மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 10 December 2011

பிரிந்தவர் சேர்ந்தனர் விஜய்யால் உடைந்த பகை

சேர்ந்தவர் பிரிந்தால் ஏசிக்கொள்வதும், பிரிந்தவர் சேர்ந்தால் ஈஷிக்கொள்வதும் பிரண்ட்ஷிப் ஃபிலாஸபி. இப்படி பிரிந்த பின்பும் gauthamஒருவரையொருவர் ஏசிக் கொள்ளாமல் இருந்தார்கள் கவுதம் மேனனும், அவரது ‘விண்ணை தாண்டி வருவாயா’ ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும். இப்படத்தின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் இந்த மனோஜும்தான். ஆனால் இந்த கூட்டணி அடுத்தடுத்த படத்தில் இணைய முடியாதளவுக்கு விழுந்தது திருஷ்டி. டைரக்டர் ஷங்கர் தனது நண்பன் படத்தில் ஒளிப்பதிவு செய்ய அழைத்ததும் கவுதம் மேனனின் பேச்சையும் கேட்காமல் அங்கு போனார் இவர்.
இதன்பின் எந்த சந்தர்பத்திலும் மனோஜை தொடர்பு கொள்ளாமலிருந்தார் கவுதம். ஆனால் எல்லா வைராக்கியங்களையும் பொடி பொடியாக்குகிற அளவுக்கு ஒரு பிரச்சனை. கவுதம் இயக்கத்தில் விஜய் நடிக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் யாரை ஒளிப்பதிவாளராக நியமிப்பது என்ற பேச்சு எழுந்தது.
ஏன், விண்ணை தாண்டி வருவாயா பட ஒளிப்பதிவாளர் மனோஜ் இருந்தால் நன்றாக இருக்குமே? என்றாராம் விஜய். அவரே சொல்லிவிட்ட பிறகு, தனது ஜென்ம பகையை பற்றி பேசிக் கொண்டிருந்தால் ஆகுமா? மனோஜுக்கே போன் அடித்தாராம் கவுதம்.
விஜய் புண்ணியத்தால் இப்போது பிரிந்தவர் கூடினர்.

அடுத்த வில்லங்கம் ஆரம்பம் தனுஷுக்கு குறிவைக்கும் டைரக்டர்

போகிற போக்கை பார்த்தால் சேட்டன் கடை டீக்கும் வேட்டு வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. மணப்புரம் கோல்டு ஹவுஸ் மேலே பறக்கும் கல், சேட்டன் dhanushkodiகடையை பதம் பார்க்க எத்தனை நேரம் பிடிக்கும் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக இளைஞர்களில் சிலர். இப்படி அண்டை மாநிலத்திற்குள் சிண்டுபிடி சினேகத்தை வளர்த்துவிட்டு ஹாயாக சுற்றிக் கொண்டிருக்கிறார் சோஹன்ராய். டேம் 999 படத்தின் இயக்குனர் இவர்தான்.
பல வருடங்களாகவே விவாதிக்கப்பட்டு வரும் முல்லை பெரியாறு பிரச்சனை இந்தளவுக்கு கொடூர முகத்தை காட்டுவதற்கு காரணமே இவரது படமும் அதற்கு விதிக்கப்பட்ட தடையும்தான். இதையடுத்து ஊரே உருமிக் கொண்டிருக்க, சத்தம் போடாமல் அடுத்த வெடிகுண்டை தயார் பண்ணிக் கொண்டிருக்கிறாராம் இந்த மேதாவி.

கொலவெறிடி’ ஹிட் இல்ல, கேடு... -கொதிக்கும் பெண்ணியவாதிகள்

எவண்டி உன்னை பெத்தான், பெத்தான்... கையில கிடைச்சா செத்தான் செத்தான்... simbuஎன்று பாடல் எழுதிய சிம்புவுக்கு செம டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். அட்ரா அவள-வும் வொய் திஸ் கொல வெறிடியும் கேட்டுவிட்டு, கொலை வெறியாகிக் கிடக்கிறார்கள் பல பெண்ணியவாதிகள்.
ரேட்டிங் விஷயத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இப்பாடலுக்கு ஆங்காங்கே எழும் எதிர்ப்புகள் சுகமான அரிப்பாகவும், அதற்கேற்ற சொறியலாகவும் இருப்பது தனிக்கதை. இனி யார் யார் என்னென்ன மாதிரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் என்பதை கேட்போம்.
குட்டிரேவதி (கவிஞர்) - பொதுவா இதுபோன்ற பாடல்கள் எல்லாம் ஆண்களோட வயலன்ட்டான உளவியல் எண்ணத்தைதான் பிரதிபலிக்குது. அந்த வன்முறையை விளம்பரப்படுத்தி பிரபலப்படுத்தி மக்களை ரசிக்க வைக்கிற தந்திரம் ரொம்ப ஆபத்தானது. அட்றா அவள என்று பாடுற பாட்டு ஒரு பள்ளி சிறுவனிடம் பெண்களை மதிக்கணுங்கிற முக்கியமான வேல்யூவை எப்படி வளர்க்கும்? இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் இல்ல. கேடு...

விக்ரமின் தோற்றம் ரீமாசென் புல்லரிப்பு

ஒரு ராஜ குறட்டையின் எரிச்சலோடு துவங்கியது ராஜபாட்டை படத்தின் பாடல் Sherya_Vikram_reemasenவெளியீட்டு விழா. நிகழ்ச்சி தொகுப்பாளர்களால் ஒரு விழாவே நாசமாகிய சோகம் அன்றுதான் நடந்தது. பொதுவாக ஒரு தொகுப்பாளர் பேசினாலே கதவை சாத்திக் கொண்டு கதறணும் போல இருக்கும். இந்த விழாவில் மூன்று பேர் மேடையேறினார்கள். ஒரே நேரத்தில் மூவரும் பேச, சந்தைக்கடையானது விழா. பேச வேண்டிய விஐபிகள் அத்தனை பேரும் ‘ஞே’ என்று விழித்தது தனி சோகம்.
முன்னதாக விக்ரமின் திரையுலக சாதனைகளை விளக்கும் ஒரு ஆவணப்படத்தை திரையிட்டார்கள். அல்லது திரையிட முயற்சித்தார்கள். அதுவும் ஆடியோ சரியாக இல்லாமல் நாலே செகண்ட்டில் நிறுத்தப்பட்டது. இவ்வளவையும் பொறுத்துக் கொண்டதுடன் முகத்தில் வலுக்கட்டாயமான சிரிப்பை அமர வைத்துக் கொண்ட சீயானின் பொறுமைக்கும் ஒரு தனி வணக்கம் செலுத்தலாம்.

Friday, 9 December 2011

ஒஸ்தி - விமர்சனம்

Velayutham
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னுடா’ என்று சவால் விட்ட போலீஸ் கதைளில் ஒன்றுதான் இதுவும். காக்கி சட்டையில் காமெடி பட்டனை தைத்து ஒரு புதுரக யூனிபார்ஃம் ரெடி பண்ணியிருக்கிறார் டைரக்டர் தரணி. பாதி வசனங்களை சிம்புவே எழுதியிருப்பார் போல. அப்பாவை போலவே அநியாயத்துக்கு சுய புராணம்.
ஒரே அம்மா, ரெண்டு அப்பா. இப்படியொரு மாற்றான் தந்தை சூழலில் வளரும் சிம்பு, வளர்ந்து பெரியவராகி இன்ஸ்பெக்டர் ஆகிவிடுகிறார். ஆனாலும் தனது புது அப்பா மீதும், அவருக்கு பிறக்கும் ரெண்டாவது மகனான தன் தம்பி மீதும் மாறாத கோபத்திலிருக்கிறார். அண்ணனுக்கு எதிராக தம்பியை திசை திருப்புகிறது வில்லன் கோஷ்டி. ஒருகட்டத்தில் உண்மை தெரியவர, தம்பியை தம்பியாகவும் தகப்பனை தகப்பனாகவும் சிம்பு ஏற்றுக் கொள்வதுதான் மெயின் கதை. இடையில் வரும் போர்ஷன்களை பெருமளவு லபக்கிக் கொள்ளும் வில்லன்-ஹீரோ மோதல்கள் முறையே தமிழ்சினிமாவின் நாலாவது ஐந்தாவது டிக்காஷன் ரகம் என்பதுதான் அன் சகிக்கபுள்.
ஒரு மசாலா படத்தில் ஹீரோவின் அறிமுகம் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கிறது சிம்புவின் என்ட்ரி. (அவ்வளவு பெரிய பெரிய சாலை வசதிகள் இருந்தும் ஏன் சுவற்றை உடைத்துக் கொண்டு அவரது ஜீப் உள்ளே வர வேண்டும்? மஸ்ஸ்ஸாலாவாம்) இவர் பெயர் ஒஸ்தி வேலன். சாதாரண கான்ஸ்டபுளின் கன்னத்தில் அறைவதில் ஆரம்பித்து, கமிஷனரை உதறல் எடுக்க வைப்பது வரை இந்த ஒஸ்தி வேலனின் ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் ரசித்துக் கொண்டேயிருக்கலாம். முதன் முறையாக சிம்புவின் பாடி-லாங்குவேஜ் எல்லாருக்கும் பிடித்திருப்பதுதான் ஆச்சர்யம். ஆச்சர்யமாக சில காட்சிகளில் கண் கலங்கவும் வைக்கிறார். குறிப்பாக நாசர் மருத்துவமனையில் படுத்திருக்கும் போது அவரை முதன் முறையாக ‘அப்பா...’ என்றழைக்கிற காட்சி.
வார்த்தைக்கு வார்த்தை ஆடுகளம் தனுஷ் பாணியில் ‘சுட்டே புடுவேன்’ என்பதையும், சில காட்சிகளில் யாத்தே... யாத்தே... பாடல் ஒலிப்பதையும் எந்த ரைவலில் சேர்க்க? அழகான அன்னப்பறவையை கூட எலிப்பொறி வைத்து பிடிக்கிற வழக்கம் இருக்கிறது சிம்புவுக்கு. ரிச்சாவுடன் காதல் வயப்படுவதில் ஆரம்பித்து, அதே காதலை வெளிப்படுத்துவது வரை இந்த எலிப்பொறி மெத்தர்டுதான்.
ரிச்சா கங்கோபாத்யாவுக்கு கங்கையில் முக்கியெடுத்த மாதிரி அப்படியொரு தேகம். அரை தாவணிக்கு தப்பி தெரியும் இவரது மைதா மாவு பிரதேசங்களுக்காகவே ரிப்பீட் ஆடியன்ஸ் நிச்சயம். (ஏன் தாயி முகத்தை மட்டும் அப்படி கோவமாவே வச்சுக்கணும்? ) படத்தில் இவர் பேசும் வசனங்களை ஒரு கர்சீப்பில் அள்ளிவிடலாம். அவ்வளவு சிறிசு. ஆனாலும் ‘காவல் துறை’ என்பதுதான் சிம்புவின் பெயர் என்று நினைக்கிற அளவுக்கு அம்மாஞ்சியாக இருப்பதெல்லாம் அநியாயம்.
இவரது அப்பாவாக நடித்திருக்கிறார் வி.தா.வ தயாரிப்பாளர் கணேஷ். பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் இந்த பார்ட்டிக்கு இந்த படத்தில் சோக எபிசோட். தனது சாவுக்கு பின்தான் தன் மகளின் கல்யாணம் நடக்கும் என்பதால் செத்தே போகிறார்.
மிக பொருத்தமான கேரக்டரில் ஜித்தன் ரமேஷ். ஆச்சர்யமாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
சந்தானம் வழக்கம்போலவே காமெடி திருவிழா நடத்தியிருக்கிறார். பாவா லட்சுமணனை பார்த்து ‘ஏய்... இங்க வா. கோவா படத்தில் வர்ற பிரேம்ஜி மாதிரியே இருக்கியே’ என்று கலாய்ப்பதையெல்லாம் தியேட்டர் தாங்காமல் ரசிக்கிறது பொதுஜனம்.
கலாசலா, வாடி வாடி என் க்யூட் பொண்டாட்டி என்று சிம்புவுக்காகவே செதுக்கப்பட்ட பாடல்கள், கோரியோ கிராஃப். தமனின் இசை கலக்கல் மற்றும் குலுக்கல் மேளா.
சிலர் அமைக்கும் சண்டைக்காட்சிகளில் யதார்த்தம் இருக்கும். நெருப்பும் பறக்கும். ஆனால் கனல் கண்ணனின் சண்டைக்காட்சிகள் அப்படியல்ல, நெருப்பை மூட்டி அதில் யதார்த்தத்தை கொளுத்தி விடுவார். இப்படத்திலும் அப்படியே. கோபிநாத்தின் ஒளிப்பதிவு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
தில், தூள், கில்லி என்று தரணியை அதிர வைத்த தரணி, அதையெல்லாம் தாண்டிய ஒஸ்தியை எப்போது தருவார் என்ற ஏக்கத்தை மீண்டும் ஒரு முறை தந்திருக்கிறது இந்த ஒஸ்தி.
-ஆர்.எஸ்.அந்தணன்

