மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday 22 October 2011

பிம்பிலாக்கி பிலாபி... ரஜினிகாந்த் படப் பாட்டு


Peruman
அதென்னவோ தெரியவில்லை, புதுமுகங்கள் நடிக்கிற படம் என்றால் ஆடியன்ஸ் மத்தியில் அப்படியொரு அலட்சியம். நாலு பேரிடம் விசாரித்து, பத்திரிகை விமர்சனங்களை படித்து, அப்புறமும் அடங்காமல் கதவிடுக்கு வழியே சில சீன்களை பார்த்துதான் டிக்கெட்டே வாங்குகிறார்கள். 'படம் நல்லாதான் இருக்கு'ன்னு கலெக்டர் ஆபிஸ்ல ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துடேன் என்று கேட்காத வரைக்கும் சவுரியம்டா சாமி என்று புலம்புகிறார்கள் தயாரிப்பாளர்களும்.
இந்த போக்கு வயிற்றுப் போக்கை விட கொடுமையாக வாட்டிக்   கொண்டிருப்பதால்,புதுமுகங்கள் நடிக்கிற படங்களை எப்படியாவது மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த ஏராளமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்கு இருக்கிற சக்தி அவரது பெயரை போட்டால் கிடைக்கும் என்று நம்பி இறங்கினார்களா, அல்லது கதையே ரஜினியை பின்புலமாக கொண்டதா தெரியவில்லை. பெருமான் தி ரஜினிகாந்த் என்றொரு படத்தை தயாரித்து வருகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இப்படியொரு கதையை படமாக்க முடிவு செய்ததுமே ரஜினியை சந்தித்து இந்த டைட்டிலுக்கு பர்மிஷன் கேட்டாராம் டைரக்டர் ராஜேஷ் கண்ணன். இவர் ரஜினிக்கு முன்பே அறிமுகமானவர் என்பதால் இந்த விசேஷ சலுகை. இல்லையென்றால் ரஜினி வீட்டு காம்பவுண்ட் சுவரை டச் பண்ண முடியாதல்லவா?
என் பெயரை வைக்கிற அளவுக்கு கதையில் அப்படியென்ன அவசியம் என்றாராம் ரஜினி. அப்புறம் கதையை அவருக்கு சொல்லிக் காட்டியிருக்கிறார் டைரக்டர். முழு கதையையும் கேட்ட ரஜினி, ராஜேஷ் கண்ணனின் முதுகில் தட்டிக் கொடுத்து, நல்லாயிருக்கு. நல்லபடியா பண்ணுங்க என்று கூறினாராம்.
ஏதோ அட்ராக்ஷனுக்காக இந்த பெயரை வைக்கல. நிஜமாகவே ரஜினி சாரை சுற்றிதான் கதை. அது என்னன்னு இப்பவே சொல்ல முடியாது. படம் பாருங்க. கண்டிப்பா பிடிக்கும் என்றார் ராஜேஷ். படத்தில் ஒரு பாட்டு வைத்திருக்கிறார்கள். பிம்பிலாக்கி பிலாபி... இதுதான் பாடலின் முதல் வரி. படம் எப்போது ரிலீசானாலும் அந்த வருஷத்தின் சர்ர்ர்ர்யான குத்துப்பாட்டாக இது இருக்கும். அது நிச்சயம். சத்தியம். (பார்த்துட்டோம்ல...?!)
                                     www.tamilcinema.com

No comments:

Post a Comment