரு நடிகையை பற்றி தவறாக எழுதுவதையும் பேசுவதையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த படம் கூட அப்படிப்பட்ட கருத்தை கொண்டதாகவே நான் நினைக்கிறேன். அதனால் இந்த விழாவுக்கு என்னால் வர இயலாது என்றாராம். 

மேன்மை, உயர்வு...? ஒஸ்திக்கு பதிலாகவாம்

தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்கள். இந்த கொள்கையில் எவ்வித Osthiமாற்றுக் கருத்தும் இல்லை நமக்கு. ஆனால் ஒஸ்தி விஷயத்தில் நடந்து வரும் விவாதங்களும், ஆலோசனைகளும் ஒரு குபீர் சிரிப்பை வரவழைப்பதையும் சொல்லியாக வேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன் திருவள்ளூவர் இலக்குவனார் என்றொரு தமிழறிஞர் சிம்புவுக்கு ஒரு ஆலோசனை கூறியிருக்கிறார். அதை கேட்டாலோ, படித்தாலோ இதெல்லாம் சாத்தியமா என்றும் தோன்றலாம். ஆனால் இவருக்கு எவ்வித பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்கள் தரணியும் சிம்புவும். (ஐயோ பாவம். வேறென்ன செய்ய முடியும் அவர்களால்?)
ஒஸ்தி என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படி பெயர் வைப்பது சுத்த தமிழாகாது. அதனால் தம்பி சிம்பு வேறு தலைப்பை வைக்க வேண்டும். இதே ஒஸ்தியை ‘மேன்மை’ என்று வைக்கலாமே. ‘உயர்வு’ என்று வைக்கலாமே என்றெல்லாம் ஆலோசனை சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர் இலக்குவனார்.
‘சிம்பு நடிக்கும் உயர்வு... ’ ஆஹா, கேட்கும்போதே தலை சுத்துதே?

போதிதர்மர் தமிழரா? தொடரும் ஆராய்ச்சி்

7 ஆம் அறிவு படப்பெட்டிகள் ரெட் ஜெயண்ட் ஆபிசுக்கே கூட திரும்பிவிட்டது. ஆனால் போதிதர்மர் 7am Arivuதமிழரா என்ற ஆராய்ச்சி மட்டும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த படத்தை சீனாவிலும் திரையிடுவோம் என்று ரிலீசுக்கு முன்பு கூறிவந்த முருகதாஸ், இது குறித்து எவ்வித பத்திரிகை செய்தியையும் வெளியிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஏன் அங்கு இப்படத்தை வெளியிடவில்லை என்பதற்கும் அழுத்தமான காரணம் இருக்கிறது. முதலில் இப்படத்தில் டாங்லீக்கு பதிலாக ஜெட்லீயைதான் நடிக்க வைப்பதாக இருந்தாராம் முருகதாஸ். முழு கதையையும் கேட்ட ஜெட்லீ, இந்த கதை சீனர்களுக்கு எதிரானது. நான் இதில் நடிக்க இயலாது என்று ஒதுங்கிக் கொண்டாராம். (அப்புறம் எப்படி சீனாவில் திரையிடுவார்களாம்?)
உண்மை நிலைமை இப்படியிருக்க, இந்த ஆராய்ச்சியின் பலனாக ஆளாளுக்கு ஒரு கருத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திவாகர் என்ற சரித்திர ஆராய்ச்சியாளர் எழுதியிருப்பதை அப்படியே உங்களுக்கு படிக்க தருகிறோம்.
“போதி தர்மர் குறித்து இந்தியாவில் எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. ஆனால் சில விஷயங்களை நாம் இணைத்துப் பார்க்கும்போது சில மறைமுக விஷயங்கள் புலப்படலாம்.
போதி தர்மரின் ஆண்டு கி.பி நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு என வைத்துப் பார்க்கும்போது, நாம் காஞ்சிபுரத்தின் இருப்பை சற்றுப் பார்க்கவேண்டும். தொண்டை மண்டலத்தில்தான் காஞ்சி இருந்தாலும் தமிழ் அங்கே சிறப்புறவில்லை என்பதும், வடமொழிப் புலமைதான் சிறந்தோங்கியது என்பதும் தெள்ளிடை மலை. நகரேஷு காஞ்சி - நகரங்களில் சிறந்தது காஞ்சி என பெயர் வரக் காரணமும் காஞ்சிக் கடிகையே.
ஆனால் இரண்டாம் நூற்றாண்டு காஞ்சியின் வீதிகளையும், அப்போதைய செல்வத்தையும் வர்ணித்த கண்ணனார், இளந்திரையன் ஆட்சி செய்த காஞ்சி அப்போதைய மிகப் பெரிய கல்வி நகராக பெயர் பெற்றிருந்ததாகவும், காஞ்சியில் பல்வேறுபட்ட இனத்தார்களும், மதங்களும் இருந்ததாக மிகப் பெரிய குறிப்பு ஒன்றினை ‘பெரும்பாணாற்றுப் படை’ மூலமாக நமக்குத் தருகிறார்.
இளந்திரையன் ஆட்சிக்குப் பிறகு காஞ்சியில் பல்லவர் காலம் வந்தது. முற்காலப் பல்லவர்களும் காஞ்சியை ஒரு மிகப் பெரிய கல்வித்தலமாக வைத்திருந்தனர். பல்வேறுபட்ட மன்னர்கள் இந்தக் 7am Arivuகடிகையில் கல்வி கற்றதாகவும், அப்படிக் கற்றுக் கொள்ளும்போது மதங்களின், வர்ணங்களின் பேதங்கள் வாதாடப்படுவதும் முக்கியமான கல்வி நிலை என்றும் தெரிய வருகிறது. தெலுங்கு நாட்டைச் சேர்ந்த ஒரு அரசன் தனகேதுவாக வந்த ஒரு சந்தர்ப்பத்தினால் கர்நாடகத்தில் தென்பகுதியை அரசள்கிறான். அவன் பெயர் கடம்ப சர்மா. ஆனால் சர்மாக்கள் - பிராம்மணர்கள் அரசாளும் உரிமை இல்லாதவர் என்பதற்காக, காஞ்சிக் கடிகையில் மிகப் பெரிய வாதம் நடைபெற்றது. காஞ்சியில் உள்ள பிராம்மண பண்டிட்டுகளும், மற்ற சத்திரியர்களும் கடம்ப சர்மாவின் ஆளுமையை ஒத்துக் கொள்ளவில்லை. அவனுக்கு காஞ்சிக் கடிகையில் உரிமை மறுக்கப்படுகிறது. அவன் காஞ்சியில் வந்திறங்கியவுடன், தான் குலத்தால் ஒரு படி இறங்க ஒப்புக் கொள்வதாகவும், இனித் தன் பெயர் கடம்ப சர்மா இல்லை, கடம்ப வர்மா எனவும் ய்க்ஞ வேள்வியின் முன்பு தாரை வார்த்து மாறுகிறான். - இதைப் பற்றிய குறிப்புகள் கடம்பர் வரலாறிலும் தெலுங்கு சரித்திரப் புலமையாளர் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன.
காஞ்சியில் போதி தர்மர் இருந்தாரா என்றதற்கு ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் க்டம்ப சர்மா, கடம்ப வர்மா ஆனதைப் போல, மேற்கண்ட நிகழ்ச்சிகள் எத்தனையோ காஞ்சி நகரில் நடந்திருக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு நிகழு போதி தர்மர் பற்றியதாக இருக்கலாம்.
போதி தர்மர் தமிழரா என்றால் இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. (விவரம் கிடைக்கவில்லை). களப்பிரரா என்றால் இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது (பிறகு களப்பிரார் யார் எனக் கேள்வி வரும்). களப்பிரர் ஒரு முக்கியப் பிரிவினர் புத்த தர்மத்தை மிக அதிகமான அளவில் பரப்பி இருந்ததாகவும், அச்சுத களப்ப ராயன் என்போன் காலத்தில் அவன் தமிழகத்தை ஆண்டபோது புத்த மதச் செழிப்பைப் பற்றி பாலி மொழியில் ஒரு காவியம் படைக்கப்பட்டுள்ளது, இந்தக் காவியத்தில் உறையூர் நகரச் சிறப்பைப் பற்றிக் கூட பாடல்கள் உண்டு. இப்படிப் பட்ட சமயத்தில் ஏதேனும் இளவரசர், அல்லது அரச குரு போன்றோர் கீழை நாடுகளுக்கு சென்றிருக்க வாய்ப்புகள் உண்டு.
இவ்வாறு கூறியிருக்கிறார் திவாகர். ஆனால் பேராசிரியர் காம்பே என்பவர் சீன ஆவணங்கள் மூலம் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதையும் பின்வரும் இணைப்பை சொடுக்கி படித்துவிட்டு அப்புறம் ஒரு முடிவுக்கு வாருங்களேன்.
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=474&Itemid=615

