9ந் தேதி சென்னை வருகிறார் ஷாருக்கான். இந்த வருகை ரஜினியை சந்தித்து நன்றி கூறத்தானாம்.
ரா ஒன் படத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று பல காலமாகவே கேட்டு வந்தார்ஷாருக். இந்த நிலையில்தான் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது ரஜினிக்கு. ஆனால் தான் கொடுத்த வாக்குறுதியை எப்படியோ நிறைவேற்றிக் கொடுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார்.
பாலிவுட் படங்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்படுவது புதுசில்லை. ஆனால் எந்தவொரு படத்திற்கும் இல்லாத வரவேற்பு இந்த படத்திற்கு இருக்கும் என்று கருதப்படுகிறது. காரணம் ரஜினியை தவிர வேறொன்றும் இல்லை. தற்போது தலைவர் எப்படியிருக்கிறார் என்பதை காண அவரது ரசிகர்கள் தவமாய் தவமிருக்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும் போதே வீடியோ மூலம் ரசிகர்களிடம் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர் சிகிச்சை மூடிந்து வீடு திரும்பிய பின்பும் அதற்கான முயற்சி நடைபெறவே இல்லை.
அவர் எப்படியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள துடிக்கும் ரசிகர்களுக்கு ரஜினி ஒரு காட்சியில் நடித்த ரா ஒன் பெரிய வரப்பிரசாதம் அல்லவா?
தமிழ்நாட்டில் கணிசமான அளவு தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவரும் அபிராமி மெகாமால் உரிமையாளருமான அபிராமி ராமநாதன்.
No comments:
Post a Comment