மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday 13 December 2011

தி டர்ட்டி பிக்சருக்கு போட்டியாக ‘சிலுக்கு’-வினு பிடிவாதம்


செத்த பின்பும் கொட்டிக் கொடுத்திருக்கிறார் சில்க். இவரது கதையை பாலிவுட்டில் தி Silk Smitha டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் எடுத்திருந்தார்கள் அல்லவா? வித்யாபாலன் நடித்த அந்த படத்தின் முதல் வார கலெக்ஷனே ஐம்பது கோடியை தாண்டிவிட்டதாம். நமக்கு தோணலையே என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் சில இயக்குனர்கள். இந்த நேரத்தில் சில்க்கை நாட்டுக்கு அர்ப்பணித்த வினுச்சக்கரவர்த்தி இந்த படத்தின் வெற்றி பற்றி என்ன சொல்கிறார்?
சிலுக்கை பற்றி முழுசா தெரிஞ்சா ஒரே ஆள் நான்தான். அது மனசும் அதுக்குள்ள இருந்த வலியும் எனக்குதான் தெரியும். சிலுக்கு கதையை ஏக்தா கபூர் எடுக்கறதை கேள்விப்பட்டவுடனே நான் பேசினேன். ஒரிஜனல் தெரியாம பண்ணினா அது சிலுக்கு படமா இருக்காது. செக்ஸ் படமாத்தான் இருக்கும். ஒரிஜனல் கதையை நான் தர்றேன். கோ-டைரக்டராகவும் வேலை செய்யுறேன். ஒத்த பைசா சம்பளம் வேணாம்னு சொன்னேன். அவங்ககிட்ட இருந்து பதிலே இல்லை. எனக்கு அவங்க கொடுத்த மரியாதை அவ்வளவுதான்.
சரி, நடந்தது நடந்து போச்சு. சிலுக்கோட அப்பழுக்கு இல்லாத உண்மைக்கதையை சிலுக்கு ங்கிற பேர்லேயே எடுப்பேன். அந்த படத்தோட வடமாநில டிஸ்ட்ரிபியூஷனை ஏக்தா கபூருக்கே கொடுப்பேன். அதுக்கு அவங்க ஒரு பைசா பணம் தரத் தேவையில்லை. ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினா அது போதும். சிலுக்கோட ஆத்மா சாந்தி அடைஞ்சுரும் என்கிறார் ஆவேசமாக.
ஆக, சிலுக்குக்கு மற்றுமொரு மறு ஜென்மம் இருக்கு போலிருக்கு. 

No comments:

Post a Comment