மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 19 November 2011

எல்லாமே எங்கம்மாதான்! - த்ரிஷா

Trisha with her Mom Uma Krishnanநான் சினிமா நடிகை ஆனதற்கும், இந்த நிலைக்கு வந்திருப்பதற்கும் என் அம்மாதான் காரணம் என்கிறார் நடிகை த்ரிஷா.

கிட்டத்தட்ட சினிமாவிலிருந்து ஒதுங்கி கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகப் போகிறார் என்று கூறப்பட்ட நேரத்தில், மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா.

அதுவரை மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் மும்முரமாக இருந்த அவர் அம்மா உமாவும், இப்போது அதில் கொஞ்சம் நிதானம் காட்ட ஆரம்பித்துள்ளார். மார்க்கெட் இருக்கும்போதே சேர்த்து வைத்தால்தானே ஆச்சு!

தெலுங்கில் இரண்டு படம், தமிழில் சமரன் மற்றும் ஒரு புதிய படம் என த்ரிஷா மார்க்கெட் ஸ்டெடியாக உள்ளது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தன் அம்மாதான் தன் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் நபர் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "எனக்கு எல்லாமே என் அம்மாதான். என் முதல் பெஸ்ட் பிரண்டும் அவர்தான். எப்போதும் எதுக்கும் தடை போட மாட்டார். அவர் விருப்பங்களை என்மீது திணிக்க மாட்டார். 

நான் சினிமாவுக்கு வரும்முன்பு மாடலிங் பண்ணேன். அதற்காக படிப்பு பாதிக்கப்பட்டது. ஆனால் என் அம்மா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. 

மாடலிங் செய்ய அனுமதித்தார். மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் இந்தியா என மாடலிங்கில் என் கேரியர் கிராஃப் ஏறியபோதுதான் இயக்குனர் பிரியதர்ஷன் நடிக்க அழைத்தார்.

முதல் படமான 'லேசா லேசா' படம் தோற்றதும் சினிமாவே வேண்டாம்னு விலக நினைச்சேன். ஆனால் என் அம்மாதான் அப்போது எனக்கு மனவலியை தந்தாங்க. அடுத்தடுத்த படங்களில் எனக்கு பாராட்டு... வெற்றி எல்லாமே கிடைச்சிடுச்சி," என்றார்.
                                                              tamil.oneindia.in

கலைஞரை சந்திப்பேன்... -கவிஞர் வாலி பதில்


கை தராசை வைத்துக் கொண்டு யானையை எடை போட்ட கதையாகதான் இருக்கும் கவிஞர் வாலியின் சினிமா அனுபவங்களை சில வாரங்களில் தொகுத்தளிக்கிற முடிவும். ஆனாலும் அப்படி ஒரு இனிய ரிஸ்க்கை எடுக்க துணிந்திருக்கிறார்கள் வசந்த் டி.வியும் சாதக பறவைகள் சங்கரும். இந்நிகழ்ச்சியின் நிர்வாக தயாரிப்பாளர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி.
வாலி 1000 என்ற தலைப்பில் கவிஞர் வாலி பற்றிய இனிமையான நிகழ்ச்சியைVaaliவழங்கவிருக்கிறார்கள் இவர்கள். இந்த நிகழ்ச்சி பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட்-வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது.
ஏ.வி.எம் சரவணன், எஸ்பி.முத்துராமன், இயக்குனர் மகேந்திரன், எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் தேவா, எஸ்.ஜே.சூர்யா, டைரக்டர் கதிர், எல்.ஆர்.ஈஸ்வரி, குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களை சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை எடுத்து முடித்துவிட்டார்களாம். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார் கவிஞர் வாலி.
பல்வேறு திரையுலக பிரமுகர்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் சந்திக்கிறீர்கள், கலைஞரையும் சந்திப்பீர்களா என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.
நான் அழைத்தால் கலைஞர் வர மாட்டேன் என்று சொல்ல மாட்டார். எனக்கும் அவருக்கும் நாற்பத்தைந்து கால நட்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு யாரையும் நான் இதுவரை அழைக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் அழைத்திருக்கிறார்கள். நிச்சயம் கலைஞரை நான் சந்திப்பேன் என்றார் வாலி.
ஆட்சி மாறியதும் 'ரங்கநாயகி' என்றெல்லாம் கவிதை எழுதுகிறீர்களே, அந்தகால புலவர்கள் மாதிரி அரசவையை இடித்துரைக்க முடியாதா உங்களால்? இது இன்னொரு கேள்வி.
இலங்கை பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை பாராட்டி அந்த கவிதையை எழுதினேன். ஆனால் நான்தான் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பார்வதியம்மாளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் அனுமதி மறுத்ததை கண்டித்தும் கவிதை எழுதினேன். அந்த கவிதையை பாராட்டி நிறைய பேர் பேசினார்கள். வைகோ கூட அதை தன் சங்கொலி பத்திரிகையில் வெளியிடவா என்று அனுமதி கேட்டு வெளியிட்டார். சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி பற்றியும் கவிதை எழுதியிருக்கிறேன். நாட்டில் நடக்கிற அன்றாட பிரச்சனைகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் அதை தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியாது என்று இந்த கேள்விக்கு சற்று விரிவாகவும் சூடாகவும் பதிலளித்தார் வாலி.