ஒரு ரசிகருக்கு அதிர்ஷ்டம்

மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கிறார் ரஜினி. இந்த மறுபிறவிக்கு காரணம் மருத்துவம்தான் என்றாலும் Rajniரசிகர்களின் ஓயாத பிரார்த்தனையும் அன்பும் கூட இன்னொரு காரணம் என்று நம்புகிறார் ரஜினி.
அவர் எப்போது ரசிகர்களை சந்திப்பார்? மொத்தமாக அனைவரையும் வரவழைத்து சந்திப்பாரா, அல்லது மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டும்தான் அந்த அதிர்ஷ்டம் இருக்கிறதா என்றெல்லாம் குழம்பிப் போயிருக்கிறார்கள் அதே ரசிகர்கள். இந்த நிலையில் முன்னணி வார ஏடு ஒன்று ரஜினி ஸ்பெஷல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இதில் ரஜினி குறித்த ஏராளமான விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இங்கு அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்ட ரசிகர்களை பற்றியும், அலகு காவடி இழுத்தவர்கள் பற்றியும் கூட அதில் தகவல்கள் அடங்கியிருக்கிறது.
இதையெல்லாம் வரி விடாமல் படித்து ஆனந்த கண்ணீர் வடித்தாராம் ரஜினி. இந்த அலகு காவடி இழுத்தவருக்கு மட்டும் இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. எங்கிருந்தாலும் அவரை நான் பார்க்கணும். அழைச்சிட்டு வாங்க என்று பணித்திருக்கிறாராம் தனது உதவியாளர்களிடம்.

Thursday, 8 December 2011

அனுஷ்கா சொன்னார் அமலா கேட்டார்...


அனுஷ்காவும் அமலாபாலும் அத்தனை திக் பிரண்ட்ஸ் என்பதை நாடறிகிறதோanushka_amalapaulஇல்லையோ, கோலிவுட்டும், டோலிவுட்டும், மல்லுவுட்டும் நன்கு அறியும். அவங்க எவ்ளோ பெரிய ஆர்ட்டிஸ்ட்? ஆனால் துளி பந்தா இல்லை என்று அடிக்கடி அனுஷ்காவை பாராட்டி வந்த அமலா, இப்போதும் இன்னும் நெருக்கமாகியிருக்கிறார் அவருடன். எப்படியென்றால் அவர் சொல்லும் மேனேஜரையே தனக்கு மேனேஜராக்கிக் கொள்கிற அளவுக்கு.
அனுஷ்காவுக்கு ரகு என்பவர்தான் மேனேஜர். அவரது நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தோள் கொடுக்கிற இந்த நபருக்கு மும்மொழியிலும் நல்ல செல்வாக்கு. தேதிகளை பிரித்துக் கொடுப்பதில் வேறெந்த சூது வாதும் வைத்துக் கொள்வதில்லையாம் இவர். இவரையே நீயும் யூஸ் பண்ணிக்கோ என்று அமலாவிடம் அனுஷ்கா சொல்ல, அன்றிலிருந்தே தனது சங்கப் பலகையில் ரகுவை உட்கார வைத்துவிட்டார் அமலா.
இப்படியெல்லாம் செய்தால் பழைய மேனேஜர் காதுகளில் புகைதானே வரும்? அப்படி அடிக்கடி வர ஆரம்பித்திருப்பதால்தான் அமலாவை பற்றிய கிசுகிசு முன்னிலும் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறதாம். மூன்றெழுத்து டைரக்டரை லவ் பண்ணும் அமலா, அவருடன் சேர்ந்து செனடாப் சாலையில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலையும் அவிழ்த்துவிடுகிறாராம் இந்த முன்னாள் மேனேஜர். இன்னும் என்னவெல்லாம் தகவல் வருமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கிறார் அமலா.

