பசி நேரத்தில் பிள்ளையார் சுழி போட்டாலும், அது கொழுக்கட்டை வடிவத்தில்தான்இருக்கும். மனம் போலதான் மற்றதெல்லாம் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இது. இதை அப்படியே பின் பற்றுகிறார் அமலா பால். தன்னுடன் ஆரம்பத்தில் நடித்த சின்ன சின்ன நடிகர்களை எங்காவது பார்த்தாலோ, அல்லது அவர்கள் போன் லைனில் வந்தாலோ கூட மதிப்பதில்லையாம். இதை சொல்லி சொல்லி புலம்புகிறார்கள் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் இவருடன் நடித்த ஹீரோக்கள்.
ஆனால் அஞ்சலி அப்படியல்ல. இன்னமும் இவரது மனப் புத்தகத்தில் புதுமுகங்களுக்கு இடம் இருக்கிறது. நல்ல கேரக்டர் வந்தா போதும். அதுல யாரு எனக்கு ஜோடியா நடிக்கிறாங்கன்னு நான் பார்ப்பதே இல்லை என்கிற அஞ்சலி, இப்போது விக்ரமுடன் கரிகாலன் படத்தில் நடிக்கிறார். அமலாவும் விக்ரமுடன் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் தனது பழைய நண்பர்களை எடைக்குப் போட்டு பேரீச்சம் பழம் வாங்கினார்.
ஆனால் விக்ரமுடன் நடித்துக் கொண்டிருக்கும் போதே, மதன் என்ற புதுமுகத்துடன் ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டார் அஞ்சலி. இந்த மதன் இதுதாண்டா போலீஸ் ராஜசேகரின் சகோதரி மகன் என்கிறார்கள்.
எது எப்படியோ, அஞ்சலியின் சிறுமுதலீட்டு கொள்கைக்கு ஒரு சிறப்பு வணக்கம்.
No comments:
Post a Comment