அனுஷ்காவும் அமலாபாலும் அத்தனை திக் பிரண்ட்ஸ் என்பதை நாடறிகிறதோஇல்லையோ, கோலிவுட்டும், டோலிவுட்டும், மல்லுவுட்டும் நன்கு அறியும். அவங்க எவ்ளோ பெரிய ஆர்ட்டிஸ்ட்? ஆனால் துளி பந்தா இல்லை என்று அடிக்கடி அனுஷ்காவை பாராட்டி வந்த அமலா, இப்போதும் இன்னும் நெருக்கமாகியிருக்கிறார் அவருடன். எப்படியென்றால் அவர் சொல்லும் மேனேஜரையே தனக்கு மேனேஜராக்கிக் கொள்கிற அளவுக்கு.
அனுஷ்காவுக்கு ரகு என்பவர்தான் மேனேஜர். அவரது நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தோள் கொடுக்கிற இந்த நபருக்கு மும்மொழியிலும் நல்ல செல்வாக்கு. தேதிகளை பிரித்துக் கொடுப்பதில் வேறெந்த சூது வாதும் வைத்துக் கொள்வதில்லையாம் இவர். இவரையே நீயும் யூஸ் பண்ணிக்கோ என்று அமலாவிடம் அனுஷ்கா சொல்ல, அன்றிலிருந்தே தனது சங்கப் பலகையில் ரகுவை உட்கார வைத்துவிட்டார் அமலா.
இப்படியெல்லாம் செய்தால் பழைய மேனேஜர் காதுகளில் புகைதானே வரும்? அப்படி அடிக்கடி வர ஆரம்பித்திருப்பதால்தான் அமலாவை பற்றிய கிசுகிசு முன்னிலும் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறதாம். மூன்றெழுத்து டைரக்டரை லவ் பண்ணும் அமலா, அவருடன் சேர்ந்து செனடாப் சாலையில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலையும் அவிழ்த்துவிடுகிறாராம் இந்த முன்னாள் மேனேஜர். இன்னும் என்னவெல்லாம் தகவல் வருமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கிறார் அமலா.
No comments:
Post a Comment