மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday 4 December 2011

வரலாம்... வர விட மாட்டோம் ஒஸ்தியால் வந்த குஸ்தி


டிசம்பர் 9 ந் தேதி சிம்பு நடித்த ஒஸ்தி திரைப்படத்தை வெளியிடுவதாக முடிவு செய்திருக்கிறார்கள் அப்படக்குழுவினர். ஆனால் இதற்கு தமிழ்நாடு Osthiதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் எடுத்த முடிவை கடந்த வாரம் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்கள். அதில் கூறப்பட்டிருந்த தகவல் இதுதான்.
சன் பிக்சர்ஸ் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சன் நிறுவனம் ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இல்லையென்றால் சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களையோ, விநியோகம் செய்யும் படங்களையோ, அவர்கள் சாட்டிலைட் உரிமை பெற்ற படங்களையோ திரையிட மாட்டோம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒஸ்தி, மம்பட்டியான் ஆகிய இரு படங்களின் சேட்டிலைட் உரிமைகளை சன் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதையடுத்து படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் இன்று தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்நாடு திரையரங்கு கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் சேர்ந்து ஒஸ்தி படத்தை வெளியிட எவ்வித தடையும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த பிரச்சனையில் தனது நிலையை பன்னீர்செல்வம் தலைமையிலான இன்னொரு அணி மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரிய வருகிறது. இந்த அறிக்கை வந்தாலும், ஒஸ்தி படத்திற்கு போடப்பட்ட தடையை நாங்கள் நீக்குவதாக இல்லை என்று உறுதியாக இருக்கிறார்களாம் இவர்கள். இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற இருக்கும் பிரஸ்மீட்டில் ஒஸ்தி படத்தை வெளியிட இயலாது என்பது குறித்த தங்கள் உறுதியான முடிவையும் அறிவிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 

No comments:

Post a Comment