மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 17 December 2011

செங்கடல் படத்தை திரையிடு திரைப்பட விழாவில் பரபரப்பு

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டு கொல்லும் அவலத்தையும் , Sengadalஇலங்கை முள் வேலிக்குள் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்களை படும் கொடுமைகளை பற்றி எடுக்கப்பட்ட படம் லீணா மணிமேகலை இயக்கிய‌ செங்கடல் திரைப்படம். பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு பிறகு செங்கடல் படத்திற்கு சென்சார் அனுமதி கிடைத்தது.

செங்க்டல் திரைப்படம் டோக்கியோ, டர்பன்,மொன்றியல், மும்பை, டொரண்டோ, கேன்ஸ் மற்றும் இந்தியன் பனோரமா சார்பாக கோவா பட விழாவிலும் திரையிடப்பட்டது. சென்னை திரைப்படவிழாவில் பல தமிழ் படங்கள் திரையிடப்படுகிறது ஆனால செங்க்டல் திரையிடப்படவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திரைப்படவிழா துவக்கம் நடந்துகொண்டிருந்த போது திடீரென இருக்கைகளிலிருந்து எழுந்து இயக்குனர் லீணா மணிமேகலை, எடிட்டர் லெனின், இயக்குனர் மாமல்லன் கார்த்திக், வெளி ரங்கராஜன் ஆகியோர் கையில் பலகைகள் உடன் திரையிடு திரையிடு செங்கடல் படத்தை திரையிடு என முழக்கம் எழுப்ப ஆரம்பித்தனர்.

இதனால் திரைப்படவிழாவின் துவக்கத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு சரத்குமார் போராட்டக்காரர்களுடன் பேசி பிரச்சனையை அப்போதைக்கு முடித்து வைத்தார்.

செங்கடல் திரையிடப்படுமா....?

-சென்னை திரைப்பட விழாவிலிருந்து சாஃப்ட்வியூ விசுவல் கம்யூனிகேசன் மாணவர்களுடன் தாஸ்..,

பார்வையாளர்களை கவரும் பிரான்ஸ் நாட்டு படங்கள்

சென்னை திரைப்படவிழாவில் பலநாடுகளை சார்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டுChennai International Film Festivalவருகிறது. உலக சினிமாக்களில் ஈரான் நாட்டு படங்களுக்கு எப்போதும் ஒரு ரசிகர் வட்டாரம் இருந்து கொண்டே இருக்கும். அந்நாட்டின் கலாச்சாரத்தை சரியாக பிரதிபலிப்பது என்பதும் சில முக்கிய இயக்குனர்கள் உலக அளவில் பிரபலமானவர்கள் என்பதும் ஒரு காரணம் ஆகும். ஈரானிய சினிமாக்களுக்கு கடுமையான சென்சாருக்கு பிறகே திரைப்பட விழாவுக்கு அனுப்பப்படுகிறது.
பிரான்ஸ் படங்களுக்கு சென்சார் காட்சிகள் தடை என்ற பிரச்சனை எல்லாம் எதுவும்இல்லாததால் படுக்கை அறை காட்சிகளுக்கு பஞ்சம் வைப்பது இல்லை. முத்த காட்சிகளும் சாதாரணமாக பிரான்ஸ் படங்களில் இடம்பெருகிறது. இது தான் காரணமோ இது போன்ற படங்கள் அதிகமாக தேர்வு செய்து பார்க்கப்படுகிறது என  யோசிக்க வைக்கிறது.
ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு பீலிங்ஸ் என்பதை போல.பிரான்ஸ் நாட்டு படங்களை தேர்வு செய்வோருக்கு ஒரு பீலிங்ஸ்….!

கலக்கும் பவர் ஸ்டார் கதிகலக்கும் ரசிகர்கள்…

ஒரே தியேட்டரில் ஒரே படத்தை ஓட்டி ஓட்டி ரொம்ப பிரபலமாகிவிட்டார் பவர் powerstar srinivasanஸ்டார், சமூக வலைத்தளங்களில் இவரை வைத்து தான் பலர் பொழுதுபோக்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு புகழின் உட்சத்தை அடைந்து வருகிறார் என்பது உண்மையா இல்லையா என்பதை சிபிஐ வைத்து தான் கண்டுபிடிக்கணும்..
சென்னை திரைப்பட விழாவில் பவர்ஸ்டாரை பார்த்த பலர் சூப்பர் ஸ்டாரை பார்த்தது போல ( தலைவா மன்னிச்சுடுங்க உங்ககூட ஒப்பிட்டு விட்டேன் ) பரபரப்பாகி வருகிறார்கள். பவர்ஸ்டாருடன் நின்று போட்டோ எடுக்க கூட்டம் அலை மோதுகிறது. பல சமயங்களில் பவர்ஸ்டாரை காப்பாத்த பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள் .
சில ரசிகர்கள் நாளைய முதல்வரே என்றெல்லாம் கத்த ஆரம்பித்தனர். இதெல்லாம் அவருக்கான உண்மையான ரசிகர்கள் என்று நம்புகிறார் போல, ஃபேஸ்புக் பார்த்தா தான் தெரியும் பவர் ஸ்டார் காமெடி பீசா டெரர் பீசா என்று…
உங்களை வச்சு கண்டிப்பாக யாரும் காமெடி பண்ணல பவர்ஸ்டார்…!!!!
- சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலிருந்து சாஃப்ட்வியூ விசுவல் கம்யூனிகேசன் மாணவர்களுடன் தாஸ்..,

Friday, 16 December 2011

வடிவேலு மீது கொலை கேஸ் மேனேஜர் சாவில் மர்மம்


எக்கச்சக்க சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. நில மோசடி, அல்லது நிலத்தை வாங்கி ஏமாந்த விவகாரம் என்று மிக சாதாரணமாகதான் இருந்தது அவரதுvadiveluபோலீஸ் ஸ்டேஷன் போக்குவரத்து. திடீரென்று கொலை, சாவு, ஒப்பாரி என்று இதே போலீஸ் ஸ்டேஷன் போக்குவரத்து வேறு திசையில் திருப்பிவிடப் பட்டிருப்பதால் அவரும் அவருக்கு நெருக்கமானவ்ர்களும் இப்போது பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
வடிவேலுவின் மேனேஜராக இருந்த வேலுச்சாமி திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அப்போதே இந்த சாவில் மர்மம் இருப்பதாக கிசுகிசுத்தார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால் பல வருடங்கள் கழித்து இந்த பிரச்சனையை கொலை என கூறி அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறார் வேலுச்சாமியின் மனைவி பாண்டீஸ்வரி.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பாண்டீஸ்வரி கூறியிருப்பதாவது-
'நடிகர் வடிவேலுவிடம் எனது கணவர் வேலுச்சாமி மேனேஜராக வேலை பார்த்தார். கடந்த 4.2.2009-ல் வேலுச்சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வடிவேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடபழனி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது கணவரை வடிவேலு கொலை செய்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்.
கடந்த ஆட்சியில் தி.மு.க. தலைவர்களிடம் வடிவேலு நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு எதிராக என்னால் புகார் கொடுக்க முடியவில்லை. 19.8.2011-ல் எனது கணவர் சாவு குறித்து சந்தேகம் எழுப்பி போலீஸ் டி.ஜி. பி.யிடம் புகார் மனு அளித்தேன். அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு இரு மகன்கள் உள்ளனர். எங்களுக்கு மிரட்டல்கள் வருகிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது கணவர் சாவு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாண்டீஸ்வரி சார்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகி வாதாடும் போது நடிகர் ராஜ்கிரணிடம் வடிவேலுவை அறிமுகம் செய்து வைத்தது வேலுச்சாமிதான். முதலில் வேலுச்சாமி ராஜ்கிரணிடம் கணக்கு பிள்ளையாக இருந்தார். பிறகு வடிவேலுக்கு மானேஜரானார்.
நில மோசடி பிரச்சினை எழுந்த போது வேலுச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதில் சந்தேகம் எழுகிறது. இந்த சாவு குறித்து பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். இது வரை கோர்ட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றார். இதையடுத்து பாண்டீஸ்வரி புகார் மனு குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

