மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 29 October 2011

அது சிக்ஸ் பேக் இல்ல, சிங்கிள் பேக் - நடிகர் விஜய் கலகலப்பு


அண்ணாமலை படத்தில் ரஜினியின் கேரக்டர் என்ன? பால்காரர்! இவரைப்போலவேVijayவேலாயுதம் படத்திலும் விஜய் பால்காரர்தான். ஆனால் ஒரு காட்சியில் கூட அவர் பால் கேனையோ, பசு மாட்டையோ டச் பண்ணவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்திருக்குமோ, இல்லையோ? ஆனால் பிரஸ்மீட்டில் நிருபர் ஒருவருக்கு ஒரே ஃபீலிங்.
இதை ஒரு கேள்வியாக கேட்டேவிட்டார். சார் படத்துல நீங்க பால்காரர்தானே? ஆனால் ஒரு சீன்ல கூட உங்களை அப்படி காட்டலையே? இந்த கேள்வியை கேட்டு முடித்தவுடன் அடக்க முடியாமல் சிரித்தேவிட்டார் விஜய். இடம் கிரீன் பார்க் .ஓட்டல். நேரம் மாலை சுமார் ஏழு மணி. இந்த இடத்தில் பத்திரிகையாளர்களை அவர் மீட் பண்ண வந்ததே, 7 ஆம் அறிவு இறங்கி வேலாயுதத்திற்கு ஏறுமுகம் என்ற செய்தி பரவியதால்தான்.
வந்ததிலிருந்தே உற்சாகம் குறையவில்லை அவரிடம். முகத்தில் வழியும் வழக்கமான சோகத்திற்கும் விடை கொடுத்திருந்தார். சார் படத்தில் சிக்ஸ் பேக்ஸ் வச்சு நடிச்சிருந்தீங்க. அந்த அனுபவத்தை சொல்லுங்க என்ற கேள்விக்கு, அட போங்கங்க. அது சிக்ஸ் பேக்கெல்லாம் இல்ல. சிங்கிள் பேக்தான் என்றார் அதே பொல்லாத சிரிப்புடன்.
ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற இன்னொரு கேள்விக்கு மட்டும் சற்று விரிவாகவே பேச ஆரம்பித்தார் விஜய். இப்போ லேட்டஸ்ட்டா வந்த காவலன் படத்தில் என் வழக்கமான பாணியை முற்றிலும் விட்டுட்டுதான் நடிச்சேன். அதில் எனக்கு பஞ்ச் டயலாக்கே கிடையாது. டைரக்டர் என்ன சொல்றாரோ, அதை அப்படியே செய்திருந்தேன். ஆக்ஷன் படங்கள் செய்யும் போது சில விஷயங்கள் அதற்காக தேவைப்படும். ஒரு ஆக்ஷன் படத்தில் அண்டர் கரண்ட் இருந்தால் அந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதுன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வார். வேலாயுதம் படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது என்றார் விஜய்.
பின் குறிப்பு - 7 ஆம் அறிவு வெளியான மல்டிப்பிளக்ஸ் தியேட்டர்களில் பிரிண்ட் குறைக்கப்பட்டு அந்த இடங்களில் வேலாயுதம் படத்தை ஷிப்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
                                       www.tamilcinema.com

வேலாயுதம் - விமர்சனம்


Velayutham
-ஆர்.எஸ்.அந்தணன்
                                        www.tamilcinema.com

ஆன்ட்ரியா-அமலாபால் சிம்புவின் டபுள் பார்வை


தனுஷின் ஆஸ்தான டைரக்டர் என்று பலராலும் நம்பப்பட்ட வெற்றி மாறன், தனுஷை விட்டு விட்டு சிம்புவை வைத்து வடசென்னை என்ற படத்தை இயக்கப்Amala paul - Andreaபோகிறார். இப்படத்தை முதலில் துரை.தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இவர்கள் இயக்கிய படத்தையே இன்னொருவரிடம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவி வந்ததால் படத்தொழிலை கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டப் போகிறார்கள் என்ற தகவலை பரப்பினார்கள் கோடம்பாக்கத்தில்.
ஆனால், மீண்டும் படம் எடுக்க வந்திருக்கிறது க்ளவுட் நைன் நிறுவனம். வெற்றி மாறனின் வடசென்னை படத்தை கைவிடுவதில்லை என்ற முடிவுக்கு தீர்மானமாக வந்துவிட்டார்களாம். இதில் சிம்புவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்பதில் ஒரே போட்டா போட்டி.
செல்வராகவன்- தனுஷ் நட்பை விட்டு விலகிய நாளில் இருந்தே இருவரையும் பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆன்ட்ரியா, தனுஷின் நேரடி எனிமியான சிம்பு படத்தில் நடிக்க விரும்பினாராம். அவரே முன் வந்து வெற்றி மாறனிடம் பேசியதாக கூறப்படுகிறது. பழம் நழுவி பாக்கெட்டில் விழுந்தால் யாருக்குதான் பிடிக்காது? ஆன்ட்ரியாவின் விருப்பத்தை நிறைவேற்றப் போகிறாராம் வெற்றிமாறன்.
இதற்கிடையில் இந்த படத்தில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது சிம்புவுக்கு. அதில் நடிக்க அமலா பாலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். அவரும் ஒ.கே சொல்லிவிட்டால் ஆன்ட்ரியா, அமலா என்று பரபரப்புக்கு பஞ்சமே வைக்க மாட்டார் சிம்பு.
                             www.tamilcinema.com

