மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 12 November 2011

நயன்தாராவின் தெலுங்கு படம் தமிழகத்திலும் ரிலீஸ் ஆகிறது


ஏ.ஆர்.முருகதாசை பாராட்டி பேசினால் பல்லை உடைப்பேன் என்று எச்சரித்தNayantharaஆந்திராவின் அலட்டல் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ஸ்ரீ ராமராஜ்ஜியம் தமிழில் வெளியாகவிருக்கிறது. நான் அப்படி சொல்லவே இல்லை என்று பிற்பாடு அவர் மறுத்துவிட்டார் என்பதால் வம்புக்காகவே காத்திருக்கும் இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் மௌனம் காக்க...
ஆந்திராவில் எத்தனையோ படங்கள் வெளியாகிறது. எத்தனையோ படங்கள் ஹிட்டாகிறது. ஆனால் அத்தனையும் இங்கே வெளியிடப்படுவதில்லை. (நல்ல படமாக இருந்தால் நாங்களே காப்பியடிப்போம்ல...) ஆனால் ராமராஜ்ஜியத்தின் மீது அப்படியென்ன கரிசனம்? ரொம்ப சுலபமாக யூகிக்க கூடிய மேட்டர்தான். இந்த படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இதுதான் என்னுடைய கடைசி படம் என்று அவரே அறிவித்திருப்பதால், ஏராளமான ரசிகர்கள் நயனின் கடைசி பர்ஃபார்மென்சை ரசிக்க காத்திருக்கிறார்கள்.
இன்னும் சில வாரங்களில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் இப்படத்தை அநேகமாக சென்னையிலேயே கண்டு களிப்பார் நயன்தாரா. ஏனென்றால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னைக்கே வந்து செட்டில் ஆகிவிட்டார் அவர்.

Friday, 11 November 2011

ஸ்ரீகாந்த் - ஜனனி அய்யர் நடிக்கும் பாகன்!


ஸ்ரீகாந்த் - ஜனனி அய்யர் நடிக்கும் பாகன்!
பெரிய இடைவெளிக்குப் பிறகு, அடுத்தடுத்த படங்கள் வர ஆரம்பித்திருக்கிறது ஸ்ரீகாந்துக்கு. சமீபத்தில் அவர் நடித்த சதுரங்கம் படம் வெளியாகி நல்ல பெயரை வாங்கித் தந்தது. இப்போது ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நண்பன் படம் நடித்து வருகிறார். இந்த நிலையில் புதிதாக ஒரு படத்தில் தனி ஹீரோவாக நடிக்கிறார்.

பாகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தின் ஜோடியாக நடிக்கிறார் ஜனனி அய்யர். முகமது அஸ்லம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல இயக்குநர்கள் சேரன், அமீர், ராதா மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் முகமது அஸ்லம். தனது முதல் படத்திலேயே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கிறார் அஸ்லம்.

பாகன் படம் குறித்து அவர் கூறுகையில், "காமெடி கலந்த ஜனரஞ்சகப் படம் பாகன். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட், வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு காமெடி என பக்கா பொழுதுபோக்குப் படம் இது. ஸ்ரீகாந்துக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு சிக்ஸர் இந்தப் படம். காட்சிக்குக் காட்சி காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் ஸ்ரீகாந்த்.

அவருக்குள் இத்தனை பெரிய நகைச்சுவை கலைஞர் ஒளிந்திருந்தாரா என எல்லாருமே கேட்கும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ரஜினி சாருக்கு ஒரு தில்லுமுல்லு மாதிரி, ஸ்ரீகாந்துக்கு இந்தப் பாகன் அமையும்," என்றவரிடம் படத்தின் கதை குறித்து கேட்டோம். "உருவத்தில் பெரிய யானையை சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்சினைகள் நிறைந்த இந்த பெரிய வாழ்க்கையை சமாளித்து வாழ்பவனே ஹீரோ.

வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடு செல்லுவோர் மத்தியில், வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடு செல்லாமல் தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னேறுகிறான் இந்த பாகன். இந்த மண்ணின் மீது அவ்வளவு காதல். என் படத்தில் என் குருநாதர்கள் சேரன், அமீர், ராதா மோகன் பாதிப்பு இருக்கும். காரணம், அவர்களைப் பிடித்துப் போய், அவர் படங்களை ரசித்து அவர்களுடன் பணியாற்றியவன் நான். அதனால் என் படைப்பிலும் அவர்களின் பாதிப்பு இருக்கும். அது தவறும் அல்ல," என்றார் முகமது அஸ்லம்.

ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அவன் இவன் படத்தில் நடித்த ஜனனி அய்யர் நடிக்கிறரா். ஸ்ரீகாந்தின் அம்மாவாக கோவை சரளாவும், அப்பாவாக மதராசப்பட்டினம் ஜார்ஜும், நண்பர்களாக வெண்ணிலா கபடி குழு சூரி, அங்காடித் தெரு பாண்டியும் நடிக்கின்றனர். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம் படங்களில் பணியாற்றிய லஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆன்டனியின் உதவியாளர் கெவின் இந்தப் படம் மூலம் எடிட்டராக அறிமுகமாகிறார். ஸ்டன்ட் சுப்ரீம் சுந்தர், பாடல்கள்- யுகபாரதி, சூர்யா, அறிமுகம் விருச்சிகா. பிஆர்ஓ ஜான்.

முருகானந்தம் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். விபி புரொடக்ஷன்ஸ் சார்பில் இணைந்து தயாரிக்கின்றனர் விஸ்வாஸ் யு லாட் மற்றும் வி புருஷோத்தம். மும்பையின் லோனாவாலா, பொள்ளாச்சி மற்றும் வெளிநாடுகளில் படமாகிறது பாகன்.

அஜீத்தும் நானும்... ஒரு புதுமுகத்தின் பில்டப்


அட... உனக்கும் தெரியுமா என்று ஆச்சர்யப்படுவது ஒரு ரகம். இவனுக்கு கூடJitheshதெரிஞ்சுருக்கே என்று வேதனைப்படுவது வேறொரு ரகம். இதில் அஜீத் முதல் ரக மனிதர். தனக்கு தெரிந்த மாதிரியே ஹெலிகாப்டர் ஸ்பேர் பார்ட்ஸ் பற்றியும், விமானம் ஓட்டுவது பற்றியும் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஒரு இளைஞரை, 'தம்பி வாப்பா' என்று பேச்சு துணைக்காக அழைத்துக் கொண்டாராம் அஜீத்.
இடம்- ஏகன் படப்பிடிப்பு. அட இவ்வளவு நாள் கழித்து இப்படி ஒரு நியூசா என்று எரிச்சல் படுகிறவர்கள் தொடர்ந்து வாசிக்கவும். இப்படத்தின் இயக்குனர் ராஜு சுந்தரத்தின் நண்பரான ஜித்தேஷ் அவரது ஆசைப்படி இந்த படத்தில் பணியாற்ற போயிருந்தாராம். அடிப்படையில் பைலட் படிப்பை முடித்திருக்கிறார் இவர். படப்பிடிப்பில் தம்பி என்ன படிச்சுருக்கே? என்ற அஜீத் விசாரித்தபோது உண்மையை சொன்னாராம். அவ்வளவுதான். அன்றிலிருந்தே ஜித்தேஷின் நண்பராகிவிட்டார் அஜீத்.
நாளும் பொழுதுமாக ஹெலிகாப்டர், விமானம் என்று பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் இருவரும். அஜீத்தை பார்த்து அப்படியே மெல்ல மெல்ல நடிக்கிற ஆசையையும் வளர்த்துக் கொண்ட ஜித்தேஷ், இன்று ஒன்றல்ல, இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் அஜீத் போட்ட ஆர்வ சுழி!
தலக்கோணம் என்ற படத்தில் இவருக்கு ஜோடி ரியா. மார்கழி திங்கள் என்ற படத்தில் இவருக்கு ஜோடி திஷா பாண்டே. இவ்விரு படங்களும் வேக வேகமாக வளர்ந்து வருகிறதாம். கோடம்பாக்கத்துக்கு பஸ் ஏற துடிக்கும் ஏராளமான இளைஞர்கள் காத்திருக்கிற பஸ் ஸ்டாப் கூத்துப்பட்டறைதான். இவரும் இதே பள்ளியில் பயிற்சியை முடித்துவிட்டு நடிக்க வந்திருக்கிறார்.
தல-தான் ரோல் மாடல் என்கிறார் ஜித்தேஷ். அந்த இடத்தை பிடிக்கணும்னா முழு உடம்பும் போராடிக் கொண்டே இருக்கணும் பிரதர்!

மூன்று லட்சம் சமையல் குறிப்பு சித்ரலேகாவின் சாதனை


'அம்புலி' படத்தின் நாயகியான சனம் lekhafoods.com என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளLekha Foodsஉணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பூட்டை உடைத்து புன்னகையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
நுங்கம்பாக்கம் ஜம்புலிங்கம் தெருவில் அமைந்திருக்கும் இந்த இணையதள அலுவலகத்தை ஏக தடபுடலாக திறந்து வைத்திருக்கிறார் பிரபல தொழிலதிபரும் இதயம் நல்லெண்ணை உரிமையாளருமான வி.ஆர்.முத்து.
இதுவரைக்கும் சுமார் 30 ஆயிரம் உணவு முறைகளை வீடியோ, மற்றும் டெக்ஸ்ட் வடிவத்தில் தந்திருக்கும் இந்த இணைய தளம் விரைவில் மூன்று லட்சம் சமையல் குறிப்புகளை தருவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறதாம். இந்த இணைய தளத்தின் ஆசிரியர் வி.சித்ரலேகா.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும், நெட்டுக்குள் இறங்கி ஒரு சொடுக்கு சொடுக்கினால் போதும். அந்த நாட்டு உணவு முறைகளை முறைப்படி கற்று சமையல் செய்துவிடலாம். அந்தளவுக்கு இந்த தளத்தை அமைத்திருக்கிறார்கள். அசைவம், சைவம், இவ்விரண்டையும் தவிர்த்து ஏராளமான உணவு வகைகளையும் கூட இந்த தளத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என்றார் சித்ரலேகா.

