திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன்(72). பெங்களூருவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த அவர், சுஜாதா (தன் மனைவியின் பெயர்) என்ற புனைப்பெயரில்அறிவியல் பூர்வமான சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதி பிரபலமானார்.
மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் உள்ள ஜட்ஜ் சுந்தரம் தெருவில் வசித்து வந்தார்.
இதயநோய் மற்றும் உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்ட சுஜாதா கடந்த
வியாழக் கிழமை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவரது உடல் நிலை மேலும் மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்றிரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு சுஜாதா என்ற மனைவியும், ரங்காபிரசாத், கேசவபிரசாத் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதில் கேசவ பிரசாத் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நாளை(29-ந் தேதி) சுஜாதாவிற்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது.
-ஆர்.எஸ்.அந்தணன்
-ஆர்.எஸ்.அந்தணன்
No comments:
Post a Comment