மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 5 November 2011

உலகநாயகன் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர்.


kamal-hassan-birthdayஉலகநாயகனின் பிறந்தநாள் நவம்பர் 7 -ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இவரது ரசிகர்கள், கமலின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். கமலின் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, வருகிற 6-ந்தேதி காலை 8 மணிக்கு தென் சென்னை மாவட்ட கமல் நற்பணி இயக்கம் சார்பில் சாந்தோமிலுள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் 100 பேருக்கு வேட்டி-சேலை மற்றும் உணவு வழங்கப்பட உள்ளது.
அதுத்து, 9 மணிக்கு சேத்துப்பட்டில் ரசிகர்கள் 100 பேர் ரத்ததானம் செய்ய உள்ளனர். ராயபுரம் பகுதியிலுள்ள பி.எஸ்.என்.ஆர். மருத்துவமனைக்கு, 25 கல்லூரி மாணவ-மாணவிகளும், 100 ரசிகர்களும் ரத்ததானம் செய்ய உள்ளனர்.
கூடுதலாக 7 ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்து, அதன் பத்திரங்களை வழங்குகிறார்கள். அதனை தொடர்ந்து, பெரம்பூரிலுள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு மளிகை பொருட்கள், சீருடைகள் மற்றும் உணவு வழங்குகின்றனர். பின்னர் ஆழ்வார்பேட்டையில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்க உள்ளார்கள்.
கூடுதலாக, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கமல் மன்றம் சார்பில், 7-ந்தேதியன்று, 50 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளும் , 50 பெண்களுக்கு புடவையும் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், பாரிமுனை ராஜா அண்ணாமலைபுரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தையல் எந்திரம் 58 பேருக்கு வேட்டி- சேலைகளும் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில் மாநில பொறுப்பாளர் ஆர். தங்கவேலு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளார்கள்.
உடல் உறுப்புகள் கூட தானம் செய்யும் அளவிற்கு பரந்த மனம் கொண்ட கமலின் ரசிகர்களை பாராட்டியே தீர வேண்டும்.

No comments:

Post a Comment