மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Monday, 21 November 2011

விஜய்யின் ’முருகன்’ சென்ட்டிமென்ட்


வேலாயுதம் ஹிட் ஆனதிலிருந்தே முருகன் சென்ட்டிமென்ட் பிடித்தாட்டுகிறதுவிஜய்யை. படி தாண்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவரது சமீபத்திய படங்களில் வேலாயுதத்திற்கு மட்டும் பாரசூட்டே கிடைத்தது. அதன்விளைவாகதான் இந்த வேலாயுதக்கடவுள் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.
அதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய். படத்தின் துவக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம். சூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர்.
எ.ஆர்.முருகதாஸ் (பார்றா... இங்கயும் ஒரு முருகன்) இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ். திருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய் அங்கு என்னவாகிறார் என்று முடியுமாம் படம்.
படத்தின் கதாநாயகியாக யார் யார் பெயரையோ சொல்லி உழப்பிக் கொண்டிருக்கிறார்கள். வரப்போவது நிச்சயம் வள்ளியாக இருக்கப் போவதில்லை. வாயில் நுழையாத பெயரோடு ஏதாவது ஒரு ’கள்ளி’ காத்துக் கொண்டிருப்பார்.
கடைசி செய்தி- காஜல் அகர்வாலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

ஹன்சிகா மறுத்தது ஏன்?


3, மயக்கம் என்ன, இந்த இரண்டு படங்களிலும்தான் இப்போது முழு கவனம்Hansika Motwaniசெலுத்தி வருகிறார் தனுஷ். ஆனால் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள் மற்ற வேலைகளை தீவிரமாக பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லவா? அப்படி போன இடத்தில்தான் எறும்பு கூட்டுக்குள் விரலை விட்ட மாதிரி எக்கச்சக்க நமநம...
கோடம்பாக்கத்தின் தற்போதைய மெழுகு பொம்மைகளில் ஒருவர் ஹன்சிகா மோத்வானி. விஜய், ஜெயம் ரவி என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் இவர்தான் நாயகி. கொஞ்சம் மிதப்பு இருக்கதானே செய்யும்? தனுஷூடன் நடிப்பதற்காக இவரை அழைத்தது ஒரு நிறுவனம். ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த நிறுவனம் என்பதால் மறுபேச்சு பேசாமல் சரி சொன்ன ஹன்சிகா, யார் ஹீரோ என்றாராம். அவர்கள் தனுஷ் என்றதும் என்ன காரணத்தினாலோ ஸாரி சார். என்னால முடியாது என்றாராம்.
இருவரும் மாப்பிள்ளை படத்தில் ஒன்றாக நடித்தவர்கள்தான். அந்த நேரத்தில் என்ன பிரச்சனையோ? அதன் விளைவாகதான் இப்படி ஒரு பதில் ஹன்சிகாவிடமிருந்து. இல்லையில்லை, வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுடன் நடிக்கிறார் ஹன்சிகா. அவரது அட்வைசின்படிதான் இப்படி ஒரு பதில் என்றும் கிசுகிசுக்கிறார்கள் இதே கோடம்பாக்கத்தில்.
ஆகமொத்தம் ஒடிச்சு பார்த்த வெண்டைக்காயை கடிச்சு பார்க்க கொடுப்பினையில்ல...

யாருடனும் காதல் இல்லை அஞ்சலி ஆத்திரம்


தமிழ்சினிமாவில் பொருத்தமான ஜோடி என்று புகழப்பட்ட பலர், அதே ஜோரில்Anjaliகல்யாணம் கட்டிக் கொண்டு ஓடிப்போன சம்பவங்கள் ஒன்று இரண்டல்ல. ஏராளம்... அந்த வகையில்தான் ஜெய்-அஞ்சலி ஜோடியும் இருக்கும் என்று கணக்கு போட்ட ரசிகர்களுக்கு அஞ்சலி அனுப்பியிருக்கும் அறிக்கை ஒன்று எங்கேயும் எப்போதும் படத்தில் அமைந்திருக்கும் அவரது கேரக்டர் போலவே படார் திடீர்தான்.
ஜெய்யின் பெயரை கூட எழுதாமல் ’அந்த நடிகர்’ என்று மொட்டையாக குறிப்பிடுகிற அளவுக்கு அறிக்கையில் ஒரே சூடு.
என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகருடன் இணைந்து ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறேன். அதற்கு பிறகு வந்த கிசுகிசுக்களால் இனிமேல் அந்த நடிகருடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து சில படங்களை தவிர்த்தேன். எனக்கு யாருடனும் காதல் இல்லை. இதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். தயவு செய்து மேற்கொண்டு அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அஞ்சலி.
ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் இணைய திட்டமிட்டிருந்த இந்த ஜோடி, இந்த அறிக்கைக்கு பிறகு ஒன்று சேருமா என்பதுதான் நகம் கடிக்க வைக்கிற கேள்வி.