சிவகுமாரின் பேச்சு -சீறும் இணையதளம்


நடிகர் சிவகுமாரின் இலக்கிய சொற்பொழிவு பல ஆண்டுகாலமாக இலக்கிய சொற்பொழிவாற்றி வரும் அறிஞர்களை கூட வியப்பில் ஆழ்த்துகிற அளவுக்கு இருந்து வருகிறது. மிக குறுகிய காலத்தில் இப்படி ஒரு நற்பெயரை எடுத்திருக்கும் அவர் சில நேரங்களில் தேவையில்லாத விஷயங்களை பேசி வருவதாக ஆதங்கப்பட்டிருக்கிறது ஒரு இணையதளம்.
அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறோம். இது தொடர்பான எல்லா விமர்சனங்களுக்கும் சம்பந்தப்பட்ட இணையதளமும், நடிகர் சிவகுமாருமே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இணைப்புக்கு பின்வரும் தொடர்பை சொடுக்குக- http://bit.ly/tkqB2M
திரு. சிவக்குமார் அவர்களே!
சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது.
குறிப்பாக பெண்பிள்ளைகள் குழுமியிருக்கும் கல்லூரி வளாகத்தில் உங்கள் Siva Kumarசொற் பொழிவு என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஆலோசனை தருகிறேன் என்ற சாக்கில் "கழிப்பறை வடி காலில் 2 டன் கருத்தடைச் சாதனம் புதையுண்டுக் கிடந்ததாக எனக்குத் தகவல் வந்தது" என்று பயமுறுத்தி பெற்றோர் களின் வயிற்றில் புளியைக் கறைக்கிறீர்கள். ஒரு கருத் தடைச் சாதனத்தின் எடை சுமார் ஒரு கிராம் என்று வைத்துப் பார்த்தாலும் நீங்கள் சொன்ன கணக்குக்கு சுமார் இரண்டு மில்லியன் கருத்தடைச் சாதனம் வருகிறது.
எந்த கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் கழிப்பறையில் கருத்தடைச் சாதனத்தை அவர்கள் பணியாளர்களின் உபயோகத்திற்காக இருப்பு வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுக் கூற முடியுமா? உங்களுடைய கூற்றை கேட்கையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்கள் குழந்தைகள் அனைவரும் கற்பிழந்தவர்கள் என்ற மாயையை உருவாக்கி இருக்கிறீர்கள்.
இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் உங்கள் மேடைப்பேச்சு, உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற பாவனையில் தொடர்ந்து, தமிழனத்தையும் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தும் ரீதியில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது. பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை நீங்கள் பக்கம் பக்கமாக மனனம் செய்து உணர்ச்சிகரமாக மேடையில் பேசுகையில் உங்களிடம் உள்ளத்தை பறிகொடுத்த எங்களுக்கு இதுபோன்ற உங்களின் கருத்து எங்கள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றது.
"பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்" என்று கூறி தாகத்தை தணிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் தயாராக இருந்தார்கள் என்ற தீராத பழியை சுமத்தியிருக்கிறீர்கள்.

படம் பார்க்க வாங்க... -முதல்வருக்கு நடிகை அழைப்பு


ஒரு நடிகை எங்கு போனாலும் பப்ளிசிடிதான். ஆதிபகவன் பட நாயகி நீது சந்திரா பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்திக்க போயிருந்தாராம். மீடியாவில் இந்த செய்தி ஏக அசத்தலாக Neethu Chandra meets Nitish darbarபரவிக் கிடக்கிறது. நினைத்திருந்தால் அவர் ஸ்பெஷலாக முன் அனுமதி பெற்று முதல்வரை சந்திக்க போயிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை நீது.
மாதத்திற்கொரு முறை மக்களிடம் குறை கேட்கப் போவார் நிதிஷ். அப்படி குறை கேட்க போன இடத்தில்தான் நீதுவும் நின்றிருந்தாராம். ஆராய்ச்சி மணியை பிடித்து ஓங்கி அடிக்க வேண்டிய நிர்பந்தத்தோடு அங்கு செல்லவில்லை நீது. அதனால் நிதிஷுக்கும் கொஞ்சம் நிம்மதி.

'மடையன்'- சிம்பு நடிக்கும் புதிய படம்?

சிம்புவுக்கென்றே டைட்டில்களை ஸ்பெஷலாக ரூம் போட்டு யோசிப்பார்கள் Simbuபோலிருக்கிறது. கெட்டவன் என்று ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு ஊர் உலகத்தையை தன் பக்கம் திரும்ப வைத்தவர் சிம்பு. இப்போது அவரிடம் கால்ஷீட் கேட்கும் போதே மடையன் என்ற தலைப்பை சொல்லி அதிர வைத்திருக்கிறார் ஒரு இயக்குனர். இவருக்கும் சிம்புவுக்கும் நட்பு 'இப்ப்ப்ப்ப்ப்ப்படி' (இதை படிக்கும் போது பத்து விரல்களையும் இறுக கோர்த்து வைத்துக் கொண்டால் ஒரு எஃபெக்ட் கிடைக்கும்) என்பதால்தான் இந்த தைரியம் அவருக்கு வந்திருக்கிறது போலும்.
சிம்பு நடித்த சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் கணேஷ். அந்த நட்பின் காரணமாக சிம்பு நடிக்கும் வேறு படங்களில் கூட இவர் சிம்புவுடனேயே ஒட்டிக் கொண்டிருப்பார். எஸ்.டி.ஆரின் ரெகமன்டேஷனால் விண்ணை தாண்டி வருவாயா படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இதே கணேஷை இயக்குனராக்கி முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தயாரித்தார்.
சிம்புவின் நண்பராச்சே, சும்மாயிருக்க முடியுமா? படப்பிடிப்பில் சிம்புவை விடவும் பெரிய அட்டகாசமாம்! இந்தாங்க செட்டில்மென்ட் என்று கணேஷை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தானே படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் எல்ரெட் குமார்.
சரி, பழங்கதை எதற்கு? இந்த கணேஷ் க்ளவுட் நைன் நிறுவனத்திற்கு ஒரு கதை சொன்னாராம். அவர்களுக்கும் பிடித்துவிட்டது. இதற்குதான் மடையன் என்று பெயர் வைத்திருக்கிறாராம் அவர். படத்தில் சிம்புவை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து வருகிறது. கணேஷுக்காக சிம்புவும் கால்ஷீட் கொடுக்க கூடும் என்பதுதான் இப்போதைய நிலவரம்.

