மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday 1 November 2011

இங்கேயே திருடி... இங்கேயே விற்று.. கே.எஸ்.ரவிகுமார் பேச்சு


விளையாட்டுக்கு படம் எடுப்பவர்களுக்கு மத்தியில் விளையாட்டையேவிளையாட வாபடமாக்கியிருக்கிறார் கே.விஜயநந்தா. படத்தின் பெயரும் விளையாட வா. கேரம் விளையாட்டை உயிராக நினைக்கும் ஹீரோ, அவ்விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதும், அதற்கு ஏற்படுத்தப்படும் தடைகளை உடைப்பதும்தான் கதையாக இருக்கக் கூடும். (ட்ரெய்லரை பார்த்தா அப்படிதான் தோணுது)
கதை, விளையாட்டை பற்றி இருந்தாலும், படத்தில் வழிய வழிய காதலையும் நிரப்பியிருக்கிறார்களாம். அய்யன், புலிவேஷம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த திவ்யா பத்மினிதான் இந்த படத்திலும் நாயகி. இவருடன் டூயட் பாடுகிற ஹீரோ விஸ்வநாத் பாலாஜி. (முதல் படத்திலேயே இவருக்கு அறிமுகப்பாடல் வைத்திருக்கிறார்கள். அதுவும் விஜய் ரேஞ்சுக்கு)

No comments:

Post a Comment