மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday, 28 December 2011

மணிரத்னம் ஆபிசில் பசுபதி ரகசியம் காக்குறாங்களாமா...


கூத்துப்பட்டறை நடிகர்களை கொல்லன் பட்டறை இரும்பு போலவே பயன்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். அவ்வளவு அடி மற்றும் நொறுக்குதலும் இவர்களுக்குதான் கிடைக்கிறது அடுக்கடுக்காக.
பெரும் எதிர்பார்ப்போடு தமிழ்சினிமாவில் வீறு நடை போட்ட பசுபதி ஒருPasupathiகூத்துப்பட்டறை தயாரிப்புதான். ஆனால் இவராகவே வெட்டிக் கொண்ட குழியா, அல்லது மண்வெட்டியோடு மெனக்கட்டு வந்தார்களா தெரியாது. சில பல இயக்குனர்களால் வெகு சீக்கிரத்தில் காணாமல் போனார் பசுபதி. நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான ரோல் கொடுத்து இவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் வசந்த பாலன்.
இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல செய்தி வந்திருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் பசுபதியை தனது அலுவலகத்திற்கு அழைத்தாராம் மணிரத்னம். தற்போது இயக்கவிருக்கும் பூக்கடை படத்தில் முக்கிய ரோல் இருப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.
அரசல் புரசலாக கசிந்த தகவலையடுத்து பலரும் பசுபதிக்கு போன் செய்து அப்படியா என்று கேட்டால், அப்படியா என்கிறாராம் அவரும் அதே பிரமிப்புடன். வேறொன்றுமில்லை, இங்கு வந்துட்டு போன விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றாராம் மணி.
ஐஸ்வர்யா ராய் நடிச்சாலே அலட்டிக் கொள்ளாத ஆட்களுக்கு, மணி அண்டு பசுபதியின் இந்த ரகசிய காப்பு பிரமாணம் ங்கொய்யென்று சிரிக்க வைக்கிறது.

அஞ்சலியின் சிறப்பு கொள்கை புதுமுக நடிகர்கள் நெகிழ்ச்சி


பசி நேரத்தில் பிள்ளையார் சுழி போட்டாலும், அது கொழுக்கட்டை வடிவத்தில்தான்Anjaliஇருக்கும். மனம் போலதான் மற்றதெல்லாம் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இது. இதை அப்படியே பின் பற்றுகிறார் அமலா பால். தன்னுடன் ஆரம்பத்தில் நடித்த சின்ன சின்ன நடிகர்களை எங்காவது பார்த்தாலோ, அல்லது அவர்கள் போன் லைனில் வந்தாலோ கூட மதிப்பதில்லையாம். இதை சொல்லி சொல்லி புலம்புகிறார்கள் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் இவருடன் நடித்த ஹீரோக்கள்.
ஆனால் அஞ்சலி அப்படியல்ல. இன்னமும் இவரது மனப் புத்தகத்தில் புதுமுகங்களுக்கு இடம் இருக்கிறது. நல்ல கேரக்டர் வந்தா போதும். அதுல யாரு எனக்கு ஜோடியா நடிக்கிறாங்கன்னு நான் பார்ப்பதே இல்லை என்கிற அஞ்சலி, இப்போது விக்ரமுடன் கரிகாலன் படத்தில் நடிக்கிறார். அமலாவும் விக்ரமுடன் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் தனது பழைய நண்பர்களை எடைக்குப் போட்டு பேரீச்சம் பழம் வாங்கினார்.
ஆனால் விக்ரமுடன் நடித்துக் கொண்டிருக்கும் போதே, மதன் என்ற புதுமுகத்துடன் ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டார் அஞ்சலி. இந்த மதன் இதுதாண்டா போலீஸ் ராஜசேகரின் சகோதரி மகன் என்கிறார்கள்.
எது எப்படியோ, அஞ்சலியின் சிறுமுதலீட்டு கொள்கைக்கு ஒரு சிறப்பு வணக்கம்.

பிரதமர் தரப்போகும் விருந்து தனுஷ் உற்சாகம்


கொலவெறிக்கான பேடன்ட் ரைட்ஸ் வடிவேலுவிடம் இருக்க, பரிசுகளை அள்ளிக்Dhanush - Manmohan Singhகொண்டு போகிற வேலையை மட்டும் பார்க்கிறார் தனுஷ். இந்த கொலை வெறியின் உச்சத்தை கண்டும் காணாமல் இருக்க வேண்டிய நிலைமைதான் வடிவேலுவுக்கு. ஆனால் தனுஷ் இது பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. நாளொரு அழைப்பும், பொழுதொரு பேமென்ட்டுமாக அள்ளிக் கட்டிக் கொண்டிருக்கிறார் மனுஷன்.
இதோடு முடிந்திருந்தால் கூட ஆச்சர்யம் இல்லை. பிரதமரே இவரை விருந்துக்கு அழைத்திருக்கிறாராம். ஒவ்வொரு வருட இறுதியிலும் நாடெங்கிலும் உள்ள முக்கியமான விஐபிகளுக்கு விருந்தளிப்பார் பிரதமர். இந்த முறையும் அப்படி விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியலில் தனுஷின் பெயரும் இருக்கிறது.
இந்த திடீர் செல்வாக்குக்கு காரணம், கொலவெறிடிதான் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும். இந்த விருந்தில் வடக்கத்திய நட்சத்திரங்கள் பலரும் வருவார்கள். நான் இயக்கும் முதல் படம் இந்தியில்தான் என்று கூறி வரும் தனுஷுக்கு இந்த விருந்து ஏராளமான வரவுகளை அள்ளித்தரும் இடமாக இருக்கும்.