                                                      www.tamilcinema.com

கமலிடம் ஒரு ‘சுருக்’ கேள்வி பதற வைத்த பிரஸ்மீட்

கமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறார் என்றால் அந்த ஏரியாவிலேயே ஒரு அமைதி Kamal Hassanதொற்றிக் கொள்ளும். அவசியப்பட்டாலொழிய குரல் எழுப்ப மாட்டார்கள் டெக்னீஷியன்கள். ஒரு மாபெரும் கலைஞனுக்கு தரப்படும் மரியாதைதான் அது. ஆனால் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் அறிவாலயத்தில் சிக்கிக் கொண்ட அவஸ்தையை பிரஸ்மீட்டில் அனுபவித்து விடுவார்கள் சில முக்கியஸ்தர்கள். அப்படிதான் ஆனது கலையுலகத்தின் மூத்த நடிகரான கமல் நிலைமையும். ஆனால் இந்த கேள்வி அவசியமில்லையே என்று சம்பந்தப்பட்ட நிருபரையே காய்ச்சி எடுத்தார்கள் சக நிருபர்கள். அப்படியென்ன நடந்தது அங்கே?
ஃபிக்கி என்ற அமைப்பின் சார்பாக நடத்தப்படும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாட்டுக்கான பிரஸ்மீட் அது. இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு தகவல்களை பேசி முடித்த கமல், நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ள தயாரானார். அந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பாராத விதத்தில் பறந்து வந்தது அந்த கேள்வி. இப்படி கேட்டவரும் ஒரு மூத்த பத்திரிகையாளர் என்பதுதான் பேரதிர்ச்சி.
‘கமல் நீங்க. ரஜினி, அமிதாப் மூன்று பேரும் ஏன் நடிப்பதை நிறுத்திக்கொள்ளக் கூடாது?’ என்றார் கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல். சட்டென்று ஒரு வினாடி நேர அமைதி அத்தனை பேரின் மென்னியையும் பற்றி இறுக்க, சுதாரித்துக் கொண்டார் கமல். நீங்க எழுதறதை நிறுத்திட்டீங்கன்னா நானும் நடிப்பதை நிறுத்திடுவேன். ரெண்டு பேரும் டீக்கடையில் உட்கார்ந்து பொழுதை போக்கலாம் என்று கூறிவிட்டு அடுத்த கேள்வியை எதிர்நோக்கும் ஆர்வத்தோடு வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். அப்படியிருந்தும் விடாத நிருபர் இல்லல்ல... ஏன் கேட்கிறேன்னா... என்று கேள்வியை தொடர, அண்ணே. நீங்க எதுவும் இப்ப பேச வேணாம். பிரஸ்மீட் முடிஞ்சதும் பேசிக் கொள்ளலாம் என்றார் கமல்.
ஊரே வணங்குகிற நடராஜர் சிலை கூட, சில நேரங்களில் லாரி டிக்கியில் வைத்து கடத்தப்படும் சோகத்தை அறியாதவரா ‘தசாவதார’ கமல்?
                                                  www.tamilcinema.com