லொக்கேஷன் ரொம்ப முக்கியம் 'செங்காடு' இயக்குனர் கருத்து


ஒரு படத்தின் ஹிட், அப்படம் வெளியாகும் தியேட்டர்களின் முறுக்கு வியாபாரம்Senkadu Directorவரை நிர்ணயிக்கிறது. முறுக்கே இப்படியென்றால் மற்றவற்றை புரிந்து கொள்ள வேண்டியதுதான். இன்றைய தேதிக்கு ஹாட் கேக் இயக்குனர்களல் ஒருவராக இருக்கிறார் மைனா பட இயக்குனர் பிரபு சாலமன். தற்போது கும்கி படத்தை அவர் இயக்கிக் கொண்டிருக்க, அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் ராமசாமியும் மிக மிக பிஸியாக செங்காடு என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் சிறப்புகளை டஜன் கணக்கில் அடுக்கிக் கொண்டிருக்கிறார் இவர். ஆனால் நாம் வியந்தது ஒன்றை பற்றிதான். அடிப்படையில் இவருக்கு சொந்த ஊர் மதுரை. மொத்த கோடம்பாக்கமும் மதுரையை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்க, இவர் சைலண்ட்டாக சினிமா யூனிட்டை அழைத்துக் கொண்டு தஞ்சாவூரில் டெண்ட் அடித்துவிட்டார். இதுவரை ஸ்டில் கேமிராவை கூட உருப்படியாக பார்த்திராத குக்கிராமங்களில் செங்காடு படத்தை எடுத்திருக்கிறாராம்.
ஒரு படத்திற்கு லொக்கேஷன் எவ்வளவு முக்கியம் என்பதை மைனா படத்தில்Senkadu Directorபார்த்திருப்பீர்கள். என்னுடைய படத்திலும் அதையேதான் மனதில் வைத்திருந்தேன். நான் நினைத்த கிராமம் தஞ்சாவூரை சுற்றி இருந்தது. அதனால்தான் அங்கு படப்பிடிப்பை வைத்தேன் என்றார் ரமேஷ் ராமசாமி.
இது என்ன மாதிரியான கதை?
இது நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் காதல் கதை. நண்பர்களுக்குள் துரோகம் நடந்தால் அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அழுத்தமான திரைக்கதையோடு இந்த படம் உருவாகியிருக்கிறது என்றார் டைரக்டர்.
ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், இந்த படத்தில் சண்டை இல்லையாம். ஐந்து தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்த ரூபா என்ற பெண்தான் இப்படத்தின் நாயகி.
சென்ட்டிமென்ட்டாக 'ரூபா' சம்பாதிச்சு கொடும்மா ரூபா...

சொல்லால் அடித்த சுந்தரி... அதிர்ச்சியில் தயாரிப்பாளர்


கோடம்பாக்கத்தில் ஒரு குரூப்புக்கு மட்டும் 'சொல்லால் அடித்த சுந்தரி'யாக இருந்தார் சோனா. இப்போது சம்பந்தமே இல்லாமல் இன்னொருவரும் அவ்வாறு புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்த பிரச்சனையில் யார் ஐயோ பாவம் என்பதை பின் வரும் பாராக்களில் யூகிக்க...
வெங்கட்பிரபு மற்றும் அவரது தோழர்களுக்கு நெருங்கிய தோழியாக இருந்த சோனா,Sonaஅவர்களை நம்பி சில படங்களையும் தயாரித்தார். அது போதாதென்று வெங்கட் பிரபுவுக்கு ஒரு படத்தை இயக்கித்தர அட்வான்சும் கொடுத்தார். 'நிழல் சலனம்' என்பார்கள் சினிமாவை. வெங்கட்பிரபுவின் நட்பு வட்டத்தில் நிழலாகவே நடமாடிக் கொண்டிருந்த சோனாவின் மனசில் இப்போது சலனமும், சஞ்சலமும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. ஏன்?
எஸ்.பி.பி.சரண் மீது காவல் துறையில் பாலியல் புகார் கொடுத்தார் சோனா. அதை தொடர்ந்து சோனாவை தனியாக விட்டு விட்டு மற்றவர்கள் ஓரணியில் திரண்டார்கள். இனிமேல் சோனாவுக்கு படம் இயக்கப் போவதில்லை என்று முடிவெடுத்த வெங்கட்பிரபு சோனாவிடம் வாங்கிய அட்வான்சை திருப்பி தருவதாக உறுதியளித்தார். அதன் பின் வழக்கு வாபஸ் பெறப்பட்டு வெளிநாட்டுக்கும் சென்றுவிட்டார் சோனா.
ஆனால் சொன்னபடி வெங்கட்பிரபு முழு பணத்தையும் செட்டில் செய்யவில்லையாம். சூர்யா நடிப்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தை வெங்கட்பிரபுதான் இயக்கவிருக்கிறார். இந்த முறை சோனா வேறு யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. நேராக ஞானவேல்ராஜாவையே தொடர்பு கொண்டாராம்.
ஒரு தயாரிப்பாளரோட கஷ்டம் இன்னொரு தயாரிப்பாளருக்கு தெரியும். எனக்கு தர வேண்டிய அட்வான்ஸ் தொகையை வட்டியோடு திருப்பி கொடுக்க சொல்லிவிட்டு உங்கள் படத்தை அப்புறம் ஆரம்பிங்க. இல்லையென்றால், நீங்கள் படத்தை ஆரம்பிக்கும் முன்பே நான் சங்கங்களில் புகார் செய்வேன். அது உங்களுக்குதான் கெட்ட பெயர். வெங்கட்டிடம் சொல்லுங்க என்றாராம்.
யாரோ நனைஞ்ச மழைக்கு. யார் யாரோ தும்ம வேண்டியிருக்கே!

கோடிக்கு ஆசைப்படும் ஹீரோக்கள் எச்சரிக்கும் நகுல் விவகாரம்


முட்டு சந்துல சிக்குன முரட்டு யானை, திரும்பவும் முடியாம திணறவும் இயலாம தடுமாறுன கதையாகிருச்சு நகுலின் நிலைமை. காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கிடுகிடுவென உச்சாணிக் கிளைக்கு போன நகுல், அதன்பின் ஒரு கோடி, ஒன்றரை கோடி என சம்பளத்தை உயர்த்தியதால், தயாரிப்பாளர்கள் யாருமே அவர் பக்கம் போகவில்லை.
திடீர் வெற்றிடத்தில் சிக்கிக் கொண்ட நகுல், எப்படியோ ஆஸ்கர் ரவிச்சந்திரன்Nakulதயாரிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கிக் கொண்டிருந்தார். நகுல் படத்தின் இன்றைய வியாபாரத்தை கணக்கிட்டால், மிக மிக சின்ன பட்ஜெட்டில்தான் படம் எடுக்க முடியும். ஆனாலும் பெரிய மனசு பண்ணிய ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஐந்தரை கோடி வரைக்கும் தாராளம் காட்டினாராம். ஆனால் முதல் பத்து நாட்களிலேயே இந்த பட்ஜெட்டை கிராஸ் பண்ணிவிட்டாராம் அறிவழகன்.
இதற்கு பிறகு இன்னும் ஐந்து கோடியை இந்த படத்தில் முதலீடு செய்தால், அது நகுலுக்கும் அறிவழகனுக்கும்தான் லாபமாக இருக்குமே தவிர, எந்த வகையிலும் இன்டஸ்ட்ரிக்கு பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்த ரவிச்சந்திரன், பிறகு பார்க்கலாம் வெயிட் பண்ணுங்க என்று படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார்.
கடந்த சில நாட்களாக கண்ணீரும் கம்பலையுமாக ஆஸ்கர் பிலிம்ஸ் வாசலில் தவம் கிடக்கிறாராம் நகுல். நிலைமை புரியாமல் ஒரு கோடி, ஒன்றரை கோடி என்று ஆசைப்படும் நடிகர்கள் குறிப்பாக விமல், ஜெய், விதார்த் போன்ற வளரும் ஹீரோக்கள் நகுலை பார்த்தாவது திருந்துவது நல்லது.

Thursday, 10 November 2011

வீரப்பன் படத்தில் 'முதல்வர் ஜெயலலிதாவாக' ஜெயசித்ரா!

சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய படத்தில் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் ஜெயசித்ரா.

வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வனயுத்தம் என்ற பெயரில் தமிழ் - கன்னடத்தில் புதி
Jayachitra
ய படம் தயாராகி வருகிறது.

குப்பி, காவலர் குடியிருப்பு படங்களை இயக்கிய ஏ எம் ஆர் ரமேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரில் பணியாற்றிய குழுவினர் ரமேஷுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் வேடத்தில் நடிகர் கிஷோரும், அவரது மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும் நடிக்கின்றனர்.

அதிரடிப்படை தலைவர் டிஜிபி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் நடிக்கிறார். வீரப்பனின் தந்தையாக யோகி தேவராஜும், அதிரடிப்படை போலீஸ் செந்தாமரைக் கண்ணனாக ரவி காலேவும் நடிக்கிறார்கள்.

வீரப்பன் கொல்லப்பட்ட காலத்தில் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது வேடத்தில் நடிப்பவர் பழைய நடிகை ஜெயசித்ரா. உருவம், நிறம் சில ஒற்றுமை இருவருக்கும் உள்ளதால், ஜெயசித்ராவை இந்த வேடத்துக்கு தேர்வு செய்தார்களாம்.

வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாராக நடிகர் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய் நடிக்கிறாராம்.

காடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் மிகப்பெரிய விருந்தாக ரசிகர்களுக்கு இந்தப் படம் அமையும் என்கிறார் இயக்குநர் ரமேஷ்.

சிம்பு கூட நடிக்க மாட்டேன்: தெலுங்கு நடிகர் ராணா

Simbu and Rana Daggubati
வடசென்னை' படத்தில் சிம்புவுடன் நடிக்க தெலுங்கு நடிகர் ராணா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இயக்குனர் வெற்றிமாறன் சிம்புவை வைத்து 'வடசென்னை' என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஒருவரை நடிக்க வைக்க வெற்றிமாறன் விரும்பினார். இதற்காக ராணாவை அழைத்து கதையை கூறியுள்ளார்.

கதையை கேட்டுவிட்டு, தனுஷை வைத்து 'பொல்லாதவன்' 'ஆடுகளம்' ஆகிய வெற்றி படங்களை கொடுத்துள்ள உங்கள் புதிய படத்தில் கட்டாயம் நடிக்கிறேன் என்று உறுதியளித்தார் ராணா. அதன்பின் படத்தின் ஹீரோ யார்? என்று கேட்டார்.

அதற்கு வெற்றிமாறன் ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் என்று கூறினார். சிம்பு என்று கூறியவுடன் சாரி சர், என்னால் நடிக்க முடியாது என்று நழுவிவிட்டார்.

'ஒஸ்தி பிரியாணி' விருந்து!

வாயைக் கட்டி, உடம்பை ஏத்தி படாதபாடுபட்டு ஒஸ்தி படத்தில் நடித்ததற்காக, சிம்புவுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார் இயக்குநர் தரணி.

ஒஸ்தி படத்துSimbu with Briyaniக்காக சிம்பு கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை மிடுக்கான தோற்றத்துக்கு கொண்டு வந்தாராம். உணவில் செம கட்டுப்பாடாம். ஒரே ஷெட்டியூலில் படத்தினை முடித்து க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையில் படமாக்கி முடித்தனர்.

நேற்று இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை முடித்தார்களாம் படக்குழுவினர்.

சிம்புவுக்கு பிரியாணி என்றால் அப்படி ஒரு பிரியமாம். ஆனால் இந்தப் படத்துக்காக கடந்த 2 மாதங்களாக பிரியாணி சாப்பிடவில்லையாம். அவரது பிரியாணி விருப்பத்தைப் புரிந்து கொண்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் தரணி பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்.

