கோடம்பாக்கத்து குரோட்டன்ஸ்களில் லேட்டஸ்ட் விளைச்சல் ரிச்சா

ஜீவா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு இந்த ரிச்சாவை ஒப்பந்தம் செய்யலாமே என்று ஆசைப்பட்டாராம் அப்படத்தின் டைரக்டர் அகமது. இவர் வாமனன் என்ற படத்தை இயக்கியவர். ரிச்சாவுக்கு போன் அடித்து கால்ஷீட் நிலவரம் பற்றி விவாதித்தாராம். அவரும் ஜீவாவுடன்தானே, ஓ.கே என்று சொல்லியதுடன் தேதிகள் குறித்த விபரங்களை பிறகு சொல்கிறேன் என்றாராம்.
இவ்வளவு பேச்சு வார்த்தையும் நடந்த இடம் ஒஸ்தி படப்பிடிப்பு. எதிரே உட்கார்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தாராம் சிம்பு. ’எதிர்முனையில யாருங்க?’ என்று கேட்பது சகஜம்தானே? சிம்பு அப்படி கேட்க, ரிச்சாவும் உண்மையை கக்கினாராம். ’என்னை மாதிரி பெரிய ஹீரோக்களுடன் நடித்துவிட்டு ஜீவா மாதிரி சின்ன ஹீரோக்களுடன் நடிச்சா எப்படி தமிழ்சினிமாவில் முன்னேறுவது’ என்றாராம் சிம்பு.
அறியாத குளத்தில் ஆழம் பார்த்தால் என்னாகும்? அதுதான் நடந்தது ரிச்சாவுக்கு. சிம்பு சொன்னதை நம்பி, ’நான் ரொம்ப பிஸியா இருக்கேன். என்னால கால்ஷீட் கொடுக்க முடியாது’ என்றாராம் அகமதுவிடம். இப்பதானே கால்ஷீட் தர்றேன்னு சொன்னார். அதற்குள்ளே என்னாச்சு என்று குழம்பிப் போயிருக்கிறார் டைரக்டர்.
இலையை நம்பாத ஆடும், கிளையை நம்பாத கிளியும் நல்லாயிருந்ததா வரலாறே கிடையாது தங்கச்சி...
www.tamilcinema.com
No comments:
Post a Comment