படத்திற்கு சைன் போடும்போதே பஞ்சாங்கத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. இல்லையென்றால் நேரம் குறுக்கே புகுந்து நிம்மதியை குலைத்துவிடும் என்பதை புரிந்து கொண்டிருப்பார் பார்த்திபன். இவரது வித்தகன் பட விளம்பரத்திற்கு அருகிலேயே அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் விளம்பரமும் வரும் என்று கனவு கண்டிருப்பார். ஆனால் அதுதான் நடக்கவில்லையே?
தேனியில் இப்படத்தின் துவக்கவிழாவை நடத்தி முடித்துவிட்டு ரிலாக்ஸ்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாரதிராஜா. பார்த்திபன் இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட விஷயத்தை கேட்காமல் விடுவார்களா நிருபர்கள்? கேட்டே விட்டார்கள்.
அதானே பார்த்தேன். என்னடா இன்னும் கேட்கலையேன்னு. என்னை பொறுத்தவரை மிக அற்புதமான கலைஞன், படைப்பாளிதான் பார்த்திபன். இந்த படத்தில் முதலில் அவரை நடிக்க வைக்கணும்னு நானும் ஆசைப்பட்டேன். கூப்பிட்டோம். பேசினோம். ஆனால் அவர் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கணும். அதுக்கு டைம் வேணும்னு சொன்னார். அதற்கிடையில் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டியதாப் போச்சு. இந்த கேரக்டருக்கு அமீர் பொருத்தமா இருந்தார். நாங்க பேசி எடுத்த முடிவுதான். ஆனால் பத்திரிகைகள்தான் இந்த விஷயத்தை தோண்டி துருவி புரையோடி போக வைச்சுட்டீங்க. வேற என்ன சொல்றது என்றார் பாரதிராஜா.

No comments:
Post a Comment