Sunday, 20 November 2011

கமலையே கட் பண்ணிய இயக்குநர்?! (Ajay Devgan replaces Kamal in Bharat Bala's September 19 Movie?)

Ajay Devgan replaces Kamal in Bharat Bala's September 19 Movie?அவங்களை பார்த்து இவங்களா? இல்ல, இவங்களை பார்த்து அவங்களா? என்று குழம்ப போவது ரசிகன்தான். இப்படி ரசிகர்களை குழப்பப் போகிற படம் 'செப்டம்பர் 19'. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து சில ஆல்பங்களை இயக்கியிருக்கும் பரத் பாலாவின் அடுத்த படம்தான் இந்த 'செப்டம்பர் 19'. (செம்மொழியான தமிழ் மொழியாம் ஆல்பமும் அண்ணாத்தே கைவண்ணம்தான்) தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் பரத் பாலா. 'செப்டம்பர் 19' படத்தின் கதையிலும் போதி தர்மர் போல ஒரு கேரக்டர் வருகிறது. இதில் நடிக்கதான் முதலில் கமல்ஹாசனை அணுகியிருந்தாராம் இந்த பரத் பாலா. கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் எழுத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் முதலில் நடிக்க சம்மதித்த கமல், ஆங்காங்கே சில திருத்தங்களை கூற, முதல் திருத்தமாக கமலையே தூக்கிவிட்டார்கள் படத்திலிருந்து. இப்போது அஜய் தேவ்கான் நடிப்பில் இந்த படத்தை தொடர திட்டமிட்டிருக்கிறார்கள். இவருடன் அசினும் நடிக்கிறார். இந்த கதையின் 'நாட்'டைதான் அரைகுறையாக சுட்டு முருகதாஸ் 7 ஆம் அறிவை உருவாக்கிவிட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது கோடம்பாக்கத்தில். இந்த படத்தில் சூர்யாவுக்கு போதி தர்மர் வேடம். 'செப்டம்பர் 19' ல் அஜய் தேவ்கானுக்கு நாராயண் குருக்கள் வேடமாம். இந்தியாவின் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியரான எம்.டி.வாசுதேவ நாயரின் இந்த படைப்புக்கு தமிழில் வசனம் எழுதவிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அதிமேதாவித்தனத்த அவிங்களால பொறுத்துக்கொள்ள முடியலையோ....?
                                               www.koodal.com

காதலி கிடைக்காமல் காத்திருக்கும் ஜீவா! (Kadhalikka Neramillai Movie Title for Jeeva's Film)

Kadhalikka Neramillai Movie Title for Jeeva's Filmஅகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு காதலிக்க நேரமில்லை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாதளவுக்கு சிக்கல். மேயச்சல் நிலத்து வாய்க்கால் தண்ணி மாதிரி ஆளாளுக்கு உறிஞ்சிக் குடிக்க முடியாது டைட்டில்களை. நல்ல நல்ல நடிகர்கள் நடித்த படத்தின் தலைப்புகளையெல்லாம் உப்புமா நடிகர்கள் படத்திற்கு வைத்து அவர்களையும் கேவலப்படுத்தி வந்த சிலருக்கு செமத்தியாக கடிவாளம் போட்டது தயாரிப்பாளர் சங்கம். இனிமேல் பழைய பட தலைப்புகளை யார் வைத்தாலும், சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது அவர்களின் வாரிசுகளிடமிருந்தோ நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கி வர வேண்டும். இல்லையென்றால் அந்த தலைப்புக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டது. இந்த சிக்கலில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஜீவாவும் அகமதுவும். காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கிய ஸ்ரீதர் தற்போது உயிரோடு இல்லை. அவரது உறவினர்களிடம் இந்த சர்டிபிகேட்டை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம். இதுவாவது பரவாயில்லை, படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேரும் நடிகையை தேடியே நெடும்பயணம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தீக்ஷா சேத், தமன்னா, ரிச்சா கங்கோபாத்யா என்று முப்பெரும் தேவிகளும் மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். நேரங்கிடச்சா காதலிங்க நண்பா........!
                                                                      www.koodal.com

