மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 5 November 2011

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் திருமணமா? – ரியா சென் அதிர்ச்சி


sreesanth-riya-sen
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு அவரது வீட்டார் பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ரியா சென்னுடன் அவருக்கு காதல் என்றும், கல்யாணம் என்றும் தகவல்கள் கசிய ஆரம்பித்தன.
இவர்களிருவரும் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் இணைந்து நடித்தனர். இதற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நிறைய இடங்களில் சுற்றுவதாகவும், ஐபிஎல் போட்டி இடைவேளைகளின் போது, போனில் அளவளாவிக் கொள்வதாகவும். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இத்தகவல் அதிக அளவில் விஸ்வரூபம் எடுத்தது.
இதுகுறித்து ரியா சென் கூறியதாவது;
“என்ன இது புதுக்கதை. அவர் சிறந்த கிரிக்கெட் வீரர். எனது நல்ல நண்பர். அவருக்கும் எனக்கும் திருமணம் என்பது முட்டாள்தனமான கற்பனை. யாரோ வேலையில்லாதவர்கள் செய்த வெட்டி வேலை இது. இதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை’’ என்றார்.

உலகநாயகன் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர்.


kamal-hassan-birthdayஉலகநாயகனின் பிறந்தநாள் நவம்பர் 7 -ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இவரது ரசிகர்கள், கமலின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். கமலின் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, வருகிற 6-ந்தேதி காலை 8 மணிக்கு தென் சென்னை மாவட்ட கமல் நற்பணி இயக்கம் சார்பில் சாந்தோமிலுள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் 100 பேருக்கு வேட்டி-சேலை மற்றும் உணவு வழங்கப்பட உள்ளது.
அதுத்து, 9 மணிக்கு சேத்துப்பட்டில் ரசிகர்கள் 100 பேர் ரத்ததானம் செய்ய உள்ளனர். ராயபுரம் பகுதியிலுள்ள பி.எஸ்.என்.ஆர். மருத்துவமனைக்கு, 25 கல்லூரி மாணவ-மாணவிகளும், 100 ரசிகர்களும் ரத்ததானம் செய்ய உள்ளனர்.
கூடுதலாக 7 ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்து, அதன் பத்திரங்களை வழங்குகிறார்கள். அதனை தொடர்ந்து, பெரம்பூரிலுள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு மளிகை பொருட்கள், சீருடைகள் மற்றும் உணவு வழங்குகின்றனர். பின்னர் ஆழ்வார்பேட்டையில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்க உள்ளார்கள்.
கூடுதலாக, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கமல் மன்றம் சார்பில், 7-ந்தேதியன்று, 50 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளும் , 50 பெண்களுக்கு புடவையும் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், பாரிமுனை ராஜா அண்ணாமலைபுரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தையல் எந்திரம் 58 பேருக்கு வேட்டி- சேலைகளும் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில் மாநில பொறுப்பாளர் ஆர். தங்கவேலு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளார்கள்.
உடல் உறுப்புகள் கூட தானம் செய்யும் அளவிற்கு பரந்த மனம் கொண்ட கமலின் ரசிகர்களை பாராட்டியே தீர வேண்டும்.

நடிகை மனோரமாவுக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது


Manorama
நடிகை மனோரமா கடந்த மாதம் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள விருந்தினர் விடுதியிலுள்ள குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த அடி ஏற்ப்பட்டது.

இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாத காரணத்தால் அவரது மூளையில் ரத்தம் உறைந்தது. இதனையடுத்து அவரை
 தேனாம்பேட்டையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இதனை அடுத்து அவருக்கு நேற்று (1-11-11) மூளையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு அந்த ரத்த உறைவு நீக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை காலை 11 .15 மணியளவில் தொடங்கி 12 .30 மணி வரை நடந்தது.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததிலிருந்து அவரது உடல்நலம் நன்றாக தேறிவருகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்பக் கூடும் என தெரிகிறது. முன்னதாக நடிகர்கள் கமல்ஹாசன், செந்தில், மற்றும் அனுஷ்கா உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று அவரின் நலம் விசாரித்தனர்.
                                                                    www.filmics.com

வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ளார்

venkat-surya
"7 ஆம் அறிவு" வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் மிகுந்த உறசாகத்தில் உள்ளார் சூர்யா.
இப்போது "மாற்றான்", "சிங்கம் 2" போன்ற படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த நிலையில் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவுப்பும் வெளியாகியுள்ளது.

சூர்யா அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை "7 ஆம் அறிவு" படத்தின் கதையிலிருந்து முழுக்க-முழுக்க மாறுப்பட்டிருக்கும் என தெரிகிறது. இப்படத்தின் ஹீரோயின், வில்லன் உள்ளிட்ட மற்ற கலைஞர்களின் தகவல்கள், இனி வரும் நாட்களில் வெளியாகும். 
                                                                              www.filmics.com