மம்பட்டியான் - விமர்சனம்

தியாகராஜன் ஹீரோவாக நடித்த அதே மம்பட்டியான்தான் இதுவும். தார்ப்தியாகராஜன் ஹீரோவாக நடித்த அதே மம்பட்டியான்தான் இதுவும். தார்ப்பாயை கிழித்து தடுக்காக தைத்த மாதிரி கச்சிதமான மாற்றங்களோடு உறுமியிருக்கிறார் இந்த மம்பட்டியானும். பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் தகப்பனை மிஞ்சிய தனயனா என்றால் ஒரு சின்ன ஹி...ஹி..தான் நமது பதில். ஜெயமாலினி வேடத்தில் முமைத்கான். சரிதா கேரக்டரில் மீராஜாஸ்மின் என்று நாதஸ்வரத்துக்கும் மவுத்தார்கானுக்கும் இருக்கிற வித்தியாசம் இருக்கிறது எல்லாவற்றிலும்.
Mambattiyanதனது நேர்மையான தந்தையை கொன்றவர்களை வெட்டி சாய்த்துவிட்டு காட்டுக்குள் பதுங்கிவிடுகிறார் மம்பட்டியான் பிரசாந்த். அங்கிருந்து கொண்டே ஊர் மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்கிறார். ஒருபுறம் போலீஸ் தேடிக் கொண்டே இருக்கிறது. இருமுறை சிக்கிக் கொள்ளும் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களுக்கும் அல்வா கொடுக்க, எப்பிடிறா பிடிப்பாய்ங்க என்கிற ஆவலை கிளறி விடுகிறார் இயக்குனர் மம்பட்டியான். (இதுவும் தியாகராஜன்தான், தெரியுமோ? )
‘வரலாற்றில் என் பெயர் இருக்கும். என்னை தேடிகிட்டே இருப்பீங்க’ என்று போலீசிடம் சவால் விடும் மம்பட்டியான் கடைசியில் செத்துப்போவது கூடவே திரியும் ஒரு கரப்பான்பூச்சியால் என்பதுதான் திடுக்கிடும் திருப்பம். (இந்த கேரக்டரில் நடித்திருக்கும் நடிகருக்கு நிஜமாகவே முகத்தில் பால் வடியுது)
மகனை அப்பாவே இயக்கும்போது நேர்கிற அத்தனை சங்கடங்களும் படத்தில் இருக்கிறது. ஆனால் துருத்திக் கொண்டு தெரியவில்லை. உதாரணமாக பதற வேண்டிய நிர்பந்தங்களில் கூட பிரசாந்த் புன்னகைத்துக் கொண்டே அவற்றை எதிர்கொள்கிற காட்சிகளை சொல்லலாம். சரித்திர புருஷர்களுக்குரிய மடேர் மடேர் தோள்களும், அவற்றை மறைக்கும் கருப்பு போர்வையுமாக பிரசாந்த் திரிவது, காட்டு சிங்கம் போன்ற கம்பீரம் தருகிறது. மெல்ல மீராஜாஸ்மினின் காதலில் அவர் விழுகிற காட்சிகளும் பூ மலர்வது போல அழகு. குறிப்பாக ஒரு விஷயத்தை பாராட்டலாம். அது பிரசாந்தின் டப்பிங்குக்காக. அந்த கரகர அடித்தொண்டை குரலுக்காக எத்தனை ஹால்ஸ் மற்றும் இஞ்சி மரபாக்களை முழுங்கினாரோ?
ஒரு போலீஸ் அதிகாரியை பிரசாந்த் அடித்து துவைத்து அரை உயிராக மரத்தில் கட்டி வைத்து கழுகுக்கு இரையாக்கும் அந்த தந்திரம் குரூரம் என்றாலும் அபாரம். பிரகாஷ்ராஜ் கைகளில் சிக்கி, கடைசியில் அவர் கழுத்தை சுருக்கிட்டு தப்பிக்கும் இன்னொரு காட்சியிலும் தியேட்டரை அதிர வைக்கிறார்கள் தந்தையும் மகனும்.
24 கேரட் தங்கம் மம்பட்டியானை அவசரப்பட்டு குறை சொல்லிவிட்டோமே என்ற பதற்றத்தில் தன்னையே தாரை வார்க்கும் மீராஜாஸ்மினின் காதலும், நியாயமும் ஒரு ஆற்றங்கரையில் சமாதியாவதுதான் சோகம்.
அப்போதுதான் ஜிம்முக்கு போய் ‘பெஞ்ச் பிரஸ்’ செய்துவிட்ட வந்த மாதிரி படம் முழுக்க திறந்தே கிடக்கிறார் முமைத்கான். இந்த திறந்தவெளி சந்தோஷமே சீக்கிரம் டிக்கெட்டுகளை விற்க வைத்து கவுன்ட்டர்களை ‘மூட’ வைக்கும்.
ஒரு சில காட்சிகளே வந்தாலும், பிரகாஷ்ராஜின் பாணி வழக்கம் போல பலே பலே...
பல மாதங்கள் கழித்து திரையில் உலா வருகிறது வைகைப் புயல். சீறும் என்று நினைத்தால் சீலிங் ஃபேன் கெட்டது போங்கள்...
மேக்கப் கலைமாமணி சுந்தரமூர்த்தி என்கிறது டைட்டில். ஆனால் குளத்தில் மூழ்கி எழுந்தால் கூட முகச்சாயம் கலையாமல் எழுகிறார்கள் அத்தனை பேரும். என்ன கலைமாமணியோ?
தமனின் இசையை அலுத்துப் போகாமல் செய்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. இவரது காட்டு வழி போறப் பெண்ணேவையும், சின்ன பொண்ணு சேலையையும் ரிப்பீட் அடித்திருக்கிறார் தமன். ஆயிரம் இருந்தாலும் பழசு பழசுதான்...
ஷாஜி குமாரின் ஒளிப்பதிவை மேலும் அழகாக்கியிருக்கிறது டிஜிட்டல் இமேஜ்.
அருவா அதேதான். ஆத்திரமும் அதேதான். சாணை பிடித்த விதத்தில்தான் சற்றே சற்று சறுக்கல்...
-ஆர்.எஸ்.அந்தணன்

