தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்கள். இந்த கொள்கையில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை நமக்கு. ஆனால் ஒஸ்தி விஷயத்தில் நடந்து வரும் விவாதங்களும், ஆலோசனைகளும் ஒரு குபீர் சிரிப்பை வரவழைப்பதையும் சொல்லியாக வேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன் திருவள்ளூவர் இலக்குவனார் என்றொரு தமிழறிஞர் சிம்புவுக்கு ஒரு ஆலோசனை கூறியிருக்கிறார். அதை கேட்டாலோ, படித்தாலோ இதெல்லாம் சாத்தியமா என்றும் தோன்றலாம். ஆனால் இவருக்கு எவ்வித பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்கள் தரணியும் சிம்புவும். (ஐயோ பாவம். வேறென்ன செய்ய முடியும் அவர்களால்?)
ஒஸ்தி என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படி பெயர் வைப்பது சுத்த தமிழாகாது. அதனால் தம்பி சிம்பு வேறு தலைப்பை வைக்க வேண்டும். இதே ஒஸ்தியை ‘மேன்மை’ என்று வைக்கலாமே. ‘உயர்வு’ என்று வைக்கலாமே என்றெல்லாம் ஆலோசனை சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர் இலக்குவனார்.
‘சிம்பு நடிக்கும் உயர்வு... ’ ஆஹா, கேட்கும்போதே தலை சுத்துதே?

No comments:
Post a Comment