அதிமுகவில் வடிவேலா? -கொதிக்கிறார் சிங்கமுத்து


அதிமுகவில் வடிவேலு! கடந்த வார பரபரப்பு செய்தி இதுதான். வடிவேலு அதிமுகவில் சேர்ந்துவிட்டால், சிங்கமுத்து என்னாவார் என்ற கேள்வி மனதில் எழுமல்லவா? நமக்கும் அப்படி ஒரு கேள்வி எழ, சிங்கமுத்துவுக்கே போன் அடித்தோம்.
அதுவா...? என்று அட்டகாசமாக சிரிக்க ஆரம்பித்தவர், வாங்க நேர்ல பேசலாம் என்றார். அவரது பதில்களில் ஒரு ஆக்ஷன் சினிமாவை பார்த்த மாதிரி அத்தனை விஷயங்கள் அடங்கியிருந்தன...
வடிவேலு அதிமுக வில் சேரப்போகிறாராமே?
நானும் அந்த விஷயத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். அதில் எந்தளவுக்கு உண்மைSingamuthuஇருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு நல்ல ஆட்சி வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்காக அரும்பாடு பட்டவர் வடிவேலு. கலைஞருடைய திட்டங்களை காப்பியடித்துதான் தேர்தல் அறிக்கையை அம்மா தயாரித்தார்கள் என்று சொன்னவர்தான் இவர். எல்லாரும் திமுகவுக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று இவர் வியர்வை வடிய கூக்குரலிட, அதை அழகிரி துடைக்க... அப்படியெல்லாம் அதிமுகவுக்கு எதிராக வியர்வை சிந்தியவர்தான் வடிவேலு. திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்தான் போலீஸ் மந்திரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மிதப்பில் திரிந்தவர் அவர். இப்போது எங்கள் கட்சிக்கு வரப்போகிறாராமா?
அவர்தான் ஜெயலலிதாவை திட்டவில்லை என்று கூறியிருக்கிறாரே?
அம்மாவை திட்டினாரா, திட்டவில்லையா என்று இவர் சொல்ல வேண்டாம். அதற்கெல்லாம் ஆதாரமாக அம்மாவிடம் இருக்கிறது கேசட். அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதே அம்மாவை திட்டுவது போலதானே? அம்மா வேறு. அதிமுக வேறா? வடிவேலு தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்து 'அதிமுக கூடாரம் காலியாகிவிட்டது' என்று சொல்லிக் கொண்டே ஆட்டம் போட்டதை மக்கள் மறக்கவில்லை.
அதிமுக வர வேண்டும் என்று வாக்காளர்கள் நினைத்தது மக்களுடைய ஆட்சி வர வேண்டும் என்பதற்காகதான். எனக்காகவோ, வடிவேலுவுக்காகவோ யாரும் வாக்களிக்க மாட்டார்கள். அத்தனை ஓட்டுகளும் அம்மாவுடைய முகத்திற்காக விழுந்தவைதான். இவருக்கு வாக்கு வங்கி இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் போட்ட ஆட்டத்தை யாராவது மறக்க முடியுமா? அப்படி வாக்கு வங்கி என்று ஒன்று இருந்திருந்தால், திமுக ஏன் இவ்வளவு கேவலமாக தோற்க வேண்டும்? வடிவேலு அதிமுக வுக்கு வருவதால் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. பாதிப்பும் இல்லை. அவரை சேர்ப்பதும், சேர்க்காமலிருப்பதும் மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்குள்ள எங்கள் அம்மா முடிவு செய்ய வேண்டியது.
வடிவேலு இப்போது படங்களில் நடிப்பதில்லை. நிஜமாகவே வாய்ப்புகள் வரவில்லையா? அல்லது யாராவது அதை தடுக்கிறார்களா?
யாரும் தடுக்கவில்லை. அவரை யாரும் ஒப்பந்தம் செய்ய போவதில்லை என்பதுதான் உண்மை. மக்களுக்கே அவரை பிடிக்காமல் போய்விட்ட பிறகு, யார் அவரை வைத்து படம் எடுப்பார்கள்?
சரி, அதையெல்லாம் விடுங்கள். உங்கள் நிலத்தகராறு இப்போது எந்த அளவில் இருக்கிறது?
அதைப்பற்றி பேசினால் நிறைய பேச வேண்டும். ஆனால் என்னை வீடு புகுந்து மிரட்டியவர்கள், என் கண்ணெதிரிலேயே என் மனைவியின் செயினை பிடுங்கி சென்றவர்கள் எல்லாருமே இன்று எந்த ஜெயிலில் களி தின்கிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, வடிவேலுவுக்கு ஆதரவாக என்னை மிரட்டிய ஒரு நடிகரை கூட ஆண்டவன் அழைத்துக் கொண்டான். இதிலிருந்தே புரிந்து கொள்ளுங்கள், ஆண்டவனும் நியாயமும் யார் பக்கம் என்று.
நில விஷயத்தில் அந்த இடத்துக்கு சொந்தக்காரரான பிரபு என்பவரே என் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் வடிவேலு தனது சந்தேக புத்தியால் என்னிடம் இருந்து ஏழு கோடி ரூபாயை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அப்போதைய கவுன்சிலர் தனசேகரன், ஜே.கே.ரித்தீஷ், ஆதம்பாவா, மேனேஜர் சங்கர் ஆகியோரை அனுப்பி என்னை மிரட்டினார். இந்த பணத்தை அவர்கள் பங்கு போட திட்டமிட்டதுதான் வேடிக்கை. இதில் ஒரு கோடியை துணை முதல்வருக்கு தரணும் என்று கூட பேசிக் கொண்டார்கள் அவர்கள். இவர்கள் எந்தெந்த தேதியில் வந்து என்னை மிரட்டினார்கள் என்பதையெல்லாம் டைரியில் குறித்து வைத்திருக்கிறேன் நான்.
அப்போது நடந்த திமுக ஆட்சியில் எனக்கு நியாயம் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நான் போலீசுக்கு போனேன். அப்போது விருகம்பாக்கம் ஸ்டேஷனில் இருந்த எஸ்.ஐ அந்த புகாரை கிழித்துப் போட்டார். அதே திமுக ஆட்சியிலேயே அந்த எஸ்.ஐ. வேறொரு விஷயத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு இப்போதும் வீட்டில்தான் இருக்கிறார்.
கவுன்சிலர் தனசேகரன் அவரது வீட்டுக்கே வரச்சொல்லி மிரட்டினார். பாடியை துண்டு துண்டாக வெட்டி போட்டுவிடுவேன் என்று அவர் சொன்னபோது கூட, 'ஏண்ணே அதை தனித்தனியா போடுறீங்க. ஒரே இடத்துல போட்டுட்டா வசதியா போயிடும்ல' என்று ஜோக்கடித்தேன் நான். ஏனென்றால் தவறு செய்திருந்தால் தானே நான் அஞ்சி நடுங்கணும்? எங்கிட்ட இருந்து எதுவும் பெயராமல் போனதால் கடைசியாக என் மனைவி கழுத்திலிருந்த 12 பவுன் சங்கிலியை கழற்றி தரச்சொல்லி வாங்கிட்டு போனவங்க அவங்க. இந்த நில விஷயத்தில் என்னிடமிருந்து எதுவும் பெயரவில்லை என்றவுடன் கலைஞரை நேரில் சந்தித்த வடிவேலு, சிங்கமுத்து அதிமுக காரன் என்று போட்டுக் கொடுத்துதான் என்னை கைது பண்ணவே வைத்தார்.
ஒருவேளை வடிவேலு அதிமுகவில் இணைந்தால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
நான் 1972 லிருந்து அதிமுகவில் இருக்கேன். 1989 லிருந்து அம்மாவுக்கும் கட்சிக்கும் விசுவாசியா இருக்கேன். இப்ப கேட்டால் கூட உறுப்பினர் கார்டை காட்டுவேன். நான் பிரச்சாரத்துக்கு கிளம்புறேன்னு தெரிஞ்சதும், பொட்டு சுரேஷ் தன் ஆட்களோட என் வீட்டுக்கே வந்தாரு. அழகிரி ஒரு கோடி ரூபா உங்களுக்கு தர சொல்லியிருக்காரு. நாளைக்கு அதிமுகவுக்கு ஆதரவா நீங்க பிரச்சாரத்துக்கு கிளம்ப கூடாதுன்னு சொன்னார். இந்த பணத்தை வாங்கினால் தனி மனிதனா எனக்கு நல்லது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வர்றதுதான் நாட்டுக்கு நல்லதுன்னு சொல்லி அந்த பணத்தை வாங்க மறுத்து அனுப்பி வைச்சேன். அதற்கு சாட்சி கூட இருக்கிறது. நான் எப்பவும் என் கட்சிக்குதான் கட்டுப்பட்டவன்.
கட்சியில் ஏதாவது பதவி கிடைக்கும்னு எதிர்பார்ப்பு இருக்கிறதா...?
அம்மாவுடைய உண்மையான விசுவாசி என்பதை விட சிறந்த பதவி வேறு இல்லைன்னு நினைக்கிறேன். வடிவேலு விஷயத்தில் இன்னும் நிறைய உண்மைகள் இருக்கு. சீக்கிரம் அது பற்றியும் பேசுவேன் என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு அவசரம் அவசரமாக கிளம்பினார் சிங்கமுத்து.
-ஆர்.எஸ்.அந்தணன்
படம் -சீனு