அழைச்சுட்டு வாங்க, நடத்துறேன்... அஜீத்துக்கு வந்த புது தலைவலி

ளைமாக்சில் வரும் ஆவேச அஜீத் போலவே கொடூர முகம் காட்டி தன் ரசிகர்களை Ajithஅடக்கி வைத்தார் அஜீத். அந்தளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தினார்கள் அவர்களும். தலைவா... அரசியலுக்கு வா என்பதுதான் அவர்களின் கோஷமாக இருந்தது. சில பகுதிகளில் அஜீத்தின் அனுமதி இல்லாமலே அவரது முகம் பொறித்த கொடியுடன் ஓட்டு வேட்டையாடி தல-யின் தலையில் சூட்டை கிளப்பினார்கள் அவர்கள்.
இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதத்தில் ஒரேயடியாக தன் ரசிகர் மன்றத்தை கலைத்தார் அஜீத். இந்த நிலையில்தான் மீண்டும் அவர்களை கிளறிவிட்டிருக்கிறார் மங்காத்தா தயாரிப்பாளர் துரை.தயாநிதி. இவரது ட்விட்டர் செய்திக்கு பிறகு சும்மாயிருப்பார்களா ரசிகர்கள் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது பலருக்கு.
அப்படியென்ன சொல்லியிருக்கிறார் அதில்?
அஜீத் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை. படத்தின் நாயகன் இல்லாமல் 'மங்காத்தா' படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை. அஜீத் சார் நடித்து வெளிவந்த படங்களில் ' மங்காத்தா ' படம் தான் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. அப்படத்தினை எனது நிறுவனம் தயாரித்ததில் பெருமை கொள்கிறேன்.
தல ரசிகர்கள் அவரை 'மங்காத்தா' படத்தின் 100வது நாள் விழாவிற்கு அழைத்து வருவதாக இருந்தால், 100வது நாள் விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய காத்திருக்கிறோம் " என்று கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து மீண்டும் அஜீத்தின் வீட்டில் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஏரி உறங்கினாலும் எறா மீனு உறங்காது போலிருக்கு.

Tuesday 29 November 2011

தமிழக ரசிகர்கள் என்னுடைய பெற்றோர்களுக்கு சமம் - கார்த்தி சமாதானம்


எங்கே வம்பு கிடைக்கும் என்றே கோடம்பாக்கத்தின் பக்கமாக குறுகுறு பார்வையைKarthiமேய விடுகிற இந்து மக்கள் கட்சிக்கு இன்னொரு வம்பு கிடைத்துவிட்டது. தமிழ்நாட்டு ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள்தான் மேல் என்கிற டோனில் கார்த்தி அளித்த பேட்டியை கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டார்கள். கார்த்தி இப்படி பேட்டியளித்ததற்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றெல்லாம் இந்து மக்கள் கட்சியின் தலைமை மிரட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதியையும் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்களாம்.
இதே கட்சியை சேர்ந்த உடுமலைப்பேட்டை தொண்டர்கள் கார்த்தியின் உருவப்படத்தை சாலையில் போட்டு உடைக்கவும் செய்திருக்கிறார்கள். காடுன்னா சலசலப்பு இருக்கதான செய்யும் என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிற கார்த்தி, படப்பிடிப்பிற்கு நடுவே இது குறித்து விளக்கமும் அளித்திருக்கிறார்.
தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் எனது பெற்றோர் போன்றவர்கள். பெற்றோரை பற்றி யாராவது தவறாக பேசுவார்களா? கனவில் கூட யாரையும் நான் தவறாக நினைத்தது கிடையாது. தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது.

தமிழ் ரசிகர்கள் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள். தமிழ் ரசிகர்கள் படங்களோடு உணர்வு பூர்வமாக ஒன்றி போக கூடியவர்கள். தெலுங்கு ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சமாகத்தான் படங்களை பார்ப்பார்கள். ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஆந்திராவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுப்பதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். தெலுங்கில் பேசியதால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
வாந்தி எடுப்பானேன்? வழிச்சு துடைப்பானேன்? 

மியூசிக் கம்போசிஷன்... தனுஷுக்கு மேலும் மரியாதை


சம்பளம் வாங்காத பி.ஆர்.ஓ வாக ட்விட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்Dhanushஅநேக நட்சத்திரங்கள். பெரிய சைசில் போஸ்டர் அடித்து ஒட்டினால் கூட அத்தனை சுலபமாக மக்களை சேருமா தெரியாது. ஆனால் ட்விட் பண்ணிய அடுத்த வினாடியே அதை படித்து பரவ விடுகிறார்கள் ரசிகர்கள்.
அப்படிதான் செல்வராகவனின் ட்விட்டரில் ஒரு செய்தியை படித்து இன்புற்று கொண்டிருக்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள். வொய் திஸ் கொலவெறிடி பாடல்தான் இன்று டாப் மோஸ்ட் பாடலாக இடம் பிடித்திருக்கிறது. தனுஷே எழுதி பாடிய இந்த பாடல், அமிதாப்பச்சன் வரைக்கும் எட்டியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த பாடல் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான செய்தியைதான் தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் செல்வராகவன்.
இப்பாடலை எழுதி பாடியது மட்டுமல்ல, இந்த பாடலின் மியூசிக் கம்போசிஷன் கூட தனுஷ்தான் என்று கூறியிருக்கிறார் அவர். இளம் நடிகர்களில் இசையறிவோடு திகழ்வது சிம்பு மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த பலருக்கு, இந்த தகவல் அரிய தகவலாக அமைந்துவிட்டதுதான் ஆச்சர்யம்.
சிம்பு ஒஸ்தியா, தனுஷ் ஒஸ்தியா என்று விவாதித்துக் கொண்டிருக்கும் ஏராளமான ரசிகர்கள், செல்வராகவனின் இந்த அடிஷனல் செய்தியை ஆதாரமாக கொண்டு இன்னும் இன்னும் அடித்துக் கொள்வார்கள் போலிருக்கிறது.

தற்கொலை நடிகைகள் ஒரு சமர்ப்பண படம்


நடிகைகளின் மனசு எப்பவுமே பலூன் மாதிரி. அதிகம் ஊதினால் டமால்தான். ஒருOru nadikayin Vakkumoolamநடிகையின் உண்மைக் கதையை துணிச்சலாக எடுக்கிற சக்தி எந்தவொரு இயக்குனருக்கும் முழுமையாக வந்துவிட வாய்ப்பில்லை. ஆனால் அந்த முயற்சியில் பாதி கிணற்றையாவது தாண்டியிருப்பார் என்ற நம்பிக்கையை அளித்தது நாம் பார்த்த முன்னோட்ட காட்சிகளும் பாடல்களும்.
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் அந்த அழகான மூன்று பாடல்களை பார்த்தோம். எடுத்த எடுப்பிலேயே அன்னநடை நடந்து வரும் சோனியா அகர்வால் டமால் என்று வெடித்து சிதறினார். ஒரு நடிகை குறித்த இமேஜ் இதுதான் என்பதை சொல்லாமல் சொன்ன டைரக்டர் ராஜ்கிருஷ்ணா இப்படம் வெளிவந்த பின் ஒன்று கொண்டாடப்படுவார். இல்லையென்றால் வொய் திஸ் கொலவெறிங்க என்று தேடப்படுவார். அந்தளவுக்கு சில விஷயங்களை சொல்லாமல் சொன்னது டைட்டில்.
படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, கோழி கூவுது விஜி இப்படி தமிழ்சினிமாவில் தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் அத்தனை பேருடைய உருவத்தையும் காண்பித்து இவர்களுக்கு சமர்ப்பணம் என்ற வரிகளோடு துவங்குகிறது படம்.
பொதுவாகவே மென் சோகம் வழிகிற அழகோடு வலம் வரும் சோனியா அகர்வால், இந்த படத்தில் அதை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே காட்டுவதால், பார்வையாளர்களுக்கு ஒரு சொட்டு கண்ணீர் நிச்சயம்.
படம், ஒரு நடிகையின் ‘தாக்கு’மூலமாக இல்லாமலிருக்க கடவது....