நடிகை ஓட்டம்? படப்பிடிப்பில் சிக்கல்


நடிகை நிக்கோலை, வைக்கோல் போல வந்த வேகத்திலேயே சுருட்டி எறிந்துவிட்டதுNicoleதமிழ்சினிமா. (அண்டை மாநிலத்தில் மட்டும் பிய்ச்சுக்குதாக்கும்? ) அவரை தேடிப்பிடித்து மீண்டும் வாய்ப்பு கொடுத்த டைரக்டர் ராஜ்கிருஷ்ணாவுக்கு ஒரே மண்டை குடைச்சல். தற்போது ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இவர். இதில்தான் நடிகையாகவே நடிக்கிறார் நிகோல்.
சென்னையில் இப்படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் இவருக்காக ஒரு காஸ்ட்யூம் கொடுத்தார்களாம். இது சரியாக இல்லை. மும்பையிலிருந்து வரவழைங்க என்றாராம் அவர். அதற்கு சம்மதிக்கவில்லை டைரக்டர். உடனே கோபித்துக் கொண்டு அறைக்குள் போனவர், அப்புறம் வெளியே வர ஆயிரம் கண்டிஷன் போட்டாராம். மொத்த சம்பளத்தையும் எண்ணி வச்சதான் வெளியே வருவேன் என்று அவர் அடம்பிடிக்க, படப்பிடிப்பு முடிய இன்னும் ஐந்து நாட்கள் இருக்கு. அதுக்குள்ளே கேட்டா எப்படி தருவதாம் என்று பட நிறுவனம் கேட்க, ஒரே காச் மூச்.
படப்பிடிப்பை பாதியிலேயே விட்டு விட்டு மும்பைக்கு போய்விட்டாராம் நிக்கோல். நடிகர் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்று நிகோலும், கோர்ட்டுக்கு போவேன் என்று ராஜ்கிருஷ்ணாவும் பல்லை கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எரிக்கறதுக்கு விறகு இல்லேன்னு இடது கையவா அடுப்புல விடுவது? புக் பண்ணும்போதே இன்னும் நாலு பேரை யோசித்திருக்கலாமே என்று அட்வைஸ் செய்கிறார்களாம் ஆளாளுக்கு. நொறுங்கிப் போயிருக்கிறார் ராஜ்கிருஷ்ணா.
                                  www.tamilcinema.com

Friday, 28 October 2011

சின்னத்திரையில் விஜய் ஒரு கோடீஸ்வர கும்மாளம்


மந்திரவாதியை வச்சு மத யானையை மடக்குன மாதிரி, அம்மாம் பெரிய ஸ்டாரானVijayவிஜய்யை சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் வருகிறது கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான இடத்திலிருந்து. இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன, அதன் தரம் என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே ஆசுவாசமாகக் கூடும்.
வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சி மூலம் துட்டு பார்த்த புத்திசாலிகள் அனேகம் பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும். இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் நடத்தினார் நடிகர் சரத்குமார். அதன்பின் இதே மாதிரி நிகழ்ச்சிகளை வெவேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம்.
அவர்களின் சாய்ஸ் விஜய் மட்டுமே. எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இரங்கினாராம் விஜய். இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம்.
                                 www.tamilcinema.com

எனக்கும் ஒரு கலைமாமணி தொடர் தொல்லையில் தேவா


கடந்த வருடம் நடந்த கலைமாமணி விருது வழங்கும் விழாவில் ஒரு அபூர்வ காட்சியை பார்க்க முடிந்தது. பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலைமாமணி விருது பட்டியலில் இருந்தார். ஆசை ஆசையாக விருது வாங்க வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி. மிக நீண்ட வரிசை இருந்தது. அதில் இவருக்கு முன்னால் குண்டு ஆர்த்தியும், பின்னால் கஞ்சா கருப்பும் இருந்தார்கள். இந்த அதிர்ச்சி இந்த வருடமும் தொடருமா?
கோடம்பாக்கத்தில் விசாரித்தால் ஒரே காமெடிதான்...
இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமிக்கப்பட்ட தேவாவுக்கு தினந்தோறும் புதுப் புது தொல்லைகள் வருகின்றனவாம். இந்த வருஷம் கலைமாமணி விருதுக்கு ஆளுங்களை செலக்ட் பண்ணும்போது நம்பளை மறந்துராதீங்க என்று கேட்டே தினம் நாலு பேர் வருகிறார்களாம். இதுக்கு முன்னாடி எப்படியோ? சிறந்த கலைஞர்களுக்கு மட்டும்தான் விருது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் தேவா.
நேற்று வந்த தமன்னாவுக்கு கூட கலைமாமணி விருது கிடைத்துவிட்டது. ஆனால் நடிகர் சிவகுமாருக்கு இன்னும் அந்த விருது கிடைக்கவில்லை தெரியுமா என்றார் ஒரு திரைப்பட முக்கியஸ்தர். கேட்கவே அதிர்ச்சியாக இருந்தது.
தேவா சார். மனசுல வச்சுக்கோங்க.
                                  www.tamilcinema.com

ஆச்சிக்கு ஒன்றும் இல்லை ஆறுதல் தரும் தகவல்கள்


ஆச்சி மனோரமாவுக்கு அடிபட்டிருக்கிறது என்றால் சினிமா இன்டஸ்ட்ரி கொஞ்சம்manorammaஷேக் ஆகதான் செய்யும். காலையில் வந்த செய்தி ஆச்சியின் அருமை பெருமை அறிந்த பலருக்கும் பேரதிர்ச்சி. பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் என்று செய்தி தாள்கள் அலறின. என்னதான் ஆனது மனோரமாவுக்கு?
பயப்படும்படியாக எதுவும் இல்லையாம். அவர் வழுக்கி விழுந்தது இப்போதல்ல. ஒரு மாதத்திற்கு முன்புதான். அப்போது நெற்றியில் லேசாக ரத்தம் கட்டியிருந்ததாம். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே முதலுதவி செய்து கொண்டாராம் அவர். சில தினங்களுக்கு முன் அடிபட்ட அதே இடத்தில் லேசாக வலி ஏற்பட, மருத்துவமனைக்கு சென்றாராம். மனோரமாவின் பேரன் ராஜராஜன் ஒரு மருத்துவர் என்பதால் அவரேதான் ஆச்சிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
முன்பு காயம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான சிகிச்சையில்தான் இருக்கிறார் அவர். இதற்கிடையில் அவரை பார்க்க வரும் பார்வையாளர்கள் சகட்டுமேனிக்கு உள்ளே வந்ததால் மனோரமாவுக்கு இன்பெக்ஷன் ஏற்பட்டு ஜுரம் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரை சந்திக்க வருகிற அத்தனை பேரையும் மருத்துவமனை வாசலிலேயே தடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.
7am arivu - Movie Gallery