நமீதாவின் சிக்கன் ஆசை மூணு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி


சில காலம் ஆகிவிட்டது நமீதாவை பார்த்து. தெலுங்கு, போஜ்பூரி, கன்னடம் என்று வேற்று மொழி ஏரியாவில் வெயிட் காட்டிக் கொண்டிருக்கிறாராம். அதனால்தான் இந்தnamithaஆப்சென்ட். ஆனால் சில தினங்களுக்கு முன் நடந்த கொள்ளைக்காரன் ஆடியோ விழாவில் அதிசயமாக பார்க்க முடிந்தது அவரை. அதே வெயிட், அங்குலம் கூட ஏறாத சதைப்பற்று என்று நமீதாவின் கட்டுமஸ்தான கவர்ச்சி எப்போதும் போலவே வெளிப்பட்டது.
‘தெய்வமே வரம் கொடு’ என்பதை போல ரசிகர்கள் அவரை விரட்டி விரட்டி ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தார்கள். நமீதாவை பார்த்ததும்தான் நமக்கும் அந்த ரெஸ்ட்ராரெண்ட் நினைவு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் நம்பை அழைத்த சப்-வே என்ற ரெஸ்ட்ராரெண்ட்டின் முதலாளி விபின் சத்சேவ் ‘நமீதா மேடம் நம்ம ரெஸ்ட்ரெண்ட் டிஷ் என்றால் இன்னும் ரெண்டு பீஸ் சேர்த்து சாப்பிடுவாங்க. அதுக்கு காரணம் ருசி மட்டுமல்ல, இங்கு கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சியைதான் கொடுக்கிறோம்’ என்றார். இதே ரெஸ்ட்ராரெண்ட்டில் ஏகப்பட்ட நமீதாக்கள் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிந்தது. வாயை கட்டவும் முடியாமல், கொழுப்பை சகிக்கவும் முடியாமல் தவிக்கும் அநேக அழகிகளுக்கு சொர்க்கமாக திகழ்வது இந்த சப்-வேதான் என்பதை சொல்லாமல் சொல்லியது அந்த கலக்கல் ஏரியா.
அவ்வப்போது இவர்களுக்கு போன் அடித்து, சிக்கன் ஐட்டங்களை வரவழைத்து உள்ளே தள்ளும் நமீதா, எல்லா பேட்டிகளிலும் தவறாமல் குறிப்பிடுவது தனக்கு சிக்கன் ரொம்ப பிடிககும் என்பதைதான்.
அடடே, ஒரு சிக்கனே சிக்கனை சாப்பிடுகிறதே. (மூணு புள்ளி, ஒரு ஆச்சர்யக்குறியை சேர்த்து படிக்கவும்)

வெற்றிமாறனை அதிர வைத்த தலைப்பு சமாச்சாரம்


பொன்னை வைத்த இடத்தில் புண்ணாக்கை வைத்த மாதிரி என்னப்பா சோதனை இதுvetrimaranஎன்று அலறுகிறார்கள் வெற்றிமாறன் ஆபிசில். கிணற்று வெள்ளத்தை ஆற்று வெள்ளமா அடித்துக் கொண்டு போகும் என்ற சொலவாடையை சூர்ப்பனகை மூக்கறுத்த மாதிரி அறுத்து தள்ளிவிட்டார் பவர் ஸ்டார்.
விஷயம் இதுதான். பொல்லாதவன் படத்தை எடுப்பதற்கு முன்பே வெற்றிமாறன் மனதில் இருந்த கதையும் அதற்கான தலைப்பும் தேசிய நெடுஞ்சாலை என்பதுதான். ஆனால் முதலில் பொல்லாதவன் எடுப்போம். அப்புறம் பார்க்கலாம் தேசிய நெடுஞ்சாலையை என்று கூறிவிட்டார் தயாரிப்பாளர்.
ஆனால் தன் முதல் கதையை எப்படியாவது படமாக்கிவிட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் யோசிக்கும் வெற்றிமாறன், தற்போது இயக்கி வரும் வடசென்னை முடிந்ததும் தேசிய நெடுஞ்சாலைதான் என்று முடிவே செய்திருந்தாராம். இந்த நேரத்தில்தான் 'பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் தேசிய நெடுஞ்சாலை' என்று நாளிதழ்களில் விளம்பரம் வந்து வெற்றி மாறனை வெறி கொள்ள வைத்துவிட்டது.
என்னாச்சு என்று விசாரித்தால், மேற்படி தலைப்பை ரினீவல் செய்யாமல் விட்டு விட்டார்களாம் வெற்றி மாறன் தரப்பில். இதற்காகவே காத்திருந்த சீனிவாசன் டைட்டிலை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டாராம்.
ஒருமுறை பவர் ஸ்டார் படம் போட்டு விளம்பரம் வந்தபின் அந்த தலைப்பை பற்றி இனிமேல் கனவில் கூட யோசிக்க வேண்டாம். எல்லாம் எண்ணெய் தேய்ச்சு குளிங்கப்பா என்று குமைந்துவிட்டாராம் வெற்றிமாறனும்.

நாமதான் வளர்த்துவிடணும்... நடிகர் பிரபு ரெகமன்டேஷன்


ஆந்திரா ஸ்டார் மோகன்பாபுவுக்கும் அந்தகால சென்னைக்கும் அநியாய நெருக்கம்Mohan Babu - Manoj உண்டு. இவரும் ரஜினியும் பிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படித்தவர்கள் மட்டுமல்ல, ஒன்றாகவே இணைந்து ஊர் வம்பை இழுத்தவர்களும் கூட. இந்த பசுமைகால வாழ்வை அப்படியே நினைவில் வைத்திருக்கும் மோகன்பாபு இப்பவும் ரஜினியை மீடியா முன்பு அவன் இவன் என்று சொல்வதே அலாதி அழகுதான்.
தனது வாரிசை எப்படியாவது தமிழ் படங்களில் வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்ற மாறாத ஆசையும் இருக்கிறது மோகன்பாவுக்கு. என்னை தெரியுமா என்று ஏற்கனவே ஒரு படத்தை இங்கு ரிலீஸ் செய்தார் அவர். அது மோகன்பாபுவுக்கும் சரி, அவரது மகன் மனோஜுக்கும் சரி, கொழுத்த லாபத்தை கொடுக்கவில்லை எந்த வகையிலும். இந்த நிலையில்தான் மீண்டும் முயல்கிறார் மனோஜ். இந்த முறை இந்த முயற்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பது மோகன்பாபுவின் மகள் லட்சுமி. இவர் தயாரிக்கும் புதிய படத்தில் தம்பியை ஹீரோவாக்கிவிட்டார். இது தமிழ் தெலுங்கில் எடுக்கப்படும் படம் என்று சாதித்தார்கள் இருவரும்.
படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபு ஒரு விஷயத்தை சொன்னார் இப்படMohan Babu - Manoj பூஜையில். நடிகர் திலகம் சிவாஜிதான் மோகன்பாபுவை முதலில் தமிழில் நடிக்க வைத்தாராம். இவர் நடித்த அண்ணன் ஒரு கோவில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் மோகன். ''நான் சின்ன புள்ளையா இருக்கிற காலத்திலிருந்தே ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல அன்பும் நெருக்கமும் உண்டு. வந்தாரை வாழ வைக்கும் பண்பு நம்ம எல்லாருக்கும் இருக்கு. அதனால் ஆந்திராவில் செட்டில் ஆகிட்டாலும் தமிழ்நாட்டிலேயே வளர்ந்து இங்கேயே படிச்ச மனோஜுக்கும் இந்த படத்திற்கும் நீங்கதான் சப்போர்ட் பண்ணணும்'' என்று கேட்டுக் கொண்டார் பிரபு.
இப்படத்தில் மனோஜுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் தீக்ஷாசேத். ராஜபாட்டை வந்து வெற்றி பெற்றால் மனோஜ் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ஒரு அட்ராக்ஷன் கிடைக்கலாம்.