இது குறித்து சிம்பு "கடந்த இரண்டு மாதங்களாக இப்படத்திற்காக பிரியாணி சாப்பிட முடியவில்லை. ஆகையால் தரணி எனக்கு மொத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரியாணி விருந்து கொடுத்தார்," என்றார்.

பிரியாணி, சிக்ஸ் பேக்கெல்லாம் சரி... ரிலீசானதும் படம் பெட்டிக்கு 'பேக்கப்' ஆக இருக்கணும்!

பாரதிராஜா படம் விலகினார் பார்த்திபன்

அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. Parthibanஅதற்குள் இந்த படத்தை பற்றி வாய் கிழிய பேச்சும், வகை வகையான செய்திகளும் கோடம்பாக்கத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இயக்குனர் இமயம் இயக்குகிற படம் என்பதால்தான் இத்தனை எதிர்பார்ப்பும். வயல், வரப்பு, வாய்க்கால் என்று கிராமத்து ராஜாவாக இன்னும் எத்தனை காலம் வலம் வந்தாலும் அவரது பாணிக்கு அப்படியொரு வரவேற்பும் இருக்கிறது ரசிகர்களிடத்தில்.
ஆனால் சினிமாவிலிருக்கிற அத்தனை இயக்குனர்களும் போற்றி புகழும் இந்த இயக்குனர் இமயத்திற்கும், படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட பார்த்திபனுக்கும் என்ன பிரச்சனையோ?
இந்த படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார் பார்த்திபன். தனது ட்விட்டரில் இது குறித்து தெரிவித்திருக்கும் அவர், அதற்கான காரணத்தை மட்டும் சொல்லவே இல்லை. ஒரு வேளை சொல்ல முடியாதளவுக்கு 'சுருக்'கங்கள் இருக்குமோ என்னவோ?

சிம்புவின் நண்பர்கள் அரெஸ்ட் போலீஸ் நடவடிக்கை

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள் பக்தி மான்கள். Simbuகோடம்பாக்கத்தில் விசாரித்தால் சிம்பு இருக்கும் இடமெல்லாம் சிக்கல் இருக்கும் இடம் என்பார்கள் போலிருக்கிறது. இது லேட்டஸ்ட் செய்தி.
சில தினங்களுக்கு முன் ஈசிஆர் சாலையில் அமைந்திருக்கும் பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் ஒரு பார்ட்டி கொடுத்தாராம் சிம்பு. இதில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள் உற்சாகத்தில் தன் நிலை மறக்க, ஏகப்பட்ட அடிதடிகள் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
பொழுதுபோக்கு பூங்காவில் அமைந்துள்ள சில பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டதாம். இதையடுத்து சிம்புவின் நண்பர்கள் மூன்று பேரை சைலண்டாக தூக்கிவிட்டது போலீஸ். இந்த கைது நடவடிக்கை விசாரணைக்கு பிறகு தலை வரைக்கும் நீளலாம் என்பதுதான் தற்போதைய நிலவரம்.
ஒருவேளை இந்த பார்ட்டியில் சிம்புவே இல்லை என்றும் முடிவாகலாம். எது எப்படியோ? மீண்டும் சிம்புவை பற்றி ஒரு செய்தி. அதுவும் வழக்கம் போலவே கெட்ட செய்தி.

தாக்கப்பட்ட ஸ்ரேயா தடுமாறிய த்ரிஷா

முயல் குட்டி முண்டா தட்டினால் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும்? ஸ்ரேயாவின் உறுதியும் கிட்டதட்ட அப்படிதான் இருந்தது. Shreyaதெலுங்கானாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து நிற்க, அதெல்லாம் முடியாது என்றார் அவர். அப்புறம் நடந்ததெல்லாம் அநியாயம். அவரது முரட்டு பிடிவாதத்தை தகர்க்கிற மாதிரி நடந்தன கல்வீச்சு சம்பவங்களும் கலாட்டாக்களும். நல்ல வேளையாக அங்கிருந்து அவர் எஸ்கேப் ஆனதுதான் போன வார டாப் நியூஸ்.

நாம் தமிழர் கட்சியில் மாற்றமா? சீமான் எடுத்த முடிவு

கடந்த சில தினங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், சமீபத்தில் பா.ம.க விலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினாராம். இந்த சந்திப்பு பற்றி பல்வேறு தகவல்களை கசிய விடுகிறார்கள் கோடம்பாக்கத்திலிருக்கும் சினிமா புள்ளிகள் சிலரும், அரசியல் ஆர்வலர்களும்.
அவர்கள் சொல்வது என்னவென்றால், வேல்முருகன் நாம் தமிழர் கட்சியில் இணைய Seemanதிட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் அதற்கு சாத்தியமில்லை என்கிறது அடுத்தடுத்து வரும் தகவல்கள். இந்த சந்திப்பின் போது இருவரும் பேசிய விஷயங்களில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லையாம்.
வேல்முருகனின் டிமாண்ட் என்ன? நாம் தமிழர் கட்சியில் என்னை இணைத்துக் கொள்வது பற்றி ஆட்சேபணை இல்லை. ஆனால், அக்கட்சியின் பெயரில் சிறு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினாராம்.
கடந்த இரண்டு வருடங்களாக பெரும் எழுச்சியோடு கட்சி நடத்தி வரும் சீமான், அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. நீங்கள் கட்சியில் இணைந்தால் பெரிய பொறுப்பு தரப்படும். அதற்காக கட்சியின் பெயரை மாற்றிக் கொள்ள இயலாது என்று கூறியிருக்கிறாராம். இந்த பதில் மாற்றத்திற்குட்பட்டதா என்பதை அறிய இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்பது அவசியம்.

Wednesday, 9 November 2011

படமெடுக்காதே, ஆட்டோகிராப் கேக்காதே! - த்ரிஷா!


தன்னை ஆசை, ஆசையாய் பார்க்க வரும் ரசிகர்களை தன்னை செல்போனில் படமெடுக்க த்ரிஷா அனுமதிப்பதில்லை. நடிகை த்ரிஷாவைப் பார்க்கப் போனால் அவர் பல நிபந்தனைகள் போடுகிறார். அட நம்ம த்ரிஷா என்று அவரைப் பார்த்தும் அருகில் செல்லும் ரசிகர்களிடம் அவர் சொல்லும் முதல் வார்த்தை தயவு செய்து செல்போனில் படம் எடுக்காதீர்கள் என்பது தான்.

ஆசை, ஆசையாய் வந்தா இவங்க என்ன இப்படி பேசுறாங்களே என்று ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர். சரி படம் எடுக்கல. ரூபாய் நோட்டுல ஒரு ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்களேன் என்று கேட்டால் அதெல்லாம் முடியாது என்கிறாராம்.

சரி ஒரு பேப்பர்லயாவது ஆட்டோகிராப் போடுங்க என்றாலும் முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்கிறாராம். இது என்னப்பா இந்த த்ரிஷா இத்தனை பவுமானம் பண்ணுது என்று ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர். செல்போனில் படம்பிடித்துச் சென்று அதை வைத்து ஏதாவது பிரச்சனையைக் கிளப்பிவிட்டுட்டாங்கன்னா என்ன செய்வது என்று த்ரிஷா பயப்படுகிறார் போலும்.

அது சரி சும்மாவே த்ரிஷா பெயர் எதுலயாவது அடிபடுவதால் அவர் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறார் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.

ஜெனிலியாவுக்கு டோலிவுட்டில் நடிக்க தடை!


தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராகததால் நடிகை ஜெனிலியாவுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் ஜெனிலியா அதை கண்டுகொள்ளவில்லை. நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகர் சங்கம் உறுப்பினர் ஆகும்வரை தெலுங்கு படங்களில் நடிக்க ஜெனிலியாவுக்கு தடை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே காரணத்திற்காக த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா, பிரியாமணி, தமன்னா ஆகியோருக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

ராணா டக்குபாதியுடன் ஜோடி சேர்ந்து நா இஷ்டம் என்ற படத்தில் ஜெனிலியா நடித்து வருகிறார். இந்த பட வேலைகள் முடிந்தவுடன் தடை அமலுக்கு வருகிறது. நம்மூரிலும் கூட நடிகர் சங்கம் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இருப்பினும் இதுவரை முன்னணி நடிகர், நடிகை யாரையும் அது தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் படங்களுக்கு ‌தடை!


சன் பி்க்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றும் வெளியிடும் திரைப்படங்களை இனி திரையிடப் போவதில்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அவசரக்கூட்டம் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

பெற்றுக்கொண்ட டெபாசிட் தொகையை திரும்பச் செலுத்தாத காரணத்தினாலும், இதுகுறித்த பேச்சுவார்‌த்தையில் சரியான பதில் அளிக்காததாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்றார் கமல்! - சூர்யா!

7ஆம் அறிவு படத்தைப் பார்த்த ரஜினி சார் படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது என்னைக் கட்டிப்பிடித்து பென்டாஸ்டிக் என்று கூறி வாழ்த்தினார். கமல்சார், படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்று பாராட்டியதாக வைரமுத்து சார் சொன்னார் என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா - ஸ்ருதி ஹாஸன் நடிப்பில் ஏ ஆர் முருக தாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் ஏழாம் அறிவு. இந்தப் படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், படம் பெரிய அளவு வசூலைக் குவித்துள்ளதாக தயாரிப்பாளர் உதயநிதியும் இயக்குநர் முருகதாஸும் அறிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இந்தப் படத்துக்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில் படத்தின் வெற்றி மற்றும் பாராட்டுகளைப் பகிர்ந்து கொள்ள நேற்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்தார் படத்தின் நாயகன் சூர்யா. 

படம் வெளியான பிறகு தனக்குக் கிடைத்த பாராட்டுகளைப் பற்றி அவர் கூறுகையில், "7ஆம் அறிவு படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடுகிறது. தமிழறிஞர்கள், உணர்வாளர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், மாற்று சினிமா ரசிகர்கள் என அனைவருமே இந்தப் படத்தை பாராட்டினர்.

இந்தப் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன. பாராட்டுக்களை ஏற்கும் அதே மனப்பான்மையுடன் விமர்சனங்களையும் தலை வணங்கி ஏற்கிறேன். 

சமீபத்தில் திரையுலகைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் பேசுகையில், "நான் படம் பார்த்தேன். சிலர் விமர்சித்த மாதிரி அப்படி ஒன்றும் தவறாக இந்தப் படம் இல்லையே. நன்றாக இருந்ததே..." என்று கேட்டார். அவரவர் பார்வையைப் பொறுத்துதான் எதுவும் இருக்கிறது.

இன்னும் கூட வெளியூர்களில் டிக்கெட் கிடைக்காத அளவுக்கு நல்ல வசூலுடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனது தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியாக உள்ளார்.

நான் நடித்த படங்களிலேயே சிங்கம்தான் அதிகம் வசூல் ஈட்டியது. இப்போது அந்த வசூலை 7ஆம் அறிவு படம் பத்து நாட்களில் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமான இயக்குநர் முருகதாஸுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது ஏழாம் அறிவு.

