மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday 7 August 2012

மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்


சில படங்களை நோக்கிதான் வழி மேல் விழி வைத்திருப்பார்கள் ரசிகர்கள். அந்த வரிசையில் வரப்போகும் படங்களில் Mattranஒன்றுதான் 'மாற்றான்'. ஒட்டிப்பிறந்த ரெட்டையராக நடிக்கிறார் சூர்யா என்பது அநேகமாக அமீபா வரைக்கும் தெரிந்த செய்தி.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒரு ரெட்டைப்பிறவி படம் என்ற ஆவலின் மீது நண்டு சிண்டு சுண்டைக்காயெல்லாம் கல் வீசுவது போலவே நடக்கிறது அடுத்தடுத்த சம்பவங்கள். வேறொன்றுமில்லை, ப்ரியாமணி நடித்த 'சாருலதா' என்ற ரெட்டைப்பிறவி படம் இம்மாதமே திரைக்கு வருகிறது. இதிலேயே பாதி புஸ் ஆகிவிட்டார்களாம் 'மாற்றான்' படக்குழுவினர்.
இது போதாதென்று மலையாளத்தில் இதே டைப்பில் உருவான இரண்டு மூன்று டப்பா படங்களையும் களத்தில் இறக்கப் போகிறார்கள் வரிசையாக. 'மாற்றான்' வெளிவருவதற்கு முன்பே வெளிவரும் இந்த பேதி மாத்திரைகள் ஏகக்கடுப்பை உருவாக்கி வருகின்றன சூர்யா ரசிகர்களுக்கு.
இந்த நிலையில்தான் 'மாற்றான்' படத்திற்காக சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இதற்காக மெனக்கட்டு தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் சூர்யாவும். சிங்கப்பூரில் ஆடியோ ரிலீஸ் முடிந்த கையோடு படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்களாம்.
ஓரிடத்தில் கட்டிங் பண்ணி வேறிடத்தில் ஃபிட்டிங் பண்ணினாலும், 'நாங்கதான் முதல்ல...' என்கிற ரெட்டை விஷ நாக்குகளை எப்படிதான் சமாளிக்கப் போறாங்களோ?

                                 http://www.tamilcinema.com/

Thursday 2 August 2012

ரஜினி-கமல் புறக்கணிப்பு ஹீரோயின் மட்டும் ஆர்வம்...




அல்லாடிக் கொண்டிருக்கிறது ஒரு சேனல். ரஜினி- கமல் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் நினைத்தாலே Jayapradhaஇனிக்கும் படத்தின் வெளியீட்டு உரிமை இவர்கள் வசம் இருக்கிறது. இப்போது அந்த படத்தை மறுபடியும் வெளியிட்டால் எப்படியிருக்கும்?
பத்பநாபஸ்வாமி கோவிலுக்கு பாதாள அறை கனெக்ஷன் கிடைத்த மாதிரி இருக்குமே...! பெருத்த நம்பிக்கையில் படத்தை வெளியிட நாள் குறித்துவிட்டார்கள். ரஜினி, கமல், பாலசந்தர் ஆகிய மூவரையும் அழைத்து ஒரு மாபெரும் அறிவிப்பையும் வெளியிட துடித்தார்கள். ஆனால் அவர்கள் மூவருமே தயங்க... அய்யருக்காக காத்திருக்குமா அமாவாசை? அநேகமாக படம் ஆகஸ்ட்டில் வெளியிடப்படலாம்.
இதற்கிடையில் 'பிரமோஷனுக்காக எப்ப கூப்பிட்டாலும் நான் ரெடி' என்று கூறிவிட்டாராம் அப்படத்தின் ஹீரோயினான ஜெயப்ரதா. உத்தரப் பிரதேசத்தில் முக்கியமான அரசியல்வாதியாக பரபரப்பு காட்டும் ஜெயப்ரதா இந்த படம் வருவதில் காட்டுகிற அக்கறையை கண்டு அதிசயிக்கிறது சேனல்.

