சொகுசு கார்களில் பறக்கும் நடிகர் சூர்யா தனது செல்ல மகள் தியாவுக்காக பைக் வாங்கியுள்ளார். அதில் வைத்து மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். நடிகர் சூர்யாவின் மகள் தியாவுக்கு பைக் என்றால் அலாதிப் பிரியம். அதனால் சூர்யா ஒரு பைக் வாங்கியுள்ளார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் மகளை பைக்கில் வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார், சென்னையை சுற்றி வருகிறார். மகளின் சந்தோஷத்தில் தானும் சந்தோஷம் காண்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, என் மகள் தியாவுக்கு பைக்கில் செல்வது மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் பைக் வாங்கியுள்ளேன். ஷூட்டிங் இல்லை என்றால் தியாவை பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன். நான் காரில் சென்றால் என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. ஆனால் பைக்கில் அப்படியில்லை. அதனால் ஹெல்மெட் அணிந்து தான் பைக்கில் செல்கிறேன். அது தலைக்கும் கவசமாக உள்ளது, என்னையும் யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்றார். அண்மையில் ஏழாம் அறிவு நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த சூர்யா அவள் அங்கு நடந்தவற்றை எல்லாம் உன்னிப்பாக கவனிப்பதைப் பார்த்து அதிசயித்தார். இப்பொழுதெல்லாம் அப்பா எங்காவது கிளம்பினால் தானும் வருவேன் என்று தியா அடம் பிடிக்கிறாளாம். சிக்னல்ல உங்க பக்கதுல பைக்கில் நிற்பது சூர்யாவாகக் கூட இருக்கலாம்.!.. |
Tuesday, 8 November 2011
மகள் தியாவுக்காக பைக் ஓட்டும் சூர்யா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment