பிறந்த குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போல வெளியாகியுள்ள படம் நிஜமானதல்ல, அது மார்பிங் செய்யப்பட்ட போலியான படம் என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.ஐஸ்வர்யா ராய், ஒரு குழந்தையை கையில் ஏந்தியபடி இருப்பது போல இன்டர்நெட்டில் ஒரு படம் வெளியாகியுள்ளது. ஆனால் இது மார்பிங் செய்யப்பட்ட படம் என்று தற்போது விளக்கியுள்ளார் ஐஸ்வர்யாவின் மாமனார் அமிதாப் பச்சன்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ஐஸ்வர்யாவும், அவரது குழந்தையும் இருப்பது போன்ற போலியான படங்கள் நிறைய உலா வர ஆரம்பித்துள்ளன. ஆனால் எல்லாமே போலியானது என்று கூறியுள்ளார்.
எனது மகள் அவரது தாயாரின் கைகளுக்குள் இருப்பது போன்ற படத்தை நானும் பார்த்தேன். நல்லகற்பனை, நல்ல சிந்தனை. அதைச் செய்தவர்களுக்குப் பாராட்டுக்கள். இந்தப் படத்தை எனது மனைவியிடமே காட்டினேன் என்று கூறியுள்ளார் அபிஷேக்.
மேலும், தனது மனைவியின் பிரசவம் குறித்த செய்தியை அடக்கம் ஒடுக்கமாக வெளியிட்ட டிவி நிறுவனங்களுக்கு நன்றியும் கூறியுள்ளார் அபிஷேக் பச்சன்.
tamil.oneindia.in
No comments:
Post a Comment