அப்புறமும் எதுக்கு சகவாசம்? -பந்தாடப்படும் பிரபுதேவா்


Prabhu Devaஎங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. விரைவில் திருமண தேதியை அறிவிப்போம் என்று நயன்தாரா கொடுத்த அறிக்கை, இன்னும் அறிக்கை லெவலிலேயே இருக்கிறது. அடுத்த ஸ்டெப்பை பற்றி யோசிக்கவே இல்லை மாஸ்டர்.
ஆனால் அடுத்தடுத்த அம்புகளால் மனம் நோக வைக்கிறார்களாம் இவரை. எப்படி?இதுவரை நயன்தாராதான் பிரபுதேவாவுக்கு கடிவாளம் போட்டு வந்தார். என்னை கேட்காமல் மட்டுமல்ல, கேட்டு கூட பழைய வீட்டு பக்கம் போகக் கூடாது என்று கட்டளை போடுகிறார் அவர். ஆனால் நயன்தாராவுடன் சேர்ந்து கொண்டு பிரபுதேவாவின் அப்பாவும் வார்த்தைகளை வீச, நிலைகுலைந்து போயிருக்கிறாராம் மாஸ்டர்.
வெட்டி விட்டாச்சு. அப்புறம் எதுக்கு அந்த வீட்டு சகவாசம்? இனிமேலாவது புது வாழ்க்கையை பற்றி யோசி என்கிறாராம் மகனிடம். கண்ணுக்கு தெரியாத கம்பி வலையாக சுற்றிக் கொண்டிருக்கிறது பழைய பாசம். அவ்வளவு சீக்கிரம் அறுத்தெறிய முடியுமா என்ன?
சமையல் குறிப்பை படித்தே பசியாறுவது போலதான் சட்டத்தை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதும்!

இது சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் மகிழ்ச்சி கூத்தாடும் இயக்குனர்கள்


ஒன்றல்ல, இரண்டல்ல, அரை டஜன் சூப்பர் ஸ்டார்களை உள்ளடக்கிய ஏரியாNagarjunaடோலிவுட். அப்படி ஒரு ஸ்டார்களில் ஒருவர்தான் நாகார்ஜுனா. உதவி இயக்குனர்களிடம் அவர் காட்டும் பரிவுக்கும் அன்புக்கும் தலை வணங்கி தாளம் போடுகிறது அதே டோலிவுட். அது எப்படி? அதை சொல்லும் முன் ஒரு விஷயத்தை கவனிக்க.... இது தமிழ்நாட்டில் இருந்து அவரிடம் கதை சொல்லப் போனவர்களின் அனுபவம்.
முதலில் கதை சொல்ல செல்பவர் தன்னை பற்றிய பயோ டேட்டாவை அவரது அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும். அது திருப்தியாக இருக்கும் பட்சத்தில், ஒரு வாரத்திற்கு முன்பாக அவரது மேனேஜர் தொடர்பு கொள்வார் இயக்குனரை. சார் உங்களிடம் கதை கேட்க முடிவு செய்திருக்கார். நீங்கள் இந்த தேதியில் புறப்பட்டு வர விமான டிக்கெட் அனுப்பி வைக்கிறோம். விமான நிலையத்தில் உங்களுக்காக கார் காத்திருக்கும் என்று சொல்லி விடுவார்களாம்.
சொன்ன மாதிரியே விமான டிக்கெட் கூரியரில் வீடு தேடி வந்துவிடும். ஐதராபாத் விமான நிலையத்தில் காருடன் காத்திருக்கும் நபர் உங்களை அழைத்துச் செல்வார். எங்கு தெரியுமா? நாகார்ஜுனாவின் ஏரியாவிலிருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு. அங்கு இயக்குனருக்கு ரூம் போடப்பட்டிருக்கும். என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒரு நாள் முழுக்க ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் மறுபடியும் கார் வரும்.
பத்தே நிமிடம்தான் கதை கேட்பார் நாகார்ஜுனா. அது பிடித்திருந்தால், இன்னும் சிறிது நேரம் அந்த கதை கேட்கும் படலம் நீடிக்கும். பிறகு அந்த இயக்குனர் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்றால், அந்த இடத்திலேயே 'ஸாரி பிரதர். வேற யாரையாவது ட்ரை பண்ணுங்க' என்று கூறிவிடுவார். அறையிலிருந்து வெளியே வரும் உதவி இயக்குனருக்கு ஒரு கவர் தரப்படும். அதில் ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கும். மீண்டும் காரில் அவரை ஓட்டலுக்கு அழைத்துச் செல்வார்கள் நாகார்ஜுனாவின் உதவியாளர்கள். இயக்குனர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் விமானத்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள்.
ஒருவேளை கதை பிடித்திருந்து அந்த படத்தில் நடிப்பதாக முடிவு செய்துவிட்டால், வெளியே வரும் இயக்குனர் கையில் இரண்டு லட்சம் கொடுக்கப்படும். பின்பு அதே ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்படுவார் அவர். அவருக்கான சம்பளத்தை நிர்ணயித்து மீதி தொகையை செக்காக கொடுப்பார்கள். அதுமட்டுமல்ல, ஒரு மாதம் வெளிநாட்டு ட்ரிப்புக்கும் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் அவரது உதவியாளர்கள். அவ்வளவு செலவும் நாகார்ஜுனாவுடையது. இந்த ட்ரிப் கதையை இன்னும் டெவலப் செய்யதான்.

வேலாயுதம் ஷோ... கேன்சல் செய்தார் ரஜினி?


நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்பவர்களுக்கு மத்தியில் நிம்மதியே உன்Velayudhamவிலை என்ன என்றுதான் கேட்க முடியும் போலிருக்கிறது. சராசரி மனிதர்களை கூட விட்டுவைக்காத இந்த பிரச்சனைகள் சமுதாயத்தில் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போடும்?
பின்வரும் விஷயத்தை கேட்டால் புரிந்து கொள்வீர்கள். 7 ஆம் அறிவு பார்த்த சில தினங்களில் வேலாயுதம் படத்தையும் பார்க்க பிரியப்பட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. இத்தனைக்கும் 7 ஆம் அறிவு பார்க்க வரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தவர் சூர்யாவின் மனைவி ஜோதிகாதான். ஆனால் வேலாயுதத்தை ரஜினியே விரும்பி பார்க்க ஆசைப்பட்டாராம்.

பேச்சியக்கா ஊர்வசி


பேசாமலேயே கூட பட்டைய கிளப்ப முடியும் ஊர்வசியால். அதிலும் வண்டி வண்டியாக பேசும் பேச்சியக்காவாக நடித்தால்? தென்னக மொழிகளில் சுமார் ஐநு£று படங்களை தாண்டி நடித்திருக்கும் ஊர்வசி, தருண்கோபிக்கு மாமியாராக நடிக்கிறார். அட இதிலென்ன ஆச்சர்யம் என்பவர்கள் இந்த படத்தின் கதைக்கருவை கேட்டால் ஆச்சர்யம் அடையாமல் இருக்க முடியாது.
அம்மா பாசத்தில் ஆரம்பித்து ஆட்டுக்குட்டி பாசம் வரைக்கும் படம் எடுத்துOorvasiரசிகர்களை ரவுண்டு கட்டி அடித்திருக்கிறது தமிழ்சினிமா. மாமியாருக்கும் மருமகனுக்கும் இருக்கிற பாசத்தையும் அன்பையும் இதற்கு முன் வந்த படங்களில் சொல்லியிருக்கிறார்களா என்று தெரியாது. ஆனால் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் பேச்சியக்கா மருமகன் படம் வெளிவந்தால், எல்லா மருமகன்களும் மாமியாரை தாயாக நினைக்கக் கூடும். அந்தளவுக்கு கதை வசனத்தில் சென்ட்டிமென்ட்டை ஓட விட்டிருக்கிறார்களாம். படத்தின் ஹீரோவான தருண்கோபி திமிரு, காளை ஆகிய படங்களை இயக்கியவர். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஹீரோவாக நடித்தவர். இந்த படத்தின் கதை வசனத்தை இவரேதான் எழுதியிருக்கிறார்.

Friday, 4 November 2011

மழைக்கு 'ஒதுங்கிய' ஒஸ்தி!

Simbu and Mallika Sherawatசிம்பு நடித்துள்ள ஒஸ்தி படம் தீபாவளிக்கு வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் வேலைகள் முடியாததாலும், பெரிய படங்களுடன் மோத வேண்டாமே என்பதாலும், நவம்பர் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிப் போட்டிருந்தனர்.

ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், எங்கும் மழை கொட்டுகிறது.

தீபாவளிப் படங்கள் இப்போதே கூட்டமின்றி காற்று வாங்க ஆரம்பித்துவிட்டதாக விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த நேரத்தில் ஒஸ்தியை வெளியிடுவது, ஒஸ்தியான யோசனை இல்லை என்று தயாரிப்பாளர்களும் இயக்குநரும் நினைத்ததால், படத்தை மேலும் சில தினங்களுக்கு தள்ளிப் போட்டுள்ளனர்.

வரும் நவம்பர் 25ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்!
                                     tamil.oneindia.in

நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது ரூ 20 லட்சம் மோசடி புகார்

Jayaprakashரூ 20 லட்சம் மோசடி செய்ததாக பிரபல நடிகர் ஜெயப்பிரகாஷ் மீது அந்தோணிதாஸ் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

பசங்க, நான் மகான் அல்ல, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஜெயப்பிரகாஷ். இன்றைய தேதிக்கு நம்பர் ஒன் குணச்சித்திர நடிகர் இவர்தான்.

இவர் ஜி.ஜெ. பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அடையாறு இந்திரா நகர் சர்தார் பட்டேல் சாலையில் உள்ளது.

இந்த பங்கை லீசுக்கு விடுவதாக கூறி ஜெயபிரகாஷ் ரூ.20 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அந்தோணிதாஸ் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

அதில், "நடிகர் ஜெயபிரகாஷ் என்னை அணுகி தனது பெட்ரோல் பங்கை சரியாக நடத்த முடியவில்லை என்று கூறி, அதனை லீசுக்கு தருவதாக கூறினார். இதற்காக அவர் கேட்ட ரூ.20 லட்சத்தை நான் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்ன பெட்ரோல் பங்கை என்னிடம் ஒப்படைக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

இது பற்றி நான் கேட்டபோது ரூ.5 லட்சத்துக்கு செக் கொடுத்தார். மீதிப் பணத்தை பின்னர் தருவதாக கூறினார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்து விட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, பணத்தை திருப்பி தரமுடியாது என்று கூறினார்.

மேலும் அரசியல் மற்றும் போலீசில் எனக்கு மேல்மட்ட தொடர்பு உள்ளது. உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இதைமீறி என்னிடத்தில் பணத்தை கேட்டால் மிரட்டல் விடுக்கிறார், கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டுகிறார். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனு மீது நுங்கம்பாக்கம் போலீசார் மோசடி, மிரட்டல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் ஜெயபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
                                                                 tamil.oneindia.in

ரஞ்சிதா டிப்ஸ் கொடுத்தாரா? பிரச்சனையை கிளப்பும் நடிகை


வீடியோ புகழ் நித்தியானந்தாவின் சாயலிலேயே ஒரு நடிகரை பிடித்து சத்யானந்தாSathyanandhaஎன்ற படத்தை பெங்களூரில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் முன்பே எழுதியிருந்தோம். இப்படத்தின் நாயகியான அனுகி என்ற இளம்பெண் படம் பற்றி பேசுவதற்காக வாயை திறந்திருக்கிறார். அத்தனை வார்த்தைகளும் அணுகுண்டு என்பதுதான் அதிர்ச்சி.

