மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Tuesday 29 November 2011

தமிழக ரசிகர்கள் என்னுடைய பெற்றோர்களுக்கு சமம் - கார்த்தி சமாதானம்


எங்கே வம்பு கிடைக்கும் என்றே கோடம்பாக்கத்தின் பக்கமாக குறுகுறு பார்வையைKarthiமேய விடுகிற இந்து மக்கள் கட்சிக்கு இன்னொரு வம்பு கிடைத்துவிட்டது. தமிழ்நாட்டு ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள்தான் மேல் என்கிற டோனில் கார்த்தி அளித்த பேட்டியை கெட்டியாக பிடித்துக் கொண்டுவிட்டார்கள். கார்த்தி இப்படி பேட்டியளித்ததற்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றெல்லாம் இந்து மக்கள் கட்சியின் தலைமை மிரட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதியையும் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்களாம்.
இதே கட்சியை சேர்ந்த உடுமலைப்பேட்டை தொண்டர்கள் கார்த்தியின் உருவப்படத்தை சாலையில் போட்டு உடைக்கவும் செய்திருக்கிறார்கள். காடுன்னா சலசலப்பு இருக்கதான செய்யும் என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிற கார்த்தி, படப்பிடிப்பிற்கு நடுவே இது குறித்து விளக்கமும் அளித்திருக்கிறார்.
தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் எனது பெற்றோர் போன்றவர்கள். பெற்றோரை பற்றி யாராவது தவறாக பேசுவார்களா? கனவில் கூட யாரையும் நான் தவறாக நினைத்தது கிடையாது. தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது.

தமிழ் ரசிகர்கள் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள். தமிழ் ரசிகர்கள் படங்களோடு உணர்வு பூர்வமாக ஒன்றி போக கூடியவர்கள். தெலுங்கு ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சமாகத்தான் படங்களை பார்ப்பார்கள். ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஆந்திராவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுப்பதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். தெலுங்கில் பேசியதால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
வாந்தி எடுப்பானேன்? வழிச்சு துடைப்பானேன்? 

No comments:

Post a Comment