தங்கர் பச்சான் சொன்னமாதிரி, குறையுள்ளவன்தான் மனிதன். அந்த மனிதன் படைத்த படைப்பிலும் குறைகள் நேர்வது சகஜம். அதைப் பொறுத்துக் கொண்டு ஆதரவளித்தால் மேலும் நல்ல படைப்புகள் தர உத்வேகம் பிறக்கும். நிச்சயம் இப்போது அனைவரும் சுட்டிக் காட்டியுள்ள குறைகளை அடுத்தபடத்தில் இல்லாத அளவுக்கு பார்த்துக் கொள்வேன்," என்றார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:

ரஜினி, கமல் படம் பார்த்தார்களே என்ன சொன்னார்கள்...?

நாங்கள் இந்தப் படத்தை ரஜினி சாருக்கு போட்டுக் காட்ட விரும்பி, நேரில் அழைத்தோம். சார் உடனே பார்க்க வருவதாகச் சொன்னார். சொன்ன நேரத்துக்கு ஷார்ப்பாக வந்தார். படம் பார்த்துவிட்டு அவர் வெளியில் வரும்போது நிறைய கூட்டம். என்னைக் கட்டிப்பிடித்து கட்டிபிடித்து பென்டாஸ்டிக் என்று கூறி வாழ்த்தினார். ரொம்ப கடுமையான முயற்சி எடுத்து செய்துள்ளீர்கள் என்றார்.

கமல் சார் படம் பார்த்துக் கொண்டிருந்த போதே, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்று பாராட்டியதாக வைரமுத்து சார் சொன்னார். நான் கமல் சாரை நேரில் பார்த்தபோது, இது பற்றிக் கேட்டேன். அவர், உண்மையைச் சொன்னதாக கூறினார். அந்தப் பாராட்டு எனக்கு பெரிய கவுரவமாக இருந்தது. 

சிவகுமார் பார்த்துவிட்டு என்ன கருத்து சொன்னார்?

பொதுவாக என் தந்தை என் நடிப்பைப் பற்றி எதுவும் என்னிடம் நேரில் சொன்னதில்லை. இப்போது நான் புது வீடு கட்டி வருகிறேன். இதனால் தற்காலிகமாக பெசன்ட் நகரில் வசிக்கிறேன். படம் பார்த்த உடன் என் தந்தை சிவகுமார் அந்த வீட்டுக்கு வந்தார். என்னை கட்டிப்பிடித்து கண்கலங்கினார். அது அப்பா எனக்கு கொடுத்த பெரிய பாராட்டு. 

கமல் மகள் ஸ்ருதிக்கு உங்களை விட வலுவான கேரக்டர் என்பது தெரிந்தேதான் நடித்தீர்களா...

இந்தக் கதை ஆரம்பத்திலேயே எனக்கு சொல்லப்பட்டுவிட்டது. இதில் முக்கிய பாத்திரமான போதி தர்மனாக நடித்ததும் நான்தானே. இரண்டாம் பாகத்தில் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் இருந்தது. கதை அவர்மீதுதான் செல்லும். கதை அப்படி. ஆனால் ஒவ்வொரு கேரக்டருக்கும் என்ன தேவையோ அதை இயக்குனர் கொடுத்து இருக்கிறார் முருகதாஸ். 

இவ்வளவு வலுவான கேரக்டரை ஸ்ருதி சரியாகச் செய்தார் என்று கூற முடியுமா...?

அவருக்கு ஆரம்பப் படம் இது. அப்படிப் பார்த்தால், 13 ஆண்டுகளுக்கு முந்தைய நான்கூட மூட்டையைக் கட்டியிருக்க வேண்டும். இந்தப் படத்தில் ஸ்ருதி ஆர்வத்துடன் வேலை பார்த்தார். அவரது நடிப்பில் குறைகள் இருந்தாலும், முதல் படம் என்ற வகையில் அவரது ஆர்வமும் உழைப்பும் பாராட்டுக்குரியவை. 

கமல் மகள் என்பதால் பயந்து நடித்தீர்களா?

கமல் சார் மகள் என்பதால் முதல் மூன்று நாட்கள் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அவர் நடந்து வந்தாலே கமல்சார் வந்த மாதிரி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வுகளில் இருந்து மீண்டு வந்தேன். பின்னர் இயல்பாகிவிட்டோம். 

போதி தர்மரை ஏன் தமிழருக்கு தெரிய வேண்டும்? அவர் தமிழருக்கு எதுவுமே செய்யவில்லையே? அவரைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

நமக்கு என்ன செய்தார் என்று ஏன் பார்க்க வேண்டும்... உலகத்துக்கே பெரும் நன்மை செய்த ஒரு தமிழராயிற்றே. அப்படிப் பார்க்கலாமே!

போதி தர்மர் தமிழரே இல்லை என்கிறார்களே...

அவர் பல்லவ வம்ச இளவரசர். காஞ்சிபுரத்திலிருந்து போனவர். அப்படியென்றால் அவர் தமிழர்தானே. இதனை பல தமிழறிஞர்கள், ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டு, அவர்தகள் ஆலோசனைப்படிதான் இயக்குநர் முருகதாஸ் படமாக்கினார். மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் முருகதாஸைத்தான் கேட்க வேண்டும்.

ஆனால் ஒன்று, கதைப்படி போதிதர்மரை சீனாவிலும், ஜப்பானிலும் தெய்வமாக கும்பிடுகிறார்கள். தற்கால தமிழ் இளைஞர்கள் சிந்தனை வேறு மாதிரி போகிறது. அவர்களை நமது பழைய கலாச்சாரத்துக்கு இழுத்து வர இப்படம் பயன்பட்டுள்ளது. 

இலங்கையில் இந்தப் படத்தின் முக்கியமான வசனங்களை வெட்டிவிட்டார்களே. நீங்கள் சொல்ல நினைத்தது மக்களைச் சேர்ந்ததா?

நாம் ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அரசாஙக்கத்தை எதிர்த்து சண்டை போடவில்லை. இந்த வசனங்களை வெட்டினாலும் நாங்கள் சொல்ல நினைத்தது மக்களைச் சென்று சேர்ந்துவிட்டது. 

வேலாயுதம் படம் பார்த்தீர்களா?
இல்லை. இன்னும் பார்க்கவில்லை. 

உங்கள் படத்தை விஜய் பார்த்துவிட்டாரா?

தெரியவில்லை. அவர் மனைவிக்கு ஜோ படம் போட்டுக் காண்பித்தார்.

உங்கள் அடுத்த படம்?

மாற்றான். கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஆக்ஷன் பொழுதுபோக்கு வகை. ஏழாம் அறிவை விட பெரிய ரேஞ்சுக்கு இந்தப் படம் வரும் என நம்புகிறேன்.

சிங்கம் பாகம் 2 பற்றி...

பேசிக் கொண்டிருக்கிறோம். ஓரிரு வாரங்களில் உங்களுக்கு முழுமையான செய்தி வரும்.

மீண்டும் சரித்திரக் கதையில் நடிக்கும் எண்ணம் உள்ளதா?

சரித்திரக் கதைகள் என்று வரும்போது, நிறைய முயற்சி, காலம் தேவை. அதைவிட முக்கியம் வலுவான சரியான கதை அவசியம். என்னிடம் சமீபத்தில் ஒரு பிரபல இயக்குநர் 17-ம் நூற்றாண்டு கதையைச் சொன்னார். ரொம்ப அற்புதமாக இருந்தது அதன் முதல்பாதி. அடுத்த பகுதி ஸ்க்ரிப்ட் தயாராகிக் கொண்டிருக்கிறது. சரியாக வந்தால், அந்தப் படத்தையெடுக்க தயாரிப்பாளர் முன்வந்தால் நிச்சயம் நடிப்பேன். 

விஜய் ரசிகர் மன்றத்துக்கு கொடி இருப்பது போல் உங்கள் ரசிகர்களுக்கு கொடி கொடுப்பீர்களா? 

ஏங்க... நல்லாதானே இருக்கு இப்ப. கொடி வைத்து ரசிகர் மன்றத்தை வளர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை!

-இவ்வாறு சூர்யா பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்தப் பேட்டியின் போது ஒரு நிருபர், நீங்களும் விஜய்யும் உங்கள் கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதுண்டா என்று கேட்டார். உடனே சூர்யா.. இல்லையே.. ஏன்? என்றார்.

இல்ல.. வேலாயுதத்துல அவர் பாகிஸ்தான் தீவிரவாதி கூட சண்டை போடுகிறார், ஏழாம் அறிவில் நீங்கள் சீனாக்காரர்களுடன் சண்டை போடுகிறீர்கள். இதனால் பக்கத்து நாடுகளுடன் பெரும் பிரச்சினையாகிவிடும் போலிருக்கிறதே, என்று கூற வாய்விட்டுச் சிரித்தார் சூர்யா. இதனால் அரங்கமே சிரிப்பில் குலுங்கியது.

பிப்ரவரியில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்!

நயன்தாரா-பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதனால் இருவரும் இப்போது தங்கள் இருப்பிடத்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர். பிரபு தேவா இயக்கத்தில் வந்த வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர். 

அவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், ஹைதராபாதிலும் மாறி மாறி வசி்த்து வருகிறார். 

சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். விவாகரத்து ஆகிவிட்டாலும் முன்னாள் 
மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கடி பார்த்து வருகிறார். இதனால் பிரபு தேவா - நயன்தாரா இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். 

அதற்கு வசதியாக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர். வீட்டுக்கு தேவையான மேசை நாற்காலிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நயன்தாரா கடை, கடையாக சென்று வாங்கி வருகிறார். இதனால் சென்னையின் முக்கிய கடைகளில் நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை அடிக்கடி பார்க்க முடிகிறது.

உறுதியானது சினேகா பிரசன்னா காதல்!


கோடம்பாக்கத்தின் நிகழ்கால புன்னகை இளவரசி என கொண்டாடப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்துSneha - Prasannaநடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வெளிவந்தன. இருவரும் இதுகுறித்து முதலில் மறுப்பும் மலுப்பலும் தெரிவித்தனர். ஆனால் இவர்களது காதல் வலுவானது என்பதை இப்போது நிரூபித்து விட்டார்கள். தற்போது சரத்குமாருடன் விடியல் என்ற படத்தில் நடித்து வரும் சினேகா. விளம்பரங்களின் தேவதையாக ஜொழித்து வருகிறார். பிரச்சன்னாவோ தமிழ் சினிமாவின் வெர்சடைல் கலைஞராக, நாயகன், வில்லன் என கலவையாகவும், மல்ட்டி ஸ்டாரர் படங்களில் துணிவாகவும் நடித்து வருகிறார்கள். ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ்சினிமாவின் முக்கிய ஸ்டாராக இருக்கும் பிரசன்னா, விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமான சினேகாவை முழுமனதோடு விரும்பியிருக்கிறார்.

Tuesday, 8 November 2011

சகுனி'யில் அனுஷ்கா குத்தாட்டம்!


கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூற ஆரம்பித்துள்ள நடிகை அனுஷ்கா, சகுனி படத்தில் கவர்ச்சிகரமான குத்தாட்டத்தில் ஆடியுள்ளாராம். கார்த்தி நாயகனாக நடிக்கும் படம் சகுனி. இப்படத்தில் குத்தாட்டம் ஆடியுள்ளாராம் அனுஷ்கா. தமிழிலும், தெலுங்கிலும் கை நிறையப் படங்களுடன் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா, சமீப காலமாக கவர்ச்சிகரமான கேரக்டர்கள் வேண்டாம், டான்ஸ் வேண்டாம், நீச்சல் உடை வேண்டாம் என்று வேண்டாம் பட்டியலை இயக்குநர்கள் முன்பு நீட்ட ஆரம்பித்துள்ளார்.

அதுதானே உங்களது பெரிய பலமே என்று இயக்குநர்கள் கூறினால் சிரித்து சமாளித்து விடுகிறாராம். இந்த நிலையில் சகுனி படத்தில் மட்டும் அவர் குத்தாட்டம் ஒன்றைப் போட்டுள்ளாராம். இதற்குக் காரணம் சூரியாவின் கோரிக்கை என்கிறார்கள். சிங்கம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார் அனுஷ்கா. அது முதல் சூர்யாவின் நல்ல நண்பியாகி விட்டாராம்.
இந்த நிலையில்தான் சகுனி படத்தில் அனுஷ்காவின் குத்தாட்டத்தை வைக்க விரும்பி அவரை அணுகினர். இதற்காக கார்த்தியின் அண்ணனான சூர்யாவின் உதவியையும் நாடினராம். அனுஷ்காவுக்கே கார்த்தியைப் பிடிக்கும், நல்ல நண்பர் என்பதாலும், சூர்யாவின் கோரிக்கையாலும் குத்தாட்டத்திற்கு ஒப்புக் கொண்டாராம்.

மொத்தத்தில் நட்புக்காக இந்த குத்தாட்டத்தை ஏற்றுக் கொண்டாராம் அனுஷ்கா என்கிறார்கள். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பவர் பிரணீதா. முன்னாள் குத்தாட்ட நாயகி மும்தாஜும் ஒரு முக்கிய வேடத்தில் படத்தில் தலை காட்டுகிறார். இருந்தாலும் இந்தப் படத்துக்கு மட்டும்தான் குத்தாட்டமாம். மறுபடியும் யாராவது குத்தாட்டத்திற்குக் கூப்பிட்டால் மறுத்து விடுவாராம் அனுஷ்கா.

நவம்பர் 18 முதல் செல்வராகவனின் மயக்கம் என்ன!


செல்வராகவன் இயக்கத்தில், அவர் தம்பி தனுஷ் -ரிச்சா நடித்துள்ள புதிய படமான மயக்கம் என்ன வரும் நவம்பர் 18-ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது. மயக்கம் என்ன படம் ஏற்கெனவே தயாராகிவிட்டது. ஜீவி பிரகாஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் பிரபலமடைந்துள்ளன. தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தியேட்டர்கள் பிரச்சினை மற்றும் தீபாவளி போட்டி போன்றவற்றால், ரிலீசை மூன்று வாரங்கள் தள்ளிப்போட்டனர்.

இந்த நிலையில் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இந்தப் படம் வரும் நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் காரணமாக ஏற்கெனவே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது மயக்கம் என்ன! ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் இது.

விக்ரம் - விஜய் கைகோர்க்கும் தாண்டவம்!


விக்ரமை வைத்து விஜய் இயக்கும் புதிய படத்துக்கு தாண்டவம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் பொழுதுபோக்குப் படமாக உருவாகும் தாண்டவத்தில் விக்ரம்-அனுஷ்கா-எமி ஜாக்ஸன்-சந்தானம் நடிக்கிறார்கள். தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு மீண்டும் விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அனுஷ்கா. அந்தப் படத்தில் பாடாமல் போன டூயட்டையெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து இதில் பாடப்போகிறார்களாம்.

ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கை கவனிக்கிறார். படத்தின் பெரும்பான்மைப் பகுதிகள் அமெரிக்காவின் பல்வேறு வித்தியாசமான லொகேஷன்களில் படமாக்கப்படவிருக்கின்றன. இந்திய திரையுலகில் வித்தியாசமான ஆக்ஷன் படமாக அமைய வேண்டும் என்பதால், ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுடன் கைகோர்த்துள்ளாராம் விஜய். 2012 சம்மர் ஸ்பெஷலாக வருகிறது இந்த 'தாண்டவம்!'

கெளதம் மேனன் நாயகிகளின் கெளரவ மோதல்!


கெளதம் மேனனின் நாயகிகள் இருவருக்கு இடையே பனிப்போர் மூண்டுள்ளதாம். யார் பெரியவர், யாருக்கு கிராக்கி அதிகம் என்பதில் இந்த மோதல் மூண்டு புகைச்சல் அதிகமாகியுள்ளதாம். கெளதம் மேனனால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சமீரா ரெட்டி. அதேபோல கெளதம் மேனன் கைப்பிடித்து தூக்கி விட்டவர் சமந்தா.

சமீரா ரெட்டி, வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் சமீரா. அதேபோல தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. நடுநிசி நாய்கள் படத்தில் சமீரா நாயகியாக நடித்தார். அதேசமயம், சமந்தாவையும் ஒரு முக்கிய வேடத்தி்ல கெளரவ வேடத்தில் நடிக்க வைத்தார் கெளதம் மேனன்.

அதாவது தனித் தனியாக இயக்கிய இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் சேர்த்து இயக்கினார் கெளதம். அங்குதான் புகைச்சலாகி விட்டதாக கூறுகிறார்கள். சமந்தா மீதுதான் கெளதம் மேனன் அதிகம் அக்கறை காட்டுவதாக நினைக்கிறாராம் சமீரா ரெட்டி. தன்னை தற்போது ஓரம் கட்டுவது போல கெளதம் மேனன் நடந்து கொள்கிறார். மாறாக சமந்தாவுக்குத்தான் அதிக நேரம் ஒதுக்கிறார் என்று குமுறுகிறாராம் சமீரா.

சமீரா தற்போது வேறு வேறு படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம், தொடர்நது கெளதம் மேனன் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சமந்தா. இதுவும் கூட சமீராவுக்கு புகைச்சலைக் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். தற்போது சமந்தா தனது புதிய படங்களை ஒப்புக் கொள்வதிலிருந்து, யாருடன் ஜோடி போடுவது என்பதிலிருந்து, எவ்வளவு சம்பளம் வாங்கலாம் என்பது வரை அனைத்துக்கும் கெளதம் மேனனிடம் ஆலோசனை கேட்பதாக தெலுங்குத் திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.

இப்படி சமந்தா ஒருபக்கம் படு வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாலும், வெடி போன்ற சூப்பர் டூப்பர் பிளாப் படங்களை தான் கொடுத்துக் கொண்டிருப்பதாலும் டென்ஷனாக இருக்கிறாராம் சமீரா. இந்த சண்டை எங்கு போய் முடியும், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் இரு மொழித் திரைத்துறையினரும் காத்துள்ளனர்.

புதிய பார் திறந்த காதலர்! - ரீமா சென் பிறந்த நாள்!


தனது வருங்கால கணவர் ஷிவ் கரண் சிங்குடன் தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார் நடிகை ரீமா சென். ரீமாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்டிமென்டாக தனது டெல்லி ஓட்டலில் நட்சத்திர பார் ஒன்றைத் திறந்துள்ளார் ஷிவ் கரண் சிங். இந்த பாருக்கு ஷ்ரூம் என்றுி பெயர் சூட்டியுள்ளார். ரீமா சென்னும் ஓட்டல் அதிபர் ஷிவ் கரண் சிங்கும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர்.

இருவரும் மோதிரம் மாற்றி தங்கள் திருமணத்தை உறுதி செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பாட்டி, நிகழ்ச்சிகள் என எங்கும் இருவரும் ஒன்றாகவே சுற்றுகிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் ரீமா சென்னுக்கு பிறந்த நாள். இந்த நாளைக் கொண்டாட பெரிய விருந்து வைத்தார் ஷிவ் கரண் சிங். தனது டெல்லி ஓட்டலில் நடந்த இந்த விருந்தின்போது, ரீமாவின் பிறந்த நாள் நினைவாக ஒரு நட்சத்திர பார் திறந்தார் ஷிவ்.

இந்த பாரில்தான் விடிய விடிய பார்ட்டியும் நடந்ததாம். இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. அதுவரை சும்மா இருப்பானேன் என்று இரு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரீமா சென்.

கவர்ச்சிக்கு ஆசைப்படும்! - ப்ரீத்திகா ராவ்!


சிக்கு புக்கு நாயகி ப்ரீத்திகா ராவ் கவர்ச்சிகரமாக நடிக்க ஆசைப்படுகிறாராம். சிக்கு புக்கு படத்தில் தந்தை ஆர்யாவின் ஜோடியாக வந்து போனவர் ப்ரீத்திகா ராவ். முன்னாள் பத்திரிக்கையாளரான இவர் இப்போது எந்தப் படத்திலும் காணவில்லை. மும்பையில் பிறந்து வளர்ந்தவரான இவர் புதுப் படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் உள்ளார். அவருக்கேற்ற படம் வராததுதான் இதற்குக் காரணமாம்.

இருந்தாலும் தற்போது தெலுங்குப் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு பீரியட் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் மாடர்னாகவும் அதேசமயம் கவர்ச்சிகரமாகவும் நடித்து வருகிறாராம். முதல் படத்தில் காரைக்குடியைச் சேர்ந்த அச்சு அசல் தமிழ்ப் பெண்ணாக நடித்தீர்கள், இப்போது அஜால்குஜாலாக கவர்ச்சிக்குத் தாவி விட்டீர்களே என்று கேட்டால், எனக்கு மாடர்ன் உடை பொருத்தமாக இருக்கும் என பீரியட் படத்தில் ஒப்பந்தமாகி நடிக்கும் வரை உணரவில்லை.

ஆனால் இப்போது எல்லோரும் என்னைப் பார்த்து பிரமிக்கின்றனர். கவர்ச்சிகரமாக இருப்பதாகவும் சிலாகிக்கின்றனர். எனக்கும் கூட மாடர்னாக, முகம் சுளிக்காத வகையிலான கவர்ச்சி வேடத்தில் நடிக்க ஆசைதான். எனவே இனிமேல் கிராமத்துப் பெண்ணாக நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன் என்றார் ப்ரீத்திகா.

புதிய பாடகர்கள் திறமைசாலிகள்! - பி சுசீலா!


புதிதாக பாட வந்துள்ள பாடகர்கள் நல்ல திறமைசாலிகளாக உள்ளனர், என்றார் பி சுசீலா. சேலத்தில் பள்ளி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுசீலா கூறுகையில், "இன்றைக்கும் எனது குரல் நன்றாக இருப்பதாக பாராட்டுகிறார்கள். அது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் கூறமுடியும். இப்போது உள்ள பாடகர்கள் எங்களை விட திறமைசாலிகள். நன்றாக பாடுகிறார்கள். பாடல்களும் நன்றாக இருக்கின்றன. இங்கு நடனம் ஆடியவர்களை பார்த்து வியந்து போனேன். அவ்வளவு திறமைகளிடம் உள்ளன. இதைப் பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

இதுபோல் அனைத்து குழந்தைகளிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். இதை வெளிக்கொண்டு வர வேண்டும். மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு பெற்றோருக்கு உண்டு. மாணவ, மாணவிகள் செய்ய விரும்புவதை பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள். இதனால் மாணவ, மாணவிகள் பெற்றோர் விரும்புவதை நிறைவேற்றி வைக்க வேண்டும்," என்றார்.

