மலையாக இருந்தாலும் அதை கூழாங்கல்லாக உருட்டி பார்க்கலாமே என்று நினைப்பவர் டி.ராஜேந்தர். தன்னம்பிக்கையை தக்காளி சூப்பை போல நாளுக்கு மூன்று வேளை ருசிக்கிற ஆள் என்பதாலேயே இவர் மீது தனி கவனம் வைத்திருக்கிறார்கள் ரசிகர்களும்.
அப்படிப்பட்ட டி.ராஜேந்தரின் தன்னம்பிக்கையில் லேசாக குண்டூசியால் கீறி கொதிக்க விட்டு விட்டது ரிலையன்ஸ் நிறுவனம். வேறொன்றுமில்லை, ஒஸ்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடலாம் என்று நினைத்து அக்ரிமென்ட்டும் போட்டுவிட்டார்கள் இவர்கள். ஆனால் விநியோகஸ்தர் களிடம் போனால், சிம்பு நடிச்ச வானம் படம் அவ்வளவு பெரிசா போகலையே என்கிறார்களாம். ரிலையன்ஸ் கொடுத்த பணத்திற்கும், வாங்க வந்தவர்கள் சொன்ன விலைக்கும் ஒரு அனகோண்டாவை நிற்க வைக்கிற அளவுக்கு ஹைட்!
கையை மட்டுமல்ல, விரலையும் பிசைந்து கொண்டு நின்ற ரிலையன்ஸ் நிறுவனத்தை அலட்சியமாக நோக்கிய டி.ஆர், படத்தை எங்கிட்ட கொடுத்திட்டு போங்க. நான் பார்த்துக்குறேன் என்ற சவால் விட்டுவிட்டார். இதுதான் சந்தர்பம் என்று அவர்களும் படத்தை கைமாற்றிவிட்டிருக்கிறார்கள்.
ரிலையன்சிடம் மவுனமாக விலையை குறைத்த அதே விநியோகஸ்தர்கள் டிஆரிடம் சிரித்துக் கொண்டே குறைக்க முயல, விடுங்கய்யா நானே ரிலீஸ் பண்றேன் என்கிறாராம் ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் மிக்ஸ் பண்ணியபடி.
No comments:
Post a Comment