Saturday 17 March 2012

கடத்தியவரும் கடத்தப்பட்டவரும்... வீரப்பன் கதை விசேஷம்


காட்டுராஜாவின் படமெடுக்க தன் வீட்டையே விற்றுவிட்டார் டைரக்டர் ஒருவர். குப்பி என்ற அற்புதமான படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷின் அடுத்த படைப்புதான் வனயுத்தம். சந்தனக்கடத்தல் வீரப்பனின் கதையை உண்மைக்கு அருகில் நின்று படமெடுக்க Vanayudhamஆசைப் பட்டிருக்கிறார் ரமேஷ். அதற்கான களப்பலிதான் இந்த அழகான வீடு. மனைவியிடம், "இந்த வீட்டின் வாஸ்து சரியில்லை, வேறு வீடு வாங்கிக் கொள்ளலாம்' என்று கூறி விற்றதாக ரமேஷ் சொன்னபோது அந்த பிரஸ் மீட்டிலிருந்து வந்த ச்சொச்சொச்சோ சப்தம் மனதின் ஆழத்திலிருந்து வந்தவைதான்.
படத்தின் ஹீரோ அர்ஜுன். வீரப்பனை கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் கேரக்டரில் நடித்திருக்கிறாராம். இந்த படத்திற்காக சுவிட்சர்லாந்தில் ரெண்டு பாட்டு எடுத்தோம்னு சொல்ல முடியாது. எல்லா நாளும் ஜெயில், காடுன்னுதான் போச்சு என்றார். வீரப்பனை சுட்டுக் கொல்கிற காட்சியை எங்கு வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்க வேண்டும் என்று சொல்லிட்டார் டைரக்டர். ரொம்ப சிரமப்பட்டுதான் எடுத்திருக்கோம் என்றார் அர்ஜுன். வீரப்பன் கதைதான் எல்லாருக்கும் தெரியுமே, இதில் புதுசா என்ன சொல்லப் போறோம் என்ற ஆக்ஷன் கிங்கின் சந்தேகம்தான் நமக்கும். அதற்கு பிரமாதமான ஒரு பதிலை சொன்னார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

தேவர் பிலிம்ஸ் மாதிரி வரணும் லட்சியம் நிறைவேற்றிய "லக்' சாமி!


இயக்குனர்களின் முக்கியமான லேண்ட் மார்க் ஆகிவிட்டது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். ஒரு காலத்தில் மளிகை கடையில் பொட்டலம் கட்டிக் Lingusamiகொண்டிருந்த போதே தனக்குண்டான தன்னம் பிக்கையையும் சேர்த்து பொட்டலமாக கட்டிக் கொண்டு சென்னைக்கு கிளம்பியவர் லிங்குசாமி. வெறும் டைரக்டராக அறிமுக மாகியிருந்தாலும், இன்றைய தேதியில் நம்பர் ஒன் தயாரிப்பாளர்களின் லிஸ்ட்டில் லிங்குசாமிக்கும் முக்கிய இடம் இருக்கிறது.
நான் சௌத்ரி சார் ஆபிஸ்ல டிஸ்கஷன்ல இருக்கும் போது அதே காம்பளக்சில் நாலு படங்களின் வேலைகள் நடந்துகிட்டு இருக்கும். ஒரு காலத்தில் அந்த இடத்தில்தான் தேவர் பிலிம்ஸ் ஆபிஸ் இருந்ததாம். அவரும் ஒரே நேரத்தில் நான்கைந்து பட வேலைகளை செய்து கொண்டு இருப்பாராம். எனக்கும் அப்படி ஒரு ஆசை மனதில் இருந்தது. இன்று என்னுடைய ஆபிசிலும் ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களுக்கான வேலைகள் நடப்பது எனக்கே சந்தோஷமா இருக்கு என்றார் லிங்கு.
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தின் பிரஸ்மீட்டில்தான் இப்படி தன்னம்பிக்கை டானிக்கை ஊட்டினார் அவர். படத்தின் பாடல் ஒன்றும் ட்ரெய்லரும் திரையிடப்பட்டது. ஒரு வெற்றிப்படத்தின் அத்தனை சகுனங்களும் அதில் வெளிப்பட, பாலாஜியின் பொய்யில்லாத பேச்சு லிங்குசாமியின் பேச்சுக்கு கொஞ்சமும் குறைவில்லாத நிறைவை தந்தது.
காதல் படத்தை நான் லிங்குசாமிக்குதான் இயக்கி தருவதாக இருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அதை ஷங்கர் சாரே தயாரித்தார். மறுபடியும் அந்தளவுக்கு உணர்வு பூர்வமான ஒரு படத்தை லிங்குசாமிக்காக தரணும் என்று நினைத்தேன். கல்லு£ரி சரியா ஓடவில்லை என்பதால் எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. பல மாதங்கள் கழித்து ஒரு படம் பண்ணலாம் என்று லிங்குசாமியிடம் சொன்னதும் கதையை கூட கேட்காமல் சரி என்றார்.

