பேராண்மை, தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய படங்களில் நடித்துள்ளவர் வசுந்தரா. தற்போது போராளி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதலில் தனது பெயரை அதிசயா என்றுதான் வைத்திருந்தார் வசுந்தரா. அந்தப் பெயரில் அவர் வட்டாரம் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். பின்னர் வசுநத்ரா என மாற்றி பேராண்மை படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக வந்து போனார். தென் மேற்குப் பருவக் காற்றுதான் இவருக்கு முழு நீள ஹீரோயின் படம். தற்போது போராளி மூலம் கவனிக்கப்படக்கூடிய நாயகியாக மாறியுள்ளார். தென் மேற்குப் பருவக் காற்று படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க தேனி சுற்று வட்டாரத்தில் நடந்தது. அதில் இவர் நடித்த ஆடு திருடி கதாபாத்திரம் அப்பகுதி மக்களின் மனதைக் கவர்ந்து விட்டதாம்.இந்த நிலையில் போராளி படத்திற்காக அதே தேனிப் பக்கம் ஷூட்டிங் போயிருந்தபோது அவரை அடையாளம் கண்டு கொண்ட கிராமத்து மக்கள் அட நம்ம ஆடு திருடி என்று ஆச்சரியப்பட்டு, ஏய் ஆடு திருடி என்று குரல் கொடுத்த வசுந்தராவை அதிர வைத்தனராம். முதலில் அதிர்ந்தாலும் தனது கதாபாத்திரம் கிராம மக்களின் மனதோடு ஒன்றிப் போய் விட்டதை உணர்ந்து சந்தோஷப்பட்டாராம் வசுந்தரா. மேலும், நாம் சிறப்பாக நடித்தால், மக்களின் மனதில் சட்டென்று இடம் பிடித்து விடுவோம் என்பதையும் புரிந்து கொண்டாராம். இதனால் போராளி படத்திலும் தனது கேரக்டரில் மிகவும் கவனமாக நடித்துள்ளாராம். ஆடு திருடியாக நடித்தால் என்ன மனதைத் திருடும் வகையில் நடிப்பதுதான் முக்கியம். |
Tuesday, 8 November 2011
தேனி மக்களின் பாச அழைப்பு! - ஆடு திருடி வசுந்தரா!
Subscribe to:
Post Comments (Atom)
பின்னர் வசுநத்ரா என மாற்றி பேராண்மை படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக வந்து போனார். தென் மேற்குப் பருவக் காற்றுதான் இவருக்கு முழு நீள ஹீரோயின் படம். தற்போது போராளி மூலம் கவனிக்கப்படக்கூடிய நாயகியாக மாறியுள்ளார். தென் மேற்குப் பருவக் காற்று படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க தேனி சுற்று வட்டாரத்தில் நடந்தது. அதில் இவர் நடித்த ஆடு திருடி கதாபாத்திரம் அப்பகுதி மக்களின் மனதைக் கவர்ந்து விட்டதாம்.
http://spoofking.blogspot.com/2011/11/tucker-and-dale-vs-evil-2010.html
ReplyDelete