சமூக வலை தளங்களில் கொடிகட்டிப்பறக்கும் கொலை வெறி! (3 Movie Single Track Audio Launched)

3 Movie Single Track Audio Launchedசமீபகாலமாக எதார்த்தமான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் எதார்த்தமான பாடல்களை எழுதி, பாடி அசத்துவதில் கெட்டிகாரான நடிகர் சிம்பு வரிசையில் இப்போது தனுஷும் சேர்ந்திருக்கிறார். சிம்புவை போலவவே, சமீபகாலமாக தனுஷும் பாடல் வரிகள் எழுதி, பாடவும் செய்து வருகிறார். விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய 'மயக்கம் என்ன' படத்தில், தனுஷ் ஒரு பாடல் எழுதி பாடியிருந்தார். அதேபோல் இப்போது அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், ஹீரோவாக நடித்து வரும் 3 படத்திலும் ஒரு பாட்டு எழுதி, பாடியும் அசத்தியிருக்கிறார். "வொய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறி டி..." என்று தொடங்கும் இப்பாடலை தனுஷ் பாட, இடையிடையே ஸ்ருதி ஹாஸனும், ஐஸ்வர்யாவும் குரல் கொடுத்துள்ளனர். அனிருத் என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். நேற்று முன்தினம் இந்த ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டது. இந்தபாடலில் விஷேசம் என்னவென்றால் பாடல் முழுக்க முழுக்க தங்கிலீஷில் எழுதப்பட்டிருப்பதுதான். இந்தப் பாட்டு வெளியான கையோடு படு பாப்புலராகிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யூ ட்யூப், பேஸ்புக் என சமூக வலை தளங்களில் சக்கைப் போடு போடுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, மற்ற பாடல்களை அடுத்த விழாவில் வெளியிடுகிறார். சார்... உங்களுக்கு ஏன் இந்த கொல வெறி..?!
                                                 www.koodal.com

குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போன்ற படம் போலியானது-அமிதாப்

Aishwarya Rai with Babyபிறந்த குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போல வெளியாகியுள்ள படம் நிஜமானதல்ல, அது மார்பிங் செய்யப்பட்ட போலியான படம் என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய், ஒரு குழந்தையை கையில் ஏந்தியபடி இருப்பது போல இன்டர்நெட்டில் ஒரு படம் வெளியாகியுள்ளது. ஆனால் இது மார்பிங் செய்யப்பட்ட படம் என்று தற்போது விளக்கியுள்ளார் ஐஸ்வர்யாவின் மாமனார் அமிதாப் பச்சன்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ஐஸ்வர்யாவும், அவரது குழந்தையும் இருப்பது போன்ற போலியான படங்கள் நிறைய உலா வர ஆரம்பித்துள்ளன. ஆனால் எல்லாமே போலியானது என்று கூறியுள்ளார்.

எனது மகள் அவரது தாயாரின் கைகளுக்குள் இருப்பது போன்ற படத்தை நானும் பார்த்தேன். நல்லகற்பனை, நல்ல சிந்தனை. அதைச் செய்தவர்களுக்குப் பாராட்டுக்கள். இந்தப் படத்தை எனது மனைவியிடமே காட்டினேன் என்று கூறியுள்ளார் அபிஷேக்.

மேலும், தனது மனைவியின் பிரசவம் குறித்த செய்தியை அடக்கம் ஒடுக்கமாக வெளியிட்ட டிவி நிறுவனங்களுக்கு நன்றியும் கூறியுள்ளார் அபிஷேக் பச்சன்.
                        tamil.oneindia.in

ராஜபாட்டையைக் கைவிட்டது 'சன்'!

Vikram and Deeksha Sethராஜபாட்டை படத்தை வாங்கியதாக கூறப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது அதை கைவிட்டு விட்டதாம். இதற்கா காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

ராஜபாட்டை படத்தை நாங்கள் வாங்கி விநியோகிக்கவில்லை என்று சன் பிக்சர்ஸ் நிறுவன தலைமை செயலதிகாரி செம்பியன் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் டிசம்பர் 16ம் தேதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜபாட்டையின் ரிலீஸ் தற்போது மேலும் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், தீக்ஷா சேத், மித்ரா குரியன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சுசீந்திரன் படத்தை இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் படமான இதை பிவிபி சினிமா தயாரித்துள்ளது. ரூ.40கோடியில் உருவாகியுள்ள ராஜபாட்டையை முதலில் சன் பிக்சர்ஸ் வாங்கியதாக தகவல்கள் கூறின. தற்போது அதை சன் பிக்சர்ஸ் மறுத்துள்ளது.
                                                             tamil.oneindia.in

நாகார்ஜூனாவைப் பார்த்ததும் மயங்கிவிழுந்தேன் - அமலா

Amala Paulசெட்டில் நாகார்ஜுனாவைப் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டேன். அவர் மீது அப்படியொரு பிரமிப்பு என்றார் நடிகை அமலா பால்.

