மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 17 March 2012

கடத்தியவரும் கடத்தப்பட்டவரும்... வீரப்பன் கதை விசேஷம்


காட்டுராஜாவின் படமெடுக்க தன் வீட்டையே விற்றுவிட்டார் டைரக்டர் ஒருவர். குப்பி என்ற அற்புதமான படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷின் அடுத்த படைப்புதான் வனயுத்தம். சந்தனக்கடத்தல் வீரப்பனின் கதையை உண்மைக்கு அருகில் நின்று படமெடுக்க Vanayudhamஆசைப் பட்டிருக்கிறார் ரமேஷ். அதற்கான களப்பலிதான் இந்த அழகான வீடு. மனைவியிடம், "இந்த வீட்டின் வாஸ்து சரியில்லை, வேறு வீடு வாங்கிக் கொள்ளலாம்' என்று கூறி விற்றதாக ரமேஷ் சொன்னபோது அந்த பிரஸ் மீட்டிலிருந்து வந்த ச்சொச்சொச்சோ சப்தம் மனதின் ஆழத்திலிருந்து வந்தவைதான்.
படத்தின் ஹீரோ அர்ஜுன். வீரப்பனை கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் கேரக்டரில் நடித்திருக்கிறாராம். இந்த படத்திற்காக சுவிட்சர்லாந்தில் ரெண்டு பாட்டு எடுத்தோம்னு சொல்ல முடியாது. எல்லா நாளும் ஜெயில், காடுன்னுதான் போச்சு என்றார். வீரப்பனை சுட்டுக் கொல்கிற காட்சியை எங்கு வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்க வேண்டும் என்று சொல்லிட்டார் டைரக்டர். ரொம்ப சிரமப்பட்டுதான் எடுத்திருக்கோம் என்றார் அர்ஜுன். வீரப்பன் கதைதான் எல்லாருக்கும் தெரியுமே, இதில் புதுசா என்ன சொல்லப் போறோம் என்ற ஆக்ஷன் கிங்கின் சந்தேகம்தான் நமக்கும். அதற்கு பிரமாதமான ஒரு பதிலை சொன்னார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

தேவர் பிலிம்ஸ் மாதிரி வரணும் லட்சியம் நிறைவேற்றிய "லக்' சாமி!


இயக்குனர்களின் முக்கியமான லேண்ட் மார்க் ஆகிவிட்டது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். ஒரு காலத்தில் மளிகை கடையில் பொட்டலம் கட்டிக் Lingusamiகொண்டிருந்த போதே தனக்குண்டான தன்னம் பிக்கையையும் சேர்த்து பொட்டலமாக கட்டிக் கொண்டு சென்னைக்கு கிளம்பியவர் லிங்குசாமி. வெறும் டைரக்டராக அறிமுக மாகியிருந்தாலும், இன்றைய தேதியில் நம்பர் ஒன் தயாரிப்பாளர்களின் லிஸ்ட்டில் லிங்குசாமிக்கும் முக்கிய இடம் இருக்கிறது.
நான் சௌத்ரி சார் ஆபிஸ்ல டிஸ்கஷன்ல இருக்கும் போது அதே காம்பளக்சில் நாலு படங்களின் வேலைகள் நடந்துகிட்டு இருக்கும். ஒரு காலத்தில் அந்த இடத்தில்தான் தேவர் பிலிம்ஸ் ஆபிஸ் இருந்ததாம். அவரும் ஒரே நேரத்தில் நான்கைந்து பட வேலைகளை செய்து கொண்டு இருப்பாராம். எனக்கும் அப்படி ஒரு ஆசை மனதில் இருந்தது. இன்று என்னுடைய ஆபிசிலும் ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களுக்கான வேலைகள் நடப்பது எனக்கே சந்தோஷமா இருக்கு என்றார் லிங்கு.
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தின் பிரஸ்மீட்டில்தான் இப்படி தன்னம்பிக்கை டானிக்கை ஊட்டினார் அவர். படத்தின் பாடல் ஒன்றும் ட்ரெய்லரும் திரையிடப்பட்டது. ஒரு வெற்றிப்படத்தின் அத்தனை சகுனங்களும் அதில் வெளிப்பட, பாலாஜியின் பொய்யில்லாத பேச்சு லிங்குசாமியின் பேச்சுக்கு கொஞ்சமும் குறைவில்லாத நிறைவை தந்தது.
காதல் படத்தை நான் லிங்குசாமிக்குதான் இயக்கி தருவதாக இருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அதை ஷங்கர் சாரே தயாரித்தார். மறுபடியும் அந்தளவுக்கு உணர்வு பூர்வமான ஒரு படத்தை லிங்குசாமிக்காக தரணும் என்று நினைத்தேன். கல்லு£ரி சரியா ஓடவில்லை என்பதால் எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. பல மாதங்கள் கழித்து ஒரு படம் பண்ணலாம் என்று லிங்குசாமியிடம் சொன்னதும் கதையை கூட கேட்காமல் சரி என்றார்.

மேலும் படிக்க....                       

கல்யாண செலவு... மண்டபத்தை விற்றார் சினேகா?


இன்னும் சில தினங்கள்தான். திருமதியாகிவிடுவார் சினேகா. அதற்கப்புறம் அக்கா வேடமோ, அண்ணி வேடமோ? ஒரு வளர்பிறை வாழ்க்கைக்கு Snehaதயாராகிக் கொண்டிருக்கும் சினேகாவுக்கு அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எப்படி? நமக்கெதற்கு அதெல்லாம்... இந்த வளர்பிறை எப்பவும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசையும் வாழ்த்தும்.
சம்பாதித்த பணத்தையெல்லாம் சென்னையை சுற்றிலும் நிலங்களாக குவித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் பிறந்த ஊரான பண்ருட்டியில் நிலம் வாங்கி குவித்தார் சினேகா. தனக்கு பிடித்த கல்யாண மண்டபம் ஒன்றையும் ஆசை ஆசையாக அதே ஏரியாவில்தான் கட்டினார் அவர்.
இப்போது என்னாச்சு? தனது கல்யாண செலவுக்காக தான் ஆசை ஆசையாக கட்டிய அந்த கல்யாண மண்டபத்தை விற்றுவிட்டாராம்.
மண்டபம் வேறொருவர் கைக்கு போனாலும், சினேகாவுக்குரிய அதே சிரிப்போடும் பொலிவோடும் விளங்கிக் கொண்டிருக்கிறது இப்போதும்.