மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday 18 December 2011

பாடகரின் 'பிலை' தாமரையின் நிலை

இன்னும் இரு தினங்களில் ஆடியோ ரிலீஸாகவுள்ள ’முப்பொழுதும் உன் thamaraiகற்பனைகள்’ ஆடியோவில் ஒரு சுவாரசியமான தவறு நடந்தது. பாடலாசிரியர் தாமரை எழுதியிருந்த ஒரு பாடலை பாடகர் தவறான உச்சரிப்புடன் பாடிச்சென்றுவிட்டார். ரெகார்டிங் முடிந்து பாடகரும் சென்று விட்டார். அண்மையில் தான் ரசித்து எழுதிய பாடலாச்சே, எப்படிப் பாடியிருக்கிறார்கள் என்று கேட்கப்போனபோது அவருக்கு பேரதிர்ச்சி. ஒரு வார்த்தையை ‘பிலையாக’ பாடியிருந்தார் பாடகர். மொத்த ரெகார்டிங்கும் முடிந்துவிட்டது, ஒரு வார்த்தை தவறாகப் போனதற்காக மீண்டும் யார் ரெகார்டிங் என்ற தயக்கம் ஒருபுறம் தன் மனதில் பட்டதை அப்படியே தயாரிப்பாளரின் காதில் போட்டுவிட்டுப் போய்விட்டாராம்.
ஆச்சரியம். ஆனால் உண்மை அந்த ஒரு வார்த்தைக்காகவே மீண்டும் ரெகார்டிங் வைத்து,தாமரையின் மனமும்,தமிழின் மனமும் குளிருபடி நடந்து கொண்டாராம் தயாரிப்பாளர்.

மணியா இருந்தாலும்... சுஹாசினி சமாளிப்ஸ்...

சென்னை சர்வதேச திரைப்படவிழாவை ஒட்டி இவ்வளவு சர்ச்சைகள் கிளம்பும் என்று suhasini maniratnamசுகாசினியே சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுகாசினியும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து இந்தோ ஃபிலிம் அப்ரிசியேஷன் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள். அந்த அமைப்பின் ஒன்பதாவது சர்வதேச திரைப்படவிழா டிசம்பர் 14 அன்று சென்னையில் துவங்கியது. இதில் திரையிட ஆடுகளம், அவன் இவன், முரண், உட்பட சில தமிழ்ப்படங்களைத் தேர்வு செய்திருந்தார்கள். இந்தப்பட்டியலில் தங்கள் படம் இடம் பெறவில்லை என மூன்று தேசிய விருதுகள் பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் இயக்குனர் போர்க்கொடி தூக்க, அவரோடு செங்கடல்’ படத்தின் இயக்குனர் லீனாமணிமேகலையும் சேர்ந்துகொண்டார்
இவர்களுக்கு சப்போர்ட்டாக நின்று, விழாவைப் புறக்கணிப்பதாக இயக்குனர்கள் சங்கம் அறிவித்ததும், சுகாசினிக்கு இன்னும் தர்ம சங்கடமாகப் போய்விட்டது.
நாங்கள் வெப்-சைட்டில் விளம்பரம் கொடுத்தபோது,எங்களைத்தொடர்பு கொள்ளாதது அவர்கள் தவறு. இதே தவறை என் கணவர் மணிரத்னம் செய்திருந்தாலும் அவர் படம் இந்த விழாவில் இடம் பெற்றிருக்காது என்று மீடியாவின் வாயை அடைத்துவிட்டார் சுஹாசினி.

காலண்டர் விழா கண்கலங்கிய த்ரிஷா


Trishaசெல்லப்பிராணிகள் என்றால் த்ரிஷாவுக்கு கொள்ளைப்பிரியம் என்பது கோடம்பாக்கம்அறிந்த சங்கதி. இந்தப் பிரியம் பணக்கார பிராணிகள் மிது மட்டுமல்ல,தெருவில் சுற்றுகிற ஏழைப்பிராணிகள் மீதும்தான் எனக்கு இருக்கிறது என்கிறார் த்ரிஷா.
காரில் ஷூட்டிங் போகும்போது பலமுறை, தெருவில் அடிபட்டு சுற்றிக் கொண்டிருக்கும் பூனை, நாய்களைப் பார்த்து வேதனைப்பட்டிருக்கிறேன். இவற்றிற்காக யாராவது ஒரு அமைப்பு ஏற்படுத்தி உதவ முன் வரமாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறேன். இப்போது அப்படி ஒரு அமைப்பு துவக்கப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் த்ரிஷா இப்படி பேசிய இடம் ராயப்பேட்டை அமிதிஸ்ட் காபி ஷாப்.
காபி ஷாப்புல போய் ஏன் இதப்பேசனும்? என்று கன்பியூஸ் ஆகவேண்டாம்.’கேட் சென்னை அடாப்சன் செண்டர், அதாவது தெருநாய் பராமரிப்பு அமைப்பின் காலண்டர் வெளியீட்டு விழா இங்கேதான் நடந்தது. அதில் கலந்து கொண்டுதான் மேற்கண்டவாறு உணர்ச்சி வசப்பட்டார் த்ரிஷா.

கவுதம்-மணிரத்னம் படத்தில் மோகன்பாபுவின் மகள்?


