தமிழ் திரையுலகில் சுமார் 15 ஆண்டுகள் கொடி கட்டி பறந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. ரசிகர்களை சுண்டியிழுக்கும் கவர்ச்சி கண்களைக் கொண்டவர். கேட்பவரை கிறங்கடிக்கிற கவர்ச்சி குரலும் ஸ்பெஷல். ஆனால், அது சில்க்கின் சொந்த குரல் அல்ல என்பது பலருக்கு தெரியாது. அந்தளவுக்கு சில்க்கின் உதட்டு அசைவுடனும் அவரது கவர்ச்சி கெட்டப்புடனும் அற்புதமாக பொருந்தக்கூடிய குரல், டப்பிங் கலைஞர் வி.ஹேமமாலினிக்கு சொந்தமானது.
அவர் அளித்த பேட்டி: சில்க் ஸ்மிதாவின் உதட்டசைவுக்கு ஏற்ப குரல் கொடுப்பதற்கு பொருத்தமானவரை தேடிக்கொண்டிருந்தார்கள். அதற்கு 100 சதவீதம் எனது குரல் பொருத்தமாக அமைந்தது. தொடர்ந்து 15 வருடங்கள் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தேன். கே.பாக்யராஜ் இயக்கிய ‘அவசர போலீஸ் 100’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் அவரது குரல் ரசிக்கப்பட்டது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் தயாராகிறது என்று அறிந்து சந்தோஷம் அடைந்தேன். ஆனால் அந்த படத்தை எதிர்பார்த்ததுபோல் எடுத்ததாக தெரியவில்லை. சில்க் ஸ்மிதாவை அடாவடித்தனம், திமிர் பிடித்தவர்போல் அப்படத்தில் காட்டி இருப்பதாக படத்துக்கு டப்பிங் பேச சென்ற எனது தோழிகள் தெரிவித்தனர். சில்க்காக நடித்த வித்யாபாலனுக்கு குரல் கொடுக்க என்னை அழைத்திருந்தாலும் சென்றிருக்க மாட்டேன்.

காரணம் சில்க்குக்கு வாய்ஸ் கொடுத்த நான் அவரது பாத்திரத்தை பிரதிபலித்து நடித்த வேறு நடிகைக்கு (வித்யாபாலன்) கொடுக்க விரும்பவில்லை. இது நான் ஸ்மிதாவுக்கு தரும் மரியாதை. சில்க் ஸ்மிதாவை பொருத்தவரை ரொம்பவும் நல்லவர். அமைதியானவர். தன்னிடம் யாராவது தவறாக பேசினால் மட்டுமே அவர்களிடம் கோபத்தை காட்டுவார். இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.
No comments:
Post a Comment