ஒரு வினோதமான குடியிருப்பில்  வசிக்கும் கஞ்சா கருப்புவின் ரூமிற்குள் தஞ்சம் புகுகிறார்கள்  சசிக்குமாரும், அல்லரி நரேஷும். பிடிவாதமாக அங்கே தங்க துவங்கும் அவர்கள்,  அக்கம் பக்கத்தினர் மனதில் இடம் பிடிப்பதோடு அருகாமையிலிருக்கும் பெட்ரோல்  பங்கிலும் வேலை செய்கிறார்கள். ஓய்வு நேர பணியாக இவர்கள் செய்யும் தொழில்  ஒன்று ஒரே வாரத்தில் பிய்த்துக் கொண்டு பறக்க, போட்
முதல் பாதியில் காத்தாடி  மீது கதை எழுதிய மாதிரி சுலபமாக பறக்க துவங்குகிற கதை, இரண்டாம் பாதியில்  கல்லையும் கட்டிக் கொண்டு பறக்க துவங்குகிறது. முக்கி முக்கி பறந்தாலும்,  முந்தைய படங்களை நினைவுபடுத்துகிற மாதிரியே ஏராளமான காட்சிகள். (லைட்டா  போர்) 
சின்ன நமுட்டு சிரிப்போடு  எதையும் எதிர்கொள்ளும் சசி, நுணுக்கமான வசனங்களால் தியேட்டரை அதிர  வைக்கிறார். 'சிலோன் பரோட்டா வேணும்' என்கிற கதாநாயகியிடம், 'எனக்கு  சிலோன்னாலே பிடிக்காது' என்கிறாரே, விசில் பறக்கிறது. 'உன்னை அண்டாவா  நினைச்சு து£க்குறேன்' என்று சுவாதியை அலேக்காக து£க்கும் போதும் அதே  ஜாலியால் நிறைகிறது ரசிகர்கள் மனசு. இதே சசி கத்தியும், கலவரமுமாக துரத்த  துவங்கும்போது ஆக்ஷன் ரசிகர்களுக்கும் செம தீனி கிடைக்கிறது. ஒரு  காட்சியில் அல்லரி நரேஷின் எச்சிலை தன் சட்டையில் துடைத்துக் கொள்கிற  காட்சிக்கு ஆரவாரம் எழுப்புகிறார்கள் ரசிகர்கள். அடிக்கடி 'சொந்தக்காரங்களை  நம்பாதே...' என்கிறாரல்லவா, அங்குதான் குடும்பத்தோடு படம் பார்க்க  வருகிறவர்களுக்கு சங்கடம். (எந்த புண்ணியவான் இவர் மனசில் வேல்கம்பு  வீசினாரோ?) ஆனால் எல்லா வசனங்களிலும் ஒரு ஆணியோ, மயிலிறகோ தலை நீட்டி  தாக்குகிறது, அல்லது தடவுகிறது.
'தன் மனைவியையும் மகளையும்  நம்பாதவன்தான் பேச்சுலருக்கு வீடு தர மாட்டான்' என்ற ஒரு வசனத்திற்காகவே  உயிரை கொடுப்பார்கள் பரிதாபத்திற்குரிய பேச்சுலர்ஸ்! எழுதிய விரல்களுக்கு  பத்து மாச வாடகையை அட்வான்சாகவே கொடுக்கலாம். 
படத்தின் கதாநாயகிகளை  விடுங்கள். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வசுந்தராவின் கேரக்டர்  சீட்டிலிருந்து நிமிர வைக்கிறது. ஆஹா... இவரல்லவோ வீரத்தமிழச்சி!  அதிருக்கட்டும்... இனிமேலும் ஆடுமேய்க்கிற பெண்ணாக நடித்தால், படத்திற்கு  நாலு குட்டியென சம்பளத்தோடு இதையும் இலவசமாக கொடுத்துவிடுவார்கள்  ஜாக்கிரதை... 
நல்ல டைரக்டர் கிடைத்தால் 'கருப்பு' கூட மின்னும் என்பதற்கு இந்த படத்தில்  கஞ்சா கருப்பு ஒரு உதாரணம். ஆச்சயர்யம் இன்னொன்று. பரோட்டா சூரியையும்  படம் முழுக்க ரசிக்க முடிகிறது. நாங்கள்ளாம் அப்பவே... என்று இவர் பேசும்  வசனங்களுக்கு செம ரெஸ்பான்ஸ் தியேட்டரில். (ஆமா, எல்லா கேரக்டர்களுக்குமே  ஒரு பஞ்ச் டயலாக் அவசியமா பிரதர்ஸ்) 
எப்பவுமே உர்ரென திரியும்  சுப்ரமணியபுரம் சுவாதிக்கு அந்த கண்கள் மட்டும் அப்படியே சேதமில்லாமல்  இருக்கிறது. மற்றதெல்லாம்...? ஹ்ஹ்ம்ம். நிவேதாவின் அழகு முகத்திற்கு  சற்றும் பொருத்தமில்லை அந்த அழுக்கு தமிழ். 
அல்லரி நரேஷின் தெலுங்கு  கலந்த தமிழுக்கு சப்பை கட்டு கட்டுகிறது கடைசி காட்சி. அடிக்கடி அவர் ஒரு  கவிதை சொல்லி, மூணு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி என்பது புதுக்கவிதை  புலவர்களுக்கென்றே எய்யப்படுகிற பொருத்தமான அம்பு. மூளை சூடு  ஏற்படும்போதெல்லாம் நாக்கை வெளியே துருத்திக் கொண்டு நரேஷ் காட்டும்  எக்ஸ்பிரஷன்ஸ் எக்சலென்ட்.
பாலசந்தர் டைப் வசனங்களுக்கு உயிர் கொடுக்கிறார் கு.ஞானசம்பந்தன். படவா  கோபிக்காகவும் அவரது பெண்டாட்டி சாந்திக்காகவும் சண்டை போட்டாவது இன்னொரு  முறை டிக்கெட் எடுக்கலாம். தப்பில்லை. 
கதிரின் ஒளிப்பதிவு வழக்கம் போல அற்புதம். இசை-சுந்தர்சி பாபு. ஒரு  பாடலும் மனதில் நில்லாமல் போனது வருத்தம்தான். இவருக்கேயுரிய இன்டர்வெல்  பிளாக். அதை நிரப்பும் ஜகடம் ஜகடம்... (அவ்) 
போராளி- வாழைத்தோப்பில் திருப்பாச்சி அருவா! 
-ஆர்.எஸ்.அந்தணன்

விமர்சனம் அருமை சார்.வாழ்த்துக்கள்..ஆனால் படம்தான் பார்க்க இன்னும் வாய்ப்பு வரவில்லை.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete