தன் உடல்நிலை குறித்த எல்லா வதந்திகளின் வாயிலும் திருப்பதி லட்டை வைத்து அடைத்துவிட்டார் ரஜினி. அதே துள்ளல், அதே வேக நடையுடன் திருப்பதிக்கு வந்திருந்த ரஜினியை பார்த்தவுடனே ராணாவை உறுதி செய்துவிட்டார்கள் பக்தர்களும் ரசிகர்களும்.
தனது மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின், மனைவி

பேரன் கலிங்காவுக்கு முடி எடுக்கப்பட்டது. கணவரது உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்து கொண்ட லதா, பிரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு மொட்டையும் அடித்துக் கொண்டார்.
வெளியே வந்தபோது தன்னை சூழ்ந்து கொண்ட நிருபர்களுக்கு அளவோடு ஒரு மினி பேட்டியை அளித்துவிட்டு சர்ரென்று கிளம்பினார் ரஜினி.
ராணா படம் என்ன ஆனது? படப்பிடிப்பு எப்போது?
ராணா படம் தொடங்க இன்னும் இரண்டொரு மாதங்கள் பிடிக்கும். காரணம் அது மிகப்பெரிய படம். பெரிய பட்ஜெட். ஆக்ஷன் மற்றும் காஸ்ட்யூம் ட்ராமா. அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அநேகமாக ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.உங்க ரசிகர்கள் பிரார்த்தனைகள் குறித்து...
அவர்களுக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். என் நன்றியை அவர்களுக்கு எப்படி சொல்வேன் என்று தெரியவில்லை. என் உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்டி செய்திகளை வெளியிட்டனர் ஊடகங்கள். அவர்களுக்கு என் நன்றி.ரா ஒன்னில் ஷாரூக்கானுடன் நடித்துள்ளீர்களா?
ஆமாம்... ஷாரூக்கானுக்காக நடித்துக் கொடுத்தேன். அதில் பணியாற்றியது சந்தோஷம். நைஸ் எக்ஸ்பீரியன்ஸ்.www.tamilcinema.com
No comments:
Post a Comment