Velayudham - Movie Gallery

Kaattupuli Audio Launch

ஜீவாவுக்கு கால்ஷீட் இல்லை ரிச்சா கங்கோபாத்யா முடிவு


கோடம்பாக்கத்து குரோட்டன்ஸ்களில் லேட்டஸ்ட் விளைச்சல் ரிச்சாRicha Gangopadhyay01கங்கோபாத்தியாதான். தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி என்று எடுத்த எடுப்பிலேயே எட்டாவது கியரில் போய் கொண்டிருக்கிறது இவரது மார்க்கெட் நிலவரம். த்ரிஷா, தமன்னா, அனுஷ்கா என்று இவருக்கு முன்னால் வந்த நடிகைககள் வரிசையாக ஃபேட் அவுட் ஆகிக் கொண்டிருக்க, இவரைப்போன்ற புது நடிகைகளின் இம்ப்பார்ட்டன்ஸ் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது ஹீரோக்களுக்கும்.
ஜீவா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு இந்த ரிச்சாவை ஒப்பந்தம் செய்யலாமே என்று ஆசைப்பட்டாராம் அப்படத்தின் டைரக்டர் அகமது. இவர் வாமனன் என்ற படத்தை இயக்கியவர். ரிச்சாவுக்கு போன் அடித்து கால்ஷீட் நிலவரம் பற்றி விவாதித்தாராம். அவரும் ஜீவாவுடன்தானே, ஓ.கே என்று சொல்லியதுடன் தேதிகள் குறித்த விபரங்களை பிறகு சொல்கிறேன் என்றாராம்.
இவ்வளவு பேச்சு வார்த்தையும் நடந்த இடம் ஒஸ்தி படப்பிடிப்பு. எதிரே உட்கார்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தாராம் சிம்பு. ’எதிர்முனையில யாருங்க?’ என்று கேட்பது சகஜம்தானே? சிம்பு அப்படி கேட்க, ரிச்சாவும் உண்மையை கக்கினாராம். ’என்னை மாதிரி பெரிய ஹீரோக்களுடன் நடித்துவிட்டு ஜீவா மாதிரி சின்ன ஹீரோக்களுடன் நடிச்சா எப்படி தமிழ்சினிமாவில் முன்னேறுவது’ என்றாராம் சிம்பு.
அறியாத குளத்தில் ஆழம் பார்த்தால் என்னாகும்? அதுதான் நடந்தது ரிச்சாவுக்கு. சிம்பு சொன்னதை நம்பி, ’நான் ரொம்ப பிஸியா இருக்கேன். என்னால கால்ஷீட் கொடுக்க முடியாது’ என்றாராம் அகமதுவிடம். இப்பதானே கால்ஷீட் தர்றேன்னு சொன்னார். அதற்குள்ளே என்னாச்சு என்று குழம்பிப் போயிருக்கிறார் டைரக்டர்.
இலையை நம்பாத ஆடும், கிளையை நம்பாத கிளியும் நல்லாயிருந்ததா வரலாறே கிடையாது தங்கச்சி...
                                                               www.tamilcinema.com   

Thursday, 27 October 2011

7 ஆம் அறிவை பார்த்து ரசித்தார் ரஜினி - காத்திருந்து வரவேற்ற சூர்யா-ஜோதிகா

சிங்கம் வெளியே வர ஆரம்பித்துவிட்டது. மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு Rajinikanthசிங்கப்பூரிலிருந்து திரும்பிய ரஜினி, அதன்பின் வெளியே எங்கும் வராமலே இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பதி பெருமாள் கோவிலுக்கு குடும்பத்தோடு வந்திருந்து எடைக்கு எடை கற்கண்டு செலுத்தினார் ரஜினி. இப்போது நாம் சொல்லப் போவது அதே மாதிரியான ஒரு இனிப்பான செய்திதான்.
நேற்று நுங்கப்பாக்கம் லேக் ஏரியாவில் அமைந்திருக்கும் ஃபோர் பிரேம்ஸ் தியேட்டருக்கு தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வந்திருந்தார் ரஜினி. பிற்பகல் மூன்று மணிக்கு அவர் வரப்போவதாக தியேட்டர் நிர்வாகி கல்யாணத்திற்கு தகவல் வர, அவரும் பரபரப்பாக காத்திருந்தார். மிக சரியாக மூன்று மணிக்கு காரில் வந்திறங்கிய ரஜினி, அதே துள்ளல் நடையுடன் துடிப்பான ஸ்டைலுடன் தியேட்டருக்குள் சென்றாராம்.
ரஜினியின் இந்த வருகை 7 ஆம் அறிவு திரைப்படத்தை காண்பதற்காகதான். சூப்பர் ஸ்டாரை வரவேற்க படத்தின் நாயகன் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் காத்திருந்தார்கள். பின்பு படம் முடியும் போது மீண்டும் வந்த இருவரும் ரஜினியின் பாராட்டுதல்களை கேட்டு நெஞ்சமெல்லாம் பூரித்தது தனி சந்தோஷம்.
                                              www.tamilcinema.com

7ஆம் அறிவு - விமர்சனம்7am Arivu
எடுத்த எடுப்பிலேயே போதி தர்மரின் வரலாற்றை டாகுமென்ட்ரி ஸ்டைலில் சொல்லிவிடுகிறார் டைரக்டர் முருகதாஸ். காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்கு போகும் பல்லவ நாட்டு இளவரசன் சூர்யா, போகிற இடத்தில் காட்டும் முரட்டு மோதலும் முயல்குட்டி சாந்தமும் அவ்வளவு ஈர்ப்பு. வினோத நோயால் சாகக் கிடக்கிற குழந்தையை ஈவிரக்கமில்லாமல் ஓரிடத்தில் போட்டு விட்டு வரும் சீனர்களிடமிருந்து குழந்தையை காப்பாற்றி தாயிடம் ஒப்படைக்கிற அந்த காட்சி, நெஞ்சை உலுக்கும் நெகிழ்ச்சி. அவர்களுக்கு வர்மக்கலையையும், மருத்துவ முறைகளையும் கற்றுத் தரும் போதி தர்மரை விஷம் வைத்து கொல்கிறார்கள் மக்கள். ஏனாம்? அந்த மண்ணில் அவர் புதைக்கப்பட்டால் தங்களை நோயே அண்டாது என்ற நம்பிக்கை. அது தெரிந்தும் புன்னகையோடு செத்துப் போகிற அவரை நினைத்தால் புல்லரிக்கிறது.
ஆறாம் நு£ற்றாண்டு போதி தர்மரின் பிம்பத்திற்கு அவ்வளவு தத்ரூபமாக உயிர் கொடுத்திருக்கிறார் சூர்யா. ஆனால் சர்க்கஸ் சூர்யாவுக்கு அத்தனை வேலையில்லை. அவரே செய்வதாக சிலாகிக்கப்பட்ட சில சர்க்கஸ் காட்சிகளில் கூட கிராபிக்ஸ் நிரப்பல்கள்(?) தமிழனின் வீரம் குறித்து அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டர் அதிர்கிறது. 'ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனை தாக்குறது வீரம் இல்ல. இலங்கையில் நடந்தது துரோகம். நிச்சயம் திருப்பி அடிக்கணும்' என்று சீறும் போது தமிழனின் டி.என்.ஏக்கள் அத்தனையும் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளும். இப்படி ஒரு கதைக்காகவும் வசனங்களுக்காகவும் கோடிகளை அள்ளி இறைத்த தயாரிப்பாளர் உதயநிதிக்கும் மனசார பாராட்டுகள்.

