ஒரு ராஜ குறட்டையின் எரிச்சலோடு துவங்கியது ராஜபாட்டை படத்தின் பாடல் வெளியீட்டு விழா. நிகழ்ச்சி தொகுப்பாளர்களால் ஒரு விழாவே நாசமாகிய சோகம் அன்றுதான் நடந்தது. பொதுவாக ஒரு தொகுப்பாளர் பேசினாலே கதவை சாத்திக் கொண்டு கதறணும் போல இருக்கும். இந்த விழாவில் மூன்று பேர் மேடையேறினார்கள். ஒரே நேரத்தில் மூவரும் பேச, சந்தைக்கடையானது விழா. பேச வேண்டிய விஐபிகள் அத்தனை பேரும் ‘ஞே’ என்று விழித்தது தனி சோகம்.
முன்னதாக விக்ரமின் திரையுலக சாதனைகளை விளக்கும் ஒரு ஆவணப்படத்தை திரையிட்டார்கள். அல்லது திரையிட முயற்சித்தார்கள். அதுவும் ஆடியோ சரியாக இல்லாமல் நாலே செகண்ட்டில் நிறுத்தப்பட்டது. இவ்வளவையும் பொறுத்துக் கொண்டதுடன் முகத்தில் வலுக்கட்டாயமான சிரிப்பை அமர வைத்துக் கொண்ட சீயானின் பொறுமைக்கும் ஒரு தனி வணக்கம் செலுத்தலாம்.

No comments:
Post a Comment