மீண்டும் ஷங்கர்-ரஜினி - ‘எக்ஸ்க்ளூசிவ்’ ஸ்டோரி...


நமது வாசகர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் நியூஸ் இது. மறுபடியும் ஒன்று சேர்ந்து ஒரு மெகா ஹிட்டுக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார்கள் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினியும். ‘நண்பன்’ படத்தில் மூழ்கியிருந்த ஷங்கர் கடந்த சில வாரங்களாக முழுக்க முழுக்க இந்த ரஜினி படத்திற்காக நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார். இதையடுத்து ஏராளமான கேள்விகள் எழுந்திருக்கிறது கோடம்பாக்கத்தில்.
அப்படியென்றால் ராணா என்னவாகும் என்பதுதான் முதல் கேள்வி. கோச்சடையான் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நேரடியாக ஷங்கர் படத்திற்குதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான் படத்தில் கூட ரஜினி சில காட்சிகளில்தான் தோன்றப் போவதாகவும் தகவல். அதாவது இவரே கோச்சடையான் கெட்டப்பில் தோன்றி தனது கதையை கூற ஆரம்பிப்பாராம். சில வார்த்தைகளில் இவர் கதையை சொல்லிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று அனிமேஷன் உருவத்திற்கு தாவ ஆரம்பித்துவிடும் காட்சிகள். இப்படி இடையிடையே ரஜினி தோன்றி தோன்றி முழு கதையையும் நகர்த்திச் செல்வதாக திட்டமாம்.
அதுமட்டுமல்ல, இந்த கோச்சடையானுக்காக ரஜினி அதிகபட்சமாக பத்தே நாட்கள்தான் ஒதுக்கப் போகிறாராம். இப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ஷங்கர் படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் ரஜினி என்கிறது சில தகவல்கள்.
இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கிறார். அவரிடமும் பேசி கதை சுருக்கத்தை சொல்லியிருக்கிறாராம் ஷங்கர்.
அப்படியென்றால் கே.எஸ்.ரவிகுமார்? ராணா வரும் வரும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை வந்தால், ரவிகுமார் இருப்பார் அதில். 

200 நடிகைகளுக்கு மொட்டை ஆரம்பித்தது பாலாவின் குரூரம்


ஹியூமன் ரைட்ஸ் வரைக்கும் யாராவது பாலாவை தள்ளிக் கொண்டு போனால்தான் உண்டு. அந்தளவுக்கு அவரது படத்தில் நடிப்பவர்கள் மன நோயாளியாகிற அளவுக்குBala அவஸ்தைகளை அனுபவித்து வருகிறார்கள். ஒன்றரைக்கண் விஷாலை சொல்வதா, அகோரி ஆர்யாவை சொல்வதா, பிச்சைக்காரி பூஜாவை சொல்வதா என்று ஒவ்வொரு படத்திலும் திணற திணற அவஸ்தைப்பட்ட கேரக்டர்கள் பாலாவை பற்றி கதை கதையாக சொல்லும்.
ஒரு நடிகனை உருவாக்குகிற விதத்தில் பாலாதான் கலையுலக பிரம்மா என்பவர்களும் உண்டு. அவர்களால் மட்டுமே பாலா படத்தில் மனமுவந்து நடிக்க முடியும் என்கிற யதார்த்தத்தையும் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டும். அந்த நம்பிக்கையை மதிக்கவும் வேண்டும். போகட்டும்... நாம் சொல்ல வந்ததும் இப்படி ஒரு அவஸ்தை காண்டம் பற்றிதான்.
பாலா அடுத்து இயக்கவிருக்கும் படம் தேயிலை தோட்ட தொழிலாளிகளை பற்றியது. இதில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக சுமார் 200 துணை நடிகைகளை வரவழைத்த பாலா முன்தலையை மொட்டையடித்துவிட்டாராம். இவர்கள் அத்தனை பேரும் இதே முன் தலை மொட்டையோடுதான் இருக்க வேண்டுமாம் படப்பிடிப்பு முடிகிற வரைக்கும்.
பொதுவாகவே பாலா, தன் பட ஷுட்டிங் விஷயத்தில் கன்னித்தீவு ஆசாமி. ஆரம்பிக்கிற நாளைதான் உத்தரவாதமாக சொல்ல முடியும். அப்புறம்? அது ஆண்டவன் விட்ட வழி. எனவே எங்களுக்கு மூன்று படத்தில் நடித்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ, அதை முதலில் கொடுத்துவிடுங்கள் என்றார்களாம் நடிகைகள். அதற்கும் சரி என்று ஒப்புக் கொண்டுதான் இந்த அரை மொட்டை. 

