முப்பத்தைந்து கோடியில் எடுத்து தருவதாக கூறிவிட்டு 42 கோடிக்கு செலவு வைத்து விட்டார்களே என்று கவலைப்பட்டு கொண்டிருந்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரொம்பவே தெம்பாகிவிட்டார். வேலாயுதம் படத்தின் வசூல் இதுவரைக்குமே ஐம்பது கோடியை தாண்டிவிட்டதாம். ஒருபுறம் இந்த சந்தோஷத்தை படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் அத்தனை பேரும் அனுபவித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் புஸ் ஆகிக்கிடக்கிறது அத்தனை பேருடைய மனசும்.
கர்நாடக மாநிலத்தில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்களுக்கு அங்கு எப்போதுமே ஜனங்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கை. அதே குதுகலத்தோடுதான் வேலாயுதத்தையும் திரையிட்டிருந்தார்கள். திடீரென்று கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பை சேர்ந்த வெறியர்கள் வேலாயுதம் ஓடும் திரையரங்கத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். பேனர்களை கிழித்து எறிந்தனர். படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களையும் விரட்டி அடித்தனர்.
இன்னும் ஒரு மாதத்திற்கு எந்த தமிழ் படத்திற்கும் இங்கு இடம் இல்லை என்கிறார்கள் அவர்கள். (வேறொன்றுமில்லை, இந்த ஒரு மாதமும் கன்னடர் தினமாம்) தமிழ் படங்களை இந்த ஒரு மாதத்திற்கு நிறுத்த சொல்லி கன்னட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிலிம் சேம்பருக்கும் கடிதம் எழுதியிருக்கிறது இந்த அமைப்பு.
ஆயிரம் விஜய்கள் பறந்து பறந்து அடிச்சாலும், இதுபோன்ற வில்லன்களின் கையில்தான் சினிமா இருக்கும் போலிருக்கிறது.
No comments:
Post a Comment