மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday, 7 August 2012

மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்


சில படங்களை நோக்கிதான் வழி மேல் விழி வைத்திருப்பார்கள் ரசிகர்கள். அந்த வரிசையில் வரப்போகும் படங்களில் Mattranஒன்றுதான் 'மாற்றான்'. ஒட்டிப்பிறந்த ரெட்டையராக நடிக்கிறார் சூர்யா என்பது அநேகமாக அமீபா வரைக்கும் தெரிந்த செய்தி.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒரு ரெட்டைப்பிறவி படம் என்ற ஆவலின் மீது நண்டு சிண்டு சுண்டைக்காயெல்லாம் கல் வீசுவது போலவே நடக்கிறது அடுத்தடுத்த சம்பவங்கள். வேறொன்றுமில்லை, ப்ரியாமணி நடித்த 'சாருலதா' என்ற ரெட்டைப்பிறவி படம் இம்மாதமே திரைக்கு வருகிறது. இதிலேயே பாதி புஸ் ஆகிவிட்டார்களாம் 'மாற்றான்' படக்குழுவினர்.
இது போதாதென்று மலையாளத்தில் இதே டைப்பில் உருவான இரண்டு மூன்று டப்பா படங்களையும் களத்தில் இறக்கப் போகிறார்கள் வரிசையாக. 'மாற்றான்' வெளிவருவதற்கு முன்பே வெளிவரும் இந்த பேதி மாத்திரைகள் ஏகக்கடுப்பை உருவாக்கி வருகின்றன சூர்யா ரசிகர்களுக்கு.
இந்த நிலையில்தான் 'மாற்றான்' படத்திற்காக சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இதற்காக மெனக்கட்டு தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் சூர்யாவும். சிங்கப்பூரில் ஆடியோ ரிலீஸ் முடிந்த கையோடு படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்களாம்.
ஓரிடத்தில் கட்டிங் பண்ணி வேறிடத்தில் ஃபிட்டிங் பண்ணினாலும், 'நாங்கதான் முதல்ல...' என்கிற ரெட்டை விஷ நாக்குகளை எப்படிதான் சமாளிக்கப் போறாங்களோ?

                                 http://www.tamilcinema.com/