நிருபர்கள் கேள்வி நிதானம் தப்பாத சேரன்


முல்லை பெரியாறு அணையின் ஒவ்வொரு கல்லையும் குறிவைத்து தகர்க்கCheranதுடித்துக் கொண்டிருக்கிறார்கள் கேரளாவிலிருக்கும் சில கலவரக்காரர்கள். இரு மாநில எல்லை பகுதிகளிலும் பெரும் கலவரம் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்திய ‘டேம் 999’ என்ற திரைப்பட இயக்குனர் அதற்காக கவலைப்பட்டாரா என்று தெரியாது. ஆனால் சேரன் ரொம்பவே கவலைப்பட்டிருக்கிறார்.
மூன்று பேர், மூன்று காதல் படப்பிடிப்பு கேரளவில் நடந்து வருகிறது. இப்படத்தை டைரக்டர் வசந்த் இயக்கிக் கொண்டிருக்கிறார். சேரன் இங்கு இருப்பதை அறிந்த நிருபர்கள், முல்லை பெரியாறு அணை சம்பந்தமான பிரச்சனையில் உங்கள் கருத்து என்ன என்று கேட்கிறார்களாம். தினந்தோறும் இப்படி ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து வம்பை கிளப்ப திட்டம் போடும் அவர்களை கண்டு சற்று அதிர்ந்து போயிருக்கிறார் சேரன்.
சும்மாவே எதையாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் அவர் இந்த முறை செம கெட்டியாகிவிட்டார். இங்க ஷுட்டிங் ஸ்பாட்ல வேண்டாம். ரூமுக்கு வாங்க, அங்க பேசிக்கலாம் என்று எஸ்கேப் ஆனாராம். அப்படியே ரூமுக்கு வருகிற நிருபர்களிடம், இங்க வேண்டாம் ஸ்பாட்டுக்கு வாங்க என்றாராம். எப்படியோ படப்பிடிப்பு முடிகிற வரை இப்படியே தள்ளி போட்டால் தன்னால் ஒரு கலவரம் வந்து தொலையாதே என்பது அவரது யோசனை.
ஹ்ம்ம்ம்... எல்லா இடத்திலும் இது தொடரணும்.

நானே நடிச்சிருப்பேனே... சோனியா கதைக்கு சிம்ரன் ஆசை


பூஜை போடும் போது இருக்கிற அந்தஸ்தை, அதே படம் வெளிவருவதற்குள் இழந்து Simranவிடுகிற நடிகைகள் மத்தியில், சோனியாவுக்கு மட்டும் இன்னும் சுக்கிர திசை ஓடிக்கொண்டிருக்கிறது. காதல், கல்யாணம், டைவர்ஸ் என்று சுற்றிவிட்ட பம்பரம் போல எங்கெங்கோ திரிந்தாலும், மறுபடியும் முழுமையான ஹீரேயினாக கோடம்பாக்கத்தில் லேண்ட் ஆகிவிட்டார்.
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனவுடனேயே ஏராளமான அழைப்புகள் சுற்றி சுற்றி வருகிறதாம் சோனியாவுக்கு. படம் வெளிவரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்பது அவரது நோக்கம். (வேறென்ன, சம்பளத்தை ஒசத்தலாமே)
இந்த நேரத்தில்தான் ‘என்னை கேட்டிருந்தா நானே நடிச்சிருப்பேனே’ என்று அப்படத்தின் இயக்குனர் ராஜ்கிருஷ்ணாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் சிம்ரன். சில தினங்களுக்கு முன் சிம்ரனை வேறொரு விஷயமாக சந்தித்தாராம் ராஜ்கிருஷ்ணா. அப்போது பேசிய சிம்ரன், இப்படத்தின் விளம்பரங்களையும் பாடல் காட்சிகளையும் நான் பார்த்தேன். மிகவும் நாகரீகமாக இருந்தது. அதே நேரத்தில் ஒரு நடிகையின் மனரீதியான போராட்டங்களும் அதில் இருப்பதை உணர்ந்தேன்.
சோனியாவிற்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவரை சந்தித்து கதை சொல்வதற்கு முன்பு என்னை சந்தித்திருந்தால் நானே நடித்திருப்பேன் என்றாராம். கையோடு சிம்ரன் சொன்ன இன்னொரு தகவல், பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது.
‘மற்றவர்கள் எப்படியோ? நான் ரொம்ப நிம்மதியாகவும் சந்தோஷமாகவும்தான் இந்த ஃபீல்டில் இருக்கேன்’ என்றாராம் அவர். 

Monday, 5 December 2011

போராளி - விமர்சனம்


போராளி' என்று தலைப்பை கேட்டதும் சீமான், சிறுத்தைகளுக்கெல்லாம் வேலை வைப்பார்களோ என்ற சந்தேகத்தோடு உள்ளே போனால், அங்கே இவர்கள் காட்டுகிற போராளி வேறு. 'என்னோட நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன்தான்' என்கிறார்கள் இந்த படத்திலும். வேதியல், பொருளியல், இயற்பியல் தத்துவத்தையெல்லாம் தாண்டிய இந்த ஃபிரண்ட்ஷியல் தத்துவத்திற்கு, தியேட்டரே எழுந்து நின்று கைதட்டுகிறது. சமுத்திரக்கனியின் இந்த 'கனியிருப்ப காய் கவர்ந்தற்று...' பாணிக்கும் ஒரு சிறப்பு சல்யூட்.
ஒரு வினோதமான குடியிருப்பில் வசிக்கும் கஞ்சா கருப்புவின் ரூமிற்குள் தஞ்சம் புகுகிறார்கள் சசிக்குமாரும், அல்லரி நரேஷும். பிடிவாதமாக அங்கே தங்க துவங்கும் அவர்கள், அக்கம் பக்கத்தினர் மனதில் இடம் பிடிப்பதோடு அருகாமையிலிருக்கும் பெட்ரோல் பங்கிலும் வேலை செய்கிறார்கள். ஓய்வு நேர பணியாக இவர்கள் செய்யும் தொழில் ஒன்று ஒரே வாரத்தில் பிய்த்துக் கொண்டு பறக்க, போட்
முதல் பாதியில் காத்தாடி மீது கதை எழுதிய மாதிரி சுலபமாக பறக்க துவங்குகிற கதை, இரண்டாம் பாதியில் கல்லையும் கட்டிக் கொண்டு பறக்க துவங்குகிறது. முக்கி முக்கி பறந்தாலும், முந்தைய படங்களை நினைவுபடுத்துகிற மாதிரியே ஏராளமான காட்சிகள். (லைட்டா போர்)
சின்ன நமுட்டு சிரிப்போடு எதையும் எதிர்கொள்ளும் சசி, நுணுக்கமான வசனங்களால் தியேட்டரை அதிர வைக்கிறார். 'சிலோன் பரோட்டா வேணும்' என்கிற கதாநாயகியிடம், 'எனக்கு சிலோன்னாலே பிடிக்காது' என்கிறாரே, விசில் பறக்கிறது. 'உன்னை அண்டாவா நினைச்சு து£க்குறேன்' என்று சுவாதியை அலேக்காக து£க்கும் போதும் அதே ஜாலியால் நிறைகிறது ரசிகர்கள் மனசு. இதே சசி கத்தியும், கலவரமுமாக துரத்த துவங்கும்போது ஆக்ஷன் ரசிகர்களுக்கும் செம தீனி கிடைக்கிறது. ஒரு காட்சியில் அல்லரி நரேஷின் எச்சிலை தன் சட்டையில் துடைத்துக் கொள்கிற காட்சிக்கு ஆரவாரம் எழுப்புகிறார்கள் ரசிகர்கள். அடிக்கடி 'சொந்தக்காரங்களை நம்பாதே...' என்கிறாரல்லவா, அங்குதான் குடும்பத்தோடு படம் பார்க்க வருகிறவர்களுக்கு சங்கடம். (எந்த புண்ணியவான் இவர் மனசில் வேல்கம்பு வீசினாரோ?) ஆனால் எல்லா வசனங்களிலும் ஒரு ஆணியோ, மயிலிறகோ தலை நீட்டி தாக்குகிறது, அல்லது தடவுகிறது.
'தன் மனைவியையும் மகளையும் நம்பாதவன்தான் பேச்சுலருக்கு வீடு தர மாட்டான்' என்ற ஒரு வசனத்திற்காகவே உயிரை கொடுப்பார்கள் பரிதாபத்திற்குரிய பேச்சுலர்ஸ்! எழுதிய விரல்களுக்கு பத்து மாச வாடகையை அட்வான்சாகவே கொடுக்கலாம்.
படத்தின் கதாநாயகிகளை விடுங்கள். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வசுந்தராவின் கேரக்டர் சீட்டிலிருந்து நிமிர வைக்கிறது. ஆஹா... இவரல்லவோ வீரத்தமிழச்சி! அதிருக்கட்டும்... இனிமேலும் ஆடுமேய்க்கிற பெண்ணாக நடித்தால், படத்திற்கு நாலு குட்டியென சம்பளத்தோடு இதையும் இலவசமாக கொடுத்துவிடுவார்கள் ஜாக்கிரதை...
நல்ல டைரக்டர் கிடைத்தால் 'கருப்பு' கூட மின்னும் என்பதற்கு இந்த படத்தில் கஞ்சா கருப்பு ஒரு உதாரணம். ஆச்சயர்யம் இன்னொன்று. பரோட்டா சூரியையும் படம் முழுக்க ரசிக்க முடிகிறது. நாங்கள்ளாம் அப்பவே... என்று இவர் பேசும் வசனங்களுக்கு செம ரெஸ்பான்ஸ் தியேட்டரில். (ஆமா, எல்லா கேரக்டர்களுக்குமே ஒரு பஞ்ச் டயலாக் அவசியமா பிரதர்ஸ்)
எப்பவுமே உர்ரென திரியும் சுப்ரமணியபுரம் சுவாதிக்கு அந்த கண்கள் மட்டும் அப்படியே சேதமில்லாமல் இருக்கிறது. மற்றதெல்லாம்...? ஹ்ஹ்ம்ம். நிவேதாவின் அழகு முகத்திற்கு சற்றும் பொருத்தமில்லை அந்த அழுக்கு தமிழ்.
அல்லரி நரேஷின் தெலுங்கு கலந்த தமிழுக்கு சப்பை கட்டு கட்டுகிறது கடைசி காட்சி. அடிக்கடி அவர் ஒரு கவிதை சொல்லி, மூணு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி என்பது புதுக்கவிதை புலவர்களுக்கென்றே எய்யப்படுகிற பொருத்தமான அம்பு. மூளை சூடு ஏற்படும்போதெல்லாம் நாக்கை வெளியே துருத்திக் கொண்டு நரேஷ் காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் எக்சலென்ட்.
பாலசந்தர் டைப் வசனங்களுக்கு உயிர் கொடுக்கிறார் கு.ஞானசம்பந்தன். படவா கோபிக்காகவும் அவரது பெண்டாட்டி சாந்திக்காகவும் சண்டை போட்டாவது இன்னொரு முறை டிக்கெட் எடுக்கலாம். தப்பில்லை.
கதிரின் ஒளிப்பதிவு வழக்கம் போல அற்புதம். இசை-சுந்தர்சி பாபு. ஒரு பாடலும் மனதில் நில்லாமல் போனது வருத்தம்தான். இவருக்கேயுரிய இன்டர்வெல் பிளாக். அதை நிரப்பும் ஜகடம் ஜகடம்... (அவ்)
போராளி- வாழைத்தோப்பில் திருப்பாச்சி அருவா!
-ஆர்.எஸ்.அந்தணன்

Sunday, 4 December 2011

வரலாம்... வர விட மாட்டோம் ஒஸ்தியால் வந்த குஸ்தி


டிசம்பர் 9 ந் தேதி சிம்பு நடித்த ஒஸ்தி திரைப்படத்தை வெளியிடுவதாக முடிவு செய்திருக்கிறார்கள் அப்படக்குழுவினர். ஆனால் இதற்கு தமிழ்நாடு Osthiதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் எடுத்த முடிவை கடந்த வாரம் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்கள். அதில் கூறப்பட்டிருந்த தகவல் இதுதான்.
சன் பிக்சர்ஸ் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சன் நிறுவனம் ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இல்லையென்றால் சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களையோ, விநியோகம் செய்யும் படங்களையோ, அவர்கள் சாட்டிலைட் உரிமை பெற்ற படங்களையோ திரையிட மாட்டோம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒஸ்தி, மம்பட்டியான் ஆகிய இரு படங்களின் சேட்டிலைட் உரிமைகளை சன் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதையடுத்து படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இன்று தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்நாடு திரையரங்கு கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் சேர்ந்து ஒஸ்தி படத்தை வெளியிட எவ்வித தடையும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த பிரச்சனையில் தனது நிலையை பன்னீர்செல்வம் தலைமையிலான இன்னொரு அணி மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரிய வருகிறது. இந்த அறிக்கை வந்தாலும், ஒஸ்தி படத்திற்கு போடப்பட்ட தடையை நாங்கள் நீக்குவதாக இல்லை என்று உறுதியாக இருக்கிறார்களாம் இவர்கள். இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற இருக்கும் பிரஸ்மீட்டில் ஒஸ்தி படத்தை வெளியிட இயலாது என்பது குறித்த தங்கள் உறுதியான முடிவையும் அறிவிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 

மயில்சாமி மகன் படம் பாதியில் நின்றதா?