எவ்வளவோ பாடல்களை பாடி உள்ளீர்கள். உங்களால் மறக்க முடியாத அனுபவம் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டபோது, "நிறைய இருக்கிறது. இதை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள இயலாததற்கு வருந்துகிறேன்," என்றார். பிறகு அவர் உன்னை காணாத, ஆலய மணி போன்ற பாடல்களை பாடினார்.

சிம்புவின் ஆட்ட ஸ்டைல் அதிசயிக்க வைக்கிறது! - மல்லிகா ஷெராவத்!


சிம்புவின் ஆட்ட ஸ்டைல் அபாரமாக இருக்கிறது, அதிசயிக்க வைக்கிறது என்று மல்லிகா ஷெராவத் சிலாகித்துக் கூறியுள்ளார். ஒஸ்தி பாடலில் சிம்பவுடன் சேர்ந்து ஒரு குத்தாட்டப் பாட்டுக்கு செமத்தியான ஆட்டம் போட்டிருக்கிறார் மல்லிகா ஷெராவத் என்பது நினைவிருக்கலாம். அந்த அனுபவம் குறித்து தற்போது சிலாகித்துப் பேசியுள்ளார் மல்லிகா.

சிம்புவின் ஆட்டத் திறமையும், ஸ்டைலும் வியக்க வைப்பதாகவும், அதிசயிக்க வைப்பதாகவும் அவர் பாராட்டித் தள்ளியுள்ளார். மணிரத்தினத்தின் குரு படம் மூலம் தமிழுக்கும் வந்தார் மல்லிகா. பின்னர் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்தார். தற்போது சிம்வுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.

ஒஸ்தி படத்தில் மல்லிகா செமத்தியான ஆட்டம் போட்டிருக்கிறாராம். ஆனால் அவரோ சிம்பு குறித்து சிலாகித்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அழர் கூறுகையில், சிம்புவின் ஆட்டத் திறமையும், அவரது ஸ்டைலும் கலக்கலாக இருக்கிறது. அதைப் பார்த்து நான் பிரமித்துப் போய் விட்டேன். அதிசயித்தேன்.

எந்த ஹீரோவும் இப்படி ஒரு அசாத்தியமான திறமையுடன் இருப்பதை நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஒஸ்தி படப் பாடல்கள் செம ஹிட்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை. சிம்புவின் டான்ஸைப் பார்த்து அசந்து போன நான் இதற்கு முன்பு அவர் நடித்த படங்களின் டான்ஸ் காட்சிகளையும் வீடியோவில் பார்த்து ரசிக்க ஆர்வமாக உள்ளேன். அந்த அளவுக்கு சிம்புவுக்கு நான் ரசிகையாகி விட்டேன்.

என்ன மாதிரியான ஸ்டைலில் ஆடச் சொன்னாலும் அசத்தி விடுகிறார் சிம்பு. ஒரு அபாரமான டான்ஸர் அவர் என்று புல்லரித்துப் பேசுகிறார் மல்லிகா. அடடா, மல்லிகாவை அசத்திய அப்படிப்பட்ட ஆட்டத்தை சீக்கிரமாக ரசிகர்களுக்கும் காட்டுங்கப்பா.!

தேனி மக்களின் பாச அழைப்பு! - ஆடு திருடி வசுந்தரா!


பேராண்மை, தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய படங்களில் நடித்துள்ளவர் வசுந்தரா. தற்போது போராளி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதலில் தனது பெயரை அதிசயா என்றுதான் வைத்திருந்தார் வசுந்தரா. அந்தப் பெயரில் அவர் வட்டாரம் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.
பின்னர் வசுநத்ரா என மாற்றி பேராண்மை படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக வந்து போனார். தென் மேற்குப் பருவக் காற்றுதான் இவருக்கு முழு நீள ஹீரோயின் படம். தற்போது போராளி மூலம் கவனிக்கப்படக்கூடிய நாயகியாக மாறியுள்ளார். தென் மேற்குப் பருவக் காற்று படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க தேனி சுற்று வட்டாரத்தில் நடந்தது. அதில் இவர் நடித்த ஆடு திருடி கதாபாத்திரம் அப்பகுதி மக்களின் மனதைக் கவர்ந்து விட்டதாம்.

இந்த நிலையில் போராளி படத்திற்காக அதே தேனிப் பக்கம் ஷூட்டிங் போயிருந்தபோது அவரை அடையாளம் கண்டு கொண்ட கிராமத்து மக்கள் அட நம்ம ஆடு திருடி என்று ஆச்சரியப்பட்டு, ஏய் ஆடு திருடி என்று குரல் கொடுத்த வசுந்தராவை அதிர வைத்தனராம். முதலில் அதிர்ந்தாலும் தனது கதாபாத்திரம் கிராம மக்களின் மனதோடு ஒன்றிப் போய் விட்டதை உணர்ந்து சந்தோஷப்பட்டாராம் வசுந்தரா.

மேலும், நாம் சிறப்பாக நடித்தால், மக்களின் மனதில் சட்டென்று இடம் பிடித்து விடுவோம் என்பதையும் புரிந்து கொண்டாராம். இதனால் போராளி படத்திலும் தனது கேரக்டரில் மிகவும் கவனமாக நடித்துள்ளாராம். ஆடு திருடியாக நடித்தால் என்ன மனதைத் திருடும் வகையில் நடிப்பதுதான் முக்கியம்.

மகள் தியாவுக்காக பைக் ஓட்டும் சூர்யா!


சொகுசு கார்களில் பறக்கும் நடிகர் சூர்யா தனது செல்ல மகள் தியாவுக்காக பைக் வாங்கியுள்ளார். அதில் வைத்து மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். நடிகர் சூர்யாவின் மகள் தியாவுக்கு பைக் என்றால் அலாதிப் பிரியம். அதனால் சூர்யா ஒரு பைக் வாங்கியுள்ளார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் மகளை பைக்கில் வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார், சென்னையை சுற்றி வருகிறார். மகளின் சந்தோஷத்தில் தானும் சந்தோஷம் காண்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது, என் மகள் தியாவுக்கு பைக்கில் செல்வது மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் பைக் வாங்கியுள்ளேன். ஷூட்டிங் இல்லை என்றால் தியாவை பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன்.

நான் காரில் சென்றால் என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. ஆனால் பைக்கில் அப்படியில்லை. அதனால் ஹெல்மெட் அணிந்து தான் பைக்கில் செல்கிறேன். அது தலைக்கும் கவசமாக உள்ளது, என்னையும் யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்றார்.

அண்மையில் ஏழாம் அறிவு நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த சூர்யா அவள் அங்கு நடந்தவற்றை எல்லாம் உன்னிப்பாக கவனிப்பதைப் பார்த்து அதிசயித்தார். இப்பொழுதெல்லாம் அப்பா எங்காவது கிளம்பினால் தானும் வருவேன் என்று தியா அடம் பிடிக்கிறாளாம். சிக்னல்ல உங்க பக்கதுல பைக்கில் நிற்பது சூர்யாவாகக் கூட இருக்கலாம்.!..

பாரதிராஜாவின் அன்னக்கொடி! - கார்த்திகா!

பாரதிராஜா இயக்கப் போகும் கனவுப் படமான அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் நாயகியாக கோ பட நாயகியும், முன்னாள் நாயகியும், பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு நாயகியாக அறிமுகமானவருமான ராதாவின் மகளுமான கார்த்திகா நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. பழம்பெரும் நாயகியான ராதாவின் மகள்தான் கார்த்திகா. இவர் கோ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நல்ல கிராக்கிக்குள்ளாகியுள்ளார். 

அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் போனபோதும் கோ படம் போல நல்ல கதையம்சம் உள்ள படமாக பார்த்துக் கொண்டிருப்பதால் புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர் ராதாவும், கார்த்திகாவும். இந்த நிலையில் பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நாயகியாக, இனியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிருந்தது நினைவிருக்கலாம்.

முதலில் பிரியா மணியைத்தான் யோசித்திருந்தார் பாரதிராஜா. பின்னர் வாகை சூட வா படத்தைப் பார்த்த பின்னர் இனியாவை தனது நாயகியாக அவர் தேர்வு செய்தார் என தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் கார்த்திகா அந்த வேடத்திற்குத் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இனியா நிராகரிக்கப்பட்டுள்ளாரா அல்லது கார்த்திகா இன்னொரு ஹீரோயினாக நடிக்கப் போகிறாரா என்பது தெளிவாகத் தெரி
யவில்லை.

சிம்புன்னா வேணாம்... தெலுங்கு ஹீரோ அலட்டல்

ஒரு தெலுங்கு ஹீரோவையும் கூட்டு சேர்த்துக் கொள்வதுதான் இப்போதைய தமிழ்சினிமாவின் ஸ்டைல் போலிருக்கிறது. எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றிக்கு பிறகுதான் கோடம்பாக்கத்தின் சிண்டை பிடித்து குலுக்கி எடுக்கிறது இந்த பழக்கம்.
வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்திலும் ஒரு தெலுங்கு ஹீரோவை நடிக்க Raanaவைக்க நினைத்தார்கள். பளிச்சென்று வெற்றிமாறனின் மனசுக்குள் வந்தது ராணாவின்
உருவம்தான். அவரை மெனக்கெட்டு சென்னைக்கே வரவழைத்தார்கள். ஒரு காபி கஃபேயில் உட்கார வைத்து கதையையும் சொன்னார் வெற்றி மாறன்.

கரிகாலன் செட் கவலை தரும் கொசுக்கள்

விக்ரம், செரீன் கான் நடிக்கும் கரிகாலன் படத்தின் ஷுட்டிங் பின்னி மில்லில் நடந்து Zarine Khanவருகிறது. பொதுவாகவே சென்னையில் மழையடித்தால் ஒரு புறம் கொசுக்கள் மிதக்கும். மறுபுறம் மனிதன் மிதப்பான். ரெண்டையும் சகித்துக் கொள்ள டாஸ்மாக் உதவியோடு 'மிதக்கும்' ரசனைவாதிகளும் அதிகம்.
மழைக்காலத்தில் படப்பிடிப்பு நடத்த சவுகர்யமான இடம் இந்த பின்னி மில்தான். மிகப்பெரிய ஏரியாவில் மூடப்பட்ட தளமே இருக்கிறது. இதற்குள் நுழைந்துவிட்டால், மழையாவது இடியாவது. எதுவும் தாக்காது என்ற நம்பிக்கையில் போய் இறங்கிவிட்டார்கள்.
செரீனாவை பார்த்தால் சமானியன் கண்கள் கூட காட்டு கொசுவாக மாறி கடிக்க
துவங்கிவிடும். அப்படியிருக்கும்போது கொசுக்கள் விடுமா? பாய்ந்து குதறிவிட்டதாம்.
(அத்தனை கொசுவும் கலர் கொசுவாகியிருக்குமே?)
இந்த பிரமாண்ட பின்னி மில்லில் இப்போது அக்கம் பக்கத்து ஏரியாவிருந்தும் கூட
கொசுக்களின் கூட்டம் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறதாம். பகலையே கூச வைக்கும் வெளிச்ச விளக்குகள் இருக்கும்போது பிரச்சனையில்லை. இரவில் செட் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பாடுதான் திண்டாட்டம். காலையில் ஒவ்வொருவர் முகமும் கொழுக்கட்டையாக வீங்கி போவதால் பின்னி மில் என்றாலே ஜன்னி வந்தது போல் அலறுகிறார்கள் அவர்கள்.