நான் ஏன் அப்படி சொன்னேன்... அஞ்சலி விஷயத்தில் ஜெய்


'அஞ்சலிக்கும் எனக்கும் காதல் இல்லை. சத்தியமாக நான் ஒரு நடிகையைAnjali - Jaiகல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்' என்று கூறியிருந்தார் ஜெய். இதில் அடங்கியிருக்கும் மெய் பொருள், மறை பொருள், உட் பொருள், உப பொருள் எல்லாவற்றையும் புரிந்து கொண்ட நடிகைகள் சிலர், உர்ர்ர்ர்ராகிவிட்டார்கள் ஜெய் மீது.
வேட்டை மன்னன் படத்தின் டிஸ்கஷனுக்காக சிம்புவோடு வெளிநாடு போய்விட்டு திரும்பிய ஜெய், இந்த உர்ர்ர் மேட்டரில் கொஞ்சம் அப்செட். (யார் யாரெல்லாம் போன் செய்து கோப முகம் காட்டினார்களோ?)
சட்டுபுட்டென்று அதற்கும் ஒரு மறுப்பு தெரிவித்திருக்கிறார் பிரதர். நான் எது சொன்னாலும் அதை தப்பா புரிஞ்சுக்கறாங்க சிலர். உண்மையில் நான் சொல்ல வந்ததே வேறு. நானும் நடிகன். எப்ப எங்க இருப்பேன்னு தெரியாமல் உள்ளூர் வெளியூர்னு ஷுட்டிங்ல இருப்பேன். என் மனைவியும் நடிகையா இருந்தால், அவங்களும் பிசியான நடிகையாக இருந்தால் சந்தோஷமா இருக்குமா? அந்த அர்த்தத்தில்தான் நான் நடிகையை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்னு சொன்னேன். அவ்வளவு ஏன், வேலைக்கு போகிற பெண்ணை கூட கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். போதுமா? என்கிறார்.
அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்...

நீச்சல் உடை அணியலாமா? -தீக்ஷா சேத் முடிவு


பால் சுறாவுக்கு பனியன் மாட்டியது போல கச்சிதமாகதான் இருக்கும் அந்த (கண்கொள்ளாக்)காட்சி. ஆனால் அவர்தான் முடியாது என்று முடிவே செய்துவிட்டாரே!
சமீபத்தில் தீக்ஷாசேத் கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, வாலிப வயோதிக அன்பர்களை Deeksha Sethவருத்தத்தில் தள்ளி வறுத்து எடுத்திருக்கும். வேறொன்றுமில்லை, நீச்சல் உடையை அணியவே மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் அவர். விக்ரமுடன் ராஜபாட்டை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தீக்ஷா அப்படம் வெளிவந்தால், தமிழ்ப்பட மார்க்கெட்டில் தளுதளு தக்காளி போல மின்ன ஆரம்பித்துவிடுவார். கதைக்கு தேவைப்பட்டால் நீச்சல் உடையில் நடிப்பேன் என்று அவசரப்பட்டு பேட்டி கொடுக்கிற நடிகைகளுக்கு மத்தியில் தனது கவர்ச்சி கொள்கை பற்றி தீவிர விளக்கம் கொடுத்திருக்கிறார் தீக்ஷா. அதில்தான் இப்படி ஒரு பேரிடி.
இத்தனைக்கும் இவர் ஒரு நீச்சல் சேம்பியனாம். மகாராஷ்டிரா மாநில அளவில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் பெற்றவர்தானாம். (அந்த கிளிப்ங்ஸ் கிடைச்சா யாராவது அனுப்பி வைங்க தோழர்களே...)