இந்த படத்தில் முதலில் ரஞ்சிதாதான் நடிக்கிறதா இருந்திச்சு. அப்புறம் என்ன காரணத்தாலோ நடிக்கல. அவர் எனக்கு பெஸ்ட் பிரண்ட். இந்த படத்தில் நான் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் அவங்க எனக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொன்னாங்க. எப்படி நடிக்கணும். பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கணும் என்றெல்லாம் அவங்கதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க என்று கூறியிருக்கிறார்.
ஒரு புறம் இந்த படம் வெளியில் வரவே கூடாது. தடை செய்ய வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார் நித்யானந்தா. ஆனால், இன்னொரு பக்கம் ரஞ்சிதாதான் எனக்கு நடிப்பே சொல்லிக் கொடுத்தார் என்கிறார் அப்படத்தின் நாயகி அனுகி.
எல்லாமே கோக்கு மாக்கா இருக்கே?

படமாகும் மெரீனா கிளம்பப் போகும் பூகம்பம்


மெரீனா படத்தை முடித்துவிட்டு போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ். இப்படத்தின் தலைப்பை பார்த்தாலே தெரியும், பீச்சும், பீச்சோரத்தில் நடக்கும் பித்தலாட்டங்களும்தான் கதையாக இருக்கும் என்று.
இப்படத்தில் பாண்டிராஜ் விசேஷமாக கருதுவது எதுவாகவும் இருக்கட்டும். திரையுலகத்தில் மற்றவர்களின் பார்வையே வேறு. மிக சிறிய ஸ்டில் கேமிரா ஒன்றை வைத்துதான் இந்தMarinaபடத்தை எடுத்திருக்கிறாராம் அவர். இதே மாதிரி செட்டப்போடுதான் வழக்கு எண் 19 என்ற படத்தையும் எடுத்து வருகிறார் பாலாஜி சக்திவேல்.
பெரிய கேமிரா முன் நின்றால்தான் நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வரும் நடிகர்களுக்கு. தம்மாத்துண்டு கேமிராவை வைத்துக் கொண்டு படம் பிடித்தால் என்னாகும்? பல நடிகர்கள் முதலில் இந்த கேமிராவுக்கு முன் நின்று நடிக்க பழகவே நாட்களை எடுத்துக் கொண்டார்களாம். நல்லவேளையாக இருவரும் இவ்வித இடைஞ்சல்களை தாண்டி படத்தையும் முடித்துவிட்டார்கள்.

கொடுத்தவரே பறிச்சிகிட்டாரு... பெரிய ஹீரோவை பற்றி புலம்பல்


சுண்டு விரலில் சுளுக்கு விழுந்தா, கட்டை விரலுக்கும் கஷ்டம்தானே? அதைதான் நிரூபிக்கிறது இந்த சம்பவம். கோடம்பாக்கத்தில் அவர் பெயரை சொல்லவே அஞ்சுகிறார்கள். சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்களே என்ற பீடிகை வேறு. ஆனால் நிஜம் சுடுகிற சூட்டில் நிம்மதியிழந்து தவிக்கிற பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் கஷ்டத்தை ஆங்காங்க சொல்லி அழ அது விரவி பரவிவிட்டது கோடம்பாக்கம் முழுக்க.
விரிவாகதான் சொல்லிவிடுவோமே.
மிகப்பெரிய நடிகர் அவர். தன்னை சுற்றி இருந்த சுமார் பதினைந்து தொழிலாளர்களுக்கு சென்னைக்கு மிக அருகில் இருக்கும் பாலவாக்கத்தில் ஆளுக்கு அரை கிரவுண்ட் நிலம் கொடுத்தார். பல வருடங்களுக்கு முன்பு நல்ல மனசோடு அவர் செய்த காரியம் இது. அதுவும் இலவசமாக.

போராளி இலங்கையில் ரிலீசாகாது -சசிக்குமார் அதிரடி


சட்டென்று உணர்ச்சிவசப்படுவதுதான் கலைஞர்களின் இயல்பு. அதுவும் இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பற்றி நினைத்தால் மேலும் உணர்ச்சி பிழம்பாகிவிடுவதும் அவர்கள்தான். லேட்டஸ்ட் கொந்தளிப்பு சசிகுமாரிடமிருந்து.
போராளி படத்தில் ஹீரோவாக நடிக்கும் அவர், இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட.Poraliஇப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை இலங்கைக்கு தரவில்லையாம் அவர். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சசி, துக்க வீட்டில் சினிமா பார்ப்பது போலதான் நாம் படத்தை இலங்கையில் வெளியிடுவதும். தமிழர்களை பற்றி எது பேசினாலும் அந்த படத்தை வெளியிட தடை விதிப்பது இலங்கை அரசின் வழக்கமாக இருக்கிறது. அவர்கள் என்ன நமக்கு தடை விதிப்பது? நாம் அவர்களுக்கு தடை விதிப்போம் என்றுதான் போராளி படத்தின் எப்எம்எஸ் உரிமையை தரவில்லை என்று கூறியிருக்கிறார் சசி.

நட்பு வேறு, தொழில் வேறு அஜீத்தின் அல்டிமேட் முடிவு

டைரக்டர் விஷ்ணுவர்த்தனும் அஜீத்தும் நல்ல நண்பர்கள். அஜீத்தின் நெளிவு சுளிவுAjithஅறிந்து படப்பிடிப்பை நடத்துகிற இயக்குனர் என்பதால், பெரும்பாலும் அவரை பக்கத்தில் வைத்துக் கொள்ள நினைப்பார் இவரும். இந்த நெருக்கத்தின் காரணமாகதான் பில்லா 2 படத்தையும் அவரையே இயக்க சொன்னார் அஜீத். ஆனால் முன்பே கமிட் செய்திருந்த பவன் கல்யாண் படத்தை இயக்குவதற்காக ஆந்திராவுக்கு செல்லவிருப்பதன் அவசியத்தை அதே நெளிவு சுளிவுகளோடு விளக்கினாராம் விஷ்ணு. அப்புறம் அந்த படத்தை இயக்கும் பொறுப்பு சக்ரி வசம் போனது.
மேலும் படிக்க....