மேலும் படிக்க....                       

கல்யாண செலவு... மண்டபத்தை விற்றார் சினேகா?


இன்னும் சில தினங்கள்தான். திருமதியாகிவிடுவார் சினேகா. அதற்கப்புறம் அக்கா வேடமோ, அண்ணி வேடமோ? ஒரு வளர்பிறை வாழ்க்கைக்கு Snehaதயாராகிக் கொண்டிருக்கும் சினேகாவுக்கு அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எப்படி? நமக்கெதற்கு அதெல்லாம்... இந்த வளர்பிறை எப்பவும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசையும் வாழ்த்தும்.
சம்பாதித்த பணத்தையெல்லாம் சென்னையை சுற்றிலும் நிலங்களாக குவித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் பிறந்த ஊரான பண்ருட்டியில் நிலம் வாங்கி குவித்தார் சினேகா. தனக்கு பிடித்த கல்யாண மண்டபம் ஒன்றையும் ஆசை ஆசையாக அதே ஏரியாவில்தான் கட்டினார் அவர்.
இப்போது என்னாச்சு? தனது கல்யாண செலவுக்காக தான் ஆசை ஆசையாக கட்டிய அந்த கல்யாண மண்டபத்தை விற்றுவிட்டாராம்.
மண்டபம் வேறொருவர் கைக்கு போனாலும், சினேகாவுக்குரிய அதே சிரிப்போடும் பொலிவோடும் விளங்கிக் கொண்டிருக்கிறது இப்போதும்.

Sunday 1 January 2012

சிம்பு- தனுஷ்- யூ ட்யூப் 'சப்ப்ப்ப்பாஷ் சரியான போட்டி'


'சப்ப்ப்ப்பாஷ் சரியான போட்டி' என்று அத்தனை விரல்களையும் வாய்க்குள் நுழைத்து விசிலடிக்கிற அளவுக்கு இருக்கிறது சிம்புவின் Love Anthem (ஏக் தம்முல தனுஷை முந்திருவாரு போலிருக்கே)
கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கக் கூடாது என்றSimbuகோடம்பாக்கத்தின் சந்து-ஃபோர் சாக்ரடீஸ்களின் தத்துவத்தை பின்பற்றுகிறாரா, அல்லது ஒரேயடியாக தன் திறமையை காட்டி 'கொலவெறி' புகழை நசுக்க வேண்டும் என்று நினைத்தாரா தெரியவில்லை. இந்தLove Anthem செம டக்கர்.
இப்போது யூ ட்யூப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பாடலும், அதற்கு சிம்புவின் அசால்ட்டான டான்சும் ச்சும்மாச்சுக்கும்தானாம். விரைவில் முறையான மிக்சிங், சுவையான ஆட்டம் என்று இன்னும் இன்னும் மெருகேற்ற போகிறாராம் இந்த பாடலை. அதுமட்டுமல்ல, இந்த பாடலுக்கு சிம்புவோடு சேர்ந்து கொண்டு இன்னொரு உலக பிரபலமும் ஆடவிருக்கிறாராம். (நம்புங்க, எல்லாமே சிம்புவே சொன்னதுப்பா...)
போகிற போக்கை பார்த்தால் அடுத்த வருட இறுதியில் பிரதமரின் இயர் என்ட்டிங் பார்ட்டி சிம்புவுக்கும் இருக்குடோய்...

