கடந்த சில மாதங்களுக்கு முன் த்ரிஷா கொடுத்த பேட்டியை படித்தவர்கள்நுங்கம்பாக்கம் பகுதியை சல்லடை போட்டு சலித்திருப்பார்கள். உங்களுக்கு பிடித்த ரெஸ்ட்ராரெண்ட் எது? இந்த கேள்விக்கு சென்னை நுங்கம்பாக்கத்திலிருக்கும் க்ரிப்டாஸ் ஓட்டல் என்று பதிலளித்திருந்தார் அவர். இந்த உணவகத்தை தேடிதான் அலைந்து திரிந்திருப்பார்கள் இந்த பேட்டியை படித்தவர்கள்.
உண்மையில் இந்த உணவகம் கிரேக்க நாட்டு சுவையை அடிப்படையாக கொண்டது. காதர் நவாஸ்கான் சாலையில் அமைந்திருக்கும் இதன் சிறப்பு என்ன தெரியுமா? நம்ம ஊரு சுவையோடும் கிரேக்க நாட்டு ஸ்டைலோடும் அமைந்திருப்பதுதான்.
வள்ளென்று கடிக்கும் டாபர்மேனுக்கும், சில்லென்று நக்கும் பாமரேனியனுக்கும் ஒரு குட்டி பிறந்தால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு சுவை இருக்கிறது இந்த பதார்த்தங்களில். நம்ம ஊரில் சுடுகிற வடையை இவர்கள் ப்ளா ப்ளா என்கிறார்கள் கிரேக்கத்தில். ஆனால் இந்த வடையில் வடிவம்தான் இப்படியே தவிர வாய் அறிவது வேறு மாதிரி.
உலகத்திலேயே இந்த உணவுகளை வடிவமைத்து புதுசுபுதுசாக உருவாக்கும் ஒருவரது பெயரிலேயே ஓட்டல் திறந்திருப்பதும் இங்கேதான். இந்த உணவகத்தின் பெயரே கிரிப்டாஸ் பை வில்லி. இந்த வில்லிதான் எல்லா உணவுகளையும் ஒரு ஃபார்முலாவோடு உருவாக்குகிற செஃப்.
எந்த உணவை செய்தாலும் அதை முதலில் அந்த தெருமுனையில் இருக்கும் ஆட்டோக்காரர்களை அழைத்து சாப்பிட வைப்பாராம் வில்லி. ஏனென்றால் இவர்கள்தான் இவரது நெருங்கிய நண்பர்கள். ஓய்வு நேரத்தில் நம்ம ஊர் ஆட்டோவில் பயணம் செய்யும்போதுதான் இவருக்கு புதுப்புது டிஷ்களை செய்யும் எண்ணமே மனதில் உருவாகுமாம். (மூட்?)
நம்ம ஊர் த்ரிஷாவுக்கும் இந்த வில்லி ரொம்பவே செல்ல்லல்லம் என்பதுதான் இன்னொரு சிறப்பு.
No comments:
Post a Comment