அடுத்த வருடமாவது என்னை... நடிகர் சூர்யா ஆசை

பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராம் அழகான படங்கள் அடங்கிய 2012 வருட காலண்டரை வெளியிட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவும், நடிகை சமீரா ரெட்டியும் கலந்து கொண்டு காலண்டரை வெளியிட்டனர்.
ஏ.வி.எம்-ல் நடந்து வரும் ‘மாற்றான்’ படப்பிடிப்பிற்கு இடையில் நிகழ்ச்சி நடைபெறும் 2012 Calendar releaseஹயாத் ஓட்டலுக்கு வந்திருந்தார் சூர்யா. ஒரு நடிகர் தான் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இடையில் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றாலே, அந்த நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர் குறிப்பிட்ட நடிகருக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தராக இருப்பார்?
ஆமாம்... நடிகர் நடிகைகளை பொருத்தவரை சாதாரணமானவரல்ல இந்த வெங்கட்ராம். சிம்புவில் ஆரம்பித்து கமல் ரஜினி வரைக்கும் கூட இவரது கேமிரா முன் நின்றவர்கள்தான். அதுமட்டுமல்ல, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று இந்திய மொழிகள் அத்தனைக்கும் முக்கியமான புகைப்படக் கலைஞர் இந்த வெங்கட்ராம்.
காலண்டரை வெளியிட்ட சூர்யா, இந்த வருடம் நடிகைகளை மட்டும் காலண்டருக்கு பயன்படுத்தியிருக்கிறாரே என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நான் வெங்கட்ராமுக்கு தொடர்ந்து போன் அடித்தேன். அவர் எடுக்கவே இல்லை. எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அதுக்கும் பதில் இல்லை. என் ஐபோன்ல ஒரு வசதி இருக்கு. அது மூலமா நண்பன் எங்க இருக்காருன்னு கண்டு பிடிச்சேன். அப்புறம்தான் இப்படி ஒரு வேலை போயிட்டு இருக்குன்னு தெரிய வந்துச்சு. அடுத்த வருடமாவது என்னையெல்லாம் எடுத்து காலண்டர்ல போடணும் என்றார்.
இந்த காலண்டரில் த்ரிஷா, சமீரா ரெட்டி, சமந்தா, அமலா பால், ஜெனிலியா, தீக்ஷா சேத் ஆகியோர் போஸ் கொடுத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில், இந்த புகைப்படங்களை வெங்கட்ராம் படமாக்குவதையும் படமெடுத்து காண்பித்தார்கள். அதையே ஒரு படமாக ஓட்டினால் கூட ஐம்பது நாளை கிராஸ் பண்ணும் போலிருந்தது. அத்தனை சுவாரஸ்யம்...