திரும்ப வைத்த படங்களும் திகைக்க வைத்த மக்களும் -2011 ல் ஒரு பிளா(ஷ்)க்பேக்!


வருஷத்தை பெருக்கி அள்ளி வாரிக் கொட்டும் போதுதான் தெரிகிறது, அதில் எத்தனை மாணிக்கங்களும் மரகதங்களும் குப்பையோடு குப்பையாக போனதென்று? ஒவ்வொரு வருடத்திலும் ஏதாவது சில நல்ல படங்கள் வெளியாவதும், பெட்டி செலவு, போஸ்டர் செலவு கூட தேறாமல் முடங்கிப் போனதும் நடந்து கொண்டே இருக்கிறது.
கட்டு சோற்றில் இருக்கிற ருசி, பர்கர்களிலும் பீட்சாக்களிலும் இல்லை என்பதுVaagai Sooda Vaaதெரிந்தே ஒரு கூட்டம் அந்த கடைகளை நிரப்பி வருகிறதே என்ற கவலையும் நம்மை தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கிற இந்த பலசரக்கு கண்றாவியை பற்றி வருஷ கடைசியில் எழுதி வயிற்றெரிச்சல் பட்டுக் கொள்வதுதானே நமது வழக்கமும்.
இவ்வளவு நல்ல படங்கள் ஓடாமல் போனதே என்ற வருத்தம் வருகிற மாதிரியே, இந்த குப்பையெல்லாம் ஓடித் தொலைத்ததே என்ற வருத்தமும் வந்து சேரும். 2011 ம் அப்படி பல அனுபவங்களை நமக்கு விதைத்த வருடம்தான்.
நேற்று வெளிவந்த 'மகான் கணக்கு' படத்தோடு முடிந்தது 2011 ல் சிறு படங்கள் தந்த பிரமிப்பு. ஓசிஓசி பேங்க் போன்ற பன்னாட்டு வங்கிகளால் பந்தாடப்படும் நடுத்தர வர்கத்தின் வலியை அப்படியே நம் மனசிலும் ஏற்றியிருந்தார் டைரக்டர் சம்பத் ஆறுமுகம். இதுபோன்ற கதைகளுக்கு பெரிய நடிகர்கள் டேட்ஸ் கொடுத்திருந்தால், சமுதாயத்தில் பெரிய புரட்சியே விதைக்கப்பட்டிருக்கும். ஹ்ம்ம்ம்ம்... அதற்கெல்லாம்தான் நமக்கு கொடுப்பினை இல்லையே?
ஜல்லிக்கட்டில் இறக்கிவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளை போல தத்தளித்துப் போன சில சிறு படங்களை கணக்கிலிருந்து விட்டுத் தள்ளினாலும், சில படங்கள் நம் நெஞ்சை விட்டு அகலாதவை.
களவாணியில் பெருமை சேர்த்த சற்குணம், பெரும் பொருட் செலவில் இயக்கியVengayamபடம்தான் வாகை சூடவா. பீரியட் பிலிம் வகையை சார்ந்த இந்த படம் சத்தியமான ஹிட் என்று ரசிகர்கள் காத்திருந்தால், ஐயகோ ஏமாற்றம். ஓட வேண்டிய படத்தை மக்கள் ஏன் கவிழ்த்து தொலைத்தார்கள் என்பதுதான் இந்த நிமிடம் வரைக்கும் புதிர். இந்த ஒரு படத்திலேயே தமிழ்சினிமாவின் நிகழ்கால சாவித்ரியானார் ஹீரோயின் இனியா.
சங்ககிரியிலிருந்து குடும்பதோடு வந்து கோடம்பாக்கத்தை மிரள வைத்தார் ராச்குமார் என்ற இளைஞர். வெங்காயம் படத்தின் மூலம், பெரியாருடைய சிந்தனைகளை அழகாக எடுத்துச் சொல்லியிருந்தார். இப்படத்தின் தயாரிப்பும் இவரே, முக்கியமான கூத்துக்காரர் கேரக்டரில் இவரது அப்பாவும் நடித்திருந்தார். படத்தில் நடித்த அத்தனை பேரும் இவரது சுற்றுப்பட்டு கிராமத்து சொந்தங்கள்தான். 