மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday 7 August 2012

மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்


சில படங்களை நோக்கிதான் வழி மேல் விழி வைத்திருப்பார்கள் ரசிகர்கள். அந்த வரிசையில் வரப்போகும் படங்களில் Mattranஒன்றுதான் 'மாற்றான்'. ஒட்டிப்பிறந்த ரெட்டையராக நடிக்கிறார் சூர்யா என்பது அநேகமாக அமீபா வரைக்கும் தெரிந்த செய்தி.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒரு ரெட்டைப்பிறவி படம் என்ற ஆவலின் மீது நண்டு சிண்டு சுண்டைக்காயெல்லாம் கல் வீசுவது போலவே நடக்கிறது அடுத்தடுத்த சம்பவங்கள். வேறொன்றுமில்லை, ப்ரியாமணி நடித்த 'சாருலதா' என்ற ரெட்டைப்பிறவி படம் இம்மாதமே திரைக்கு வருகிறது. இதிலேயே பாதி புஸ் ஆகிவிட்டார்களாம் 'மாற்றான்' படக்குழுவினர்.
இது போதாதென்று மலையாளத்தில் இதே டைப்பில் உருவான இரண்டு மூன்று டப்பா படங்களையும் களத்தில் இறக்கப் போகிறார்கள் வரிசையாக. 'மாற்றான்' வெளிவருவதற்கு முன்பே வெளிவரும் இந்த பேதி மாத்திரைகள் ஏகக்கடுப்பை உருவாக்கி வருகின்றன சூர்யா ரசிகர்களுக்கு.
இந்த நிலையில்தான் 'மாற்றான்' படத்திற்காக சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இதற்காக மெனக்கட்டு தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் சூர்யாவும். சிங்கப்பூரில் ஆடியோ ரிலீஸ் முடிந்த கையோடு படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்களாம்.
ஓரிடத்தில் கட்டிங் பண்ணி வேறிடத்தில் ஃபிட்டிங் பண்ணினாலும், 'நாங்கதான் முதல்ல...' என்கிற ரெட்டை விஷ நாக்குகளை எப்படிதான் சமாளிக்கப் போறாங்களோ?

                                 http://www.tamilcinema.com/

Thursday 2 August 2012

ரஜினி-கமல் புறக்கணிப்பு ஹீரோயின் மட்டும் ஆர்வம்...




அல்லாடிக் கொண்டிருக்கிறது ஒரு சேனல். ரஜினி- கமல் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் நினைத்தாலே Jayapradhaஇனிக்கும் படத்தின் வெளியீட்டு உரிமை இவர்கள் வசம் இருக்கிறது. இப்போது அந்த படத்தை மறுபடியும் வெளியிட்டால் எப்படியிருக்கும்?
பத்பநாபஸ்வாமி கோவிலுக்கு பாதாள அறை கனெக்ஷன் கிடைத்த மாதிரி இருக்குமே...! பெருத்த நம்பிக்கையில் படத்தை வெளியிட நாள் குறித்துவிட்டார்கள். ரஜினி, கமல், பாலசந்தர் ஆகிய மூவரையும் அழைத்து ஒரு மாபெரும் அறிவிப்பையும் வெளியிட துடித்தார்கள். ஆனால் அவர்கள் மூவருமே தயங்க... அய்யருக்காக காத்திருக்குமா அமாவாசை? அநேகமாக படம் ஆகஸ்ட்டில் வெளியிடப்படலாம்.
இதற்கிடையில் 'பிரமோஷனுக்காக எப்ப கூப்பிட்டாலும் நான் ரெடி' என்று கூறிவிட்டாராம் அப்படத்தின் ஹீரோயினான ஜெயப்ரதா. உத்தரப் பிரதேசத்தில் முக்கியமான அரசியல்வாதியாக பரபரப்பு காட்டும் ஜெயப்ரதா இந்த படம் வருவதில் காட்டுகிற அக்கறையை கண்டு அதிசயிக்கிறது சேனல்.

Saturday 17 March 2012

கடத்தியவரும் கடத்தப்பட்டவரும்... வீரப்பன் கதை விசேஷம்


காட்டுராஜாவின் படமெடுக்க தன் வீட்டையே விற்றுவிட்டார் டைரக்டர் ஒருவர். குப்பி என்ற அற்புதமான படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷின் அடுத்த படைப்புதான் வனயுத்தம். சந்தனக்கடத்தல் வீரப்பனின் கதையை உண்மைக்கு அருகில் நின்று படமெடுக்க Vanayudhamஆசைப் பட்டிருக்கிறார் ரமேஷ். அதற்கான களப்பலிதான் இந்த அழகான வீடு. மனைவியிடம், "இந்த வீட்டின் வாஸ்து சரியில்லை, வேறு வீடு வாங்கிக் கொள்ளலாம்' என்று கூறி விற்றதாக ரமேஷ் சொன்னபோது அந்த பிரஸ் மீட்டிலிருந்து வந்த ச்சொச்சொச்சோ சப்தம் மனதின் ஆழத்திலிருந்து வந்தவைதான்.
படத்தின் ஹீரோ அர்ஜுன். வீரப்பனை கொன்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் கேரக்டரில் நடித்திருக்கிறாராம். இந்த படத்திற்காக சுவிட்சர்லாந்தில் ரெண்டு பாட்டு எடுத்தோம்னு சொல்ல முடியாது. எல்லா நாளும் ஜெயில், காடுன்னுதான் போச்சு என்றார். வீரப்பனை சுட்டுக் கொல்கிற காட்சியை எங்கு வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் எடுக்க வேண்டும் என்று சொல்லிட்டார் டைரக்டர். ரொம்ப சிரமப்பட்டுதான் எடுத்திருக்கோம் என்றார் அர்ஜுன். வீரப்பன் கதைதான் எல்லாருக்கும் தெரியுமே, இதில் புதுசா என்ன சொல்லப் போறோம் என்ற ஆக்ஷன் கிங்கின் சந்தேகம்தான் நமக்கும். அதற்கு பிரமாதமான ஒரு பதிலை சொன்னார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.