தமிழை விட தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அமலா பால், சமீபத்தில் ஹைதராபாதில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ப்ள்ஸ்டூ முடித்ததுமே நடிக்க வந்துவிட்டேன். இதை பெற்றோர் விரும்பவில்லை. அவர்கள் என்னை எஞ்ஜினீயருக்கு படிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால் எனது அண்ணன் அவர்களை சமரசப்படுத்தி என் ஆசைப்படி நடிக்கை அனுமதித்தார். மைனா படம் திருப்பு முனையாக அமைந்தது. பிறகு விக்ரமுடன் நடித்தேன்.

நான் விக்ரமின் தீவிர ரசிகை. அவருடன் நடித்தது அதிர்ஷ்டம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கல்லூரிக்கு போய் படித்து வருகிறேன்.

தெலுங்கில் நாகார்ஜுனா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் தட வையாக பெரிய நடிகரான அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்த போது மயக்கமே வந்து விட்டது," என்றார்.
                             tamil.oneindia.in

மகளுக்குப் பெயர் சூட்ட அபிஷேக் ஆர்வம்- பெயர்களைப் பரிந்துரைக்க ரசிகர்களுக்குக் கோரிக்கை

Abhishek Bachchan and Aishwarya Raiதனது மகளுக்குச் சூட்ட நல்ல பெயராகப் பரிந்துரைக்குமாறு ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் அபிஷேக் பச்சன்.

மற்ற நடிகர், நடிகையருக்கும், அபிஷேக் பச்சன் குடும்பத்தினருக்கும் இடையே இமயமலை அளவுக்கு வித்தியாசம் உள்ளதை சமீப நாட்களாக தொடர்ந்து செய்திகளைப் படித்து வருவோர் உணர முடியும்.

வழக்கமாக நடிகர், நடிகையருக்கு குழந்தை பிறந்தால் அதை படு ரகசியமாக வைத்துக் கொள்வார்கள். என்ன குழந்தை பிறந்தது என்பதை மட்டும் பிரஸ் ரிலீஸ் மூலம் கொடுத்து விட்டு அத்தோடு கப்சிப்பாகி விடுவார்கள். அது நிச்சயம் தனிப்பட்ட விஷயம்தான், மறுப்பதற்கில்லை. இருப்பினும் அபிஷேக் பச்சனும், அமிதாப் பச்சனும் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவர்ந்து விட்டனர். இந்தியர்கள் அத்தனை பேரும் தங்களது குடும்பத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்ற உணர்வுடன் அவர்கள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது - ஐஸ்வர்யா ராய் குறித்த செய்திகளை அவர்கள் மாறி மாறி மக்களுக்குத் தந்து கொண்டிருப்பது.

வழக்கமாக மீடியாக்காரர்கள்தான் இப்படி மாய்ந்து மாய்ந்து செய்தி கொடுப்பார்கள். ஆனால் அமிதாப்பும், அபிஷேக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவரது குழந்தை குறித்த செய்தியை தினசரி அப்டேட் செய்து கொண்டுள்ளனர்.

ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்ததை ட்விட்டர் மூலம் இருவரும் மக்களுக்குத் தெரிவித்தனர். பின்னர் குழந்தை எப்படி உள்ளது, ஐஸ்வர்யா எப்படி உள்ளார் என்பதையும் தொடர்ந்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் தனது மகளுக்கு நல்ல பெயராக பரிந்துரையுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் அபிஷேக்.

இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது குழந்தைக்கு ஏ என்று ஆரம்பிக்கும் வகையிலான ஒரு நல்ல பெயரை பரிந்துரையுங்கள். உங்களது பரி்ந்துரைகள் அனைத்தும் வரவேற்கப்படும் என்று கூறியுள்ளார் அபிஷேக்.

அவர் மேலும் கூறுகையில், உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் நன்றியுடன் ஏற்கிறோம். இதுவரை 8 லட்சம் வாழ்த்துகள் வந்து விட்டன. மிகப் பெரிய வரவேற்பு இது. தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. அனைவருக்கும் எங்களது நன்றிகள். எனது மகள் மிகவும் அதிர்ஷ்டக்காரி, இத்தனை பேரின் வாழ்த்துகள் அவளுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார் அபிஷேக்.

மறுபக்கம் மாமனார் அமிதாப் பச்சன், தனது பேத்தி வீட்டுக்கு வரும்போது அவளை தடபுடலாக வரவேற்க கேமராக்களுடன் தயாராகி வருகிறாராம்.இதுகுறித்து அவர் ட்விட்டர் எழுதுகையில், அந்தக் குட்டிக் குழந்தையை விட்டுசிறிது நேரம் கூட பிரிந்திருக்க முடியாது. இருந்தாலும் அவள் வீட்டுக்கு வரும்போது வீடியோவில் ஷூட் செய்யவும், கேமராவில் படம் பிடிக்கவும் தயாராக இருக்க வேண்டுமே. அதைநான் தற்போது வீட்டில் செய்து கொண்டிருக்கிறேன். எனது பிறப்பின்போது கூட நான் இத்தனை மகிழ்ச்சியான சூழலில் இருந்திருக்க மாட்டேன் என்று கூறி சந்தோஷப்பட்டுள்ளார்.

என் மகள்கள் தங்கள் இஷ்டப்படி வாழட்டும்! - ஸ்ருதியின் அம்மா சரிகா!

ன் மகள்கள் தங்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளட்டும். அதில் நான் ஒருபோதும் தலையிட மாட்டேன், என்றார் நடிகையும் கமல்ஹாஸனின் முன்னாள் மனைவியுமான சரிகா. சித்தார்த்-ஸ்ருதி இணைந்து நடித்த ஒ மை பிரண்ட்” தெலுங்கு படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தாய் சரிகாவுடன் வந்திருந்தார் ஸ்ருதி ஹாஸன்.

சரிகா தற்போது மும்பையில் வசிக்கிறார். அவருடன் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாஸனும் இருக்கிறார். ஸ்ருதி சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்வது மற்றும் அவரது எதிர்காலம் குறித்து சரிகா கூறுகையில், "சினிமாவை தவிர வெளி உலகம் தெரியாதவள் நான். 

சிறு வயதில் இருந்தே நடிப்பு, நடிப்பு என்றுதான் இருந்தேன். படப்பிடிப்பு அரங்குகள்தான் எனக்கு வகுப்பறை. அங்கு என் சீனியர் நடிகர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது நிறைய குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்கின்றனர். அவர்கள் நடிப்பு மட்டுமின்றி விளையாட்டு, படிப்பு என வேறு திறமைகளிலும் பளிச்சிடுகின்றனர். இவர்களைப்போல் சிறு வயதில் எனக்கு வாய்ப்பு அமையவில்லை. 

இப்போது நிலைமைகள் மாறிவிட்டது. ஸ்ருதி சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்ஷராவுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. கேமராவுக்கு பின்னால் இருந்து படம் இயக்க வேண்டும் என்பது அவள் ஆசை. ஸ்ருதியும் அக்ஷராவும் வாழ்க்கையில் சுயமாக முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம். 

அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்யலாம். எல்லா பெற்றோர்களுமே குழந்தைகளை சுதந்திரமாக விடவேண்டும். அவர்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சொந்தமாக முடிவுகள் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும். ஸ்ருதியும் அக்ஷராவும் சில விஷயங்களில் முடிவுகள் எடுக்கும் முன் என்னிடம் கலந்து பேசுவது உண்டு. ஆலோசனையும் கேட்பார்கள். ஆனால் நான் அவர்களை நிர்ப்பந்திப்பது கிடையாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிடவும் மாட்டேன்," என்றார். 

கமல் குறித்த கேள்விகளைத் தவிர்த்துவிட்டார் சரிகா. மிக நெருக்கமாக இருந்த ஸ்ருதியும் நடிகர் சித்தார்த்தும் இப்போது பிரிந்துவிட்ட நிலையில் அவர்கள் நடித்த படம் வெளியாகியுள்ளது. காதலனைப் பிரிந்துள்ள ஸ்ருதி, இப்போது துணைக்கு தன் அம்மாவை அழைத்து வந்துள்ளதாக்க கூறப்படுகிறது.
                                                             tamilcinema.ebest.in