'வீடு வயல் நிலத்தையெல்லாம் வித்துட்டுதான் இந்த படம் எடுக்கிறேன். ஓடலைன்னாலும் பரவாயில்லை. கை கால் நல்லாயிருக்கு. சம்பாதிச்சுக்கலாம்' என்று தன்னம்பிக்கையோடு இந்த இளைஞர் பேசியதை உணர்ச்சிப் பெருக்கோடு கவனித்தார்கள் பலரும். இந்த படத்தை எப்படியாவது மீண்டும் திரையிட்டு ஓட வைத்துவிட வேண்டும் என்று மெனக்கட்ட டைரக்டர் சேரன், நடிகை ரோஹிணி ஆகியோருக்கு இந்த நேரத்திலாவது நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை. 2012 லாவது மறு ரிலீஸ் செய்வார்கள் என நம்புகிறேன்.
ரசிகர்களுக்கு ராஜ'பட்டை' போட்ட சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'அழகர்சாமியின்Rajapattaiகுதிரை' இன்னுமொரு முறை கவலையை ஏற்படுத்திய படம் நல்ல சினிமா ரசிகர்களுக்கு. நாவலை படமாக்குகிற இயக்குனர்கள் அருகி வரும் நேரத்தில் சுசீந்திரனின் இந்த முயற்சிக்கு கை கொடுக்காமல் போன மக்களின் மீது மறுபடியும் ஒரு சாப சர்ப ஆயுதத்தை வீசுவது தவிர வேறு வழியில்லை. இந்த படம் ஓடியிருந்தால், சுசீந்திரன் 'பட்டை'யை நோக்கி போயிருக்க மாட்டார் என்பதும் என் யூகம்.
பாரதிராஜாவை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தோம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் அநேக மாணவர்கள் அவரை மிஞ்சிய ஸ்டூடண்ட்டாக இருக்கிறார்களே என்ற வியப்பை ஏற்படுத்தினார் டைரக்டர் சீனு ராமசாமி. இவரது 'தென்மேற்கு பருவக்காற்று' படமும் வசூலை பொறுத்தவரை முக்கல் முனகல் ரகம்தான். ஆனால் தமிழ்சினிமாவுக்கே பெருமை ஏற்படுத்திய படம். இதற்கு தேசிய விருதுகளை அளித்து பழி பாவத்திலிருந்து தப்பித்துக் கொண்டது மத்திய அரசு.
அதிக பாராட்டுகளை பெற்ற இன்னொரு படம் 'எங்கேயும் எப்போதும்'. நல்லவேளை,Engeyum Epothumஇந்த படத்தையாவது ஓட வைத்தார்கள் ரசிகர்கள்! இப்படத்தின் மூலம் எவர் க்ரீன் நடிகையாக பிரமோஷன் ஆனார் அஞ்சலி. எவரையும் உருப்பட விடாத சில ஹீரோக்கள், 'வாங்க மசாலா கிண்டலாம்' என்று எ.எ இயக்குனர் சரவணனை அழைக்கக்கூடும். அப்போது மட்டும் உஷாராக இருந்தால் போதும். தமிழ்சினிமாவுக்கு இன்னும் நல்ல படங்கள் இவரால் கிடைப்பது உறுதி.
நவீன கால பீம்சிங் என்று அழுகாச்சி ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட ராசு.மதுரவனுக்கும் ஒரு இடம் தரலாம் இந்த வருடத்தில். மற்றபடி குள்ளநரிக்கூட்டம், வர்ணம், நர்த்தகி என்று குறிப்பிட்டு சொல்ல மேலும் சில படங்கள் இருக்கின்றன. பாவம் இப்படங்களையும் தோல்வி லிஸ்ட்டில் வைத்துதான் தேம்ப வைத்தார்கள் பாழாய் போன இந்த படுபாவி ரசிகர்கள்.
-ஆர்.எஸ்.அந்தணன்

