நடிகைகளின் மனசு எப்பவுமே பலூன் மாதிரி. அதிகம் ஊதினால் டமால்தான். ஒருநடிகையின் உண்மைக் கதையை துணிச்சலாக எடுக்கிற சக்தி எந்தவொரு இயக்குனருக்கும் முழுமையாக வந்துவிட வாய்ப்பில்லை. ஆனால் அந்த முயற்சியில் பாதி கிணற்றையாவது தாண்டியிருப்பார் என்ற நம்பிக்கையை அளித்தது நாம் பார்த்த முன்னோட்ட காட்சிகளும் பாடல்களும்.
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் அந்த அழகான மூன்று பாடல்களை பார்த்தோம். எடுத்த எடுப்பிலேயே அன்னநடை நடந்து வரும் சோனியா அகர்வால் டமால் என்று வெடித்து சிதறினார். ஒரு நடிகை குறித்த இமேஜ் இதுதான் என்பதை சொல்லாமல் சொன்ன டைரக்டர் ராஜ்கிருஷ்ணா இப்படம் வெளிவந்த பின் ஒன்று கொண்டாடப்படுவார். இல்லையென்றால் வொய் திஸ் கொலவெறிங்க என்று தேடப்படுவார். அந்தளவுக்கு சில விஷயங்களை சொல்லாமல் சொன்னது டைட்டில்.
படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, கோழி கூவுது விஜி இப்படி தமிழ்சினிமாவில் தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் அத்தனை பேருடைய உருவத்தையும் காண்பித்து இவர்களுக்கு சமர்ப்பணம் என்ற வரிகளோடு துவங்குகிறது படம்.
பொதுவாகவே மென் சோகம் வழிகிற அழகோடு வலம் வரும் சோனியா அகர்வால், இந்த படத்தில் அதை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே காட்டுவதால், பார்வையாளர்களுக்கு ஒரு சொட்டு கண்ணீர் நிச்சயம்.
படம், ஒரு நடிகையின் ‘தாக்கு’மூலமாக இல்லாமலிருக்க கடவது....
No comments:
Post a Comment