Thursday, 3 November 2011

நீதானே என் பொன் வசந்தம் ஏ.ஆர்.ரஹ்மான் எங்கே?


ஜீவா நடிக்க, கவுதம் மேனன் இயக்கிவரும் படம் நீதானே என் பொன் வசந்தம்.nee thane en ponvasanthamஇப்படத்தின் துவக்கநாள் விளம்பரத்தில் ஆரம்பித்து, ஒவ்வொரு அசைவிலும் இப்படத்தின் தரத்தை நிரூபித்து வருகிறார் கவுதம். குடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மழை நீரே கூட, நனைகிற ஃபீலிங்கை கொடுக்குமல்லவா? அது போலதான் இருக்கின்றன இந்த செய்தி தாள் விளம்பரங்கள்.
ஆனால் அதிலும் ஒரு கண் உறுத்தல். ஆரம்பத்தில் இந்த விளம்பரங்களில் எல்லாம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் இடம் பெற்றிருக்கும். இப்போது அதை காணவில்லை.

7 ஆம் அறிவு ரீமேக் 'கான்'களின் ஆர்வம்


க்யூட் ஹீரோ சல்மான் கானுக்கும் தமிழ்நாட்டுக்கும் அப்படி ஒரு தொடர்புSalman Khanஏற்பட்டுள்ளது சமீபகாலமாக. தமிழில் வெளிவரும் படங்களை கூர்ந்து கவனித்து வருகிறார் சல்லுபாய். காரணம், காப்பியடிக்கலாமே என்ற ஆசைதான்.
ஸ்டண்ட் இயக்குனர் பெப்ஸி விஜயனின் மகன் ஹீரோவாக நடித்த மார்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னைக்கே வந்திருந்தார் சல்லு. அதன்பின்பு சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் ஒஸ்தி படம் கூட சல்மான்கானின் தபாங் படத்தின் ரீமேக்தான். இதற்காக சில டிப்ஸ்களை கேட்க சிம்பு பிரியப்பட்டதும், சல்லு அவரை சந்திக்க மறுத்ததும் தனி டிராக்.
சரி மொன்னையை விட்டுவிட்டு நேரடியாக விஷயத்துக்கு வருவோம். லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தின் ரீமேக்கில் சல்மான்கான்தான் நடிக்கப் போகிறார். அட இதுவும் பழசுதானே என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு இந்த புதிய செய்தி.

வதந்தியோர்கள் கவனத்திற்கு... உதயநிதியின் காட்டமான பதில்


இணையதளங்களில் 7 ஆம் அறிவையும் வேலாயுதத்தையும் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்களும் எழுத்தாளர்களும். இதில் Udhayanidhi Stalin7 ஆம் அறிவு பற்றி அவர்கள் எழுப்பி வரும் வினாக்களுக்கு சில வரிகளில் விடையளித்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
இப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்திருக்கிறார்கள். அதில் போதிதர்மரை கடப்பாவில் பிறந்தவராகவோ, ராயலசீமாவில் வளர்ந்தவராகவோ காட்டுவார்களோ என்று அவர்கள் சந்தேகத்தை எழுப்பியிருந்தார்கள். இதற்கெல்லாம்தான் சுருக்கென்று பதில் சொல்லி, லொட லொடக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் உதயநிதி.

சிம்புவுக்கு நோ சூர்யாவுக்கு யெஸ்... - அமலாவின் தாராளம்


கொஞ்சம் ரூட் மாறியிருந்தால் 'மாமனாரின் இன்ப வெறி' பட ரேஞ்ச்Amala Paulநடிகையாகியிருப்பார் அமலாபால். அதிர்ஷ்டம் விக்ரம் ரூபத்தில் வந்து அவரது வாழ்க்கையே திருப்பி விட்டு விட்டது. தனது தெய்வ திருமகள் படத்தில் அமலாவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து அவரது தரத்தை உயர்த்திவிட்டார் சீயான். அதே விக்ரம் கேட்டால் கூட சட்டு புட்டென்று கால்ஷீட்டை எடுத்து நீட்டிவிட முடியாதளவுக்கு அமலா பிஸியோ பிஸி.
சிம்பு நடிக்கவிருக்கும் வடசென்னை படத்தில் நடிக்க அமலாவைதான் கேட்டிருக்கிறாராம் வெற்றி மாறன். இதுவரைக்கும் ஓ.கே சொல்லவில்லை இவர். சந்தோஷமான சம்பளம், தானாக கிடைக்கும் நெகட்டிவ் பப்ளிசிடி இவ்வளவையும் மீறி கால்ஷீட் கொடுக்க விடாமல் தடுப்பது அமலாவின் அண்டை மாநில படங்கள்தான். அவைதான் குறுக்கே நிற்கிறதாம் வடசென்னைக்கு. இதற்கிடையில் சிம்புவுடன் கார்த்திகா நடிப்பதாக இன்னொரு வதந்தியும் றெக்கை கட்டி பறக்க, மெல்லவும் முடியாமல் முழுங்கவும் இயலாமல் அவஸ்தைப்படுகிறார் 

