மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday 30 October 2011

நாளைய இயக்குனர்


Kalaignar TV
சினிமா என்பது பணக்காரர்கள் மட்டுமே செய்கிற ஒரு வகை வியாபாரம் போல் இருந்தது. எப்படி படம் எடுக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை தங்க மலை ரகசியம் போலவே வைத்து இருந்தார்கள். சினிமா, பலருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இன்று சினிமாவின் நிலை கடைக்கோடி தமிழனுக்கும் தெரிகிறது. எப்படி படப்பிடிப்பு நடைபெறுகிறது. என்ன மாதிரியான உபகரணங்கள் பயன்படுத்துகின்றனர் என்ற தகவல்கள் தெரிந்து விடுகிறது.
விஞ்ஞானம், தொழில்நுட்ப நாளைய இயக்குனர்வளர்ச்சி என்றெல்லாம் பலவற்றை காரணமாக சொல்லலாம். இதன் அடுத்தகட்டமாக இன்றைய இளம் தலைமுறையினர் தனியாக படமெடுக்க ஆரம்பித்து விட்டனர். அவை குறும்படங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த குறும் படங்கள் எடுப்போர் பெரும்பாலும் சினிமாவில் இயக்குனராக ஆசை படுபவர்களாக இருப்பார்கள். சினிமாவில் நுழைய இதை ஒரு விசிட்டிங்கார்டு போலவே பயன்படுத்துகின்றனர்.
இப்படிப்பட்டோருக்கான நிகழ்ச்சி தான் நாளைய இயக்குனர். குறும்படங்கள் என வரையறுக்காமல் ஐந்து நிமிட படங்கள் என்கின்றனர். இதில் ஒரு தலைப்பு கொடுத்து அதன் சாராம்சத்தில் ஒரு ஐந்து நிமிட படம் எடுக்க சொல்கிறார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்வர்களின் சிறந்த படைப்பு தேர்ந்தெடுத்து அவருக்கு நாளைய இயக்குனர் என தகுதி அளிக்கப்படுகிறது. மூன்றாம் பாகமாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இப்போது இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று படங்களை அலசி ஆரய்கின்றனர்.
- தாஸ்
                           www.tamilcinema.com

No comments:

Post a Comment