மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Sunday 2 October 2011

சென்னை தமிழ் அகராதி

சென்னைத் தமிழுக்கென்று பிரத்யேக அர்த்தங்கள் உண்டு. அவற்றை சென்னையில் ஓரிரு ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அந்த மொழியினூடே தொடர்ச்சியான புழக்கம் இருந்தால் மட்டுமே அதன் அர்த்தம் புரியும். திரைப்படங்களின் மூலம் சென்னைத் தமிழ் பரவலாக எல்லாருக்கும் தெரிந்தாலும், சில முக்கிய வார்த்தைகளும், அதற்கான அர்த்தங்களும் இங்கே...

சென்னை தமிழ் அர்த்தம்

கலாய்க்கிறது- கிண்டல் செய்வது
இட்டுனு- கூட்டுக்கொண்டு
அப்பால- அப்புறம்
அவுல் குடுக்குறது- ஏமாற்றுவது
பல்பு வுட்டுட்டான்- இறந்துட்டான்
பகிலு- இடுப்பு பகுதி
பேஜார்- அறுவை
டர்- பயம்
டுமீல்- பொய்
டொச்சு- அழகில்லாத
அட்டு- சுமாரான
அப்பீட்டு- வெளியேறுதல்
எகிரு- வேகமாக ஓடு
காண்டு- கோபம்
போங்கு- கள்ளத்தனமான
கலீஜ்- அசுத்தம்
கப்பு- நாற்றம்
கில்பான்ஸ்- பளபளப்பான ஆள்
கில்லி- திறமையான ஆள்
குஜால்ஸ்- கொஞ்சல்
குஜிலி- இளம்பெண்
இப்பிடிகா- இந்த வழியாக
சோமாரி-ஒழுக்கமற்றவன்ல
ஜகா வாங்குறது- பின்வாங்குவது
ஜல்பு- ஜலதோஷம்
ஜல்சா -சரசம்
பிகிலு--விசில்
வூட்டாண்ட-வீட்டிற்கு பக்கத்தில்
குந்து-உட்கார்
கன்பீஸ்-குழப்பம்
டப்பு-பணம்
கயிதை-கழுதை
கம்னாட்டி-கோமாளி
கஸ்மாலம்,கேனை-முட்டாள்
கிருஷ்ணாயில்-மண்ணெண்ணெய்
மால், மாலு-கமிஷன்
மஜா-கேளிக்கை
மட்டை-போதையில் விழுந்து கிடப்பது
மெர்சல்-பயம்
சொக்கா-சட்டை
பீட்டர்- பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர்
சல்பேட்டா- மலிவுவிலை மது
தொங்குறது- ஒதுங்குதல்
டபாய்குறது- ஏமாற்றுதல்
பீலா- பொய் சொல்வது
டம்மி பீஸ்- ஒப்புக்கு சப்பாணி
கீது- இருக்கு
மெரிச்சிருவேன்- மிதித்துவிடுவேன்

- thanks Dinamalar...

No comments:

Post a Comment