மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday 5 October 2011

தூம்-3-யில் அமீர்கானுக்கு ‌ஜோடியாகிறார் கத்ரீனா கைப்...!




Katrina kaif to romance with Amir khan in doom 3
தூம்-3 படம் மூலம், முதன்முறையாக அமீர்கானுக்கு ஜோடியாகிறார் நடிகை கத்ரீனா கைப். இந்தியில், கடந்த 2004 மற்றும் 2006ல் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான தூம், தூம்-2 படங்களை தொடர்ந்து மீண்டும் தூம்-3 படம் எடுக்கப்பட இருக்கிறது. தூம், தூம்-2 படங்களை தயாரித்த ஆதித்யா சோப்ராவை, தமது யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தையும் தயாரிக்கிறார். தூம்-3யிலும் அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ராவை ஹீரோவாகவும், வில்லன் ரோலில் அமீர்கானும் நடிக்கின்றனர். விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்குகிறார்.

இந்நிலையில் படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவரை போடலாம் என்று புதுமுகத்தை தேடிவந்தனர் படக்குழுவினர். ஆனால் அமீர்கானுக்கு ஏற்ற நாயகி யாரும் கிடைக்காததால், கடைசியாக கத்ரீனா கைப்பையே நாயகியாக்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அமீர்கானுடன், கத்ரீனா கைப் ஜோடி சேருவது இதுவே முதல்முறை.

முதல் இரண்டு தூம் படத்தை விட தூம்-3 படத்தில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தூம், தூம்-2 படங்களை சஞ்சய் காத்வி இயக்கி இருந்தார். ஆனால் இம்முறை அவர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக விஜய் கிருஷ்ண ஆச்சர்யா டைரக்ஷன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். படத்தின் முக்கிய ரோலான வில்லன் கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்க இருக்கிறார். இதற்குமுன் அந்த ரோலில் ஜான் ஆபிரஹாமும், ஹிருத்திக்கும் நடித்து இருந்தனர். அதேபோல் ஹீரோயின் ரோலான கத்ரீனா கைப் ரோலில் இஷா தியோலும், ஐஸ்வர்யா ராயும் நடித்து இருந்தனர். தூம்-3 படத்தின் சூட்டிங் இந்தாண்டு இறுதியில் தொடங்கி, அடுத்தாண்டு திரைக்கு வர இருக்கிறது. 
                                                        http://www.dinamalar.com

No comments:

Post a Comment