மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Thursday, 27 October 2011

7ஆம் அறிவு - விமர்சனம்



7am Arivu
எடுத்த எடுப்பிலேயே போதி தர்மரின் வரலாற்றை டாகுமென்ட்ரி ஸ்டைலில் சொல்லிவிடுகிறார் டைரக்டர் முருகதாஸ். காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்கு போகும் பல்லவ நாட்டு இளவரசன் சூர்யா, போகிற இடத்தில் காட்டும் முரட்டு மோதலும் முயல்குட்டி சாந்தமும் அவ்வளவு ஈர்ப்பு. வினோத நோயால் சாகக் கிடக்கிற குழந்தையை ஈவிரக்கமில்லாமல் ஓரிடத்தில் போட்டு விட்டு வரும் சீனர்களிடமிருந்து குழந்தையை காப்பாற்றி தாயிடம் ஒப்படைக்கிற அந்த காட்சி, நெஞ்சை உலுக்கும் நெகிழ்ச்சி. அவர்களுக்கு வர்மக்கலையையும், மருத்துவ முறைகளையும் கற்றுத் தரும் போதி தர்மரை விஷம் வைத்து கொல்கிறார்கள் மக்கள். ஏனாம்? அந்த மண்ணில் அவர் புதைக்கப்பட்டால் தங்களை நோயே அண்டாது என்ற நம்பிக்கை. அது தெரிந்தும் புன்னகையோடு செத்துப் போகிற அவரை நினைத்தால் புல்லரிக்கிறது.
ஆறாம் நு£ற்றாண்டு போதி தர்மரின் பிம்பத்திற்கு அவ்வளவு தத்ரூபமாக உயிர் கொடுத்திருக்கிறார் சூர்யா. ஆனால் சர்க்கஸ் சூர்யாவுக்கு அத்தனை வேலையில்லை. அவரே செய்வதாக சிலாகிக்கப்பட்ட சில சர்க்கஸ் காட்சிகளில் கூட கிராபிக்ஸ் நிரப்பல்கள்(?) தமிழனின் வீரம் குறித்து அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டர் அதிர்கிறது. 'ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனை தாக்குறது வீரம் இல்ல. இலங்கையில் நடந்தது துரோகம். நிச்சயம் திருப்பி அடிக்கணும்' என்று சீறும் போது தமிழனின் டி.என்.ஏக்கள் அத்தனையும் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளும். இப்படி ஒரு கதைக்காகவும் வசனங்களுக்காகவும் கோடிகளை அள்ளி இறைத்த தயாரிப்பாளர் உதயநிதிக்கும் மனசார பாராட்டுகள்.

3 comments:

  1. yeyi.. eppa Nee enna solla varey..!!
    nalla irukku.. nalla illa.. edhavadhu onnu sollu man..

    ReplyDelete
  2. Ippa polama padam parka..? sollu man

    ReplyDelete
  3. Commercially success for AR Murugadoss?

    ReplyDelete