Actress Tapsee Photo Gallery

Osthi Movie Stills

Mayakkam Enna - Movie Gallery

  
 

TO SEE MORE

Wednesday, 2 November 2011

Top 10 songs


1முன் அந்தி சாரல் நீ
(ஏழாம் அறிவு)
2மொளச்சு மூணு இலை
(வேலாயுதம்)
3சம்மக்கு செல்லா...
(ரா ஒன்
4செங்கல் சூலக்காரா...
(வாகை சூடவா)
5கோவிந்தா சென்னையில...
(எங்கேயும் எப்போதும்)
6இச்சு இச்சு கொடு...
(வெடி)
7மனிதம் என்பது புனிதமடா...
(உயிரின் எடை 21 கிராம்)
8அனல்வெயில் அடைமழை...
(முரண்)
9அடிக்கிது அடிக்கிது...
(வேலூர் மாவட்டம்)
10காதல் வந்தால்...
(வர்ணம்)

Top 10 movies


1வேலாயுதம்
2ஏழாம் அறிவு
3ரா ஒன்
4எங்கேயும் எப்போதும்
5வாகை சூடவா
6உயிரின் எடை 21 கிராம்
7முரண்
8வேலூர் மாவட்டம்
9வர்ணம்
10சதுரங்கம்

வேலாயுதம் தியேட்டர்களில் ரகளை - கன்னடர்கள் வெறியாட்டம்

முப்பத்தைந்து கோடியில் எடுத்து தருவதாக கூறிவிட்டு 42 கோடிக்கு செலவு வைத்து Velayuthamவிட்டார்களே என்று கவலைப்பட்டு கொண்டிருந்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரொம்பவே தெம்பாகிவிட்டார். வேலாயுதம் படத்தின் வசூல் இதுவரைக்குமே ஐம்பது கோடியை தாண்டிவிட்டதாம். ஒருபுறம் இந்த சந்தோஷத்தை படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் அத்தனை பேரும் அனுபவித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் புஸ் ஆகிக்கிடக்கிறது அத்தனை பேருடைய மனசும்.
கர்நாடக மாநிலத்தில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்களுக்கு அங்கு எப்போதுமே ஜனங்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கை. அதே குதுகலத்தோடுதான் வேலாயுதத்தையும் திரையிட்டிருந்தார்கள். திடீரென்று கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பை சேர்ந்த வெறியர்கள் வேலாயுதம் ஓடும் திரையரங்கத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். பேனர்களை கிழித்து எறிந்தனர். படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களையும் விரட்டி அடித்தனர்.
இன்னும் ஒரு மாதத்திற்கு எந்த தமிழ் படத்திற்கும் இங்கு இடம் இல்லை என்கிறார்கள் அவர்கள். (வேறொன்றுமில்லை, இந்த ஒரு மாதமும் கன்னடர் தினமாம்) தமிழ் படங்களை இந்த ஒரு மாதத்திற்கு நிறுத்த சொல்லி கன்னட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிலிம் சேம்பருக்கும் கடிதம் எழுதியிருக்கிறது இந்த அமைப்பு.
ஆயிரம் விஜய்கள் பறந்து பறந்து அடிச்சாலும், இதுபோன்ற வில்லன்களின் கையில்தான் சினிமா இருக்கும் போலிருக்கிறது.

ஜீவா படம் மியூசிக்கல் ஹிட் -டைரக்டர் கருத்து


அலறி அடித்துக் கொண்டு மறுத்திருக்கிறார் ரிச்சா. வலது காலை எடுத்து வைத்துRichaவாசலை கூட தாண்டல. அதுக்குள்ளே இம்மாம் பெரிய கான்ட்ரவர்சியா என்று கவலைப்படுகிற அளவுக்கு ஆகிவிட்டது அவரது நிலைமை. சிம்பு அட்வைஸ்படி ஜீவாவுக்கு கால்ஷீட் இல்லை என்று கூறினாரல்லவா? அந்த விவகாரம்தான் இதற்கெல்லாம் காரணம். ஜீவாவுடன் ஜோடி சேரக்கேட்டு என்னை யாரும் அணுகல. சிம்புவும் அப்படி சொல்லலே என்று மறுத்திருக்கிறார் ரிச்சா கங்கோபாத்யா.
இதற்கிடையில் ஜீவா நடிக்கும் இந்த புதிய படத்தை பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் இப்போது. சீசெஷல்ஸ் தீவிலிருக்கும் டாக்டர் ராமதாசுடன், ஜி.கே.எம் தமிழ்குமரன் இணைந்துதான் இந்த படத்தை தயாரிக்கிறாராம்.
வாமனன் படத்தை இயக்கிய அகமது இப்படத்தை இயக்கவிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் இப்படம் அழகான மியூசிக்கல் ஹிட்டாக இருக்கும் என்று இப்பவே உறுதியளிக்கிறார் அகமது.

ஆச்சியை சந்தித்த அனுஷ்கா


கண்ணை மயக்கும் வெண்ணைக்கட்டி அனுஷ்காவுக்கு மார்க்கெட் மட்டும்Anushkaசிமெண்ட்டையும் ஜல்லியையும் கலந்து செய்தது மாதிரி அத்தனை கெட்டி. சரிவேனா என்கிறது. இத்தனைக்கும் அவர் கடைசியாக நடித்து வெளிவந்த தெய்வ திருமகள் மண்ணை கவ்விய பிளாப். இருந்தாலும் அனுஷ்காவின் அழகுக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் பித்து பிடித்து திரிகிறார்கள் என்பதை தெரிந்தே வைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.
கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் சகுனி படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரணிதா நடித்துக் கொண்டிருக்கிறார். அது போதாது என்று ஒரு காட்சியில் அனுஷ்கா நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் சகுனி இயக்குனர். இதை ஏற்றுக் கொண்ட அனுஷ், விரைவில் அதற்கான கால்ஷீட்டை ஒதுக்கவிருக்கிறார்.