கலர்ஃபுல் ஜிம்... காஸ்ட்யூமர் அழைப்பு

அழகான ஐஸ் க்ரீமை அட்டைக்கரி பிடித்த மண் சட்டியில் ஊற்றி வைத்தால் Annakodiyum Kodiveeranumஎப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கும் அந்த ஸ்டில்களை பார்க்கும் போது! ஆனால் அன்புக்கும் நட்புக்கும் நிறம் முக்கியமல்ல, நேசம்தான் முக்கியம் என்பதை பொட்டென்று புத்தியில் அடிக்கிற மாதிரி சொல்கிற புகைப்படம் என்பதால் அதற்கு தனி அந்தஸ்து இருக்கிறது இப்பவும்.
சுற்றி வளைத்து சொல்வானேன்? கோடம்பாக்கத்தின் ஃபேமஸ் காஸ்ட்யூமரான சிட்னியும் த்ரிஷாவும் இருக்கிற அந்த படத்தை பற்றிதான் இத்தனை வியாக்கியானமும்!
சிட்னியை பற்றி வெகுநாட்கள் கழித்து ஒரு நல்ல நியூஸ். கோபாலபுரத்தில் சகல வசதிகளையும் கொண்ட உடற்பயிற்சி நிலையம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இவர். விரைவில் செயல்படப் போகும் இந்த ஜிம்முக்கு இப்பவே நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சேர துடிக்கிறார்கள் சினிமா கலைஞர்கள். காரணம்?
சிட்னி எங்கிருந்தாலும் அவரை சுற்றி முன்னணி நடிகைகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு வசீகரம் இருக்கிறது அவருக்கு. (அதென்ன வித்தையோ?) இந்த ஜிம்மில் சேர்ந்தால் இலவச கண்காட்சி நிச்சயம் என்பதால்தான் இந்த அவசரம்.
யார் இங்கு வருகிறார்களோ இல்லையோ? நிச்சயம் த்ரிஷா வருவார்!

Friday, 18 November 2011

இந்தியில் விண்ணைத்தாண்டும் கௌதம் மேனன்! ( VTV hindi titled as 'Ek Deewana Tha' )

ம்பு, த்ரிஷா இருவருக்கும் தங்களது திறமையை வெளிக்காட்ட வழிவகுத்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, கௌதம் மேனன் இயக்கம் என இப்படம் தமிழக இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வரவேற்பை பெற்ற இப்படத்தின் இந்தி உரிமையை யாருக்கும் கொடுக்காமல் தானே இந்தியிலும் இயக்கி இருக்கிறார் கௌதம் மேனன். ப்ரதீக் பாப்பர், 'மதராசப்பட்டினம்' நாயகி எமி ஜாக்சன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மானே இப்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். படத்திற்கு 'Ek Deewana Tha' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் 20 நொடிகள் ஓடும்  சிறு டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இடம்பெற்ற 'என் இதயம்' என்ற பாடலின் இந்தி பதிப்போடு அந்த டீசர் வெளிவந்து இருக்கிறது. ரொமான்டிக் மூட்ல பாலிவுட்டே கிறங்கப்போகுதப்போய்........!

11 கிலோ எடை உடையுடன் ஜீவா! ( Superman 'Jeeva' with 11 Kgs of costume )

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்க இருக்கும் 'முகமூடி' பட படப்பிடிப்பு எப்போது என்பது வெளியாகாமல் இருந்தது. வெளிநாடு எல்லாம் சென்று அங்கு TEST SHOOTING எல்லாம் நடத்தி வந்தார்கள். யு.டிவி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 'முகமூடி' படத்தினை பற்றி எதையும் பேசாமல் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நடிக்க துவங்கினார் ஜீவா. ஜீவா நடிக்க வேண்டிய 'முகமூடி'யில் சிம்பு நடிப்பார் என்றும் மிஷ்கின் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஜீவா தனது டிவிட்டர் இணையத்தில் "முகமூடி படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க இருக்கிறது. 75 நாட்களுக்கு மேலாக சூப்பர் ஹீரோ உடையினை போட்டு கொண்டு நடிக்க இருக்கிறேன். 11 கிலோ எடை கொண்டது அந்த உடை. படப்பிடிப்பு ஜாலியாக இருக்க போகிறது." என்று தெரிவித்துள்ளார். அதுசரி! தூக்கிக்கிட்டு நடக்க முடியுமா... பாஸ்?