மயில்சாமியின் மனசு மடேர் என்று உடைவது மாதிரி ஒரு நியூஸ். தனது மகன்Parthom Palaginomஅருமை சந்திரனை பெரிய கனவோடு சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அவர். ராசு.மதுரவன் இயக்கத்தில் பார்த்தோம் பழகினோம் என்ற படத்தின் மூலம் இவரை அறிமுகப்படுத்தினார் மயில். ஆனால் இந்த படம் பூஜை போட்டு முதல் ஷெட்யூலை தாண்டி நகரவில்லையாம். ஏன்?
அந்த காரணத்தை ஆராய்வானேன்? வெந்த புண்ணில் விரலை பாய்ச்சுவானேன்? படம் டிராப். அவ்வளவுதான் செய்தி. ஆனால் இந்த அருமை சந்திரன் பார்ப்பதற்கு அத்தனை லட்சணம். சென்னை லயோலா கல்லுரியில் விஷுவல் கம்யூனிக்கேஷன் முடித்த இவரை எங்கோ ஓரிடத்தில் பார்த்தாராம் அஜீத். பையன் நல்லாயிருக்கான். நல்ல இயக்குனர்களின் கையில் சிக்கினால் பெரிய எதிர்காலம் இருக்கு என்றாராம்.
அவரது வாய்மொழிக்கு ஏற்ற மாதிரி, வெற்றிமாறன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குனர்கள் வாய்ப்பு தருவதாகவும் சொன்னார்களாம். ஆனால், ராசு.மதுவரன் சொன்ன கதையில் நான் உருகிட்டேன். இதுதான் என் மகனை அறிமுகப்படுத்த சரியான படம் என்றார் மயில்.
இப்போது கேட்டால் சரியான ‘பாடம்’ என்பாரோ என்னவோ?

மொபைல் ஷாப் கடன் மிரட்டி பார்க்கும் அஞ்சலி


தம்பி வெட்டோத்தி சுந்தரமும் ஓரளவு லாபம் பார்த்துவிட்டதால் ஏக சந்தோஷத்தில்Anjaliதிளைத்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. தமிழ்சினிமாவை பொறுத்தவரை நீண்டகாலம் தாக்குப்பிடிப்பார் என்று தற்போது நம்பப்படும் நடிகைகளில் ஒருவராகிவிட்டார் இவர். இந்த நேரத்தில் பழைய பாக்கி ஒன்று அவரை பாடாய் படுத்திக் கொண்டிருந்ததால், அவர்கள் மீது சட்டையை பிடித்து உலுக்காத குறையாக ஆத்திரப்பட்டிருக்கிறார்.
நடிக்க வந்த துவக்கத்தில் ஒரு மொபைல் ஷாப் விளம்பரத்தில் நடித்துக் கொடுத்தார் அஞ்சலி. இதற்காக ஐந்து லட்சம் சம்பளம் பேசிய கம்பெனி, அதில் 46 ஆயிரம் ரூபாயை மட்டும்தான் கொடுத்திருந்ததாம். அதன்பின் தர வேண்டிய மீதி தொகையை தராமல் இத்தனை காலம் இழுத்ததடித்ததோடு அல்லாமல், விளம்பரத்தையும் கடந்த ஐந்து வருடங்களாக பயன்படுததி வருகிறது.
பொறுத்து பொறுத்து பார்த்த அஞ்சலி, அவர்களிடமிருந்து 20 லட்ச ரூபாயை பெற்றுத் தரும்படி கோர்ட் உதவியை நாடியிருக்கிறார். ஒவ்வொரு மொபைல் ஷாப் வாசலிலும் கைநிறைய வணக்கத்துடனும், கண்கள் நிறைய புன்னகையுடனும் நிற்கிறது இவரது கட் அவுட். ஆனால் அதற்குள்தான் புதைந்து கிடக்கிறது இந்த ஐந்து லட்ச ரூபாய் சோகம். ஐயோ பாவம்... 

புருஷன் எப்படியிருக்கணும்? - த்ரிஷாவின் ஆசை


வயசை பற்றி பேசினால் எந்த நடிகைகளுக்கும் பிடிக்காது. ஆனால் எல்லாருக்கும்Trishaபிடித்த த்ரிஷாவுக்கு வயசு எத்தனை இருக்கும்? கணக்கு போடுவதற்காக கைவிரல்களை மடக்கினால் அதுபோகும் இருபத்தைந்தை தாண்டி. இந்த கல்யாண வயசையும் தாண்டிப் போய்விடுவாரோ என்ற அக்கறையால்(?) அடிக்கடி ஒரே கேள்வியை கேட்டு இம்சிக்கிறார்கள் நிருபர்கள்.
எப்பங்க கல்யாணம?
இனிமேலும் இந்த விஷயத்தில் மவுனம் காக்க முடியாது என்று முடிவெடுத்த த்ரிஷா, பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் தனது நிபந்தனையை. பொதுவாகவே நான் நாய் பிரியை. எனக்கு வரப்போகிற கணவர் என் வேவ் லெங்க்த் கொண்டவராக இருக்கணும். வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது? அதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி கணவரை என்கிறார்.
த்ரிஷா சொன்னால் நாயையே கூட கட்டிக் கொள்ள ரெடி என்பார்கள் அவரது தீவிர ரசிகர்கள். இதற்கெல்லாமா அஞ்சுவது த்ரிஷா?