பேசாமலேயே கூட பட்டைய கிளப்ப முடியும் ஊர்வசியால். அதிலும் வண்டி வண்டியாக பேசும் பேச்சியக்காவாக நடித்தால்? தென்னக மொழிகளில் சுமார் ஐநு£று படங்களை தாண்டி நடித்திருக்கும் ஊர்வசி, தருண்கோபிக்கு மாமியாராக நடிக்கிறார். அட இதிலென்ன ஆச்சர்யம் என்பவர்கள் இந்த படத்தின் கதைக்கருவை கேட்டால் ஆச்சர்யம் அடையாமல் இருக்க முடியாது.
அம்மா பாசத்தில் ஆரம்பித்து ஆட்டுக்குட்டி பாசம் வரைக்கும் படம் எடுத்துரசிகர்களை ரவுண்டு கட்டி அடித்திருக்கிறது தமிழ்சினிமா. மாமியாருக்கும் மருமகனுக்கும் இருக்கிற பாசத்தையும் அன்பையும் இதற்கு முன் வந்த படங்களில் சொல்லியிருக்கிறார்களா என்று தெரியாது. ஆனால் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் பேச்சியக்கா மருமகன் படம் வெளிவந்தால், எல்லா மருமகன்களும் மாமியாரை தாயாக நினைக்கக் கூடும். அந்தளவுக்கு கதை வசனத்தில் சென்ட்டிமென்ட்டை ஓட விட்டிருக்கிறார்களாம். படத்தின் ஹீரோவான தருண்கோபி திமிரு, காளை ஆகிய படங்களை இயக்கியவர். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஹீரோவாக நடித்தவர். இந்த படத்தின் கதை வசனத்தை இவரேதான் எழுதியிருக்கிறார்.
No comments:
Post a Comment