ஜீவா-சிம்பு-மிஷ்கின் மறுபடியும் ஒரு ரிலே ரேஸ்...

கூரையில ஏறுன கோழிக்கு வேணும்னா கால் ஸ்லிப் ஆகாம இருக்கலாம். விரட்டி Simbu - Jeevaபிடிக்க போனவன் கதி? அதுதான் நடந்து வருகிறதாம் முகமூடி விவகாரத்தில். மிஷ்கின் இயக்கத்தில் தயாராக போகும் படம் முகமூடி. சில வருடங்களுக்கு முன்பே இந்த கதையை உருவாக்கி வைத்துவிட்டார் அவர். ஆனால் பட்ஜெட் 35 கோடி. இந்த பெரும் பாறாங்கல்லை தலையில் சுமக்கிற அளவுக்கு ஹீரோ கிடைத்தாலொழிய கிளாப் கட்டையை கூட தூக்க முடியாது என்கிற நிலைமை.
சூர்யா முன் வந்தார் இந்த கதையில் நடிக்க. வழக்கம்போலவே பிடாரி பின்னாடி. பப்பரப்பா... முன்னாடி என்பது போல, மிஷ்கினின் அணுகுமுறை பிடிக்காமல் அவரே கழன்று கொண்டார். நந்தலாலாவும் சிக்கிக் கொண்டதால் சில காலம் கழற்றி போடப்பட்டது முகமூடி.
அதன்பின் இந்த கதையில் நடிக்க முன் வந்தார் சிம்பு. ரெண்டு கத்தி, ஒரு ஷேவிங், என்னாகும் ஸ்கின்? மறுபடியும் முகமூடிக்கு சிக்கல். எப்படியோ ஜீவாவை கமிட் பண்ணி கதையை நகர்த்த முடிவு செய்தார் மிஷ்கின். படத்தை யூ டிவி தயாரிப்பதாக இருந்தது. இன்னமும் இருக்கிறது. இந்த நிலையில்தான் ஜீவாவின் ரவுத்திரம், வந்தான் வென்றான் இரு படங்களும் படுத்துக் கொண்டது.

பையன் நல்ல ஃபார்ம்ல இருக்கான்... - சூர்யா பற்றி கமல்

ஊசி முனையில் தேனைத் தடவி அதை நறுக்கென்று செலுத்துவதில் வல்லவர் பத்திரிகையாளர் பிஸ்மி. நேற்று நடந்த நடிகர் சூர்யாவின் பிரஸ்மீட்டில் அவரது கேள்வியும், சூர்யாவின் பதிலும் அட்ட'ஹாஸ்யம்....'
சூர்யா, நீங்க கதை கேட்டு முடித்ததும் அதை விஜய்யுடன் ஷேர் பண்ணிப்பீங்களா? முதலில் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத சூர்யாவும், 'அதுக்கு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்' என்று கூறிவிட்டு Suryaபிஸ்மியின் முகத்தையே பார்க்க, 'இல்ல... எதுக்கு கேட்கிறேன்னா நீங்க சைனா தீவிரவாதியோட மோதுறீங்க. அவரு பாகிஸ்தான் தீவிரவாதியோட மோதுறாரு. உங்க ரெண்டு பேராலயும் அண்டை நாடுகளில் பெரிய பிரச்சனையா இருக்கு' என்றாரே பார்க்கலாம். விழுந்து விழுந்து சிரித்தார் சூர்யா.
பொதுவாகவே பெரிய நடிகர்களின் பிரஸ்மீட்டில் அவசியமில்லாத கேள்விகளும் விழும். அதிகப்படியான எரிச்சலும் எழும். ஆனால் நேற்று நடந்த அந்த பிரஸ்மீட், இன்னொரு சூர்யா படம் பார்த்தது போல அத்தனை கச்சிதம்.
'மகேசன் தீர்ப்பையும் மதிக்கிறேன். மக்களின் தீர்ப்பையும் மதிக்கிறேன்' என்று சூர்யா பேசியதெல்லாம் தேர்ந்த அரசியல்வாதியின் ஸ்டைல். (அப்படியும் ஒரு ஐடியா இருக்கோ, என்னவோ?) ஏராளமான விஜய் கேள்விகளும் இடையிடையே செருகப்பட, அத்தனைக்கும் ஆனந்தப்பட்டார் சூர்யா.
7 ஆம் அறிவு படத்தை விஜய் பார்த்தாரா? இந்த கேள்விக்கு, 'இன்னும் இல்ல. ஆனா அவங்க மனைவி பார்த்தாங்க. நிறைய பாராட்டுனாங்க' என்றார் சூர்யா. நீங்க வேலாயுதம் பார்த்தீங்களா என்ற இன்னொரு கேள்விக்கு, 'இன்னும் 7 ஆம் அறிவு படத்தையே பார்த்து முடிக்கல நான். இனிமேல்தான் வேலாயுதம் பார்க்கணும். ஆனால் இரண்டு படங்களுமே நல்லா ஓடிட்டு இருக்கு. அப்படிதான் இருக்கணும். ஒரு படம் கமர்ஷியலா வந்தால், இன்னொரு படம் வேறொரு டைப்பில் வரணும்' என்று சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளை அவிழ்த்துவிட்டார்.

Monday, 7 November 2011

அனுஷ்கா வெளியே அமலா பால் உள்ளே! - சிங்கம் 2!

சூர்யா, அனுஷ்கா நடித்த சிங்கம் படம் வெற்றி பெற்றதையடுத்து இயக்குனர் ஹரி அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார். இதில் அனுஷ்காவுக்கு பதில் அமலா பால் நடிப்பார் என்று கூறப்படுகிறது. வேட்டைப் படத்தில் நடித்து வரும் அமலா பால் ஒரே குஷியாகக் காணப்படுகிறார். காரணம் இயக்குனர் ஹரி சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம். அதில் அனுஷ்காவை தூக்கிவிட்டு அவருக்கு பதில் அமலா பாலை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

ஆனால் சிங்கம் படத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் இருப்பார்களா என்று தெரியவில்லை. 
ஹீரோ சொல்லத் தேவையில்லை சூர்யா தான். 

லிங்குசாமியை சந்தித்த ஹரி அமலா பாலின் வேட்டை படத்தின் புகைப்படங்களைப் பார்த்துள்ளார். உடனே என் சிங்கம் 2 பட நாயகி இவர் தான் என்று முடிவு செய்துவிட்டாராம். அமலா பாலும், அனுஷ்காவும் நெருக்கமான தோழிகள். தனது கதாபாத்திரத்தில் தோழி அமலா நடிப்பது பற்றி அனுஷ்கா என்ன நினைக்கிறாரோ?

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் எந்திரனுக்கு விருது!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 24 வது சர்வதேச திரைப்பட விழாவில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் - தி ரோபோ படத்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Winds of Asia-Middle East என்ற பிரிவில் இந்த விருதினை எந்திரன் பெற்றுள்ளது. எந்திரனுடன் தி மிர்ரர் நெவர் லைஸ், சுனாமி ஆகிய படங்களும் இந்தப் பிரிவில் விருது வென்றன. 

அதே நேரம், இந்த விழாவில் இரு தினங்கள் எந்திரன் திரையிடப்பட்டது. அந்த இரு தினங்களுமே எந்திரனுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து, தியேட்டர் ஹவுஸ் புல்லாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஜப்பானைப் பொறுத்தவரை ரஜினிதான் அங்கும் சூப்பர் ஸ்டார். அவர்கள் முத்துவின் சூப்பர் ஸ்டார் என்றே அவரை அழைக்கிறார்கள். அந்த அளவு பரிச்சயமானவர் ரஜினி. 
இந்த விழாவில் 12 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஒரு பிரிவுதான் மத்திய கிழக்கு ஆசிய சினிமாவுக்கான Winds of Asia-Middle East சிறப்பு விருது. இதில் விருது வென்ற படத்துக்கு ரூ 5 லட்சம் பரிசும் ஷீல்டும் வழங்கப்படும். எந்திரனுக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டது. இந்த விழா கடந்த அக்டோபர் 23 முதல் 30 வரை டோக்கியோ நகரில் நடந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 127 படங்கள் திரையிடப்பட்டன. யுனி ஜப்பான், ஜப்பான் நாட்டு தொழில் - வர்த்தகத் துறை மற்றும் டோக்கியோ மெட்ரோபாலிடன் அரசு இணைந்து இந்த விழாவை நடத்தின.

கமல் ஹாசன் 57வது பிறந்த நாள்! - ரசிகர்கள் ரத்ததானம், உடல் உறுப்புதானம்!


07/11/2011

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 57வது பிறந்தாளை வழக்கம் போல எளிமையாக கொண்டாடுகிறார். கமல் பிறந்தாளையொட்டி அவரது நற்பணி மன்றத்தினர் ரத்ததானம், உடல் உறுப்பு தானம் செய்தனர். நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 57வது பிறந்த நாளாகும். தனது பிறந்த நாளின்போது நற்பணிகள் செய்யுமாறு கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தியுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நற்பணிகளை செய்துவருகின்றனர் ரசிகர்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டும் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் ரத்ததானம், உடல் உறுப்புதானம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று ரத்தானம் உடல் உறுப்புதானம் செய்தனர்.

அனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள்!


ரசிகர்களால் செல்லமாக ஸ்வீட்டி என்று அழைக்கப்படும் அனுஷ்காவுக்கு இன்று பிறந்த நாள். கோலிவுட, டோலிவுட் என கிட்டத்தட்ட தென்னகத்தின் கனவுக் கன்னியாகத் திகழ்பவர் அனுஷ்கா. நயன்தாரா, அசின் போன்றவர்கள் இல்லாத சூழலில் நம்பர் ஒன் நடிகை. நடிப்பில் மட்டுமல்ல, சர்ச்சையிலும் நம்பர் ஒன் இவர்தான். திமிர் பிடித்தவர் என்ற கூடுதல் தகுதி வேறு!

