ஒரு நடிகை எங்கு போனாலும் பப்ளிசிடிதான். ஆதிபகவன் பட நாயகி நீது சந்திரா பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்திக்க போயிருந்தாராம். மீடியாவில் இந்த செய்தி ஏக அசத்தலாக பரவிக் கிடக்கிறது. நினைத்திருந்தால் அவர் ஸ்பெஷலாக முன் அனுமதி பெற்று முதல்வரை சந்திக்க போயிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை நீது.
மாதத்திற்கொரு முறை மக்களிடம் குறை கேட்கப் போவார் நிதிஷ். அப்படி குறை கேட்க போன இடத்தில்தான் நீதுவும் நின்றிருந்தாராம். ஆராய்ச்சி மணியை பிடித்து ஓங்கி அடிக்க வேண்டிய நிர்பந்தத்தோடு அங்கு செல்லவில்லை நீது. அதனால் நிதிஷுக்கும் கொஞ்சம் நிம்மதி.
No comments:
Post a Comment