கடந்த வாரம் ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு தனது உதவியாளர்களுடன்Manju Lakshmiசென்று லொகேஷன் பார்த்து விட்டு திரும்பியிருக்கிறார் மணிரத்னம்.
தனது புதிய படத்துக்கு ‘பூக்கடை’ என்று பெயர் வைத்திருக்கும் மணிரத்தினம்,படத்தின் ஹீரோ,ஹீரோயின் யார் என்று இதுவரை உறுதி செய்யவில்லையாம்,ஆனால் மீடியாக்களில் கார்த்திக்கின் மகன் கவுதம் பெயரும், ராதாவின் மகள் கார்த்திகா பெயரும் அடிபட்டுகொண்டிருக்கிற்து நேற்று முதல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் மஞ்சு தான் மணிரத்தினம் பட ஹீரோயின் என்று புதிதாக ஒரு செய்திவேறு உலா வந்துகொண்டிருக்கிறது.
மணிரத்தினம் வட்டாரத்தில் விசாரித்தபோது, இசை ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு ராஜிவ்மேனன் எனற இந்த இரண்டு செய்திகளை தவிர வேறு எதுவுமே உறுதி செய்யவில்லை என்கிறார்கள். தனது படத்தை பொறுத்தவரை மணிரத்தினம் என்றுமே மவுனரத்தினம்தான்.

ஸ்ருதியை அழ வைத்த கமல்!

உலக நாயகன் தனது மூத்த மகள் ஸ்ருதியை கண்ணீர் சிந்த வைத்துள்ளார். என்னடா கமல்ஹாசன் எதற்காக தனது செல்ல மகளை அழ வைத்தார் என்று தானே நினைக்கிறீர்கள். விஷயம் இருக்கு. ஸ்ருதி இந்தியில் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த ஏழாம் அறிவு தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் இருந்த ஸ்ருதிக்கு தற்போது கூடுதல் இல்லை பன்மடங்கு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ஒய் தி்ஸ் கொலவெறி, கொலவெறிடி.

 உலகமெல்லாம் முணுமுணுக்கும் பாடல் கொலவெறிடி. இந்த பாடல் மூலம் தனுஷும், ஸ்ருதியும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர். சரி ஸ்ருதியை கமல் எதற்காக அழ வைத்தார் என்ற மேட்டருக்கு வருவோம். 

கமல்ஹாசன் நடித்த மகாநதி, குணா ஆகிய படங்களை ஸ்ருதி 20 தடவைக்கும் மேல் பார்ததுள்ளாராம். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் தனது தந்தையின் சோகமான நடிப்பைப் பார்த்து அழ ஆரம்பித்துவிடுவாராம். அடடா என் அப்பா எவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார். அவரது சோகமான நடிப்பைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் கலங்கி கண்ணீர் வடிகிறதே என்று ஸ்ருதி தன் தந்தையைப் பற்றி பெருமைப்படுகிறார்.

ரஜினி குடும்பத்துக்கு கண்டனம்! - கருணாஸ்!

பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்யப்பட்ட பிரமாண்ட பிறந்த நாள் விழாவில் ரஜினி குடும்பத்திலிருந்து யாரும் பங்கேற்காதது வருத்தத்தைத் தருவதாகவும், ஒரு ரசிகனாக இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் நடிகர் கருணாஸ் தெரிவித்தார். இதனால் விழா மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

லட்சணக்கான ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ரஜினியின் பிறந்த நாள் விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு ரஜினி வராவிட்டாலும் ரஜினியின் குடும்பத்திலிருந்து யாராவது நிச்சயம் வருவார்கள் என்று தலைமை ரசிகர் மன்றம் உறுதி அளித்திருந்ததால் மும்பை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர். வந்த அனைவரும் ஏழை மக்களுக்கு வழங்க பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிப் பொருள்களையும் எடுத்துவந்திருந்தனர்.

ரஜினி குடும்பத்தினர் முன்னிலையில் இந்தப் பொருள்களை வழங்க ஆசைப்பட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் சற்று ஏமாற்றத்துக்குள்ளாகினர் ரசிகர்கள். அவர்களின் மனதைப் பிரதிபலிக்கும் வகையில் நடிகர் கருணாஸ், பகிரங்கமாக ரஜினி குடும்பத்துக்கு கண்டனம் தெரிவித்தார். "இவ்வளவு பிரமாண்டமாக எந்த நடிகனுக்காவது விழா நடக்குமா.. ஆனால் என் தலைவனுக்கு மட்டுமாதான் நடக்கிறது. காரணம் ரசிகர்கள் அவர்மீது வைத்திருக்கும் அன்பு. இந்த விழாவுக்கு தலைவர் ரஜினி வராததில் தவறில்லை. காரணம் அவர் வந்தால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்திருக்காது. ஆனால் அவர் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் வந்திருக்க வேண்டுமல்லவா... இவ்வளவு பேரும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் எத்தனையோ நிகழ்ச்சிக்குப் போகும் ரஜினி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வராததை நான் வெளிப்படையாகவே கண்டிக்கிறேன். நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அவரைத் தலைவராக ஏற்றவன் என்ற உரிமையுடன் இதனை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.