மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 3 December 2011

சினிமா ஆசையால் லட்சக்கணக்கில் பெண்களிடம் பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பல் கைது.


நடிகை ஆக்குவதாக கூறி இளம் பெண்களை மயக்கி பணம் பறித்த சினிமா கதாசிரியர் மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கு பட கதை, வசனகர்த்தா மர்துரி ராஜா. இவரது மகன் சாய் கிஷோர். 2-ம் ஆண்டு பி.டெக். படிக்கிறார். மற்றொரு மாணவர் சசிகாந்த். பி.எஸ்சி. பட்டதாரி இவர்களும் சிரஞ்சீவி, பிலிப், பிலிப்பின் மனைவி கவிதா ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து மோசடியில் ஈடுபட்டனர். பல்வேறு செல்போன் எண்களுக்கு மிஸ்டு கால் கொடுப்பார்கள்.
ஆண்கள் பேசினால், ‘ராங் நம்பர்’ என்று கூறி கட் செய்துவிடுவார்கள். பெண்கள் பேசினால், தங்களை சினிமா உத
வி இயக்குனர்கள் என்று அறிமுகப்படுத்தி கொள்வார்கள். ‘புதிய படத்துக்கு ஹீரோயின் தேவைப்படுகிறது. நீங்கள் சம்மதித்தால் நடிக்கலாம்’ என்று ஆசை வார்த்தை கூறுவார்கள்.
சினிமா ஆசையில் வரும் இளம்பெண்களிடம் ‘ஸ்கிரீன் டெஸ்ட் நடத்த வேண்டும். போட்டோ செஷன் நடத்த வேண்டும்’ என்று சொல்லி லட்சக்கணக்கில் பணம் பறித்துவிட்டு தலைமறைவாகி விடுவார்கள்.

கர்னூல் மாவட்டம் கவுதலம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் இந்த கும்பலின் ஆசை வார்த்தையில் மயங்கி ரூ.6 லட்சம் கொடுத்து ஏமாந்தார். அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பெண்களும் பணத்தை பறிகொடுத்தனர். புகார்களின் பேரில் கர்னூல் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பொறி வைத்து மோசடி கும்பலை பிடித்தனர்.
சாய் கிஷோர், சசிகாந்த் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். பணத்தை இழக்க இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார். அவரது பணம், நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன.
சினிமா தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பிரபல சினிமா கதாசிரியரின் மகன், மோசடி வழக்கில் சிக்கியிருப்பது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment