தெலுங்கில் பூமிகா தயாரித்த படத்தை 'துள்ளி எழுந்தது காதல்' என்ற பெயரில்தமிழிலும் வெளியிடுகிறார்கள். ஆனால் இது டப்பிங் படமல்ல, கொஞ்சம் கொஞ்சம் ரீமேக்! இப்படத்தின் இசையமைப்பாளர் போபோ சசி, இசையமைப்பாளர் தேவாவின் தம்பி முரளியின் மகன்.
து.எ.கா பாடல் வெளியீட்டு விழாவுக்கு தேவா, மற்றும் அவரது சகோதரர்களுடன் டைரக்டர் சேரனும் வந்திருந்தார். விழாவின் இன்னொரு அட்ராக்ஷன் இப்படத்தின் நாயகி ஹரிப்ரியா.
அடுத்த முறை விழாவுக்கு வரும்போது நிச்சயம் தமிழ்ல பேசுறேன் என்று அமர்ந்துவிட்டார் ஹரிப்ரியா. பின்னாலேயே பேச வந்த சேரன் விடுவாரா? இதே மாதிரிதான் முரண் படத்தின் ஆடியோ விழாவிலும் இவங்க சொல்லிட்டு போனாங்க. ஆனால் தமிழ் கற்றுக் கொள்ளவே இல்லை. பொறுப்பா தமிழ் கத்துக்கணும்னா ஒரு டீச்சரை நியமிச்சு அவங்களுக்கு சம்பளம் கொடுத்து கத்துக்கணும். வெளி மாநிலங்களில் இருந்து வர்ற பல பேர் இப்படி சொல்றாங்க. அதுக்கான முயற்சியில் இறங்கறதே இல்லை.
ஆனால் தமிழ்நாட்டு மருமகள் ஆகிட்ட பின்னால் கத்துக்கிறாங்க. அது வேற என்று கூற, வெட்கத்தில் முகம் சிவந்தார் ஹரிப்ரியா. அப்புறம் சேரன் பேசியதெல்லாம் இன்றைய முன்னணி இயக்குனர்கள் காது கொடுத்து கேட்க வேண்டிய சங்கதி.
இன்னைக்கு ஒரு படத்திற்கு ஒரு மாதம் ரீரெக்கார்டிங் செஞ்சேன்னு சொல்றதைபெருமையா நினைக்கிறாங்க. என்னோட பாரதி கண்ணம்மா படத்தில் ஆரம்பிச்சு பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு என்று ஏராளமான படங்களில் தேவா சகோதரர்களுடன் வொர்க் பண்ணியிருக்கேன். ஏழு நாளைக்கு மேல ரீரெக்கார்டிங்குக்கு எடுத்துகிட்டதே இல்லை.
அருமையான கருத்து
ReplyDeleteஎனது புதிய போஸ்ட்
http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html?showComment=1320681793472#c7169129423929897141