லாஸ் வேகாசில் பாடல் வெளியீடு ஜி.வி.பிரகாஷ் குஷி

muppozhudhum unkarpanaiஅதர்வா நடித்துவரும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்காக லாஸ் வேகாஸ் சென்றுள்ளது அப்படக்குழு. கல்யாண செலவுக்கு இணையாக அந்த கல்யாணத்தின் இன்விடேஷன் செலவும் இருந்தால் எப்படியிருக்கும். அப்படிதான் இந்த படத்திற்காக செலவு செய்து கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான எல்ரெட் குமார்.
நாங்க கம்போசிங்குக்காக வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு தயாரிப்பாளரிடம் சொன்னால்தான் செய்வாங்க. ஆனால் நான் கேட்காமலே என்னை வெளிநாட்டுக்கு அழைச்சுட்டு போனவர் குமார் சார்தான் என்றார் ஜி.வி.பிரகாஷ். இந்த முறையும் இவரை அழைத்துக் கொண்டுதான் லாஸ் வேகாஸ் போயிருக்கிறது இந்த டீம்.
போன இடத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் வைத்தால் என்ன என்று நினைத்திருக்கிறார்கள். உடனே அதை செயல்படுத்தியும் விட்டார்கள். படத்தில் இடம்பெறும் ஒரு முறை என்ற ரீமிக்ஸ் பாடலை நவம்பர் 6 ந் தேதி அங்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அங்குள்ள கேசினோ ஒன்றின் உரிமையாளர் பெடரிக் காஸ்கோ வெளியிட, 295 என்டர்டெயின்ட்மென்ட்டின் உரிமையாளர் மகேஷ் மேனன் பெற்றுக் கொள்கிறாராம்.
அதே மேடையில் ஜி.வி.பிரகாஷும் ஒரு பாடலை பாடப் போகிறாராம். லாஸ் வேகாஸ் தமிழர்களே... விஷயத்தை சொல்லியாச்சு. வேகமாக தயாராகுங்க...
www.tamilcinema.com

ஆன்ட்ரியாவின் ஆக்ரோஷம்

'திருப்பங்கள்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆன்ட்ரியா. இப்படத்தில் Andriyaஅவர் புடவை கட்டிக் கொண்டிருப்பது போல சில ஸ்டில்களை எடுத்திருந்தார்கள். கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்குமே என்று பிரஸ்சுக்கும் அனுப்பிவிட்டார்கள்.
நெட்டில் வெளியான அடுத்த நிமிஷமே டைரக்டரை அழைத்து ஷட்டில் காக் ஆடிவிட்டாராம் ஆன்ட்ரியா. 'என் இமேஜே போயிருச்சு. முதல்ல அந்த படத்தை இன்டர்நெட்டுகளில் வராம தடுக்கணும்' என்று உத்தரவே போட்டுவிட்டார். அதிர்ச்சுக்குள்ளான டைரக்டர், கெஞ்சி கூத்தாடி வலைதள படத்தையெல்லாம் வடிகட்டி அழித்துக் கொண்டிருக்கிறார்.
தேவதைன்னு நினைச்சு தெம்மாங்கு பாடுனா, தெருவே கேட்கிற மாதிரி ஒப்பாரி வச்சுதாம்...
                                                     www.tamilcinema.com

விஜய் விரும்பிய ஏரியா சிபாரிசினால் கெட்டது

பொதுவாகவே விஜய் நடிக்கும் படங்களின் சென்னை நகர விநியோக உரிமையை Vijayஅவரே எடுத்துக் கொள்வார். ஹீரோவே கேட்கும்போது முடியாது என்று மறுக்கிற தைரியம் யாருக்கு வரும்? ஆனால் இந்த முறை வேலாயுதம் படத்தின் சென்னை நகர விநியோக உரிமை அவருக்கு இல்லை. ஆசைப்பட்டும் கிடைக்கவில்லையே என்பதுதான் முக்கிய திருப்பம்.
அப்படி என்ன நடந்தது?
ஆரம்பத்திலேயே இது குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் பேசவில்லையாம் விஜய். சரி படம் முடியட்டும். பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்திருக்கலாம். ஆனால் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிற நேரத்தில்தான் இந்த விஷயத்தை பற்றி பேச்செடுத்தார் விஜய். நேரடியாக விஜய்யே ரவிச்சந்திரனிடம் இது குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
சார் முன்னாடியே சொல்லியிருக்கலாமே. இப்பதான் ஒரு முக்கியமான சிபாரிசின் பேரில் படத்தை இன்னாருக்கு கொடுத்தேன் என்றாராம் அவர். அந்த முக்கியமானவரின் பெயரை கேட்ட விஜய், சரி ஆகட்டும் என்று வழிவிட்டு ஒதுங்கியதுதான் பரபரப்பு.
அது யாருன்னு நாங்க சொல்ல மாட்டோம்ல....!
                                                        www.tamilcinema.com

7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை?

7 ஆம் அறிவு படம் குறித்து வெவ்வேறு அபிப்ராயங்கள் இருந்தாலும், ஏகோபித்த 7am Arivuபாராட்டு அப்படத்தில் இடம் பெறும் தமிழன் குறித்த வசனங்களுக்குதான். ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் அந்த காட்சிகளில் வசனத்தை ஒப்புக்கு ஒப்பிக்காமல் உணர்ச்சி பிழம்பாக உச்சரித்திருக்கிறார் சூர்யா.
இவ்வளவு பேசிய பின் அந்த படத்தை இலங்கையில் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்குமா? படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பதாக தகவல்.
புத்தருக்கு இணையானவர் போதிதர்மர் என்ற வசனத்திற்காகவும், திருப்பி அடிக்கணும் என்ற வசனத்திற்காகவும் தடை செய்யப்பட்டிருக்கிறது இப்படம். அதுமட்டுமல்ல, இலங்கையின் கோபத்தை கிளறிய இன்னொரு வசனம், ஒன்பது நாடுகள் ஒன்று சேர்ந்து அடிப்பது வீரமல்ல, துரோகம் என்பது.
மறு ஆய்வுக்குழுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம் படம். அங்கே ஏகப்பட்டு வெட்டுகளுக்கு பிறகு படத்தை அனுமதிப்பார்கள் போல தெரிகிறது. பார்க்கலாம்...
                                                     www.tamilcinema.com

Wednesday, 26 October 2011

Vijay as Tata Docomo brand ambassador
Vijay as Tata Docomo brand ambassador

We had heard some time back that a major national telecom company had signed up Vijay as their brand ambassador. The mystery behind who that telecom company has now been cleared. Ilayathalapathy Vijay has been signed up to endorse Tata Docomo, the cellular service wing of Tata Teleservices Limited. According to sources, Vijay has signed an one-year contract to endorse all the products of Tata Docomo in Tamilnadu. The authorities at Tata Docomo believe that Vijay's charm and mass appeal lead them to choose him to be the face of their brand.
Advertisements and promotions featuring Vijay have already been shot, and are expected to be be made public from Diwali. Vijay already endorses a cola brand, and a jewellery house, and now with him endorsing a telecom brand too, the list of products he endorses gains quite a bit of variety, and would delight his fans too, for they can get to see more of their favourite actor .
                                            tamil.galatta.com

Happy Birthday Asin!
Happy Birthday Asin!

Asin, the most beloved actress of the South, celebrates her birthday today. Let us wish this lovely lass a very happy birthday.
Asin has scaled great heights in a short span of time. She started her film career with Narendran Makan Jayakanthan Vaka in Malayalam, but it wasAmma Naana Oka Tamil Amaayi, her first film in Telugu, that made her a household name. With this Telugu film, news about her work, acting skills and beauty reached all corners of the South. Soon, Kollywood beckoned. It remade Amma Naana… into M. Kumaran s/o Mahalakshmi; Asin reprised her role convincingly and walked into the hearts of every Tamil. Kollywood became besotted with this actress – it almost wanted her to act in every film it made! Everyone was enamored by her beauty, energy and chirpiness. Then came a milestone in her career – Ghajini. Murugadoss knew very well that this girl would set new standards in the industry and Asin proved him right. Ghajiniwas a huge success and Asin was an inseparable component of that success story. The season after Ghajini saw her act with all the top heroes of Kollywood; she even became a widely-discussed name in the rest of India. The surprising fact is that her fan base stretched to include even little kids whose attention is normally riveted on the hero, his style and stunts! She has only added to her fan base after Dasavatharam, her beautiful eyes depicting mischievousness, vulnerability, and serenity. There is definitely something about her that makes everyone go crazy!
With every film she did, Asin became the heart-throb of the entire South – so much so that there was gloom when she went to Bollywood to act with Aamir Khan in the remake ofGhajini. The movie went on to become a blockbuster and Asin was now rubbing shoulders with the glitterati of Bollywood. But her second Bollywood flick London Dreams with Salman Khan and Ajay Devgan (now Devgn) didn't do well at the box office. She came back strongly in Tamil with Kaavalan opposite Vijay and her recent Hindi film Ready with Salman Khan was a blockbuster. Now the actress is currently busy with Rohit Shetty's Bol Bachchan and Sajid Khan's Housefull 2 costarring Akshay Kumar, John Abraham and Zarine Khan
Galatta salutes this great actress and wishes her a very happy birthday and many more successes in her life!
Asin photo gallery
                                         tamil.galatta.com

Happy Deepavali!Happy Deepavali!

The festival of lights, Deepavali, is here. And the celebrations from Galatta Media is twice the fun! And with it come a host of specials on Galatta.com just for you!
Two big releases and you want to know everything there is to know about them. And we bring them to you! Don’t miss out on the special wallpapers and galleries that we have put together so you can get a close look at what you can expect from these movies. The box office may not be crowded with 7 Aum Arivu and Velayudham, but celebrations at Galatta.com are happening nevertheless.We have some very special interviews lined up for you.
CLICK HERE FOR 7 Aum Arivu review!
Stars that have put you in a trance are here to wish you!
Check out some exclusive interviews (below) that have stormed the Galatta scene this Deepavali!
Cinematographer Madhie interviews Rajeevan
Rajapattai team speaks about the film
Taapsee exclusive interview Part 1
Taapsee exclusive interview Part 2
Director Jayam Raja exclusive interview
Exclusive chat with Marina team
Oviya talks about Marina
Pandiraj exclusive interview on Marina
Exclusive interview with Jiiva
Deepavali is an occasion that brings together family and friends – we know just how important a festival this is. So, to make it more interesting the Galatta Cinema October issue is very special, celebrating this beautiful festival in style. Nagarjuna and Sameera Reddy grace the covers of this special double issue.. Does that sound great or what?
So what are you guys waiting for ?
                                        tamil.galatta.com

Tuesday, 25 October 2011

Osthi Audio Launch Stills

ஆன்ட்ரியாவின் ஆக்ரோஷம்


திருப்பங்கள்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆன்ட்ரியா. இப்படத்தில்Andriyaஅவர் புடவை கட்டிக் கொண்டிருப்பது போல சில ஸ்டில்களை எடுத்திருந்தார்கள். கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்குமே என்று பிரஸ்சுக்கும் அனுப்பிவிட்டார்கள்.
நெட்டில் வெளியான அடுத்த நிமிஷமே டைரக்டரை அழைத்து ஷட்டில் காக் ஆடிவிட்டாராம் ஆன்ட்ரியா. 'என் இமேஜே போயிருச்சு. முதல்ல அந்த படத்தை இன்டர்நெட்டுகளில் வராம தடுக்கணும்' என்று உத்தரவே போட்டுவிட்டார். அதிர்ச்சுக்குள்ளான டைரக்டர், கெஞ்சி கூத்தாடி வலைதள படத்தையெல்லாம் வடிகட்டி அழித்துக் கொண்டிருக்கிறார்.
தேவதைன்னு நினைச்சு தெம்மாங்கு பாடுனா, தெருவே கேட்கிற மாதிரி ஒப்பாரி வச்சுதாம்...
                 www.tamilcinema.com