ஒஸ்தி ரிசல்ட்? சிம்புவிடம் கறார் காட்டும் தயாரிப்பாளர்


ஒஸ்தி ஃபீவரிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுவிட்டார் சிம்பு. ஆனால் அவரைosthiவைத்து படம் எடுக்கும் அடுத்தப்பட தயாரிப்பாளர்கள் மீண்டார்களா என்றால் அதுதான் இல்லை. இவரை வைத்து வேட்டை மன்னன் படத்தை தயாரித்து வரும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டுவிட்டாராம் இப்போது.
ஒஸ்தி ரிலீஸ் நேரத்தில் தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எல்லாரும் முந்தைய கடன் பாக்கிக்காக டி.ஆரை நெருக்கியதை கண் கூடாக கவனித்த சக்கரவர்த்தி, முதல் ஷெட்யூல் படப்பிடிப்புக்கு பிறகு ரெண்டாவது ஷெட்யூல் பற்றி யோசிக்கணும் என்றாராம் சிம்புவிடம். இதுவரைக்கும் இவ்வளவு செலவு பண்ணியிருக்கேன். இந்த படத்திற்கு இன்னும் செலவு செய்து முடிக்கும்போது முந்தைய கடன் பாக்கியை கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் பண்ண விடுவேன்னு பிரச்சனை பண்ணினால் என்னால் முடியாது. இப்பவே எல்லா தியேட்டர்காரர்களையும், விநியோகஸ்தர்களையும் அழைத்து பேசி சரியாக வந்தால்தான் அடுத்த ஷெட்யூல் என்று கூறிவிட்டாராம்.
அதுமட்டுமல்ல, சிம்புவை இயக்கிக் கொண்டிருக்கும் வேட்டை மன்னன் இயக்குனர் நெல்சனிடம் இன்னும் எத்தனை நாட்கள் ஷுட்டிங் நடக்கும்? சிம்பு ஒரு நாள் கூட டேட்ஸ் வேஸ்ட் பண்ணாமல் வருவாரா என்றெல்லாம் நச்சரித்துவிட்டாராம்.
புத்துக்குள் கைய விடுறதா முடிவு பண்ணிட்டாரு. க்ளவுஸ் போட்டுக்கறது தப்பில்லையே?

பிரபாகரன் வேடத்தில் சத்யராஜ் பரபரப்பாக உருவாகும் சினிமா


Sathya rajபெரும்பாலான ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும்போதெல்லாம், சாகுறதுக்குள்ளே ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சுடணும். அதுதான் என் ஆசை என்றெல்லாம் அளப்பார்கள். ஆனால் யாராவது அந்த குறிப்பிட்ட கேரக்டரோடு வந்தால், '...ந்தா. சுவிட்சர்லாந்துல டீ குடிச்சுட்டு வந்துடறேன்' என்று எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
அப்படி எல்லாரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து, ஒரே நேரத்தில் அலறவும் வைக்கிற கேரக்டர் மாவீரன் பிரபாகரன் வேடம்தான். ஆனால் எவ்வித பதற்றமோ, பயமோ இல்லாமல் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் சத்யராஜ். நடிகர் நந்தா தற்போது விடுதலைப்புலி திலீபனின் வரலாற்றை படமாக்கிக் கொண்டிருக்கிறார். இடையில் நிறுத்தப்பட்டிருந்த இப்படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு விட்டது.
இதில்தான் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறார் சத்யராஜ். திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது அவரை நேரில் சந்தித்தாரல்லவா பிரபாகரன்? அந்த ஒரு நிமிட காட்சியில்தான் நடிக்கப்போகிறார் சத்யராஜ்.

ஒப்புக் கொண்டார் விஜய் பறித்துக் கொண்டார் சூர்யா... -அதிரடியான முயல்-ஆமை ஓட்டம்


ஒவ்வொரு கட்டத்திலும் விஜய்யை வெற்றி கொள்வதையே தனது லட்சியமாக வைத்திருக்கிறார் சூர்யா. கண்ணுக்கு தெரியாத இந்த காட்டுத்தனமான போட்டி, முயல்- ஆமை ஓட்டம் போல செம சுவாரஸ்யம்.
'மாற்றான்' பட சம்பளத்துடன் சேர்த்து தெலுங்கு உரிமையையும் வாங்கிக் கொண்டிருக்கும் சூர்யா, தனது கணக்குப்படி பார்த்தால் கூட பதினெட்டு கோடி ரூபாய் சம்பளத்தை 'கிராஸ்' செய்துவிட்டார். Surya - Vijayஇந்த சம்பளத்தை இன்னும் விஜய்யே தொடவில்லை என்பதுதான் வேதனை.
ஒவ்வொரு முறையும் முதலில் விஜய்யிடம் சொல்லப்பட்ட சில கதைகளில் நடித்துதான் இத்தனை பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார் சூர்யா. இவரது லேட்டஸ்ட் கபளீகரம் முன்னணி சேனல் ஒன்றில் வெளிவரப்போகும் கேம் ஷோ.
முதலில் இந்த நிகழ்ச்சியை விஜய் நடத்துவதாகதான் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் சம்பளமும் பேசப்பட்டதாம். ஆனால் இடையில் என்ன நடந்து யார் குழப்பிவிட்டார்களோ தெரியாது. விஜய்க்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் சூர்யா. மாற்றான் படப்பிடிப்புக்காக இத்தாலி போயிருந்தவர், சென்னை திரும்பிவிட்டார். பெரிய செட் போட்டு படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார்கள். அநேகமாக பொங்கலில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம்.

Wednesday, 14 December 2011

திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்: நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு


நடிகை தமன்னாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. கடைசியாக வேங்கை என்ற படத்தில் நடித்தார். தற்போது 5 தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன. ராம்சரண் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்து வருகிறது. நேற்று படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார். ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில் நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. அவர்கள் கோவில் நிர்வாகத்தினரை கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை முடித்து விட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார்.
ராம்சரண் வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரை பார்க்க ஒவ்வொரு வரும் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ராம்சரண் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, எனது திருமணம் ஜனவரியில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. திருமண வரவேற்பை திருப்பதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
                                                               123tamilcinema.com        

யானைகளிடம் இருந்து கார்த்தி, அனுஷ்கா உயிர் தப்பினர்


கார்த்தியும் அனுஷ்காவும் புதுப்படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். சுராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு மாதமாக நடந்தது. அங்கு பங்களா வீடு போன்ற அரங்கு அமைத்து காட்சிகளை எடுத்தனர்.
பின்னர் யானைகள் நடமாடும் ஆபத்தான பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்தது. உள்ளூர் பகுதி மக்கள் அங்கு யானைகள் கூட்டம் கூட்டமாய் வரும் என்றும் எப்போதும் வரும் என்பதை சொல்ல முடியாது என்றும் எச்சரித்தனர். ஆனால் லொக்கேஷன் அற்புதமாக இருந்ததால் படப்பிடிப்பை நிறுத்த மனமின்றி கார்த்தி, அனுஷ்கா நடித்த சில காட்சிகளை எடுத்தனர்.
படப்பிடிப்பை முடித்து விட்டு இருவரும் புறப்பட்டுச் சென்றதும் திடீரென அந்த பகுதியில் யானைக்கூட்டம் வந்தன. கார்த்தியும் அனுஷ்காவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுபற்றி கார்த்தி கூறும் போது, சாலக்குடி காட்டில் யானைகள் அடிக்கடி வந்து போகும் இடத்தில் படப்பிடிப்பு நடந்தது.
சூட்டிங் முடிந்து நாங்கள் புறப்பட்டு போனதும் அங்கு யானை கூட்டம் வந்து இருப்பதாக தகவல் சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாக தப்பினோம். ஏற்கனவே “ஆயிரத்தில் ஒருவன்” படப்பிடிப்புக்காக சாலக்குடி காட்டுக்கு போய் உள்ளேன். அழகான இடம் என்றார்.
                                                      123tamilcinema.com

25 லட்ச ரூபாய் ! : திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு


9வது சென்னை உலக திரைப்பட விழா டிசம்பர் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்த ஆண்டு சுமார் 154 படங்களை திரையிட இருக்கிறார்கள்.
154 படங்களில் 133 படங்கள் 44 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. இம்முறை உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, சத்யம், ஐநாக்ஸ், பிலிம் சேம்பர் என சென்னையில் ஐந்து திரையரங்குகளில் திரையிட இருக்கிறார்கள். 14ம் தேதி இவ்விழாவை சேகர் கபூர் துவக்கி வைக்க இருக்கிறார்.
தமிழில் இருந்து 12 படங்கள் இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. ‘அவன் இவன்’, ‘ஆடுகளம்’, ‘மைதானம்’, ‘முரண்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘வாகை சூட வா’, ‘வர்ணம்’, ‘வெங்காயம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தூங்காநகரம்’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘கோ’ஆகிய படங்கள் இம்முறை திரையிட தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
சென்னையில் நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனால் CIFF குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதுகுறித்து சுஹாசினி ” சென்னையில் நடைபெற உள்ள திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா 25 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். அதற்காக எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
சரத்குமார், நான், தங்கராஜ் சார், ஜெயேந்திரா சார் ஆகியோர் இணைந்து தமிழக முதல்வரை சந்திக்க சென்றோம். திரைப்பட விழா குறித்து அனைத்து தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்.
கண்டிப்பாக அடுத்த ஆண்டு 10வது திரைப்பட விழா பிரம்மாண்டமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுத்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது. இந்நேரத்தில் அதை தெளிவுபடுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். அக்டோபர் 24, 2010 முதல் அக்டோபர் 23, 2011 வரை வெளிவந்த படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. படத்தின் தயாரிப்பாளர்கள் ENGLISH SUB TITLES போட்டு படத்தினை எங்களுக்கு அனுப்ப வேண்டும். எங்களுக்கு வந்த படங்களில் இருந்து மட்டுமே தேர்வு செய்து இருக்கிறோம். ” என்று தெரிவித்தார்.
                                                            
இம்முறை CIFF புதிதாக நிறைய வசதிகளை செய்துள்ளது. இத்திரைப்பட விழாவைக் காண சினிமா ஆர்வலர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
                                            123tamilcinema.com

முகமூடி உருவான கதை!


முகமுடி கதையைக் கேட்க எனது அலுவலகத்துக்கு வரமுடியுமா என்று ஜீவாவிடம் கேட்ட பத்து நிமிடத்தில் என் முன்னாள் நின்றார். அதேபோல ஆறுமாதம் குங்பூ பயிற்சி எடுக்க வேண்டும் முடியுமா என்றேன், அவரோ ஆறு வருடமாக குங்பூ பயிற்சியில இருக்கேன் என்றார். இந்தத் தகுதியை பல ஹிரோக்களிடம் எதிர்பார்த்து அவர்களிடம் இல்லாமல் போய் விட்டது என்று நேற்று சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்த முகமுடி தொடக்க விழாவில் குறிப்பிட்டார் இயக்குனர் மிஷ்கின்.
இந்தக் கதையும், இந்தப் படத்தின் டைட்டிலும் உருவாகக் காரணம், சிறுவயத்தில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள்தான். அவைதான் என்னுள் சினிமா இயக்கவேண்டும் என்ற கனவை விதைத்தவை என்று சொன்ன மிஷ்கினுக்கு இது மிஷ்கினின் கனவுப் படம் என்கிறார்கள்.
ஜீவா – மிஸ் யுனிவர்ஸ் பைனலிஸ்ட் பூஜை ஹெக்டே ஜோடியாக நடிக்க பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போல ஒரு உண்மையான முதல் சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது என்கிறார் படத்தை தயாரிக்கும் யூடிவின் தென்னிந்திய நிர்வாகி தனஞ்செயன்.
தொடக்க விழா அன்றே படப்பிடிப்பை தொடங்கிய மிஷ்கின், முதல் கட்ட படபிடிப்பில் பிரமாண்ட குங்பூ போட்டியை படமாக்கிக் கொண்டிருந்தார். ஏராளமான துணை நடிகர்கள் குங்பூ சீருடையில் கலந்து கொண்டனர். ஷங்கர் முருகதாஸ் போல ஹாலிவுட்டில் ஆள் பிடிக்காமல் ஆக்‌ஷன் காட்சிகளுகான குங்பூ சண்டைகளை வடிவமைக்க சென்னையை சேர்ந்த குங்பூ மாஸ்டர் சேகரையும் (இவரிடம் மிஷ்கினும் குங்பூ கற்றுக்கொண்டாராம்) திலிப் சுப்ராயணையும் ஆக்‌ஷன் டைரக்டர்களாக நியமித்துள்ளார்.
நரேன் வில்லனாகவும் நாசர் போலீஸ் அதிகாரியாகவும் முன்னாள் ஹீரோ செல்வா, ஜீவாவின் குங்பூ மாஸ்டராகவும் நடிக்கிறார்கள். இந்தப்படம் ஆடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக இருக்கிறது.
                                                   123tamilcinema.com

முகமூடி உருவான கதை!


முகமுடி கதையைக் கேட்க எனது அலுவலகத்துக்கு வரமுடியுமா என்று ஜீவாவிடம் கேட்ட பத்து நிமிடத்தில் என் முன்னாள் நின்றார். அதேபோல ஆறுமாதம் குங்பூ பயிற்சி எடுக்க வேண்டும் முடியுமா என்றேன், அவரோ ஆறு வருடமாக குங்பூ பயிற்சியில இருக்கேன் என்றார். இந்தத் தகுதியை பல ஹிரோக்களிடம் எதிர்பார்த்து அவர்களிடம் இல்லாமல் போய் விட்டது என்று நேற்று சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்த முகமுடி தொடக்க விழாவில் குறிப்பிட்டார் இயக்குனர் மிஷ்கின்.
இந்தக் கதையும், இந்தப் படத்தின் டைட்டிலும் உருவாகக் காரணம், சிறுவயத்தில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள்தான். அவைதான் என்னுள் சினிமா இயக்கவேண்டும் என்ற கனவை விதைத்தவை என்று சொன்ன மிஷ்கினுக்கு இது மிஷ்கினின் கனவுப் படம் என்கிறார்கள்.
ஜீவா – மிஸ் யுனிவர்ஸ் பைனலிஸ்ட் பூஜை ஹெக்டே ஜோடியாக நடிக்க பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போல ஒரு உண்மையான முதல் சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது என்கிறார் படத்தை தயாரிக்கும் யூடிவின் தென்னிந்திய நிர்வாகி தனஞ்செயன்.
தொடக்க விழா அன்றே படப்பிடிப்பை தொடங்கிய மிஷ்கின், முதல் கட்ட படபிடிப்பில் பிரமாண்ட குங்பூ போட்டியை படமாக்கிக் கொண்டிருந்தார். ஏராளமான துணை நடிகர்கள் குங்பூ சீருடையில் கலந்து கொண்டனர். ஷங்கர் முருகதாஸ் போல ஹாலிவுட்டில் ஆள் பிடிக்காமல் ஆக்‌ஷன் காட்சிகளுகான குங்பூ சண்டைகளை வடிவமைக்க சென்னையை சேர்ந்த குங்பூ மாஸ்டர் சேகரையும் (இவரிடம் மிஷ்கினும் குங்பூ கற்றுக்கொண்டாராம்) திலிப் சுப்ராயணையும் ஆக்‌ஷன் டைரக்டர்களாக நியமித்துள்ளார்.
நரேன் வில்லனாகவும் நாசர் போலீஸ் அதிகாரியாகவும் முன்னாள் ஹீரோ செல்வா, ஜீவாவின் குங்பூ மாஸ்டராகவும் நடிக்கிறார்கள். இந்தப்படம் ஆடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக இருக்கிறது.
                                                   123tamilcinema.com

Tuesday, 13 December 2011

சிலுக்கை கடித்த கொசுக்களும், கோடம்பாக்கத்தில் மிரட்டலும்...


சிலுக்கை கடித்த கொசு கோடம்பாக்கத்தை விட்டு நகராதல்லவா? அப்படிதான் ஆகிவிட்டது இந்து மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியின் நிலைமை.asinகோடம்பாக்கத்தையும் வடபழனியையும் சுற்றி சுற்றியே கட்சி நடத்தி கதையை ஓட்டி விடுவார்கள் போலிருக்கிறது. சினிமாவுக்குள் எது நடந்தாலும் முதலில் வேர்ப்பது இவர்கள் மூக்குதான். இதே பிரச்சனை வேறொரு அரசியல்வாதி ஏரியாவில் நடந்தால் இவர்கள் மூச் காட்டமாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்ததை கூட வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். (சென்னையே புழுதி மயமாகிக் கிடக்கிறது. சாலைகள் அத்தனையும் வேஸ்ட் என்கிற நிலைமை. ஒரு முறையாவது அறிக்கை கொடுத்திருப்பார்களா இவர்கள்?)
சினிமாவை தொட்டால்தான் விளம்பரம் என்பதை மிக சரியாக புரிந்து வைத்திருக்கும் இவர்கள் இந்த முறை வேர்த்திருப்பது எதனால்? கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அசின் நடிக்கப் போகிறார் என்றொரு பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. அசின் இலங்கைக்கு சென்று வந்தவர். அதனால் அவரை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் ரஜினி வீட்டுக்கு முன்பு போராட்டம் நடத்துவோம் என்று உடனே ஆஜர் கொடுத்துவிட்டார்கள் இவர்கள்.
தொல்.திருமாவளவன் சினிமாவில் நடிக்க வந்தபோது, இனிமே எங்க தலைவர்தான் நடிகர் சங்கத்திற்கும் தலைவர் என்று அவருக்கே தெரியாமல் கொக்கரித்தார்கள் அவரது அடிப்பொடிகள். அதெல்லாம் எப்படி நடக்காமல் போனதோ, அப்படிதான் அமையும் இதுபோன்ற மின்மினிப்பூச்சி ஐடியாக்கள் எல்லாம்.
புரிந்து கொள்ளுங்கள் பிரதர்ஸ்... 

ஒரே ஒரு குத்துப்பாட்டு ஆட வந்த அரசியல் ரோஜா


ஒரு பாடலுக்கு ஆடுவது சினிமாவை பொறுத்தவரை ரிலாக்ஸ் ஏரியா.rojaஆடுகிறவர்களுக்கும் சரி, அதை ரசிக்கிறவர்களுக்கும் சரி, பொரிக்கடலையை கொறித்த மாதிரி பொழுதுபோக்கிலும் ஒரு பொழுதுபோக்காக அமைகிற விஷயம் அது. தமிழ்சினிமாவில் ஒற்றை பாடல் என்றால் அந்த காலத்தில் ஜெயமாலினியில் ஆரம்பித்து லேட்டஸ்ட் சுஜா வரைக்கும் திரும்ப திரும்ப ஒருவரே ஆடி, ஒருவரே சுளுக்கிக் கொள்கிற அளவுக்கு போரடிக்கிற சமாச்சாரம் ஆகிவிட்டது.
இதையெல்லாம் முறியடிக்கிற மாதிரி ஆன்ட்டிகளை இறக்கிவிட்டு அதகளம் கிளப்பினார்கள் நடன இயக்குனர்களான தினேஷும், பாபியும். ஜில்லா விட்டு ஜில்லா வந்து பாடலில் ஆடிய ஆன்ட்டி நம்மை கவர்ந்தார் என்றால் அந்த புண்ணியம் தினேஷுக்குதான் போய் சேர வேண்டும். மைனாவில் வரும் பஸ் பாடலும் அந்த கருப்பு ஆன்ட்டியும் கவனத்தை ஈர்த்தார்கள் என்றால் அது பாபி புண்ணியம்.

ஜெயம் ரவியின் திடீர் முடிவு பின்னணி காரணம் எது?


அட, இப்படியும் நடக்குமா என்று ஆச்சர்யப்படுகிறார்கள் கோடம்பாக்கத்தில். ஒருJeyam Raviபடத்தின் கதையை எழுதி முடித்ததும் அதை எந்த காட்சியில் இருந்து வேண்டுமானாலும் படம் பிடிக்க ஆரம்பிக்கலாம் என்பதுதான் சினிமாவின் நெளவு சுளிவு. முதலில் க்ளைமாக்சில் இருந்தே கூட படம் பிடிக்கலாம். அல்லது நடுவில் ஏதாவது ஒரு இடத்திலிருந்து எடுப்பார்கள். அவரவர் சவுகர்யத்திற்கு ஏற்றார் போலதான் அமையும் இந்த வரிசைமுறை.
ஆனால் அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படப்பிடிப்பு அப்படி நடக்கவில்லையாம். டைட்டிலில் ஆரம்பித்து கிளைமாக்சை நோக்கி ஒவ்வொரு காட்சியாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம். வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு போனால், அங்கு நடப்பதாக எழுதப்பட்ட அத்தனை சம்பவங்களையும் படம் பிடித்து விட்டு வருவதுதானே ஆரோக்கியம்? ஆனால் ஒரே நாட்டுக்கு இரண்டு மூன்று முறை போய் ஷுட்டிங் எடுக்கிற மாதிரி நடக்கிறதாம் இவரது படத்தில் மட்டும்.
                                                                               மேலும் படிக்க....

விளம்பரத்தில் தன் பெயர்.... அதிர்ச்சியில் இசையமைப்பாளர்


S.S.Kumaranகடும் கோபத்திலிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். பூ, களவாணிபோன்ற நல்ல நல்ல படங்களுக்கு இசையமைத்த இவரை, இவரே இசையமைக்காத ஒரு படத்திற்கு இசையமைத்ததாக விளம்பரம் செய்தால் கோபம் வராதா என்ன?
கடந்த வாரத்தில் வெளிவந்த படம் வெண்மணி. இப்படத்தை கதாக.திருமாவளவன் இயக்கியிருக்கிறார். கார்த்திக் ஜெய் என்பவர் தயாரித்து நடித்தும் இருக்கிறார். இப்படத்தை பார்ப்பவர்களுக்கு சிறு அதிர்ச்சி காத்திருக்கும். ஏனென்றால் இதே கார்த்திக் ஜெய் நடித்து தயாரிக்கவும் செய்த நெல்லு என்ற படத்தையே திரும்பவும் பிளாக் ஒயிட்டில் ஒரு மணி நேரம் ஒடவிட்டிருப்பார்கள் இந்த வெண்மணியில். இது படத்தில் வரும் பிளாஷ்பேக்காம்.
                  மேலும் படிக்க....

தி டர்ட்டி பிக்சருக்கு போட்டியாக ‘சிலுக்கு’-வினு பிடிவாதம்


செத்த பின்பும் கொட்டிக் கொடுத்திருக்கிறார் சில்க். இவரது கதையை பாலிவுட்டில் தி Silk Smitha டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் எடுத்திருந்தார்கள் அல்லவா? வித்யாபாலன் நடித்த அந்த படத்தின் முதல் வார கலெக்ஷனே ஐம்பது கோடியை தாண்டிவிட்டதாம். நமக்கு தோணலையே என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் சில இயக்குனர்கள். இந்த நேரத்தில் சில்க்கை நாட்டுக்கு அர்ப்பணித்த வினுச்சக்கரவர்த்தி இந்த படத்தின் வெற்றி பற்றி என்ன சொல்கிறார்?
சிலுக்கை பற்றி முழுசா தெரிஞ்சா ஒரே ஆள் நான்தான். அது மனசும் அதுக்குள்ள இருந்த வலியும் எனக்குதான் தெரியும். சிலுக்கு கதையை ஏக்தா கபூர் எடுக்கறதை கேள்விப்பட்டவுடனே நான் பேசினேன். ஒரிஜனல் தெரியாம பண்ணினா அது சிலுக்கு படமா இருக்காது. செக்ஸ் படமாத்தான் இருக்கும். ஒரிஜனல் கதையை நான் தர்றேன். கோ-டைரக்டராகவும் வேலை செய்யுறேன். ஒத்த பைசா சம்பளம் வேணாம்னு சொன்னேன். அவங்ககிட்ட இருந்து பதிலே இல்லை. எனக்கு அவங்க கொடுத்த மரியாதை அவ்வளவுதான்.
சரி, நடந்தது நடந்து போச்சு. சிலுக்கோட அப்பழுக்கு இல்லாத உண்மைக்கதையை சிலுக்கு ங்கிற பேர்லேயே எடுப்பேன். அந்த படத்தோட வடமாநில டிஸ்ட்ரிபியூஷனை ஏக்தா கபூருக்கே கொடுப்பேன். அதுக்கு அவங்க ஒரு பைசா பணம் தரத் தேவையில்லை. ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினா அது போதும். சிலுக்கோட ஆத்மா சாந்தி அடைஞ்சுரும் என்கிறார் ஆவேசமாக.
ஆக, சிலுக்குக்கு மற்றுமொரு மறு ஜென்மம் இருக்கு போலிருக்கு. 

மீசையில்லாத போலீஸ்? ஜீவாவின் ஒஸ்தியான பேச்சு


மிஷ்கினின் பல நாள் கனவுதானாம் இந்த முகமூடி. எதையும் 'மூடி' மறைக்காமல்Mugamoodiபேசும் மிஷ்கின், துவக்க நாளான அன்றும் அப்படியேதான் ஆரம்பித்தார் தனது உரையை. இதுவரைக்கும் நான் பார்த்த ஹீரோக்களிலேயே இப்படி ஒரு டெடிக்கேஷனான ஹீரோவை பார்த்ததே இல்லை. ஜீவாவிடம் இந்த கதையை சொல்லணும்னு நினைச்சேன். என் ஆபிஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமான்னு கேட்டேன். அவ்வளவுதான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் ஆபிசில் இருந்தார் ஜீவா.
மிஷ்கின் 'இடம் சுட்டி பொருள் விளக்கிய' இந்த இடத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மைகள், ஆரம்பத்திலிருந்து இந்த முகமூடி பிரசவத்தை கவனித்தவர்களுக்கு மட்டும் சட்டென்று புரிந்திருக்கும். (புரியாதவர்களுக்கு சில டேக்ஸ். கமல், அஜீத், எக்ஸட்ரா...) போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.
முகமூடி பற்றி நிறைய பேசினார் மிஷ்கின். நான் சின்ன வயசிலே நிறைய காமிக்ஸ் படிச்சிருக்கேன். அந்த கதைகளை படமாக்கணும்னு அப்பவே எனக்கு கனவு இருந்திச்சு. தமிழில் வெளிவரப்போகும் முதல் பிரமாண்ட சூப்பர்மேன் கதையா இந்த முகமூடி இருக்கும். இந்த படத்தை இந்த ஒரு பகுதியோட முடிக்கிற எண்ணமும் எனக்கு இல்லை. முகமூடி பார்ட் ஒன், டூ, த்ரின்னு அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கும்னு நம்புறேன்.
இந்த படத்தில் ஜீவா கமிட் ஆனவுடன் குங்பூ கத்துக்கணும் என்றேன். எனக்குMugamoodiஏற்கனவே தெரியும். ரெண்டு வருஷம் அந்த சண்டையை நான் கத்து வச்சிருக்கேன் என்றார். என்னுடைய வேலை இன்னும் சுலபமாச்சு. ஜீவா 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிச்சு மே மாதம் திரைக்கு கொண்டு வந்துடலாம் என்றார்.
பின்னாலேயே பேச வந்த ஜீவா, 90 நாட்கள் என்ன, 120 நாட்கள் தருகிறேன் என்றார் மிஷ்கினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை போல. வழக்கமாக இருபெரும் நடிகர்கள் முட்டிக் கொள்ளும்போது இடம் கிடைத்தால் போதும். ஒரு வீச்சருவாவை செருகி பார்ப்பார்கள். இந்த முறையும் அதை மின்னல் வேகத்தில் செய்தார் ஜீவா.
மிஷ்கின் சார் அஞ்சாதே படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க என்னைதான் அழைச்சார். சரியா மீசை கூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிக்கறது? அதுக்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்பதால் அப்படத்தில் நடிக்கல என்றார்.
ஜீவாவின் 'ஒஸ்தி'யான பேச்சு புரியுதா பிரதர்ஸ்...?
பி(பெ)ண் குறிப்பு - இப்படத்தின் ஹீரோயின் பூஜா ஹெட்டே மிஸ் யுனிவர்சல் போட்டியில் மோதி முன்னேறி இறுதி வரைக்கும் வந்தவராக்கும்...!

Monday, 12 December 2011

‘பஞ்ச் டயலாக், பற்றியெறியும் தீக்குச்சி....’ ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து்


எளிமை, இனிமை, இவை தந்த பெருமை இம்மூன்றாலும் தன்னை நெருங்கி வரும் முதுமையை விரட்டிக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவரது பிறந்த நாளை முப்பாத்தம்மன் பால் குடம் மாதிரி கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் ஊர் முழுக்க. எந்த பண்பலை வானொலியை திருப்பினாலும் ஏய் ஆட்டோக்காரன் என்றோ, ஒருவன் ஒருவன் முதலாளி என்றோ பாடிக் கொண்டிருக்கிறார் ரஜினி. சேனல்களிலும் அதே உற்சாக திருவிழா.
உடுக்கை சத்தத்திற்கு முன் ஆடும் பூசாரியின் வேகத்தோடு ரஜினிக்காக தன்னையேRajinikanthதாரை வார்த்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த பிறந்த நாள் மட்டும் இன்னும் இன்னும் விசேஷம். அது ஏன் என்பதை அவ்வளவு அலசி பிழிந்து யோசிக்க தேவையில்லை. இசபெல்லாவில் ஆரம்பித்து சிங்கப்பூர் மருத்துவமனை வரைக்கும் அவரது உடம்பை ரணமாக்கின ஊசிகளும் மாத்திரைகளும். எல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டு தவித்தான் ரசிகன்.
வாழ்த்துக்களுக்கு நிகராக, விமர்சன அம்புகளுக்கும் நெஞ்சைக் கொடுத்த புண்ணியவான் ரஜினியாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் அவரை விமர்சித்தவர்கள் கூட, நெஞ்சார பிரார்த்தித்த தருணங்கள்தான் கடந்த சில மாதங்கள். எப்படியோ? எல்லாவற்றையும் கடந்து மரணத்தின் முடிச்சை அவிழ்த்துவிட்டு திரும்பிய வீரனாகிவிட்டார் ரஜினி.
இந்த பிறந்தநாள் மற்றவர்களை போலவே ரஜினிக்கும் சில கடமைகளை விதித்திருக்கிறது. அவற்றை பட்டியலிட்டால் பக்கம் நீளும் என்பதால், ஒரு விஷயத்தை மட்டும் பேசலாம். புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிப்பதை எப்போதுமே தவிர்த்து வந்த ரஜினி, தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் நடிப்பது குடும்ப விஷயம் என்று ஒதுக்கிவிட முடியாது. அதே நேரத்தில் தனது மகளின் திரையுலக பிரவேசத்திற்கு தன்னைவிட சிறந்த வழிகாட்டியும் கிடையாது என்று அவர் நினைத்திருக்கலாம்.
கோச்சடையான் படம் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி துவங்கப்பட்டிருக்கிறது.Rajinikanthபொதுவாகவே ரஜினியின் புதுப்படங்கள் இப்படி வெறும் அறிவிப்போடு துவங்கப்படுவதல்ல. பெரிய பெரிய போஸ்டர்கள், பூஜை, துவக்க விழா என்று ஏக தடபுடலாக இருக்கும். ஆனால் இவை எதுவும் இல்லாத கோச்சடையான் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது மீடியாக்களிடத்திலும் மக்களிடத்திலும். ஊர் வாயை அடைக்கவாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்த கட்டாயம் சவுந்தர்யாவுக்கு இருக்கிறதோ, இல்லையோ. ரஜினிக்கு இருக்கிறது.
ரஜினியின் டெடிக்கேஷன் பற்றி ஆயிரமாயிரம் சம்பவங்கள் சொல்வார்கள் திரையுலகத்தில். பஞ்ச் டயலாக் பேசிவிட்டு படக்கென்று கிடைக்கிற இடத்தில் தீக்குச்சி கொளுத்துவாரே, அந்த வித்தை எப்படி தெரியுமா? எந்த இடத்தில் நெருப்பு பற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ, அந்த இடத்தில் தீப்பெட்டியில் உரசும் பகுதியிலிருக்கும் அந்த மருந்து தடவப்பட்ட பேப்பரை கிழித்து தன் கைப்படவே ஒட்டுவாராம். ஒருவேளை தேய்க்க வேண்டிய இடம் முழுங்கால் பேண்ட் பகுதி என்று வைத்துக் கொள்ளுங்களேன். அந்த பேண்ட்டை வரவழைக்க செய்து, குறிப்பிட்ட பகுதியில் அந்த பேப்பரை வைத்து தன் கைப்படவே ஊசி நுலால் தைப்பாராம்.
இதை அவர் கேட்டால் செய்து தர ஆயிரம் பணியாளர்கள் தயாராக இருந்தாலும் அதை தன் கையால் செய்வதுதான் அவருக்கு திருப்தி. இப்படி ரசிகர்களுக்காக தன்னை எந்நேரமும் ஈடுபடுத்திக் கொண்ட அந்த மாபெரும் நடிகர், கோச்சடையான் விஷயத்திலும் வென்று காட்ட வேண்டும் என்பதே நமது tamilcinema.com-ன் பிறந்த நாள் வாழ்த்து.
வாழ்க ரஜினி, வளர்க அவரது ஸ்டைல்...

Sunday, 11 December 2011

ரஜினி ஜோடி அசின்?

Rajinikanth and Asinகோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அசினுடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான், மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கப்படும் 3 டி சினிமாவாகும். ரஜினி இதில் கோச்சடையான் என்ற பாண்டிய மன்னனாக வருகிறார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வந்தனர். அவர் 2012 வரை படுபிஸி என்பதால், கால்ஷீட் ஒதுக்க முடியாமல் திணறினார்.

இந்த நிலையில், இப்போது அசினுடன் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது. அசினுக்கு கைவசம் பெரிதாக படங்கள் ஏதுமில்லை. இந்தியல் ஒரு படம் ஒப்பந்தமாகியுள்ளார்.

எனவே அவர் ரஜினியுடன் நடிக்க தாராளமாக கால்ஷீட் தருவார் என்கிறார்கள்.

இந்தப் படத்தில் ரஜினி தங்கையாக நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

பவன் கல்யாண் படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கம்-இலியானா சேர்ப்பு

Shruti Hassanதெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்ருதி ஹாசன் தற்போது படத்தில் இல்லையாம். அவருக்குப் பதில் இலியானாவை ஹீரோயினாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தெலுங்கில் உருவாகும் புதிய படம் கப்பார் சிங். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முதலில் ஹீரோயினாக தேர்வானவர் ஸ்ருதி ஹாசன். ஆனால் தற்போது இலியானாவைத் தேடிப் போயுள்ளனராம்.

இந்தப் படம் வேறு எதுவுமல்ல, இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமேக்தான். ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தபாங் ஏற்கனவே தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகியஉள்ளது. டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம்தான் தெலுங்கில் கப்பார் சிங் என்ற பெயரில் உருமாறி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் நீக்கத்திற்கான காரணம் தெரியவில்லை. அதேபோல இலியானாவைத் தேடிப் போனதற்கான காரணமும் தெரியவில்லை. ஒருவேளை கவர்ச்சிக்காக இலியானாவைச் சேர்க்க திட்டமிட்டனரா என்பதும் தெரியவில்லை.

ஆனால் ஸ்ருதி ஹாசன் நீக்கத்தால் நடிகை அமலா பால் சந்தோஷமானதாக ஒரு தகவல் கூறுகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 3 படத்தில் முதலில் அமலா பால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்குப் பதில் ஸ்ருதி ஹாசன் நடித்தார். இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனுக்கு பெரிய பட வாய்ப்பு தெலுங்கில் பறிபோன தகவல் அமலா பாலுக்கு ஹேப்பி நியூஸாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் அப்படியெல்லாம் கிடையாது! - த்ரிஷா

திடீரென்று ஒரு நாள் மாப்பிள்ளை பார்ப்பதாக செய்தி வரும்... அடுத்த நாளே த்ரிஷா தெலுங்குப் படத்தில் ஒப்பந்தம் என்றொரு செய்தி. இன்னொரு நாள் த்ரிஷாவுக்கு அமெரிக்க தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் என்ற செய்தி... இன்னும் இரு தினங்களில், தமிழில் விஷாலுடன் புதுப்படத்தில் ஒப்பந்தம் என்ற அறிவிப்பு... 

என்னதான் நடக்கிறது? புதிய வாய்ப்புகளைப் பிடிக்க த்ரிஷா கையாளும் உத்தியா... 'கால்ஷீட் வேணும்னா இப்பவே வாங்க... இல்லன்னா கல்யாணம்தான்,' என்று மறைமுகமாக சொல்ல வருகிறாரா? த்ரிஷாவிடம் கேட்டால், "ம்ஹூம்... நான் அப்படியெல்லாம் கிடையாது" என்கிறார்.

"இன்னமும் ஓடிப்போய் சான்ஸ் கேட்கும் நிலையிலா நான் இருக்கேன்.... எனக்கான ரோல்களை நான் மட்டும்தான் பண்ணமுடியும். அதனால்தான் என்னைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. கல்யாணம் பண்றது பத்தி இன்னும் முடிவு பண்ணல. என்னைப் புரிந்தவர்தான் எனக்கு கணவனாக முடியும். 

காரணம், எனக்கு நாய்கள்னா ரொம்பப் பிரியம். நிறைய நாய்கள் வளர்க்கிறேன். ஆனால் நாயே புடிக்காத ஒருத்தரைக் கட்டிக்கிட்டு நான் என்ன செய்வேன்... என் லைஃபை அப்புறம் யோசிக்கவே முடியாதே. அதனால சகல விதத்திலும் என்னைப் புரிஞ்சவர்தான் கணவராக இருக்கணும். அப்படியொருத்தரை நான் இன்னும் பார்க்கவே இல்லையே," என்கிறார் த்ரிஷா.

ராணாவில் நடிக்க மாட்டார் தீபிகா படுகோன்?

http://gallery.oneindia.in/celebs/deepika-padukone-11180.htmlராணா படத்தை அதன் தயாரிப்பாளர்கள் கிடப்பில் போட்டு விட்டதால் கடும் அப்செட்டாகியுள்ளாராம் தீபிகா படுகோன். இந்தப் படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கி இத்தனை காலமாக காத்திருந்தும், தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், படத்தை நிறுத்தி வைத்ததால் அவர் கடும் அப்செட்டாகி விட்டாராம். இதனால் ராணா படத்தில் நடிக்கும் எண்ணத்தையும் அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் குறித்து பெரும் குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. முதலில் சுல்தான் தி வாரியர் என்ற படத்தைக் கூறி வந்தனர். பின்னர் ராணா என்ற பெயரில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான பூஜையும் போடப்பட்டது. தீபிகா படுகோன் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபிகாவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, ராணா படப்பிடிப்பு நின்று போனது. அவர் உடல் நலம் குணமடைந்து திரும்பினாலும் கூட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருப்பதால் அவரை ராணா படத்தில் நடிக்க வைப்பது குறித்து குடும்பத்தினரும், படக்குழுவினரும் தீவிர சிந்தனையில் மூழ்கினர்.

இந்த நிலையில்தான் கோச்சடையான் என்ற புதிய பட அறிவிப்பை வெளியிட்டனர். இந்தப் படத்தை அதி நவீன தொழில்நுட்பத்தில், எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவை நாடியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் மேற்பார்வைப் பணியைக் கவனிக்கப் போகும் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதனால் ராணா பட நாயகி தீபிகா கடும் அப்செட்டாகியுள்ளாராம். ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது குறித்து அவரிடம் கருத்து கேட்போரிடம், அதுகுறித்து என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும். நான் இப்போது மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ராணா படம் குறித்து எனக்கு ஒரு தகவலும் தெரியாது. எனவே அதுகுறித்து என்னிடம் கேட்காதீர்கள் என்கிறாராம்.

தீபிகா இப்படி மறைமுகமாக கூறினாலும் கூட இப்படத்தில் நடிக்கும் திட்டத்தை தீபிகா கைவிட்டு விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. மாறாக, ராணா படத்துக்காக ஒதுக்கி வைத்திருந்த கால்ஷீட்களை தற்போது புதிய இந்திப் படங்களுக்கு அவர் ஒதுக்கிக் கொடுத்து விட்டாராம். மீண்டும் ராணா படத் தரப்பில் தன்னை அணுகினாலும் அவர் மறுத்து விடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கமல்ஹாசனின் விஸ்வரூபம், ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் புதிய படம் உள்ளிட்ட பல முக்கியப் படங்களிலும் நடிக்க தீபிகாவை அணுகினர். ஆனால் அவர் நடிக்க முன்வரவில்லை. தற்போது ரஜினி படத்திலிருந்தும் அவர் நழுவவுள்ளதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்பாபு வீட்டில் வருமானவரி சோதனை!

முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வீட்டில் நேற்று வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். பிரபல தெலுங்கு நடிகர் - தயாரிப்பாளர் கிருஷ்ணாவின் மகனுமான மகேஷ்பாபுவின் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த 'திடீர்' சோதனை நடந்தது. 

மகேஷ்பாபு இப்போது நடித்துவரும் தி பிஸினஸ்மேன் படத்தின் தயாரிப்பாளர் வீடுகள், பட அலுவலகம் என பல இடங்களிலும் இந்த சோதனை நடந்தது. மகேஷ்பாபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், பல கோடி ரூபாய் மதிப்பு மிக்க ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த சோதனையின் போது, மகேஷ்பாபு, ஒரு படப்பிடிப்பில் இருந்தார். தகவல் அறிந்து, அவர் உடனடியாக வீட்டுக்கு விரைந்தார். தெலுங்கு சினிமாவில் மிக அதிகமான சம்பளம் பெறுபவர் மகேஷ்பாபு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பென்னிகுயிக்கை ஊழல்வாதியாக சித்தரித்தது நன்றி கெட்ட செயல்! - தங்கர்பச்சான்!

சமீபத்தில் `டேம் 999' என்ற படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அந்த படம் திரைக்கு வந்தது. அந்தப்படத்தில், தமிழர்களை விரோதிபோல சித்தரித்தும், அணையை கட்டியவரை ஊழல்வாதி என்றும் காட்டியுள்ளனர். இது நன்றி கெட்ட செயல். 

முல்லைப்பெரியாறு அணையை, தனது சொத்துக்களை விற்று கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பொன்னி குயிக்கை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் வகையில், அவரது உருவப்படம் சென்னை வண்ணார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் கே.ராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தங்கர்பச்சான் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் தங்கர்பச்சான் பேசுகையில், 

முல்லைப்பெரியாறு அணையின் மூலம் தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட விவசாய நிலம் பயன்பெற்று வருகிறது. இந்த அணையை பென்னி குயிக் என்ற ஆங்கிலேய பொறியாளர், தனது சொத்தை விற்று கட்டினார் என்ற வரலாற்றை கேட்கும்போது நமக்கு பெருமையாக இருக்கிறது. எனவே, பென்னி குயிக்கின் வரவாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முல்லைப்பெரியாறு அணையின் பெயரை பென்னி குயிக் என்று மாற்றி வைத்து, அந்த வரலாற்று சின்னத்தை எக்காலமும் பாதுகாக்க வேண்டும். சமீபத்தில் `டேம் 999' என்ற படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அந்த படம் திரைக்கு வந்தது. அந்தப்படத்தில், தமிழர்களை விரோதிபோல சித்தரித்தும், அணையை கட்டியவரை ஊழல்வாதி என்றும் காட்டியுள்ளனர். இது நன்றி கெட்ட செயல். 

எனக்கு யாராவது நிதியுதவி அளிக்க முன்வந்தால், இருமாநில மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முல்லைப்பெரியாறு அணை பற்றிய கதையை படமாக எடுக்க தயாராக உள்ளேன். முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசியல் தலைவர்களின் குரல் மட்டும் ஒன்றாக உள்ளது. ஆனால், செயல் வடிவில் ஒன்று சேர வேண்டும். அவர்கள் சேர்ந்து குரல் கொடுப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் இதற்கு முன்பு அவர்கள் தங்களது சுய நலத்தைக் கருதியே செயல்பட்டனர். 

இப்போதும் அப்படித்தான் செயல்படுகின்றனர். அதை விட்டு விட்டு மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் நின்று என்றைக்கு குரல் கொடுக்கிறார்களோ, அப்போதுதான் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். மத்திய அரசும் தனது கவனத்தை திருப்பும். தற்போது, நடந்து வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு கேரள அரவை கண்டித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை அமைதிகாக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அய்யப்ப பக்தர்களும் கேரள எல்லையில் அடிவாங்க மாட்டார்கள் என்றார் அவர்.

கொலவெறி பாட்டுக்கு யு ட்யூப் கோல்ட் விருது!

தனுஷ் எழுதிப் பாடி இன்று மிகப் பிரபலமான வீடியோ எனப் பேசப்படும் கொலவெறி என்ற தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது கிடைத்துள்ளது. தமிழும் இல்லாமல், ஆங்கிலத்திலும் சேராமல் இரண்டும் கெட்டானாக தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடல் ஊடகங்களின் தயவால் மிகப் பிரபலமாகிவிட்டது. 

இணைய செய்தித் தளங்கள் பற்றி மிகத் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு, இணைய வலிமை குறித்து புரிய வைக்க ஒரு வாய்ப்பாகவே இந்தப் பாடல் பார்க்கப்படுகிறது. ஒரு கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்ட இந்தப் பாடல் குறித்து டைம் பத்திரிகையே தனது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்த கொல வெறி பாடலுக்கு யு ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் 'யு ட்யூப்கோல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது. ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. விரைவில் படத்தின் முழு ஆடியோவும் வெளியாக உள்ளது. இந்தப் பாடலுக்கு இசையமைத்த அனிருத், ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!
                                                                         tamilcinema.ebest.in

நீண்ட இடைவெளிக்கு பின் பிரசாந்துடன் கலக்க வரும் வடிவேலு!

கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் வடிவேலுவின் வெடி நகைச்சுவையை தமிழ் ரசிகர்கள் அனுபவிக்கப் போகிறார்கள். பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில் வடிவேலு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட காலம் அதிமுக அனுதாபியாக இருந்த போதும், பின்னர் கலைஞர் பக்கம் வந்த பிறகும், இருக்கிற இடம் எதுவாக இருந்தாலும் மிக விசுவாசமானவர் என்ற பெயர் தியாகராஜனுக்கு உண்டு. 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்கக் கூட எந்த இயக்குநரும் முன்வராத நிலையில், அவரை வைத்து படம் எடுக்கக் கூடாது என சில அதிகாரமிக்கவர்கள் வாய்மொழி உத்தரவு போட்டிருந்தும்கூட, அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் வடிவேலுவை தான் இயக்கும் மம்பட்டியான் படத்தில் தொடர வைத்தார் (திமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்ட படம் இது). 

இப்போது வரும் டிசம்பர் 16-ம் தேதி மம்பட்டியான் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் பிரசாந்த் உடன் படம் முழுக்க நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் வடிவேலு. ஒரிஜினல் படமான மலையூர் மம்பட்டியானில் கவுண்டமணி செய்த மைனர் வேடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரசாந்தும் வடிவேலும் இணைந்து நடித்த வின்னர் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வடிவேலுவுடன் நடித்தது குறித்து பிரசாந்த் கூறுகையில், "மம்பட்டியான்’ல படம் முழுக்க என்னோடு வடிவேலு வருவார். இத்தனை நாள் இடைவேளைக்கும் சேர்த்து அன்லிமிடெட் ஃபுல் மீல்ஸ் விருந்து வெச்சிருக்கார் மனுஷன். 'சிங்கம்தான்யா’னு வாய்விட்டுப் பாராட்டுற அளவுக்கு மிரட்டி எடுத்திருக்கார்," என்றார்.
                                                         tamilcinema.ebest.in