Vijay apes Rajinikanth, Kamal HassanNanbanWe read a month ago about Vijay's never-seen-before getups in Nanban. The latest about his costume is that the actor, who is on cloud nine with the success of his recently released Velayudham, has donned some of the popular attires famous made by superstars Rajinikanth and Kamal Hassan in the upcoming movie.

According to reports, Vijay has aped Rajinikanth and Kamal Hassan in a song sequence for Nanban. TheGilli star will be seen in special getups of Endhiran – The Robot and Kamal's Indian. It is noted that both the movies were directed by Shankar. It is said that it is actor's tribute to the legendary stars.

Meanwhile, Shankar has announced that the audio of Nanban will hit the stands in December. He has also confirmed that the forthcoming Tamil movie will be releasing during Pongal.

Nanban is a remake of Bollywood blockbuster 3 Idiots, which starred Aamir Khan, Madhavan, Sharman Joshi and Kareena Kapoor in the leads. In the Tamil version, Vijay, Srikanth, Jeeva and Ileana D'Cruz are enacting the respective roles.
                                                       entertainment.oneindia.in

Vijay turns spy for Gautham Menon's Yohan

Yohan: Athiyayam Ondru Vijay was seen in the role of milkman-turned-vigilante in recently released Velayudham. The actor, who has received a good response from the critics as well as audience, is gearing up to don yet another new avatar. The Gilli star, who signed Gautham Menon'sYohan: Adhyayam Ondru a few months ago, will be enacting the role of James Bond in the forthcoming Tamil movie.

According to sources, Yohan is inspired by James Bond films. Vijay will be performing the role of a spy, says a source. It is reported that the movie is a remake of French movie Largo Winch and the first look of the film gave a clear indication about the upcoming movie being a copy of the 2008 film. It is also said that the Tamil movie will be shot in New York and Chennai.

Gautham Menon directorial Yohan has AR Rahman's music and Manoj Paramahamsa's cinematography. The forthcoming Tamil movie will hit the floors in mid-2012.
                                      entertainment.oneindia.in

Ra.One slows down at Box Office due to Velayudham, 7aam Arivu


The Future of Collaboration is Here Book a Personal Demo Now!
Velayudham, 7aam Arivu slow down Ra.One collection

The dubbed version of Shahrukh Khan's biggest-ever film, Ra.One got a decent opening at the Tamil Box Office. The collections of the multilingual film was slowed down due to other Kollywood releases like Vijay starrer Velayudham and Surya's 7aam Arivu.

The South Indian versions comprising Tamil and Telugu were released on October 26 with 250 prints. On its opening day, Ra.One approximately collected Rs 2 to 2.5 crore and fetched four crore in next 2 days totalling its net to Rs 6 crore in South India. The movie was largely affected by Velayudham and 7aam Arivu, as they occupied 400 screens in Tamil Nadu.

Trade analysts claim that the collections of the dubbed versions of Ra.One seem to be good, as it faced tough competitions from Vijay and Surya starrer films. They further added that Rajinikanth's cameo in the movie has become a major attraction for the South audience to watch the film.However, Vijay's Velayudham is said to be topping the Tamil Box Office chart even after getting released in less number of theatres comparatively with 7aam Arivu.
                                  entertainment.oneindia.in

Vishal's Samaran beginsVishal's Samaran beginsAfter the success of his recent action-thriller Vedi, Vishal is teaming up with director Thiru. The duo worked together in Theeratha Vilaiyattu Pillai. The new film, titled Samaran(meaning warrior), will have Trisha as the leading lady. Now the latest buzz is that theSamaran team will begin their first shooting schedule in Ooty today. "Vishal is off to Ooty for his first schedule of Samaran directed by Thiru produced by Ramesh," Sriya Reddy (Vishal's sister-in-law) tweeted.
Reportedly Vishal will play the role of a forest trekker who goes to China for completing a mission. The film is said to be a mass action entertainer and Vishal will sport a new look. Yuvanshankar Raja is likely to be the mu
sic director and Bharani Ramesh will produce it. It is said that Trisha was highly impressed with the script and accepted the offer immediately.
                                     tamil.galatta.com

Studio Green to remake Mankatha in Hindi


Studio Green to remake Mankatha in Hindi

Mankatha
 had Ajith, Trisha, Arjun, Anjali, Andreah, Premji, Vaibhav, Mahanth, Ashwin, Lakshmi Rai and Jayaprakash in prominent roles. The film was produced by Cloud Nine Movies and released under the Sun Pictures banner. Studio Green, owned by Gnanavel Raja (Siruthai, Singam andNaan Mahaan Alla fame), has bagged the Hindi remake rights of Ajith's smash hitMankatha, directed by Venkat Prabhu. However the cast and crew are yet to be finalized and an official announcement is expected to be made on November 15.
          tamil.galatta.com

தமிழின் முதல் சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த ஒரு பரிதாப நினைவஞ்சலி!

Thiagaraja Bagavadharதமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை மிக்க தியாகராஜ பாகவதர் (உண்மையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அன்றைக்கு அவர் பெயருக்கு முன் யாரும் போடவில்லை. பின்னாளில் சினிமா ஆய்வாளர்கள் அப்படி அழைக்கின்றனர்!) நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வெறும் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மக்களை தனது இனிய குரல் மற்றும் நடிப்பால் மயக்கியவர் தியாகராஜ பாகவதர். ஏழிசை மன்னர் என்றும் பாகவதர் என்றும் அன்றைய நாட்களில் அவரை மக்கள் அழைத்து மகிழ்ந்தனர்.

திருச்சி பாலக்கரைதான் அவரது சொந்த ஊர். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், நல்ல இசைஞானம், கணீர் குரல் வளம் அவருக்கு. எனவே பவளக் கொடி என்ற படத்தின் மூலம் கடந்த 1934-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து நவீன சாரங்கதாரா, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அசோக்குமார், ராஜமுக்தி உள்பட 14 படங்களில் நடித்து பிரபலமானார்.

அன்றைக்கு பாகவதர் மேலிருந்து அபரிமிதமான ஈர்ப்பு, நாடகத்தைத் தவிர மாற்று பொழுதுபோக்கே இல்லாத சூழல் காரணமாக அவரது ஹரிதாஸ் படம் 3 வருடங்கள் சென்னையில் ஓடி சாதனைப் படைத்தது.

சந்திரமுகி படம் வரும் வரை, தமிழில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை பாகவதர் படத்துக்கே இருந்தது.

ஆனால் லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்குப் பிறகு, புகழ் வெளிச்சம் மங்கிய நிலையில் பாகவதர் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். ஆனால் வறுமையிலும் பெருமையை காத்தார். கம்பீரத்தை இழக்காத வாழ்க்கை வாழ்ந்தார். தன்னைத் தேடி வந்த வாய்ப்புகள், பண உதவிகளை மறுத்துவிட்டார்.

1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி உடல் நலிந்து சென்னை பொது மருத்துவமனையில் இறந்தார். திருச்சிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க இறுதி ஊர்வலம் நடந்தது. திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு அருகேயுள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இப்போதும் ஒரு சாமானிய மனிதனின் கவனிக்கப்படாத சமாதியாகவே பாகவதர் அடக்கம் செய்யப்பட்ட இடம் காட்சி தருகிறது.

மூன்றே பேர்...

இந்நிலையில், தியாகராஜ பாகவதரின், 53வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவஞ்சலிக்கு தமிழ் சினிமாவிலிருந்து மட்டுமல்ல, அக்கம்பக்கத்திலிருந்தும் கூட யாரும் வரவில்லை.

தியாகராஜ பாகவதரின் சின்னம்மா சம்பூரணத்தம்மாளின் மகள் ஆனந்தலட்சுமி, அவரது கணவர் தெட்சிணாமூர்த்தி, இவர்களது மகன் தனபால் ஆகிய மூவர் மட்டுமே பாகவதர் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த நேற்று வந்தனர்.

1948ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ராஜமுத்தி சினிமாவில் இடம் பெற்ற, "மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ' என்ற பாடலை உரக்கப் பாடி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமாவில் ஒரு பெரும் மன்னரின் கம்பீரத்தோடு ஆட்சி செலுத்திய முதல் சூப்பர் ஸ்டார் பாகவதரின் நினைவு நாளை அனுசரிக்கவும் நேரமின்றி திரையுலகம் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த வருத்தம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாத குடும்பத்தினர், அவரவர் பணி அவரவருக்கு... யாரையும் குற்றம் சொல்வது சரியல்ல என்று கூறி தங்கள் அஞ்சலியை முடித்துச் சென்றனர்!

மேன் மக்களல்லவா!

இளையராஜாவின் தாயார் சமாதிக்கு அருகில் ஜீவா உடல் இன்று அடக்கம்

தேனி: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவாவின் உடல் இன்று அவரது பாட்டியும், இளையராஜாவின் தாயாருமான சின்னத்தாயின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்புகிறது.

இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு அகால மரணமடைந்தார். இதனால் திரையுலகினர் பெரும் சோகமடைந்தனர். நேற்று இளையராஜாவின் வீட்டில் குவிந்த திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் ஜீவாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பிற்பகலுக்கு மேல் ஜீவாவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படுகிறது. மாலை 5 மணி வாக்கில் உடல் அடக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பண்ணைப்புரத்தில் உள்ள இளையராஜாவின் தாயார் சின்னத்தாயின் சமாதிக்கு அருகிலேயே ஜீவாவின் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது.

இளையராஜாவின் சகோதரி மகள்தான் ஜீவா. ராஜாவுக்கும், ஜீவாவுக்கும் 1970ம் ஆண்டு திருமணம் நடந்தது. இளையராஜாவின் இசைப் பயணத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர் ஜீவா. சாகாவரம் படைத்த பல பாடல்களை இளையராஜா சுதந்திரமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக, குடும்பப் பொறுப்புகளை முழுமையாக ஏற்று குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர் ஜீவா.

இந்த நிலையில் ஜீவாவின் திடீர் மரணம் அவரது பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி ஆகியோரை நிலை குலைய வைத்துள்ளது. மூன்றும் பேரும் தாயாரின் மரணத்தைத் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர். அதேபோல இளையராஜாவும் பெரும் துக்கத்தில் உள்ளார். இருப்பினும் துக்கத்தை அடக்கிக் கொண்டு அவர் நேற்று முழுவதும் தனது மனைவியின் உடல் அருகிலேயே நின்றிருந்தார்.

லோயர் கேம்ப் பகுதியில் உள்ள சின்னத்தாயி சமாதி அருகே ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்படுவதையொட்டி பண்ணைப்புரம் மக்கள் பெரும் சோகத்துடன் காட்சி அளிக்கின்றனர்.
                                             tamil.oneindia.in