மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday 15 November 2011

வீரப்பன் கதை வில்லனாக சித்தரிக்கப்படுவாரா?


வன யுத்தம் படத்தை வெகு வேகமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் குப்பி ரமேஷ்.வன யுத்தம்(ஸாரி காவலர் குடியிருப்பு ரமேஷ் என்று சொல்ல மனம் வரவில்லை) இதில் வீரப்பனாக பல படங்களில் வில்லனாக நடித்த கிஷோரையும், அவரை சுட்டுக் கொல்லும் அதிரடிப்படை தலைவராக பல படங்களில் ஹீரோவாக நடித்த அர்ஜுனையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் யார் வில்லன், யார் ஹீரோ என்பது ரெண்டாங் கிளாஸ் பிள்ளை கூட பட்டென்று சொல்லிவிடும்.
போலீஸ் அதிகாரிகளுக்கு பிசாசாக தெரிந்த வீரப்பன், இன்னமும் ஒரு பிரிவினருக்கு காவல் தெய்வமாகவே தெரிகிறான். உண்மை இப்படியிருக்க, ரமேஷின் இந்த பிரசன்டேஷன் ஆரம்பத்திலேயே முணுமுணுப்பை ஏற்படுத்தும் போல தெரிகிறது.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பணம் கேட்டார் என்பதற்காகவே அவரை தவிர்த்துவிட்டு இந்த படத்தை எடுத்து வருகிறார்கள். அப்படியென்றால் வீரப்பன் தரப்பு உண்மைகளும் மறைக்கப்படும் போல தெரிகிறது.
இது குறித்து ரமேஷிடம் கேட்டால், இது வீரப்பனின் கதை. யார் ஹீரோ, யார் வில்லன் என்றெல்லாம் விவாதிப்பது நம் வேலையல்ல. நடந்த உண்மைகளை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
எது எப்படியோ, வனயுத்தம் வருவதற்குள் அதிருப்தியாளர்களால் ஒரு நிஜயுத்தம் வந்து தொலையும் போலிருக்கிறது.

No comments:

Post a Comment