எனக்குதான் வேணும்... மோதிய பெரிசுகள்


ஒரு மாதத்திற்கு முன்பே மவுண்ட் ரோடு பக்கத்திலிருக்கும் அந்த மல்டிபிளெக்ஸ்Velayuthamதியேட்டருக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டது 7 ஆம் அறிவு டீம். திடீரென்று தீபாவளிக்கு வந்துவிட்ட வேலாயுதம், எனக்கும் அதே தியேட்டர்தான் வேணும் என்று அடம் பிடிக்க, கை பிசைந்து நின்றது தியேட்டர் நிர்வாகம். இன்னொரு தியேட்டரை தருகிறோம் என்றாலும், அதெல்லாம் முடியாது. அதேதான் வேணும் என்றார்களாம்.
அதற்கும் காரணம் இருந்தது. இவர்கள் முதலில் கேட்ட தியேட்டர்தான் அந்த வளாகத்திலேயே பெரிசு. ஆனால் இருவரும் போட்ட போட்டியிலும் குழப்பத்திலும் ஐந்து நாளுக்கு முன்னாடியே திறக்க வேண்டிய அட்வான்ஸ் புக்கிங் கவுண்டர் ஷட் டவுன் ஆகிக் கிடந்தது. நல்ல வேளையாக ஒரு தியேட்டர் கேட்டவர்களுக்கு இரண்டு குட்டி தியேட்டராக கொடுத்து பிரச்சனையை தீர்த்ததாம் தியேட்டர் வட்டாரம். இரண்டு மத யானைகள் மோதிக் கொண்டால் குறுக்கே மாட்டிக் கொள்கிற எறும்புக்குதானே எலும்பு முறிவு?
                                www.tamilcinema.com

ஹன்சிகா அழகுக்கு முன்...


வேர்ல்டு பேங்க்ல இருக்கிற கோல்டு பிஸ்கெட் மாதிரியே இருக்கிறார் ஹன்சிகாHansika Motwaniமோத்வானி. இவரைப்போய் வில்லேஜ் கேரக்டர்ல நடிக்க வைச்சா எப்படியிருக்கும்? வடநாட்டு வில்லேஜ் கேர்ளா கூட அவரை நினைச்சு பார்க்க முடியாதே?
வேலாயுதம் படத்தில் இப்படி ஒரு கேரக்டரை ஹன்சிகாவுக்கு துணிச்சலோடு கொடுத்திருக்கும் டைரக்டர் ராஜாவிடம் கேட்டால், ஆமாம் நானும்தான் உங்களை முதல்ல மாதிரி நினைச்சேன். ஹன்சிகாவோட அழகு இது மாதிரி லாஜிக் மிஸ்டேக்கெல்லாம் மறக்கடிச்சுடும் என்கிற தைரியத்தில்தான் அந்த தப்பையே பண்ணினேன் என்றார். ஆட்டத்தை ரசிக்கிறவங்களுக்கு எதுக்கு அல்ஜீப்ரா கணக்கெல்லாம்?
                            www.tamilcinema.com

ஏன் அப்படி செய்தார் சிம்பு?


சல்மான்கான் நடித்த தபாங் படத்தின் ரீமேக்தான் சிம்பு நடிக்கும் ஒஸ்தி. இப்படத்தின் Osthiபாடல் வெளியீட்டு விழா அரங்கத்தில் சல்மான் போலவே ஒரு பாடலுக்கு ஆட வந்தார் சிம்பு. திடீரென்று மேடையில் தோன்றியவர், முன்னால் உட்கார்ந்திருந்த வி.ஐ.பிகளுக்கு நேராக தனது பின்புறத்தை ஆட்டிக்காட்ட, அதிர்ந்து போனார்கள் அத்தனை பேரும்.
ஏன்யா சிம்பு இப்படி செஞ்சாரு என்று புரியாமல் குழம்பினார்கள். தபாங்ல சல்மான் இப்படிதான் செய்வாராம் என்று யாரோ தகவலை கசிய விட, அப்புறம்தான் நிம்மதியானார்கள் அத்தனை பேரும்.
இதற்கிடையில் மேடையில் தனி பாட்டுக்கச்சேரியே நடத்தி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.ஆர். வீட்டுக்கு போனதும் அப்பாவையும் மகனையும் ஒன்றாக நிற்க வைத்து திருஷ்டி சுற்றி போட்டார்களாம்.
                 www.tamilcinema.com

Monday, 24 October 2011

Jr. NTR rejects Taapasee!
Jr. NTR rejects Taapasee!

Actress-singer Shruti Haasan recently walked out of Jr. NTR’s upcoming Boyapati Sreenu directedDammu, citing the non-availability of dates.
After Shruti’s exit, producer K.S. Rama Rao suggested actress Taapasee's name for this Telugu film, but according to sources, the film's hero Jr. NTR refused to work with Taapasee and instead, he suggested the name of Kajal Aggarwal.
Notably, compared to Taapasee, Kajal Aggarwal is an established heroine with good market in Tollywood and it seems that Jr. NTR is eyeing on Kajal's market value and does not want to take a chance in the backdrop of the huge success of his latest flick Oosaravalli. Anyway, the makers are yet to announce the heroine’s name officially
.

7 Aum Arivu: 2 days to go
7 Aum Arivu: 2 days to go
With just two days remaining for it's grand release, 7 Aum Arivu has already created the much needed hype and expectations across the nation. The film, which has Suriya  and Shruti Haasan in lead roles, is releasing in more than 1000 theatres across the globe. In Tamil Nadu alone, the film will grace more than 400 screens. 7 Aum Arivu is a sci-fi thriller in which Suriya plays a double role: a circus artist and Buddhist monk. The film has already received tremendous pre booking response in Chennai. The advanced reservation for the film began on October 19, 2011 and almost all the theatres are fully booked for the next five days.
Suriya will sport the look of a Buddhist monk for only 20 minutes in the film. He will appear as a Tamil prince from Kancheepuram who travels to China and becomes a well-respected monk there.
             tamil.galatta.com

Thirupangal: The turning points
Thirupangal: The turning points

Thirupangal, directed by Sharada Ramanathan (whose debut film Sringaram(Dance of Love) won her many awards and laurels) is ready to hit screens soon. The film, produced by Sri Selvanayaki Movies, has Nandha and Andrea in the lead roles while Gautham Kurup (ofKandhahar fame) plays the main villain. Noted cinematographer Madhu Ambat takes care of the camera while Vidhyasagar is the music director. According to director Sharada Ramanathan, Thirupangal narrates the story of a young urban youth who dreams of going to United States. But life takes a U turn and he ends up somewhere else. Buzz is that the film would be an intense thriller laced with many twists and turns.
                               tamil.galatta.com/
.

Katrina or Kareena in Arundhati Hindi remake?By Ambili [October 24, 2011]   

Katrina or Kareena in Arundhati Hindi remake?