மங்காத்தா படத்திற்குதான் முதலிடமா? 2011 பற்றி ஒரு அலசல்


தியேட்டர் கேன்டீனில் சுட சுட வைக்கப்பட்ட மசால் வடை, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தன் ஆவியை போக்கிக் கொள்வதை போல, உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் சில படங்களும் நாலாவது ரீலிலேயே தனது ஆவியை போக்கிக் கொள்ளும். ஆனால் அதே படத்தை வரலாறு காணாத வசூல் என்று விளம்பரப்படுத்துவார்கள். அதையும் நம்பி நமக்கு கமெண்ட் அனுப்பி கவலைப்படுவார்கள் ரசிகர்களும் வாசகர்களும்.Mankatha(ராஜபாட்டையை தோல்விப்படம் என்று நாம் எழுதியது பொறுக்க முடியாத வாசகர்கள் சிலர், முதல் சில நாட்களிலேயே வசூல் 42 கோடியை கிராஸ் பண்ணிவிட்டது. அது தெரியுமா உங்களுக்கு? என்றெல்லாம் எழுதுவதை படித்தால், ஐயோ பாவம் என் அறியா ஜனங்களே என்று கவலைப்படவே தோன்றுகிறது)
கடந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் என்று 'மங்காத்தா' படத்தைதான் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றன சில ஊடகங்களும், மற்றும் சில விமர்சகர்களும். அப்படி எழுதுவதற்கு முன் குறிப்பிட்ட அந்த படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் ஆகிய மூவருக்குமே லாபத்தை ஏற்படுத்திய படமா என்று விசாரித்து எழுதினால் புண்ணியமாக போயிருக்கும். இந்த இடத்தில் வசூலையும் முதலீட்டையும் ஒப்பிட வேண்டியதும் மிக மிக முக்கியம்.
நு£று கோடி செலவு செய்து பத்து கோடி லாபம் பார்க்கிற படத்தைவிட, ஏழு கோடி செலவு செய்து பத்து கோடி லாபம் பார்க்கிற படம்தான் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற உண்மையை புரிந்து கொள்ள கணக்கில் சூரப்புலியாக இருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை.
சரி... மங்காத்தா மேட்டருக்கு வருவோம். கோடம்பாக்கத்திலிருக்கும் சில வியாபார புள்ளிகளிடம் விசாரித்தால் நமக்கு கிடைக்கிற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கத்திற்கும் பெருத்த லாபத்தை பெற்றுக் கொடுத்தது உண்மையே. ஆனால் தயாரிப்பாளருக்கு சுமார் ஏழு கோடி நஷ்டமாம்.
கடந்த வருடத்தில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர் ஆகிய மூன்று தரப்புக்கும் லாபத்தை கொட்டிக் கொடுத்த படங்கள் என்று எடுத்துக் கொண்டால் நான்கே நான்குதான். காஞ்சனா, கோ, சிறுத்தை, மற்றும் எங்கேயும் எப்போதும். இந்த நான்கு தவிர வெளிவந்து வெற்றி பெற்ற படங்களில் சில இந்த மூவரில் ஒருவரை நுரை தள்ள வைத்த படங்கள் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை.
இப்படி ஒரு குழப்பமான வெற்றியை தந்த படங்கள்தான் வேலாயுதமும், 7 ஆம் அறிவும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அசல் மட்டும் தேறிய படங்களில் ஒன்று போராளி. கடந்த வருடத்தில் அதிசயமாக தேறிய டப்பிங் படம் ஒன்று மாவீரனாம். இதுவும் விநியோகஸ்தர் ஒருவர் சொல்கிற கணக்குதான்.
கூட்டி கழித்து குப்புறத் தள்ளி, நிமர்த்தி வளைத்து படுக்க வைத்து பார்த்தாலும் 2011 ன் லட்சணம் டாப் 5 என்ற அளவிலேயே நின்று போனதுதான் வேதனை கலந்த ஆச்சர்யம்.
-ஆர்.எஸ்.அந்தணன்