போகதான் போகிறோம் சங்கீதா-க்ருஷ் பிடிவாதம்

ஸ்விட்சர்லாந்தில் நடைபெறவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு செல்லக் Krish - Sangeethaகூடாது என்று தமிழ்நாட்டில் பிரச்சனை கிளம்பியதையும், இதையடுத்து அங்கு செல்வதாக இருந்த ஜீவா பின்வாங்கியதையும் பலரும் அறிவர். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதாக முடிவெடுத்திருந்த சங்கீதாவும் அவரது கணவர் க்ருஷும் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார்கள் இருவரும்.
நாங்க கலைஞர்கள். உலகம் முழுவதும் சென்று நிகழ்ச்சி நடத்துவது எங்களுக்கு புதிதல்ல. இந்த நேரத்தில் சுவிஸ் தமிழ் அமைப்புகளுக்குள் நடக்கிற அரசியலில் எங்களை சிக்க வைப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. தமிழ்நாட்டில் கூட புத்தாண்டு தினத்தன்று சுமார் ஆறு ஏழு குழுவினர் நடிகர் நடிகைகளை அழைத்து அவர்களுக்கு விருது தருகிற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அதுபோலதான் அங்கும் நடக்கிறது. அவர்களுக்குள் நடக்கிற போட்டியில் ஒரு குழுவினரை இலங்கை அரசுக்கு ஆதரவானவர்கள் என்று சித்தரிக்கும் வேலையை இன்னொரு குழு செய்கிறது.
சுவிஸ் நாட்டுக்கு செல்வது பற்றி நாங்கள் எங்கள் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் பேசினோம். அவர் இலங்கைக்கு செல்லவில்லையே, சுவிஸ்தானே போகிறீர்கள்? தாராளமாக போய் வாருங்கள் என்று கூறியிருக்கிறார். நாங்கள் இருவரும் கடந்த வருடம் கூட இதே குழுவினரின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தேன். அவர்கள் நல்லவர்கள் என்பதை கண்கூடாக பார்த்தவள் நான். எனவே இந்த நிகழ்ச்சிக்கு நான் மனப்பூர்வமாக செல்லதான் போகிறேன் என்றார் சங்கீதா.
மிரட்டலுக்கும் அவதுறுக்கும் பயந்து நாங்கள் போவதை நிறுத்தினால், அடுத்தடுத்த வருடங்களில் இதையே முன்னுதாரணமாக வைத்து இங்குள்ள நடிகர் நடிகைகளின் வருகையை தடுக்க நினைப்பார்கள். அதனால்தான் தைரியமாக இந்த பயணத்தை மேற்கொள்கிறோம் என்றார்கள் க்ருஷும் சங்கீதாவும்.
பார்வைக்கு தெரியுற நிலா பளபளன்னு இருந்தாலும் பக்கத்தில் போனால்தான் காடுமேடு தெரியும். நமக்கென்ன, இரு தரப்பு சொல்வதையும் கேட்டுக் கொள்வதை தவிர வேறு வழி?

ராஜபாட்டை - விமர்சனம்

Mambattiyanஅன்னா ஹசாரேவின் லேட்டஸ்ட் உண்ணாவிரதம் போல, எதிர்பாராத அதிர்ச்சிதான் இந்த ராஜபாட்டை. (அவ்ளோ பெரிய மைதானத்தில் 100 பேர் தேறலயாமே?) வெ.க.கு, அ.சா.கு, நா.ம.அ என்று நல்ல நல்ல படங்களை இயக்கிய சுசீந்திரனுக்கு வந்த திடீர் மசாலா ஆசை கோடம்பாக்கத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எழுதினால் அது இன்னொரு டிசம்பர் இருபத்தியாறாகிவிடும் என்பதால் விமர்சனத்திற்குள் செல்வோம்.
அநாதை ஆசிரமம் நடத்தி வரும் பெரியவர் விஸ்வநாத்திடமிருந்து அந்த இடத்தை அபகரிக்க துடிக்கிறார் பெண் அரசியல்வாதி ஒருவர். இதற்கு பெரியவர் மகனும் உடந்தை. ஆசிரமம் கைமாறினால் அத்தனை குழந்தைகளும் நடுத்தெருவில்தான் என்பதால் தன்னையறியாமல் கோதாவில் குதிக்கும் விக்ரம், தன் ஒற்றைக் கையால் மிஷின் கன் வில்லன்களை கூட பந்தாடுகிறார். பெரியவர் வெளியில் இருந்தால்தானே கையெழுத்து போட முடியும்? அவரையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுகிறார். கொலைவெறியோடு துரத்தும் கும்பல் விக்ரமின் லவ்வர் தீக்ஷாவையும் கடத்துகிறது. எப்படியோ, இடம் கைமாறி பிள்ளைகள் எல்லாம் நடுத்தெருவுக்கு வருகிறார்கள்.
இதற்கிடையில் சொத்துக்கு ஆசைப்பட்டுதான் தன் மீது அன்பு காட்டுகிறார் விக்ரம் என்று முடிவு செய்யும் விஸ்வநாத் அவரிடமிருந்து பிரிய, அடுத்தது என்னாச்சு என்பதுதான் மிச்ச மீதி. 
சங்கராபரணம் விஸ்வநாத்தை ‘சங்கட’ புராணம் பாட வைத்திருக்கிறார்கள். எப்படி லவ் பண்ணுவது என்று அவர் விக்ரமுக்கு கிளாஸ் எடுப்பது ரொம்பவே ஓவர் என்றாலும், ரசிக்க முடிவதுதான் ஆச்சர்யம். மனைவியின் சிலையை புல்டவுசர் கொண்டு தகர்க்கும்போது அவர் கண்களில் வழியும் கண்ணீர் நம்மை ஃபீல் பண்ண வைக்கிறது.
ஜிம் பாய் என்பதால் மற்றொரு பிரசாந்த் போல உடம்பேறியும் முறுக்கேறியும் திரிகிறார் விக்ரம். எழுபது வயதில் அமிதாப்பச்சனையும், அதே வயதில் எம்.ஜி.ஆரையும் பார்த்த நமது கண்களுக்கு ஐம்பத்தைந்து வயதில் ஏன் இப்படி முதுமை தட்டிப் போனார் விக்ரம் என்பதை நினைத்தால் கவலையாகவே இருக்கிறது. (சில குளோஸ் அப்புகளை தவிர்த்திருக்கலாமே மதி?) படத்தில் வரும் ஏராளமான மாறுவேட காட்சிகளுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. ஆனால் அவையெல்லாம் ஒரு கேரக்டர்களாக உலவ முடியாமல் போனதும் வருத்தமே.
விக்ரம் எபிசோடில் நம்மை அதிகம் ரசிக்க வைத்தது தீக்ஷாவை தேடி ஒவ்வொரு லைட் கம்பமாக அவர் அலைகிற காட்சிதான். கடைசியில் எப்படி கண்டுபிடித்தார் என்பதும் சுவாரஸ்யமான சீன் பின்னல்.
இந்தகால அரசியல் பிரபலம் ஒருவரை நினைவுபடுத்துகிறார் அந்த பொலிட்டீஷியன் சனா. அவ்வளவு பெரிய ஊர்வலத்தில் தன்னருகில் வந்து குத்தல் காட்டிவிட்டு போகும் விக்ரமை, கோபமும் சிரிப்பும் கலந்த பார்வையோடு கொன்று போடுகிற சனாவின் கண்களுக்கும் உதடுகளுக்கும் தனித்தனியாக விருது பத்திரம் எழுதித்தரலாம்.
ஆறடி உயர அரளிப்பூவாக தீக்ஷா சேத். அதிகம் வேலை இல்லை இவருக்கு. அதனால் நாமும் அதிகம் பேச வேண்டியதில்லை.
முப்பது கோடிகளுக்கும் மேல் செலவு செய்து எடுக்கிற படத்தில் வடிவேலு, விவேக், சந்தானம் கூட வேண்டாம். அட்லீஸ்ட் சத்யன் கூடவா சிக்கவில்லை. இவர்கள் செய்ய வேண்டிய வேலையை வில்லன் நடிகராக பல படங்களில் வந்து போன அருள்தாஸ் செய்திருக்கிறார். உஸ்ஸ்ஸ்...
எல்லாரும் கோவக்காய். நான் மட்டும் ஏலக்காயா? என்று தனது பங்குக்கு சண்டித்தனம் செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜாவும்.
விக்ரமுக்கு ஆறாவது தோல்வி என்பதுதான் நமது ‘ஆறாத’ கவலையும்.
-ஆர்.எஸ்.அந்தணன் 
                                                              WWW.TAMILCINEMA.COM