பால் சுறாவுக்கு பனியன் மாட்டியது போல கச்சிதமாகதான் இருக்கும் அந்த (கண்கொள்ளாக்)காட்சி. ஆனால் அவர்தான் முடியாது என்று முடிவே செய்துவிட்டாரே!
சமீபத்தில் தீக்ஷாசேத் கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, வாலிப வயோதிக அன்பர்களை வருத்தத்தில் தள்ளி வறுத்து எடுத்திருக்கும். வேறொன்றுமில்லை, நீச்சல் உடையை அணியவே மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் அவர். விக்ரமுடன் ராஜபாட்டை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தீக்ஷா அப்படம் வெளிவந்தால், தமிழ்ப்பட மார்க்கெட்டில் தளுதளு தக்காளி போல மின்ன ஆரம்பித்துவிடுவார். கதைக்கு தேவைப்பட்டால் நீச்சல் உடையில் நடிப்பேன் என்று அவசரப்பட்டு பேட்டி கொடுக்கிற நடிகைகளுக்கு மத்தியில் தனது கவர்ச்சி கொள்கை பற்றி தீவிர விளக்கம் கொடுத்திருக்கிறார் தீக்ஷா. அதில்தான் இப்படி ஒரு பேரிடி.
இத்தனைக்கும் இவர் ஒரு நீச்சல் சேம்பியனாம். மகாராஷ்டிரா மாநில அளவில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் பெற்றவர்தானாம். (அந்த கிளிப்ங்ஸ் கிடைச்சா யாராவது அனுப்பி வைங்க தோழர்களே...)
No comments:
Post a Comment