ஹீரோவை கைவிட்ட த்ரிஷா; கவ்விக்கொண்ட ஸ்ரேயா!

தமிழ், தெலுங்கு, இந்தியை தொடர்ந்து மலையாள படத்தில் அறிமுகமாக காத்திருந்தார் த்ரிஷா. பிருத்விராஜ் நடிக்கும் 'ஹீரோ' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கதை கேட்டு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்க இயக்குநர் தீபன் முடிவு செய்தார். ஆனால் பிற படங்களில் பிஸியாக இருப்பதால் நவம்பரில் கால்ஷீட் தர இயலாது என்றார் த்ரிஷா. இதனால் ஷூட்டிங் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து படத்தில் இருந்து விலகி கொள்வதாக த்ரிஷா கூறிவிட்டார். த்ரிஷாவின் திடீர் முடிவால் திணறிய இயக்குநர் ஸ்ரேயாவை அணுகினார். அவரிடம் கதை சொன்னார். பிடித்திருந்ததையடுத்து நடிக்க சம்மதித்தார். கேட்ட தேதியில் கால்ஷீட்டும் தந்தார். ஸ்ரேயா நடிப்பதை உறுதி செய்த இயக்குநர், திட்டமிட்டபடி நவம்பரில் ஷூட்டிங் தொடங்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே மம்முட்டி, ப்ருத்விராஜ் நடித்த 'போக்கிரி ராஜா', மோகன்லாலுடன் 'கேசனோவா' ஆகிய படங்களில் நடித்திருக்கும் ஸ்ரேயா இது மலையாளத்தில் நடிக்கும் 3வது படம். மேடம்! எப்பவும் ஃப்ரீதானே... நடிக்கிறதுக்கென்ன..?

விஜய்யுடன் மோதும் ஆர்யா! ( Vettai to release for Pongal )

ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலாபால் நடித்து வரும் படம் 'வேட்டை'. லிங்குசாமி இயக்க யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் லிங்குசாமியே தயாரிக்க யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட இருக்கிறது. கிறிஸ்துமஸ் தின வெளியீடு என முடிவு செய்யப்பட்டு வேலைகளை துரிதப்படுத்தி வந்தார்கள். இன்னும் 2 பாடல்களை படமாக்க வேண்டுமாம். ஒரு பாடலுக்காக வரும் 20ம் தேதி ஆர்யா, அமலாபால் இருவரும் துபாய் செல்ல இருக்கிறார்கள். மற்றொரு பாடலுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக 60 லட்ச ரூபாய்க்கு செட் அமைத்து இருக்கிறார்கள். இவ்விரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டதும், அதனையெடுத்து இதர பணிகள் இருப்பதால் படத்தினை 2012 பொங்கல் அன்று வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். இப்படத்தின் இசையை டிசம்பர் 2ம் வாரத்தில் வெளியிட இருக்கிறார்கள். பொங்கல் 2012 அன்று விஜய் நடிக்கும் 'நண்பன்' படத்தோடு போட்டியிட இருக்கிறது 'வேட்டை'. பொங்கலோ பொங்கல்.... போட்டிப் போட்டு பொங்குங்க!

விஜய்யுடன் மழைத்துளியில் நனையும் காஜல்!

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்திற்கு ஏஞ்சலா ஜான்சனை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள். விஜய் - ஏஞ்சலா ஜான்சனை வைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தினார் சந்தோஷ் சிவன். இந்நிலையில் இப்படத்தில் இருந்து தேதிகள் பிரச்சினை காரணமாக விலகி விட்டாராம் ஏஞ்சலா ஜான்சன். இதனால் வேறு ஒரு நாயகியை தேடி வந்தார்கள். இந்தியில் முன்னணி நாயகியாக இருக்கும் சோனம் கபூரை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில் விஜய் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். டிசம்பர் 1ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறவர் காஜல். தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக 'மாற்றான்', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் மற்றும் ராம் சரண் தேஜா உடன் ஒரு படம் என நடித்து வருபவர் விஜய் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 'மாலை நேர மழைத்துளி' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கொடுத்து வச்ச மழைத்துளி!