நடித்த முதல் படமே வரவில்லை. அதற்குள் விளம்பர உலகத்தின் ’வெல்லக்கட்டி’ ஆகிவிட்டார் சனம். பார்க்கிற சனமெல்லாம் அம்புட்டு அழகு என்று பாராட்டுகிற இந்த சனம், அம்புலி படத்தின் ஹீரோயின் என்பதை சினிமா ரசிகர்கள் அறிவார்கள்.
இனிமேல் சாப்பாட்டு ப்ரியர்களும் அறிகிற அளவுக்கு உணவின் வகைகளையும்,அதை சமைக்கும் முறைகளையும் சொல்லும் ஒரு வெப்சைட் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் இந்த சனம்.lekhafoods.com எனும் இந்த இணையதளத்தில் சுமார் 3 லட்சம் வகையான உணவுகளை அறிமுகப்படுத்த இருக்கிறார்களாம். தற்போது 30 ஆயிரம் டிஷ்கள் ரெடி. அதுவும் அசத்தலான சமையல் குறிப்புகளுடன்.
ஏவிஎம் ஸ்டுடியோவில் கலர்ஃபுல் செட் போட்டு இந்த சனத்தை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதற்குள் விஷயம் வெளியில் பரவி, ரங்கநாதன் தெரு முதலாளிகளிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறதாம் இந்த அழகு பொண்ணுக்கு. (அய்யோவ்... விளம்பரத்தில் நடிக்கதான்)
அதிருக்கட்டும்... lekhafoods.com -ல் என்னென்ன விசேஷம்? உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நாட்டில் எங்கு சுவையான உணவு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு ஹோட்டலை பற்றிய அறிமுகம் இது. படிக்கும்போதே அத்தனை சுவாரஸ்யம்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் இருக்கிறதாம் இந்த ஹோட்டல். சாப்பிட போகிறவர்களை ராஜமரியாதையோடு ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உள்ளே போய்விட்டால் வெளிச்சமே கிடையாது. கும்மிருட்டு. அங்கிருக்கும் பணியாளர்களே உங்களை கையை பிடித்து அழைத்துச் செல்வார்கள். தேவையான உணவுகளை உங்கள் டேபிளில் சிக்கலில்லாமல் பரிமாறுவார்கள். சாப்பிட்டு முடித்ததும் உங்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே பாதுகாப்போடு வெளியே கொண்டு வந்துவிடுவார்கள்.
ஏன் இப்படி ஒரு கும்மிருட்டு விருந்து? வேறொன்றுமில்லை, அவர்கள் அத்தனை பேரும் கண் பார்வையற்றவர்களாம். இந்த வினோத அனுபவத்தை விலாவாரியாக விவரிக்கிறார்கள் இந்த வெப்சைட்டில். இதுபோல ஆயிரம் சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது.
சனத்தின் முதல் அறிமுகமே விஷயமுள்ளவர்களுடன்தான்... வாழ்த்துக்கள் பொண்ணு!
www.tamilcinema.com
No comments:
Post a Comment