மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Monday, 17 October 2011

வேலூர் மாவட்டம்


நகர போலீசில் நல்ல போலீசும் உண்டு. இந்த ஒரு வரிதான் இந்த கதையின் மொத்த சரக்கு, சாரம்சம் எல்லாமே! ஏதோ இவரே டிபார்ட்மென்ட் ரிட்டையர்மென்ட்டாக இருப்பாரோ என்று ஐயுறுகிற அளவுக்கு நுணுக்கமாக ஆராய்ந்து கதை எழுதியிருக்கிறார் ஆர்.என்.ஆர் மனோகர். சல்யூட் சார்...
காக்கி சட்டையை போட்டாலே ஏழெட்டு நட்டு போல்ட்டுகளை விழுங்கிய மாதிரி ஒரு மிடுக்கு வரும். நந்தாவிடம் அதை அப்படியே பார்க்க முடிகிறது. பார்வையில் ஆரம்பித்து பட்டன் போடுவதை கூட அந்த மிடுக்கு குறையாமல் செய்திருக்கிறார். இந்த டெடிக்கேஷன் அவரை எங்கேயோ கொண்டு போய் உட்கார வைக்கப் போகிறது. நல்லது, கதைக்கு வருவோம்.
வேலு£ர் மாவட்டத்திற்கு அசிஸ்டென்ட் கமிஷனராக வந்து சேர்கிறார் நந்தா. அங்கே அமைச்சரின் அல்லக்கை அழகம் பெருமாளுக்கும் இவருக்கும் உரசிக் கொள்கிறது. சட்டம் ஒழுங்குதான் முக்கியம் என்று திமிரும் நந்தாவை, சத்தம் போடாதே தம்பி என்று தனது பாணியில் தட்டி வைக்கிறார் அழகம் பெருமாள்.
பெட்ரூமில் ஐட்டத்துடன் இவர் இருக்க, வெளியே காவல் காக்க வேண்டிய கேவலமான நிலை நந்தாவுக்கு. இத்தனையும் பொறுத்துக் கொள்ளும் அவர், ஒரு கட்டத்தில் எரிமலையாக வெடித்து சிதறுகிறார். பட்ட பகலில், பப்ளிக் முன்னால் அழகம் பெருமாள் அழுக்கு பெருமாளாகிற அளவுக்கு அடித்து கிழிக்கிறார். அப்புறமென்ன? பதிலுக்கு அவர் தரப்பு ஆட்கள் போட்டு தள்ள போலீஸ் நந்தா, பாலீஷ் குறைந்து குற்றுயுரும் குலையுயிருமாக மருத்துவமனையில்.
தனது பணியையே ராஜினாமா செய்துவிட்டு தோல்வியோடு திரும்பும் அவரை மீண்டும் அதே ஊருக்கு பணிக்கு அனுப்புகிறது உயரதிகாரிகள் தரப்பு. இரண்டாம் முறையாக போராட்டத்தை ஆரம்பிக்கும் அவர் காக்கி சட்டையின் கம்பீரத்தை நிலை நாட்டினாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
படத்தின் வேகத்தை குறைப்பது மாதிரியான காட்சிகள் குறைவுதான். அப்படி வருகிற ஒன்றிரண்டு காட்சிகள் சந்தானம், சிங்கமுத்து சம்பந்தப்பட்ட காட்சிகள். வயிறு வீங்கிப் போகிறது நமக்கு. அதிலும், சந்தானத்தின் டபுள் மீனிங் காமெடியை எரிச்சலுறாமல் ரசிப்பது ஆச்சர்யம்தான். சந்தானமே போலீஸ்தான் என்பதால் பாதிநேரம் நந்தாவுடனேயே டிராவல் செய்வதால் கதையும் தடம் மாறாமல் டிராவல் செய்கிறது.
நந்தாவுக்கு ஜோடி பூர்ணா. வீட்டிற்குள் வரும் ரவுடிகளை தனி ஆளாக தடுக்க போராடும் அவரது பதற்றம், நம்மையும் தொற்றிக் கொள்வது பயங்கரம். மற்றபடி ரெண்டு டூயட், கொஞ்சம் கண்ணீர் என்று தனது வேலையை முடித்துக் கொள்கிறார் அவர்.
மந்திரியாக நடித்திருக்கும் நீலகண்டன் இத்தனை நாட்களாக எங்கிருந்தார்? அலட்டிக் கொள்ளாத நடிப்பு. அமைச்சருக்குரிய அத்தனை அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். இனிமேல் நிறைய பார்க்கலாம்...
சுந்தர்சி பாபுவின் இசையில் சில பாடல்கள் பரவாயில்லை. வெற்றியின் ஒளிப்பதிவு விசேஷமாக இருக்கிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில்.
எடிட்டிங், போலீஸ் பார்வை போலவே நறுக் கட்டிங்.
காவல் 'குறை' என்றே இத்துறையை வர்ணிப்பவர்கள் இப்படத்தை பார்த்தால் கப்சிப் ஆவார்கள். அந்த வகையில் இந்த மாவட்டம் பெரிசு!
-ஆர்.எஸ்.அந்தணன்
                                         www.tamilcinema.com

No comments:

Post a Comment