தமிழில் மூன்று பெரிய படங்களில் நடிக்கிறார். அஜீத்தின் அடுத்த பட நாயகியும் அவர்தான். தெலுங்கிலும் மூன்று பெரிய படங்கள். இன்னும் அரை டஜன் வாய்ப்புகள் அவர் கையெழுத்துக்காக நிற்கின்றன. சம்பளம் ரூ 1.25 கோடி, இன்றைய தேதிக்கு. அடுத்த படம் வந்ததும் ஏறிவிடக் கூடும்!

இன்று பிறந்த நாள் காணும் அவர், இன்று இரவு தனக்கு நெருக்கமானவர்களுடன் ஒரு மெகா பார்ட்டி கொண்டாடப் போகிறார், ஹைதராபாதில் உள்ள நட்சத்திர ஓட்டலில். அந்த நெருக்கமானவர்கள் லிஸ்டில் இங்கிருந்து இருவர் இடம்பெற்றுள்ளனர், ஒருவர் இயக்குநர் விஜய், இன்னொருவர் இப்போதைய அவரது ஹீரோ விக்ரம்!

பொன்னுசாமி மீன்குழம்பு... கமல்'ஹாஸ்ய' நினைவுகள்!


இன்று கமல்ஹாசனுக்கு பிறந்த நாள். வாழ்நாள் சாதனையாளரான அவருக்கு நமது இணையதளம் சார்பில் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் கமல் பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டால் சந்தோஷமாக இருக்குமல்லவா? ச்சும்மா ஒரு ஜோக்குக்காகதான் இது...
அக்ரஹாரத்தில் வளர்ந்த திமிங்கலம் மாதிரிதான் கமல். பாரதியை போல எல்லாKamal Hassanவிதிகளையும் மீறியவரல்லவா? அவருக்கு மீன் குழம்பு என்றால் அப்படி பிடிக்குமாம். அதிலும் நகைச்சுவை நடிகர் மயில்சாமி வீட்டில் செய்யும் மீன் குழம்புக்கு அடிமை. அடிக்கடி மயில்சாமியிடம் சொல்லி மீன் குழம்பு வரவழைப்பாராம்.
அவரும் கமல் கேட்டுவிட்டார் என்பதற்காக நல்ல மீனாக தேடி தேடி வாங்கி அதை தன் இல்லத்தரசியிடம் கொடுத்து சமைக்க சொல்வாராம். மண் சட்டியில் தயாராகும் இந்த மீன், அப்படியே சுட சுட கமல் ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
பல வருடங்களாக தொடரும் இந்த வழக்கம் இடையில் ஒரு நாள் ஜோக்காக முடிந்தது. வேறொன்றுமில்லை, கமல் மீன் குழம்பு கேட்ட தினத்தில் திருமதி மயில்சாமிக்கு உடல்நிலை சரியில்லை. மனைவியை கஷ்டப்படுத்தவும் கூடாது. கமல் மனசும் நோகக்கூடாது என்று கருதிய மயில், பொன்னுசாமி ஓட்டலில் மீன் குழம்பு வாங்கி, அதை தன் வீட்டு மண் சட்டிக்கு ஷிப்ட் பண்ணி, அதே சூட்டோடு கமலிடம் கொடுத்துவிட்டார்.
முதல் கவளத்தை பிசைந்து வாயில் வைத்த கமல், 'பொன்னுசாமி மீன் குழம்பு பிரமாதம்ப்பா...' என்று கூற, மயில்சாமி முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!
கமல்னா சும்மாவா?

ஹரிப்ரியா தமிழ் கத்துக்கணும்... சேரன் அட்வைஸ்


தெலுங்கில் பூமிகா தயாரித்த படத்தை 'துள்ளி எழுந்தது காதல்' என்ற பெயரில்Thulli Ezhunthathu Kadhalதமிழிலும் வெளியிடுகிறார்கள். ஆனால் இது டப்பிங் படமல்ல, கொஞ்சம் கொஞ்சம் ரீமேக்! இப்படத்தின் இசையமைப்பாளர் போபோ சசி, இசையமைப்பாளர் தேவாவின் தம்பி முரளியின் மகன்.
து.எ.கா பாடல் வெளியீட்டு விழாவுக்கு தேவா, மற்றும் அவரது சகோதரர்களுடன் டைரக்டர் சேரனும் வந்திருந்தார். விழாவின் இன்னொரு அட்ராக்ஷன் இப்படத்தின் நாயகி ஹரிப்ரியா.
அடுத்த முறை விழாவுக்கு வரும்போது நிச்சயம் தமிழ்ல பேசுறேன் என்று அமர்ந்துவிட்டார் ஹரிப்ரியா. பின்னாலேயே பேச வந்த சேரன் விடுவாரா? இதே மாதிரிதான் முரண் படத்தின் ஆடியோ விழாவிலும் இவங்க சொல்லிட்டு போனாங்க. ஆனால் தமிழ் கற்றுக் கொள்ளவே இல்லை. பொறுப்பா தமிழ் கத்துக்கணும்னா ஒரு டீச்சரை நியமிச்சு அவங்களுக்கு சம்பளம் கொடுத்து கத்துக்கணும். வெளி மாநிலங்களில் இருந்து வர்ற பல பேர் இப்படி சொல்றாங்க. அதுக்கான முயற்சியில் இறங்கறதே இல்லை.
ஆனால் தமிழ்நாட்டு மருமகள் ஆகிட்ட பின்னால் கத்துக்கிறாங்க. அது வேற என்று கூற, வெட்கத்தில் முகம் சிவந்தார் ஹரிப்ரியா. அப்புறம் சேரன் பேசியதெல்லாம் இன்றைய முன்னணி இயக்குனர்கள் காது கொடுத்து கேட்க வேண்டிய சங்கதி.
இன்னைக்கு ஒரு படத்திற்கு ஒரு மாதம் ரீரெக்கார்டிங் செஞ்சேன்னு சொல்றதைThulli Ezhunthathu Kadhalபெருமையா நினைக்கிறாங்க. என்னோட பாரதி கண்ணம்மா படத்தில் ஆரம்பிச்சு பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு என்று ஏராளமான படங்களில் தேவா சகோதரர்களுடன் வொர்க் பண்ணியிருக்கேன். ஏழு நாளைக்கு மேல ரீரெக்கார்டிங்குக்கு எடுத்துகிட்டதே இல்லை. 

அப்புறமும் எதுக்கு சகவாசம்? -பந்தாடப்படும் பிரபுதேவா்


எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. விரைவில் திருமண தேதியை அறிவிப்போம் என்று நயன்தாரா கொடுத்த அறிக்கை, இன்னும் அறிக்கை லெவலிலேயே இருக்கிறது. அடுத்த ஸ்டெப்பை பற்றி யோசிக்கவே இல்லை மாஸ்டர்.
ஆனால் அடுத்தடுத்த அம்புகளால் மனம் நோக வைக்கிறார்களாம் இவரை. எப்படி?Prabhu Devaஇதுவரை நயன்தாராதான் பிரபுதேவாவுக்கு கடிவாளம் போட்டு வந்தார். என்னை கேட்காமல் மட்டுமல்ல, கேட்டு கூட பழைய வீட்டு பக்கம் போகக் கூடாது என்று கட்டளை போடுகிறார் அவர். ஆனால் நயன்தாராவுடன் சேர்ந்து கொண்டு பிரபுதேவாவின் அப்பாவும் வார்த்தைகளை வீச, நிலைகுலைந்து போயிருக்கிறாராம் மாஸ்டர்.
வெட்டி விட்டாச்சு. அப்புறம் எதுக்கு அந்த வீட்டு சகவாசம்? இனிமேலாவது புது வாழ்க்கையை பற்றி யோசி என்கிறாராம் மகனிடம். கண்ணுக்கு தெரியாத கம்பி வலையாக சுற்றிக் கொண்டிருக்கிறது பழைய பாசம். அவ்வளவு சீக்கிரம் அறுத்தெறிய முடியுமா என்ன?
சமையல் குறிப்பை படித்தே பசியாறுவது போலதான் சட்டத்தை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதும்!

லூர்து மேரியை பார்க்கணும்... -அஞ்சலியின் ஆசை


முதல் படம் கற்றது தமிழ். அந்த பெயரை நிலை நாட்டுவதற்காகவே தமிழ் கற்று தேறிவிட்டார் அஞ்சலி. அக்ஷர சுத்தமாக அவர் பேசும் தமிழ் கேட்டால் அதற்காகவே நாலு வெண்பாவை மெனக்கெட்டு எழுதி ஃபிரேம் போட்டுக் கொடுக்கலாம்.
தமிழில்தான் தேறியாச்சே, அப்புறம் வட்டார பாஷையில் கலக்க வேண்டியதுதானே?Thambi Vettothi Sundaramஅதிலும் விடாப்பிடியாக நின்று கன்னியாக்குமரி தமிழ் பேசியிருக்கிறாராம் அஞ்சலி. இவரது நடிப்பில் இந்த வாரம் வெளிவரப்போகும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்திற்காகதான் இப்படி ஒரு அர்ப்பணிப்பு. இவரது காரின் மீது கல்வீச்சு நடந்த பின்பும் அப்படத்தில் துணிச்சலோடு நடித்து முடித்துக் கொடுத்தது இன்னொரு அர்ப்பணிப்பு.
கன்னியாக்குமரி பகுதியில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய அந்த பாத்திரத்தை நிஜமாகவே நேசித்த லூர்து மேரி கேரக்டரில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்த லூர்து மேரி இப்போதும் உயிருடன்தான் இருக்கிறாராம். இந்த படத்தை அவர் பார்ப்பாரா என்பது இருக்கட்டும். லு£ர்துமேரியை பார்க்க அத்தனை ஆர்வமாக இருக்கிறார் அஞ்சலி.
மேலும் படிக்க....

Sunday, 6 November 2011

நீலகிரி மாவட்டத்தில் மாயமான சினிமா டைரக்டர் மர்ம சாவு!

நீலகிரி மாவட்டத்தில் மாயமான சினிமா டைரக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே உள்ள கொடலட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (38). இவர் ஒசம்முங்காரு என்ற படுகர் மொழி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல் கேசட் விற்பனை நடைபெற்று வருகிறது. வெற்றிவேல் ஊர் ஊராக சென்று பாடல் கேசட்டை விற்பனை செய்து வந்தார். 

கடந்த 4 நாட்களுக்கு முன் பாடல் கேசட் விற்பதற்காக கொலக்கம்பை வந்த அவர் திடீரென மாயமானார். இந்நிலையில் தூதுர் மட்டம் அரசு பள்ளி அருகே உள்ள வனப்பகுதியில் முட்புதருக்குள் டைரக்டர் வெற்றிவேல் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த பொது மக்கள் கொலக்கம்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

தகவல் கிடைத்ததும் குன்னூர் டி.எஸ்.பி. மாடசாமி, கொலக்கம்பை இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். டைரக்டர் மர்ம சாவு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டைரக்டர் வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி விட்டது. 

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். எனவே மனைவியின் உறவினர்கள் யாராவது வெற்றி வேலை அடித்து கொலை செய்து பிணத்தை முட்புதரில் வீசி சென்றிருக்
கலாமா? அல்லது முன் விரோதத்தில் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.