Reportedly Gemini Film Circuit, which acquired the Hindi remake rights of Tollywood's biggest blockbusterArundhati, is trying to rope in Bollywood diva Katrina Kaif or Kareena Kapoor to play the lead role (which was done by Anushka in the original).
The film gave a new image to Anushka, who was seen only in glamorous roles till then, and she went on to become one of the leading heroines in the South. Arundhati, directed by Kodi Ramakrishna, starring Anushka and Sonu Sood in the lead,   grossed Rs. 30 crores at the box office including Rs. 10 crores for the Tamil version. The satellite rights fetched another Rs. 7 crores. Earlier the remake rights of the film was acquired by Gemini Films Circuit for a whopping amount from producer Shyam Prasad Reddy of Mallemala Entertainments. There are also reports that the producers are planning to make the Hindi version in 3D.
CLICK HERE FOR Arundhati review
      

அவர ஏமாத்த முடியல... டைரக்டரை புலம்ப வைத்த கமல்


அஜீத்துடன் நடிச்சாச்சு. அப்புறம் கமல் கூட நடிச்சிடணும் என்று நெற்றி வேர்வை நிலத்தில் தெறிக்கும்படி யோசித்துக் கொண்டிருக்கிறது வெங்கட்பிரபுவின் நட்புVenkat Prabhu - Kamalகோஷ்டி. பெரிய நடிகர், சின்ன நடிகர், ஹிட்டு நடிகர், பிட்டு நடிகர் என்ற பாசாங்கும் இல்லாமல் பழகுகிற இவர்களுக்கு இப்படி ஒரு ஆசை வந்ததில் தப்பில்லை. ஏனென்றால் வெங்கட்பிரபு யாரை வைத்து படம் எடுத்தாலும் அதில் நாங்க இருப்போம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
அதை நிறைவு செய்துவைக்கிற கடமையும் கொண்டவர் போல கமல்ஹாசனை சந்தித்து கதை சொல்லப் போயிருக்கிறார் வெங்கட்பிரபு. போன இடத்தில் நடந்ததென்ன? அது தனி காமெடி ஷோ என்கிறார்கள் இந்த வால் பிரதர்ஸ் பற்றி ஆராய்ச்சி செய்யும் கோடம்பாக்கத்து லென்ஸ் கண்ணர்கள்.
இவர்களையும் ஒரு காரில் ஏற்றிக் கொண்டு கமலிடம் கதை சொல்லப் போயிருந்தாராம் வெங்கட்பிரபு. நல்லவேளையாக அவர்களை காருக்குள் விட்டுவிட்டு இவர் மட்டும் உள்ளே போனாராம். உலக சினிமாவையே உள்ளங் கையில் வைத்திருக்கும் கமலிடம் கதை சொல்லப் போவதென்றால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை அந்த சந்திப்பில் புரிந்து கொண்டாராம் வெங்கட்.
இவர் எந்த ஆங்கில படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தாலும், அதுவா? என்று இடையில் குறுக்கிடும் கமல், அந்த ஆங்கில படத்தையே கூட எந்த படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்க ஆரம்பித்தார்கள் என்பதை சொல்லி அதிர வைத்தாராம். அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட அந்த படத்தின் கடைசி லைட் மேன் பெயர் வரைக்கும் சொல்லி வெங்கட்பிரபுவை மேலும் திக்கு முக்காட வைத்தாராம். இப்படியே போன ரெண்டு மணி நேர சந்திப்பில் ஒரு ஹாலிவுட் ஸ்டுடியோவுக்குள் நுழைந்த கரட்டாம்பட்டி பஞ்சாயத்து பிரசிடென்ட் ரேஞ்சில் பேஸ்த் அடித்து வெளியே வந்தாராம் வெங்கட்.
சரி... கடைசியாக வெங்கட் பிரபு என்னதான் முடிவெடுத்தார்? ’போங்கப்பா... அவரை எந்த கதையை சொல்லியும் ஏமாத்த முடியல! ’
                               www.tamilcinema.com

ரத்தத்தின் ரத்தமே விஜய்க்காக எழுதிய வரிகள்


வேலாயுதம் படத்தில் விஜய்க்காக எழுதப்பட்டிருக்கும் ஒரு பாடல் இன்றைய இளம் தலைமுறையினரிடம் மட்டுமல்ல, அரசியல் அண்ணாச்சிகளுக்கும் இஷ்டமானVelayuthamபாடலாக மாறியிருக்கிறது. ரத்தத்தின் ரத்தமே என்பார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உடன்பிறப்பே என்பார் கலைஞர். இவ்விரண்டையும் சேர்த்து ஒரு பாடல், அதுவும் விஜய்யின் நடிப்பில் வந்தால் அது எத்தனை சலசலப்பை ஏற்படுத்தும்? அதுதான் நடந்திருக்கிறது இப்போது திருப்புகிற திசையில் எல்லாம். (விஜயகாந்தின் மக்களே... வை விட்டுட்டீங்களேங்ணா) இப்பாடலை எழுதிய அண்ணாமலை இந்த வரிகளை யோசித்த விதம் பற்றி கூறியதென்ன?
இந்த படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ‘ரத்தத்தின் ரத்தமே’ பாடல்தான் எனக்கு சவாலாக அமைந்தந்து. ஏனெனில், ‘அண்ணன் தங்கை பாசத்தை’ உணர்த்தும் வெற்றிப் பாடல்கள் திரைப்படங்களில் மிகவும் குறைவு. அதனால், இதை எப்படியாவது ஹிட் செய்தே ஆகவேண்டும் என்று நினைத்து ரொம்பவும் யோசித்து, ‘ரத்தத்தின் ரத்தமே’ என்ற எம்.ஜி.ஆர் பயன்படுத்திய வார்த்தையை முதல் வரியாக எழுதினேன்.
அந்த வார்த்தை ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்த வார்த்தை என்பதால், மக்களிடம் அது எளிதாக சென்று சேரும் என்று எதிர்பார்த்தேன். அதே நேரத்தில் ஒரு தங்கையை நோக்கி அண்ணன் சொல்வதற்கும் அதைவிட பொருத்தமான வேறு வார்த்தை என்ன இருக்கிறது! அடுத்த வரியாக ‘என் இனிய உடன்பிறப்பே’ என்று கலைஞர் சொல்லும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்.
அதுவும் அண்ணன் தங்கை பாசத்துக்கு மிகவும் பொருத்தமான வார்த்தைகள். மேலும், விஜய் சாருக்கு இந்த இரண்டு பெரிய கட்சிகளிலுமே ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதால், அதுவும் இந்தப் பாடலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
இந்தப் பாடலில் வரும், ‘செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா’ என்கிற வரிகளை விஜய் ஆண்டனி சார் நான் எழுதிய நொடியிலேயே வெகுவாக ரசித்துப்பாராட்டினார். விஜய் சாருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் என்று அவர் மூலம் நான் அறிந்தபோது,பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.
                              www.tamilcinema.com

அரவான் படத்தில் கவர்ச்சி நாயகி


ரதிநிர்வேதம் என்ற படத்தில் நடித்தவர் ஸ்வேதா மேனன். மிக சமீபத்தில் தமிழில் வெளிவந்த தாரம் என்ற படத்திலும் இவர்தான் நாயகி. இவர் படத்தின் போஸ்டர்களை Swetha Menonஆடு மாடுகள் கூட வெட்கப்பட்டுக் கொண்டே தின்கிற அளவுக்கு தாறுமாறாக கவர்ச்சியை வெளிப்படுத்துவதில் கில்லாடி இந்த ஸ்வேதா மேனன். ’அந்த மாதிரி’ லேகிய டப்பா தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இவரது கவர்ச்சி ஸ்டில்லை பாட்டிலில் பிரிண்ட் செய்துவிட, மானமே போச்சு என்று கோர்ட்டுக்கு போய் கொந்தளித்த நடிகை இவர்.
அந்த சம்பவத்திலிருந்தே இவரை சற்று ஜாக்கிரதையாக கையாள்கிறார்கள் இயக்குனர்கள். டிபன் கேரியர் சுமக்கும் டப்பா வாலாக்கள் மாதிரி யாருடைய பசிக்கெல்லாமோ அழகு சுமக்கும் இந்த ஸ்வேதா மேனன் இதுவரை ஒரு நேரடி தமிழ் படத்திலும் நடித்ததில்லை என்பதுதான் தமிழுலகம் பெற்ற பெரும் சாபம். இவர் நடித்த மலையாள படங்களையெல்லாம் டப்பிங் வடிவத்தில்தான் கண்டு ரசிக்கிறான் தமிழன்.
இந்த குறையை போக்க நினைத்தாரோ என்னவோ? தான் இயக்கிக் கொண்டிருக்கும் ’அரவான்’ படத்தில் ஸ்வேதாவுக்கு வெயிட் ரோல் கொடுத்திருக்கிறாராம். அப்படியென்ன பொல்லாத ரோல்? தாசி கேரக்டராம்...
                       www.tamilcinema.com

ரதிநிர்வேதம் என்ற படத்தில் நடித்தவர் ஸ்வேதா மேனன். மிக சமீபத்தில் தமிழில் வெளிவந்த தாரம் என்ற படத்திலும் இவர்தான் நாயகி. இவர் படத்தின் போஸ்டர்களை Swetha Menonஆடு மாடுகள் கூட வெட்கப்பட்டுக் கொண்டே தின்கிற அளவுக்கு தாறுமாறாக கவர்ச்சியை வெளிப்படுத்துவதில் கில்லாடி இந்த ஸ்வேதா மேனன். ’அந்த மாதிரி’ லேகிய டப்பா தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இவரது கவர்ச்சி ஸ்டில்லை பாட்டிலில் பிரிண்ட் செய்துவிட, மானமே போச்சு என்று கோர்ட்டுக்கு போய் கொந்தளித்த நடிகை இவர்.
அந்த சம்பவத்திலிருந்தே இவரை சற்று ஜாக்கிரதையாக கையாள்கிறார்கள் இயக்குனர்கள். டிபன் கேரியர் சுமக்கும் டப்பா வாலாக்கள் மாதிரி யாருடைய பசிக்கெல்லாமோ அழகு சுமக்கும் இந்த ஸ்வேதா மேனன் இதுவரை ஒரு நேரடி தமிழ் படத்திலும் நடித்ததில்லை என்பதுதான் தமிழுலகம் பெற்ற பெரும் சாபம். இவர் நடித்த மலையாள படங்களையெல்லாம் டப்பிங் வடிவத்தில்தான் கண்டு ரசிக்கிறான் தமிழன்.
இந்த குறையை போக்க நினைத்தாரோ என்னவோ? தான் இயக்கிக் கொண்டிருக்கும் ’அரவான்’ படத்தில் ஸ்வேதாவுக்கு வெயிட் ரோல் கொடுத்திருக்கிறாராம். அப்படியென்ன பொல்லாத ரோல்? தாசி கேரக்டராம்...
                       www.tamilcinema.com

மழையும் மண்வாசனையும்... வியக்க வைக்கும் சினேகா-நமீதா நட்பு


இரண்டு நடிகைகள் ஓரிடத்தில் இருந்தால் அந்த இடமே இஸ்திரி பெட்டி மாதிரிதான் இருக்கும். அந்தளவுக்கு சூடு மற்றும் பொற்ற்ற்றாமை வழிந்தோடும். இப்படி தலைSneha - Namithaவிரித்தாடுகிற ஈகோக்களுக்கு மத்தியில் மழையும் மண்வாசனையுமாக இருக்கிறார்கள் சினேகாவும் நமீதாவும். நான் அவனில்லை படத்தில் இருவரும் ஒன்றாக நடித்ததிலிருந்தே இந்த பிரண்ட்ஷிப் தொடர்கிறதாம்.
நடிகர் நடிகைகள் என்று ஒரு அந்தஸ்தில் இருந்தாலும், சில நேரங்களில் எங்களுக்கும் கவலைகள் வரும். அப்படி ரொம்ப டிப்ரஷனா இருக்கிற நேரத்தில் மும்பையிலிருக்கும் நமீதாவுக்கு போன் அடிப்பேன். அவ்வளவு ஆறுதலா பேசுவாங்க. அப்பா அம்மாவை தாண்டி நட்புக்கு இருக்கிற ஒரே பலமே அவங்ககிட்ட சில விஷயங்களை மனம் விட்டு பேசலாம்ங்கிறதுதான். அந்த வகையில் நான் ரொம்ப நேசிக்கிற தோழி நமீதாதான் என்கிறார் சினேகா.
கிளாமரை நேசிக்காத சினேகாவும், கிளாமரை தவிர வேறெதையும் யோசிக்காத நமீதாவும் இணைபிரியா தோழிகளாக இருப்பதே ஒரு அழகுதான் என்றால் அதைவிட இன்னொரு அழகு இருக்கிறது இந்த நட்பில். சினேகாவையும் ’மச்சான்’ என்றே அழைக்கிறார் நமீதா.
                            www.tamilcinema.com

Sunday, 23 October 2011